Monday, December 13, 2010

கலக்கிட்டீங்க பன்னிக்குட்டி - புதிய ஆசிரியர் மாதவன்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலம் அறிமுக மழை பொழிந்து நேற்றுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறது. சுனாமி மாதிரி தமிழ் நாடெங்கும் வெள்ளக் காடாக, மாற்றிய பெருமை சென்ற வாரம் ஆசிரியப் பொறுப்பில் இருந்த பன்னிக்குட்டி ராமசாமியினையே சாரும்.

சென்ற வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு பல புதிய நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தி, ஏறத்தாழ மூவாயிரத்து இருநூறு மறு மொழிகள் பெற்று, வலைச்சரத்தினை தொய்வில்லாமல் கொண்டு சென்ற பன்னிக்குட்டி ராமசாமி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

அவருக்குத் துணை நின்ற அவரது நண்பர்கள் குழுமம் அவரை உற்சாகப்படுத்தும் வண்ணம் - அயராமல் மறு மொழிகள் இட்டு அவரை ஊக்கப்படுத்தி, வலைச்சரத்தினில் ஒரு புதிய சாதனையாக ஒரு பதிவினில் 1328 மறுமொழிகள் இட்டதற்கு அவரது நண்பர்களுக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்.

விடை பெறும் நண்பர் ராமசாமியின் பணியினைப் பாராட்டி நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறோம்.

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மன்னையைச் சார்ந்த நண்பர் மாதவன். இவர் அறிவியலில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து விட்டு, தற்போது அரசாங்க அலுவலில் ஈடுபட்டுள்ளார். தமிழ் நாட்டில் இல்லையெனினும், பாரத மண்ணிலே பணி செய்வது இவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வலைப்பூவில் மட்டுமே தற்போது தமிழில் எழுதியும் படித்தும் வருகிறார்.

இவர் சென்ற ஆண்டு அக்டோபரில் துவங்கிய பதிவினில் நூறுக்கும் மேற்பட்ட இடுகைகள் இட்டிருக்கிறார். அனைத்துத் தலைப்புகளிலும் எழுதி வருகிறார். நண்பர் மாதவனை வருக வருக ! வலைச்சர ஆசிரியராக வந்து நல்ல முறையில் பணியாற்றுக என்று நல்வாழ்த்து கூறி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் பன்னிக்குட்டி ராமசாமி

நல்வாழ்த்துகள் மாதவன்

நட்புடன்சீனா

21 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ராம்சாமி சார்!
    வாழ்த்துக்கள் மாதவன் சார்!

    ReplyDelete
  3. Welcome, Madhavan!
    Have a nice editor-week!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் இருவருக்கும்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் இருவருக்கும்

    ReplyDelete
  6. இருவருக்கும் வழ்த்துக்கள்.1300க்கும் மேற்பட்ட மறுமொழிகளா/கின்னஸ்க்கு எழுதி போடலாமே

    ReplyDelete
  7. அறிமுக உரைக்கு மிக்க நன்றி, 'அன்பின் சீனா' அவர்களே.
    இதோ, என்னால் முடிந்ததை துவங்குகிறேன்.

    மாதவன்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பன்னிகுட்டி சார்!! வாங்க மாதவன்!! பன்னிகுட்டி உங்களிடம் அதிகமான பொறுப்புகளை விட்டுச்சென்றுள்ளார்!! he already set the milestone, you must be try to reach that, best of luck!

    ReplyDelete
  9. சென்ற வாரம் பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்த மதிப்பிற்குரிய திரு பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தனது பணியினை செவ்வெனே துவங்க இருக்கும் நண்பர் மாதவன் அவர்களுக்கும் பணி மென்மேலும் சிறக்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    இப்படியொரு தளத்தை அமைத்துக்கொடுத்து பதிவர்களுக்கு நல்ல அங்கீகாரமும் உற்சாகமூட்டியும் நல்வழிப்படுத்திக்கொண்டிருக்கும் அன்பின் சீனா அய்யா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாக குழுவினர் அனைவருக்கும் எனது கோடானகோடி நன்றிகள் பல...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணிகள்....

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  10. வாழ்த்திய, பாராட்டிய அனைவருக்கும் நன்றி, மாதவனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ராம்சாமி சார்!
    வாழ்த்துக்கள் மாதவன் சார்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ராமசாமி சார்,
    மாதவன் சார் வாங்க வந்து ஜம்முன்னு கலக்குங்க

    ReplyDelete
  14. நன்றிகள் ராம்சாமி!
    வாழ்த்துக்கள் மாதவன்!

    ReplyDelete
  15. நன்றிகள் ராம்சாமி!
    வாழ்த்துக்கள் மாதவன்!.. :)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் ப.ரா!
    வாழ்த்துக்கள் மாது!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் இருவருக்கும்..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் இருவருக்கும்

    ReplyDelete