வலைச்சரத்தில் எனது வெற்றிகரமான மூன்றாவது நாள். “ரெண்டு நாள் கூட ஆகல, அதுக்குள்ள என்ன வெற்றிகரமான?” என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் படம் ரிலீஸ் அன்னிக்கே மாபெரும் வெற்றி அப்படின்னு சொல்றதில்லையா? அது போலத்தான்.
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர்களில் முக்கியமானவர் எப்பூடி..ஜீவதர்ஷன் அவர்கள். ரஜினியின் தீவிர பக்தராக அறியப்பட்டவர். இவருடைய எளிமையான எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு துறையிலும் இருதுருவங்களாக இருக்கும் இரட்டையர்கள் இணைந்திருக்கும் 50 புகைப்படங்களை அழகாக தொகுத்திருக்கிறார். நாம் வாழ்வில் அன்றாடம் காணும் சின்ன சின்ன சுகமான விஷயங்களை சுட்டிகாட்டி இருக்கிறார். சாட்டிலைட் டீவிக்கும், அன்றைய தூர்தர்ஷனுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லி மலரும் நினைவுகளை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட் பற்றி எழுதுவதிலும் வல்லவராகவே இருக்கிறார்.
நண்பர் இரவுவானம் என்னைப்போல எதை எழுதினாலும் காமெடி தூவியே எழுதுகிறார். நானும் என் காதலும் என்று சொந்த காதல் கதையை சுவாரசியமாக சொல்கிறார். சபரிமலைக்கு போகிறவர்களுக்கு டிப்ஸ் என்று வித்தியாசமான பதிவுகளையும் எழுதி உள்ளார். குழந்தைகளை தட்டி கேட்கும் விதமாக சமூக நோக்கம் உள்ள பதிவையும் எழுதி இருக்கிறார். அவ்வப்போது திரைவிமர்சனம் எழுதி கலாய்க்கவும் செய்கிறார்.
என் இனிய இல்லம் என்று பெண்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அள்ளித்தருகிறார் சினேகிதி. கஞ்சி காய்ச்சுவதில் இருந்து, தந்தூரி வகை வரை சமையல் குறிப்புகளும், களிமண்ணில் இருந்து கண்ணாடி வரை கை வேலைபாடுகள் பற்றிய குறிப்புகளும் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.
வம்ப வேலைக்கு வாங்க துடிக்கும் நண்பர் மணிவண்ணன், ஒரு காமெடி காதல் கதையை சீரியஸாக சொல்லி சிரிக்க வைக்கிறார். இரண்டு என்ற நம்பரை வைத்துக்கொண்டு மொக்கை கதையும் சொல்கிறார். அத்தமகளின் அந்தநாள் ஞாபகங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
குட்டிசுவர்க்கம் ஆமீனா மேடம் மிகவும் பயனுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி உரிமையோடு விளக்குகிறார். பூல்புலாயா என்று மர்ம கோட்டை பற்றிய கதையை சுவாரசியமாகவும் சொல்கிறார். கிரிக்கெட் கற்று கொடுத்த பாடம் என்று கருத்தும் தெரிவிக்கிறார்.
என்ன நண்பர்களே இன்று நான் அறிமுகப்படுத்தியவர்கள் தளங்களை கண்டு கொண்டீர்களா? நாளை இன்னும் சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன். அப்போ, நாளை சந்திப்போமா?
சுடச்சுட பின்னூட்டம்...
ReplyDeleteபாலா ... நீங்க வலைச்சரத்தில் எழுதுவது இன்றுதான் தெரியும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் பாலா
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று நல்ல முறையில் செயலார்ரிக் கொண்டிருக்கிறீர்கள்.
முகப்புப் பக்கம் படமாக வெளியிடுவது - உடனே அத்தளத்திற்குச் சென்று பார்க்கத் தூண்டுகிறது. நல்ல முயற்சி.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteஉங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
@ Philosophy Prabhakaran
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
@ cheena (சீனா)
எனக்கு எழுத வாய்ப்பளித்ததற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி நண்பரே
@மாணவன்
நன்றி நண்பரே
அறிமுகப்படுத்திய விதம் அருமை.
ReplyDeleteதொடர்பான புகைப்பட ஐடியாவும் சிறப்பு.
தொடர வாழ்த்துக்கள்.
பாலா என்னைஅறிமுக படுத்தியதற்கு நன்றி . அப்பறம் வேற நல்ல கதைகள் எழுதிருக்கிறேன் நினைக்கிறேன் . " சோமு " நம்பர் 2 "தானா உங்களுக்கு கிடைச்சது
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பாலா அவர்களே, நான் எழுத ஆரம்பித்த போது முழுக்க முழுக்க விழிப்புணர்வு பதிவினையே எழுத ஆரம்பித்தேன், இருந்தாலும் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது, பிறகு காமெடியாக எழுத ஆரம்பித்த போதுதான் நண்பர்களின் வருகை அதிகமானது, எனவே இப்பொழுது எதை யோசித்தாலும் காமெடியாகவே யோசிக்கிரேன், :-) என்னை அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி நண்பரே.
ReplyDeleteகலக்கலான அறிமுகங்கள். இரவுவானம் நல்ல தேர்வு....மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பதிவர்களில் அவரும் ஒருவர். எனக்கு மிக பிடித்த வலையுலக நண்பர்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.
ReplyDelete@ இந்திரா
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@நா.மணிவண்ணன்
கொஞ்சம் வித்தியாசமான கதையாக இருந்தது அதான் ஹி..ஹி..ஹி..
நன்றி நண்பரே..
@ இரவு வானம்
எல்லோரும் அப்படித்தான் தொடங்குறாங்க. நானும் அப்படித்தான். காமெடியா எழுதுவதில் தப்போன்றும் இல்லை. நன்றி நண்பரே
@ ரஹீம் கஸாலி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@ சே.குமார்
மிக்க நன்றி
சிறப்பான அறிமுகங்கள் பாலா
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சார் :)
ReplyDeletegood introductions
ReplyDeleteCongratulations to everyone!
ReplyDeleteபல புதிய(பதி)வர்களை அறிமுகப்படுத்தியதற்கு
ReplyDeleteமிக்க நன்றி!
-கலையன்பன்.
(இது பாடல் பற்றிய தேடல்!)
@ r.v.saravanan
ReplyDeleteநன்றி நண்பரே...
நிறைய புதிய பதிவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடிகிரது.
ReplyDelete@ எல் கே
ReplyDeleteஉங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி
@ Chitra
எல்லோர் சார்பிலும் மிக்க் நன்றி
@ கலையன்பன்
நன்றி நண்பரே