Saturday, December 25, 2010

வலைச்சரமும், பிரபல பதிவரும் பின்னே ஞானும்


இதுக்கு மேலயும் என்னால முடியாது... வித்தியாசமா அறிமுகம் செய்யனும்னு நினைச்சு நினைச்சு மூளையே சூடாகி போச்சு (யாரது அங்க எத்தனை டிகிரி சூடாச்சுன்னு கேட்கிறது? பிச்சு பிச்சு). என்னால முடியல.... நேத்து வெள்ளிகிழமை லீவு வேற. எக்கசக்க வேலை. அதுல ஒரு வேலையா மதிய வேளை “மன்மத அம்பு” சேர்ந்திடுச்சு. என்னது படம் எப்படி இருந்துச்சாவா?. வேண்டாம் பதிவர்களை அறிமுகப்படுத்த ஒன்னும் தோணாம நான் படத்தை பத்தி எழுதி ஒப்பேத்திட போறேன். பதிவர்களை பத்தி பார்க்கலாம்.

யார் யாரை அறிமுகப்படுத்தனும்னு என்ன எழுதுறதுன்னே தெரியல... சாட்ல பார்த்தா நம்ம நண்பர் கம் பதிவர் ஒருத்தர் இருந்தார். அவரை பின்ங் பண்ணி எப்படி இருக்கீங்க?ன்னு கேட்டேன். (அவர் யார்னு சீக்ரெட்! முடிஞ்சா நீங்களே கண்டுபிடிச்சுக்கங்க மக்களே)

எனக்கென்ன குறைச்சல்?ன்னு சலிப்பா சொன்னாரு. ஆஹா இவர் தான் சரியான ஆளுன்னு இவர்கிட்டயே பேச்சை கொடுத்தேன்.

“உபுண்டு பத்தி தெரியுமா?”

”இது கூட தெரியாதா?. கேஸ் ட்ரபுளுக்கு ரொம்ப நல்லது. பார்க்கிறதுக்கு வெள்ளை வெங்காயம் மாதிரி இருக்குமே. ஆமா அதையேன் கேட்குற?”

“அடக்கடவுளே... ஏன் இப்படி அறுக்குறீங்க? அது ஒரு OS"என்றேன்.

“ஓ யெஸ்” என்றார்

“அய்யோ கடவுளே....உங்க கிட்ட இதுக்கு மேல பேசி புரிய வைக்க முடியாது. அதுனால இந்த லின்ங்ல போய் பாருங்க.”ன்னு கொடுத்தேன்.

“அட இப்ப எதுக்கு என்கிட்ட இந்த OSயை பத்தி கேட்டீங்க?”ன்னு கேட்டார்

“இல்ல வலைச்சரத்துல போடனும் எதாவது ஐடியா கொடுப்பீங்கன்னு கேட்டேன்”ன்னு சலித்துக்கொண்டேன்.

“வெள்ளப்பூண்டை பத்தி கேட்டா ஆயிரெத்தெட்டு ஐடியா கொடுப்பேன். இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத உபுண்டுவை கேட்டேனேன்னா நான் என்ன சொல்றது?”

”என்னது ஒன்னுத்துக்கும் உதவாத உபுண்டுவா? அவ்வ்வ்... இதுனால என்னென்ன உபயோகம் இருக்குன்னு படிச்சு பார்த்துட்டு அப்புறம் உபுண்டா இல்ல வெள்ளப்பூண்டா சொல்லுங்க” என்றேன்.

”ஓ அப்படியா!.. சரி படிச்சுப்பார்க்கிறேன். ஆனா நீ ஏன் வெள்ளைப்பூண்டை இவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட? சரி இப்ப வெள்ள பூண்டை விடு. நெத்திக்கு மூனு இன்ஞ் தள்ளி புருவத்துக்கு ரெண்டு இன்ச் மேல உனக்கு வலி எடுத்திருக்கா?” என்றார்

கொஞ்சம் டென்சாகிட்டேன் நான் “ப்ரோ ! நேரா தலைவலிச்சிருக்கான்னு கேட்க வேண்டியது தானே? ஏன் இப்படி சுத்தி வளைச்சு கேட்குறீங்க?ன்னு கொஞ்சம் கத்திட்டேன்.

அவரும் “சரி சரி ரிலாக்ஸ். ஆயுர் வேதம்னா அப்படி தான். இந்த சைட்ல போய் பார். எக்கசக்க நோய்களுக்கு ஆயுர்வேதம் தொடர்பான விடை கிடைக்குது. உனக்கு நிறைய யூஸ் ஆகும். அதே நேரம் இதையும் வலைச்சரத்துல ஒரு அறிமுகம் போடு. பல பேருக்கு தெரிஞ்சா நல்லாயிருக்கும்” என்றார்.

“அட சூப்பரா ஒரு ஐடியா கொடுத்தீங்களே. ரொம்ப பெரிய புண்ணியமா போகும். என்ன பண்றதுன்னே தெரியாம முழுச்சுட்டு இருந்தேன். வீட்ல வேற நிறைய வேலை. அப்புறம் மகள் வேற படுத்துறா. சுட்டித்தனம் அதிகமாகிட்டே போகுது. நிறைய விசயங்கள்ல அவளை புரிஞ்சுக்கவே முடியல. அவளைப் பார்த்துக்கறதுல்லயே பாதி நேரம் போகுது. எப்படி நாளைக்கு ஆறாம் நாள் எழுத போறேன்னு நினைச்சுட்டே இருந்தேன்.”என்று என் கதையை புலம்ப ஆரம்பித்தேன்.

“மகள் சம்பந்தமா தெளிவு பெற அனுபவஸ்தவங்ககிட்ட கேட்க வேண்டியது தானே?”ன்னு அட்வைஸ் வேற வந்தது.

“ஹலோ இந்த பாலைவனத்துல  சொந்த பந்தங்க பக்கத்துல இல்லாம இருக்குற நாங்க எதுக்கெடுததாலும் இந்தியால இருக்குற அம்மாக்கு போன் பண்ணி பேசிகிட்டா இருக்க முடியும்?” என்றேன்

“இதெல்லாம் அம்மாகிட்டவே தான் கேட்கனுமா? அனுவஸ்தங்கன்னா நிறைய பேர் இருக்காங்க. அதுவும் உன் வயசுலயே. இந்த சைட் போய் பாரு. முழுக்க முழுக்க பேரண்ட்ஸே எழுதுறாங்க. நீயும் வேணும்னா சேர்ந்துக்கோ. உன் அனுபவத்தை கூட எழுதலாம். மத்தவங்களுக்கு உபயோகப்படும்ல?” என்றார். அவர் கொடுத்த லின்ங்கில் சென்று வாசித்தேன். மிக அருமையான தளம். என்னைப்போன்ற பெற்றோர்கள் அவர்களது அனுபவங்களை பகிரும் அற்புதமான தளம். மகிழ்ச்சியுடன் அவரை திரும்பவும் பின்ங் செய்தேன்.

“தெய்வமே... உன்னை அஞ்சு நாள் முன்ன பார்த்திருந்தா இன்னும் வித்தியாசம் வித்தியாசமான பதிவு லின்ங்கெல்லாம் கெடச்சிருக்குமே!” என்று அவர் புகழ் பாடினேன்.

“என்னை புகழ்றது இருக்கட்டும். என் வலைப்பூவை வலைச்சரத்துக்கு அறிமுகப்படுத்தினயா?” என்றார்

“உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி தான் ஆகனுமா என்ன? அல்ரெடி பிரபலம் நீங்க?”ஹிஹி சமாளித்தேன். “தெய்வமே அப்படியே இந்த சைட்டுக்கு தேவையானதையும் சொல்லுங்க. அப்படியே எழுதிக்கிறேன். இப்ப என்ன எழுதுறதுன்னு ஒன்னுமே தோணமாட்டேங்குது” என்றேன்

“என்ன சைட் அது?”என்றார்

இது சமையல் & அழகு குறிப்பு பத்தினது. சிநேகிதின்னு ஒரு பதிவர் தளத்தோட ஓனர். நல்ல அருமையா புது புது வகையா சொல்லித்தராங்க. ஒவ்வொரு சமையல் வகையையும் எளிமையான தமிழ்ல ஒரு தடவை படிச்சாலே மனசுல பதியிற மாதிரி சொல்லித்தராங்க. அதுவுமில்லாம இயற்கையான வகையில அழகுகுறிப்புகள் சொல்லித்தராங்க. சிநேகிதின்ற பேருக்கு ஏத்தமாதிரியான தளம் இது. இந்த தளத்தை பத்தி எழுதனும். என்ன எழுதனும்னு சொல்லுங்களேன்”என்றேன்

“எத்தனை லைன்ல வேண்டும்?” என்றார்.

”மினிமம் மூனு லைன் போதும். மிச்சம் நான் பார்த்துப்பேன்”என்றேன்

“அப்ப இந்தா நோட் பண்ணிக்கோ.,,” என்றபடி வேகமாக டைப்பினார் “சிநேகிதின்னு ஒரு பதிவர் தளத்தோட ஓனர். நல்ல அருமையா புது புது வகையா சொல்லித்தராங்க. ஒவ்வொரு சமையல் வகையையும் எளிமையான தமிழ்ல ஒரு தடவை படிச்சாலே மனசுல பதியிற மாதிரி சொல்லித்தராங்க. அதுவுமில்லாம இயற்கையான வகையில அழகுகுறிப்புகள் சொல்லித்தராங்க. சிநேகிதின்ற பேருக்கு ஏத்தமாதிரியான தளம் இது” என டைப்பினார்.

“இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்றேன்

”எல்லாம் நீ சொன்னது நான். எல்லாம் உனக்கே தெரியுதே. அப்புறம் என்ன என்னை கேட்குற? :))))) ”என்று ஸ்மைலியோடு ரிப்ளே வந்தது. நான் ஙே என முழுத்தது நல்லவேளை அவருக்கு தெரியவில்லை. தொடர்ந்து...

“அட இப்படி மடக்கிட்டீங்களே.. அப்ப இந்த வந்தேமாதரம் சைட் பத்தி கூட நான் நினைச்ச மாதிரி “கம்யூட்டர் பத்தின நம் பல சந்தேகங்களுக்கு விடையளிக்கும் தளம்.அதுவும் எளிய தமிழில்”னு போட்டுறவா?”என்றேன்

”அதிலென்ன சந்தேகம்? போட்டுருங்க” என்றார்

“பட் நீங்க சொன்ன மாதிரி அதையே போட்டுட்டா ரொம்ப சாதாரணமா இருக்குமே? அதுனால உங்க பர்மிசனோட ஒன்னு பண்ணலாம்னு இருக்கேன்” என்றேன்

”என்ன?” என இழுத்தார்....

“இதே சாட்டை அப்படியே பதிவா போட போறேன்....”

“அடக்கடவுளே!” என்றார்.

(ஹலோ போட மாட்டேன்னு நினைச்சீங்களா? போட்டேன் பாருங்க. எனிவே நன்றி பிரபல பதிவரே) :))

15 comments:

  1. வந்தே மாதரம் சசியைத்தவிர மற்ற தளங்கள் இப்போதுதான் அறிமுகம்

    பயனுள்ள தளங்களை சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க

    ReplyDelete
  2. மாணவனுக்கு வேறு வேலை இல்லையோ?

    ReplyDelete
  3. எழுதிய விதம் சூப்பர்

    ReplyDelete
  4. அறிமுகப் படுத்துவதிலும் ஒரு கலை நயம் தெரிகிறது, உங்களிடம், வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. நல்லா அறிமுகப்படுத்துனீங்க!!!!

    ReplyDelete
  6. சூப்பர் அறிமுகம்!போய்ப் பார்த்துட வேண்டியதுதான்!

    ReplyDelete
  7. ஆயுர் வேதம்னா அப்படி தான். இந்த சைட்ல போய் பார். //
    அதுவும் உன் வயசுலயே. இந்த சைட் போய் பாரு.//
    ஏங்க இப்படி மெரட்டுறீங்க ... ஓ அறிமுகபடுத்துற ஸ்டைலா ஓகே ஓகே ....

    ReplyDelete
  8. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    மாணவனுக்கு வேறு வேலை இல்லையோ?///

    ஏன் வேலை இல்ல சொன்னா வேலை வாங்கி கொடுப்பீங்களா....

    ReplyDelete
  9. புதுவயலுக்கு
    வலைச்சரம்..
    சரியான
    உரமாகும்...

    ReplyDelete
  10. அனைவருக்கும் மிக்க நன்றி.
    அண்ட் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அடக் கடவுளே! பதிவர்கிட்டாயே சாட்ல வாயைக் கிண்டி
    அதையே இன்றைய பதிவர் அறிமுகங்களாய்
    போட்டுட்டீங்களா? திறமைதான்.
    மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!!!

    ReplyDelete
  12. வந்தே மாதரம் அதவிர்த்து மற்றவை எனக்கு அறிமுகங்களே... நன்றி...

    ReplyDelete