"வாங்கக்கா.."
"வரச்சொன்னியாமே... குழந்தை வந்து கூப்பிட்டா.."
"ஆமாங்க்கா.. புதுச்சா கணினி வாங்கியிருக்கோம். எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாது. அதான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கூப்பிட்டு வரச்சொன்னேன்."
"நானும் உன்னைமாதிரிதான்.. ஆனா, தெரியாததை இணையத்துல தேடிப்பார்த்து தெரிஞ்சுக்குவேன். தமிழ்ல நிறைய வலைப்பூக்கள்ல எக்கச்சக்கமான விபரங்களெல்லாம் கொட்டிக்கிடக்கு .."
"வலைப்பூக்கள்ன்னா என்னக்கா.... ரோஜா, மல்லிகை மாதிரியா.."
"அசடே... வலைப்பூக்கள்ன்னா கூகிள் இலவசமா கொடுக்கிற தளம். இதுல நாம என்னன்னாலும் எழுதலாம். நமக்கு தெரிஞ்சதை மத்தவங்களோட பகிர்ந்துக்கலாம். இப்ப தமிழ்ல கூட எழுதலாம் தெரியுமோ!!.. அது யாருக்காவது பயன்பட்டா நமக்கு சந்தோஷம்தானே..
கதை, கவிதை, அறிவியல் மற்றும் மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள் அப்புறம் குழந்தைகளுக்கு பயன்படறமாதிரியான தகவல்கள் எல்லாமும் எழுதலாம்."
"மருத்துவத்தைப்பத்தியும் எழுதறாங்களா..."
"ஆமாம்,.. அதிலும் தொழில்முறை வல்லுனர்களான டாக்டர்களும் எழுதறாங்க. டாக்டர்.சுனில்கிருஷ்ணன் ஆயுர்வேதத்திலிருந்து சிலகுறிப்புகளை எழுதியிருக்காரு. இவரோட தளத்துல நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்குது.
"சரி.. மத்த விபரங்களையும் ஒண்ணொண்ணா சொல்றேன்...
நம்ம கம்ப்யூட்டரைப்பத்தி ஆதியோடந்தமா,.. எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்ன்னா ஜியாத் அஹமத் எழுதியிருக்கிறதை பார்க்கணும்.
உனக்கு தமிழ்ப்பாட்டுகள்ன்னா ரொம்ப பிடிக்கும் இல்லே!!. அதை இப்போ இணையத்திலிருந்தும் நீ தரவிறக்கிக்கலாம். அதுக்கான சில தளங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கார்.
பனங்குடிலிலிருந்து எழுதப்பட்டிருக்கிற சில இடுகைகள் ரொம்பவே பயனுள்ளதா இருக்குது.
வெறும்பயன்னு பேருவெச்சுக்கிட்டிருக்காரு. ஆனா, இணையத்தை வேகமாகவும், எளிதாவும் எப்படி பயன்படுத்தறதுன்னு அழகா சொல்லிக்கொடுத்துருக்காரு. கணினியை எலியைமட்டும் வெச்சு இயக்காம, கீபோர்டையும் வெச்சு இயக்கலாம். இதுக்கான குறுக்குவழி பொத்தான்களைப்பத்தியும் சொல்லியிருக்கார். படிச்சு தெரிஞ்சுக்கோ..
இனிமே, நீ உன்னோட ஃப்ரெண்ட்சுக்கு ஜிமெயிலிலேயே கடிதம் போடலாம். அதுவும்,.. உன்னோட கையெழுத்தோட.. ஒரு பேனாவோ, இல்லை வேற ஏதாவது பொருளோ, உன்னோட கையெழுத்தை போட்டுக்காமிச்சா எவ்வளவு அழகாயிருக்கும். அதை எப்படி செய்யறதுன்னு ஜி.எஸ்.ஆர் சொல்லிக்கொடுத்திருக்கார்.
இணையத்தை பயன்படுத்தும்போது வைரஸ் தாக்குறது ஜகஜம். மழையில நனைஞ்சா காய்ச்சல் வருதுல்லியா.. காய்ச்சல் வந்தா தடுப்பூசி போட்டுக்கிறோமில்ல.. அதுமாதிரி கணினிக்கும் தடுப்பூசி போடணும். அப்படியொரு தடுப்பூசியப்பத்தி மகாதேவன் சொல்லியிருக்காரு. மறக்காம ஊசி போட்டுடு.
இணையத்தில் தமிழ்ப்பக்கங்களும் நிறைய இருக்கு. அதுகள்ல உன்னோட கருத்தை எழுதணும்ன்னு நினைச்சா, எப்படி எழுதணும்ன்னு Aaqil Muzammil லோட இந்த தளத்தில் வழி சொல்லிருக்காரு.
பொழுதன்னிக்கும் கணினி முன்னாடி உக்கார்றவங்களுக்கு, மூட்டுவலி, மணிக்கட்டுவலி, முதுகுவலியெல்லாம் ஏற்படறது ஜகஜம்.. சரியானபடி உக்கார்ந்தா இதை கொஞ்சமாவது தவிர்க்கலாம். இதைப்பத்தி பொன்மலர் சொல்லியிருக்காங்க. அப்புறம்... யம்மாடி!!,.. சொல்றேனேன்னு தப்பா நெனைச்சுக்காதே. நெருப்புன்னா வாய் வெந்துடாதுன்னு சொல்லுவாங்க. இப்ப, ஏதாவது காரணத்துனால உன்னோட கணினியை விக்கிறேன்னு வெச்சுப்போம். அப்ப, இதுல இருக்கிற விவரங்களை முக்கியமா, புகைப்படங்கள், ஃபைல்களை தவறா பயன்படுத்தறதுக்கு வாய்ப்பிருக்கு. இதை எப்படி தடுக்கணும்ன்னும் சொல்லியிருக்காங்க... பத்திரமா இருந்துக்கோ"
"அக்கா... நீங்க சொல்லித்தந்த அழகுல, இப்ப எனக்கும் ஒரு ஆசை தோணிப்போச்சு.. எல்லாத்தையும் கத்துக்கிட்டு நானும் ப்ளாக் எழுதப்போறேனே...."
"அக்கா... நீங்க சொல்லித்தந்த அழகுல, இப்ப எனக்கும் ஒரு ஆசை தோணிப்போச்சு.. எல்லாத்தையும் கத்துக்கிட்டு நானும் ப்ளாக் எழுதப்போறேனே...."
"எழுது.. எழுது.. உன்னைமாதிரி நிறையப்பெண்கள் எழுதறதுக்கு முன்வரணும். உன்னோட ப்ளாக்குல எந்தெந்த விஷயங்களைப்பத்தி எழுதப்போறே"
"அது சஸ்பென்ஸ்......."
நன்றீங்க எனத கையெழுத்துக்கும் ஜீஎஸ்ஆர் தான் காரணம்... அதோ மகாதேவன் தகவலும் மிக முக்கியமானது....
ReplyDeleteதொழில்நுட்பத் தகவல்கள் தரும் பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தியதற்கு நன்றிகள்...
ReplyDeleteவெறும்பயன்னு பேருவெச்சுக்கிட்டிருக்காரு. ஆனா, இணையத்தை வேகமாகவும், எளிதாவும் எப்படி பயன்படுத்தறதுன்னு அழகா சொல்லிக்கொடுத்துருக்காரு.//
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி. அவர் வாழ்வில் பல வளங்கள் பெற்று ஜோதி ஒளிரட்டும்....
அனைத்தும் எனக்கு புதியவைகள்..
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றிகள்..
nice intros...thanks for sharing
ReplyDeleteதொழில்நுட்பத் தகவல்கள் தரும் பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தியதற்கு நன்றிகள்...
ReplyDeleteபோற போக்குலே எல்லாத்தையும் ஜகஜமாச் சொல்லிட்டீங்களே!!!
ReplyDeleteஜபாஷ்!!!!!
கலப்பையை அவரவர் நல்லாப்புடிச்சு உழுதுகினு போகணும். அம்புட்டுதான்!
மிகப் பெரிய சேவை உங்களது. படிப்பவருக்கும் பதிவருக்கும். நன்றிகள் பல.
ReplyDeleteமனமாந்த நன்றிகள் உங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமனமாந்த நன்றிகள்
ReplyDeleteதொழில் நுட்ப பதிவர்களின் அறிமுகங்கள் அருமை
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் அருமை.
ReplyDeleteஅருமை தகவல்கள் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteமிக அருமையான பகிர்வு சாரல்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅமைதிச்சாரல்ன்னு பேரு வெச்சுக்கிட்டு அதிரடியா பதிவுகளை அறிமுகப்படுத்தறார் ஒருத்தர்...
ReplyDeleteஉங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
ReplyDeleteஅருமையான அறிமுகப் பகிர்வு.
ReplyDeleteஎன்னையும் இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி...
ReplyDeleteவாங்க சுதா,
ReplyDeleteசோறுமட்டும் போதுமா?.. குழம்பு பொரியலெல்லாம் வேணாமா :-)))))
வரவுக்கு நன்றி.
வாங்க பிரபாகரன்,
ReplyDeleteநன்றி.. வரவுக்கு.
வாங்க ரமேஷ்,
ReplyDeleteப்ராக்ஸிக்கும் வரவுக்கும் நன்றி :-))
வாங்க மாதவன்,
ReplyDeleteநிறைய திறமைசாலிகள் இதுமாதிரி கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறாங்க..
வரவுக்கு நன்றி.
வாங்க அப்பாவி,
ReplyDeleteநன்றிப்பா.
வாங்க குமார்,
ReplyDeleteதடங்கலில்லாம பொட்டி தட்டணும்ன்னா இதெல்லாம் தெரிஞ்சுவெச்சிருக்கிறது ரொம்ப அவசியமாக்கும்..
நன்றி.
வாங்க துளசியக்கா,
ReplyDeleteதேங்க்ஜூ :-))))))
வாங்க சிவகுமாரன்,
ReplyDeleteஇவங்க சேவைக்கு முன்னாடி, நானெல்லாம் தூசுங்க :-))
நன்றி.
வாங்க மகாதேவன்,
ReplyDeleteபொன்மலர்,
ஜலீலா,
நீச்சல்காரன்,
அரசன்...
வருகைக்கு மிகவும் நன்றி.
வாங்க தேனம்மை,
ReplyDeleteரொம்ப நன்றிங்க :-))
பலருக்கும் உபயோகமாகக் கூடிய பதிவுகளின் தொகுப்பு. அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடைசில சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்களே... ;)
ReplyDeleteவாங்க ராமலஷ்மி,
ReplyDeleteஅத்தனைபேரும் அருமையான இடுகைகள் கொடுத்திருக்காங்க..
வரவுக்கு நன்றி.
வாங்க ஆமினா,
ReplyDeleteஅவங்க எழுத வந்ததும் சஸ்பென்ஸ் உடைஞ்சுடும்ப்பா :-))))
நன்றி.
வாங்க ஸ்வர்ணா,
ReplyDeleteதேங்க்ஸுங்கோ :-)))))))
வாங்க ஆகில்,
ReplyDeleteஉங்கள் பணி மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
நன்றி.
வாங்க மாதேவி,
ReplyDeleteநன்றிப்பா..
வாங்க வெறும்பய,
ReplyDeleteஉங்க தளம் அசத்தலா இருக்குப்பா..
வருகைக்கு நன்றி.
இன்றைய அறிமுகங்களில் சிலர் எனக்குப் புதியவர்கள். நன்றி.
ReplyDeleteஉங்கள் அறிமுகத்திற்கு நன்றி :) உங்களது இதர அறிமுகங்களும் அருமையாக உள்ளது
ReplyDeleteநன்றி
ReplyDelete