இன்று வீசிய வலையில் சிக்கியது சிறப்புகள்.
அதென்ன சிறப்புகள் என்று கேட்கிறீகளா?
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உண்டு சிலருக்கு வெளியில் தெரியும் சிலருக்கு தெரியாது.தெரிந்த சிலர்களில் சிறப்பானவர்கள் மருத்துவர்கள்.மற்றும் மனநலத்துக்கும் உடல் நலத்துக்கும் அக்கரையாய் அறிவுரை மற்றும் செயல்முறைகளை கற்றுத்தருபவர்கள்.
பூமியில் வாழ வந்த மனிதனுக்கு ஆரோக்கியமென்பது மிக முக்கியம். அந்த ஆரோக்கியம் சற்று வாடினாலும், வதங்கினாலும், பாதிக்கப்படுவது
உடல் நலமும், மன நலமும்தான். அதை சரிசெய்வதில் சிறப்பானவர்கள் மருத்துவர்கள். மற்றும் மருத்துவக் குறிப்புகளை அள்ளித் தருபவர்களும்.
மருத்துவமென்றால் மகத்துவம் என்பார்கள்.
மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள். பிறர் நலன்களை பேணிக்காக்கச் சொல்லி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை நமக்கு அறிவிக்கிறார்கள்.[அதிலும் பல போலிகள் நடமாடி காக்க வேண்டிய உயிரை, மாய்க்க வைப்பவர்களும் இருக்கிறார்கள் உயிர் ஊசலாடும் சமயத்திலும் விலைபேசக் கூடியவர்களுமிருக்கிறார்கள். அவர்கள் எவ்வகையிலும் சேராத மனித உயிர்திண்ணிகள். அட எல்லாத்திலும் இப்படி நிறைய உண்டுங்க அப்படிங்கிறீங்களா! அதுவும் நெசந்தேன்ன்ன்ன்.]
மனித உடலையும் மனதையும் ஆரோகியத்துடன் வைத்துக்கொள்ள உதவ வழிசொல்லும். மற்றும் குழந்தைகளின் நலங்களில் அக்கரைகொள்ளும் அனைவரும் சிறப்பானவர்களே! அவ்வகையில் வலையில் பலவகைகள் உலவுகிறார்கள். நாம் கேட்க்கும் மருத்துவ சந்தேக கேள்விகளுக்கும் பதில்தருகிறார்கள்.அதில் நம்ம வலைக் கண்களில் சிக்கியவர்களே! உங்கள் கண்முன் இருக்கிறார்கள். என்ன சொல்கிறார்களென்று நான் சொல்வதைவிட, அவர்களே சொல்கிறார்கள் சட்டென கிளிக் செய்து போய்பாருங்கள். சரி பார்த்துவிட்டு வந்தும் சொல்லுங்க! ஆனா அதுக்குமுன்னாடி நான் சொன்னவைகள் சரிதானான்னு சொல்லிட்டுபோங்க..
அம்மாடியோ இப்பவே கைவிரல்கள் வலிக்குதே!
சரி நானும்போய் இதுக்கு என்ன வைத்தியமுன்னு கேட்டுவிட்டு வாரேன்ன்ன்ன்ன்
இதயத்தின் ஓசையறிந்து
இன்ன வியாதியென அறிபவர்கள்நாடிப் பிடித்துப் பார்த்து
நரம்புகளின் பாசையறிந்தவர்கள்வளர்ச்சியில்லா உடல்களுக்கும்
வளர்ச்சிதரும் வல்லவர்கள்நலன்களை விளக்கிச்சொல்லும்
நற்ப்பணி செய்பவர்கள்உடலுக்கு கேடுவந்தால்
உற்று நோக்கி விரட்டுபவர்கள்
உயிருக்கு தீங்கு என்றால்
உதவுவதில் ஒப்பற்றவர்கள்மருத்துவ குணங்களையறிந்த
மகத்துவம் பெற்றவர்கள்மாசற்ற பண்புகளால்
மதிப்புடன் வாழ்பவர்கள்இறைவரம் வாங்கிவந்த
இப்படியோர் நல்லவர்கள்உயிருக்கு பணையம் வைக்காமல்
உயிர்காக்கவேண்டும் இன்னவர்கள்..இன்று சிக்கியது இம்புட்டுதான். இனி நாளைக்கு என்ன சிக்குதுன்னு
முத வெட்டா?
ReplyDelete>>>>>மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள்.
ReplyDeletemanadhaiththotta மனதைத்தொட்ட வரிகள்
//மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள்//
ReplyDeleteஉண்மை.
இவர்களில் சில பதிவர்கள்
தளத்தை இன்று தான் நான்பார்க்கின்றேன்.அருமையா உள்ளது கவிதாயனி.நன்றி
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமுத வெட்டா?//
வாங்க சி பி. முதல் வெட்டு வெட்டிடீங்களா ரொம்ப சந்தோஷம்..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>>>மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள்.
manadhaiththotta மனதைத்தொட்ட வரிகள்.//
இரண்டாவது வெட்டுமா! ரொம்ப சந்தோஷம் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் அன்பான கருத்துக்களுகும் மனநிறைந்த நன்றிங்கோ.
S Maharajan said...
ReplyDelete//மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள்//
உண்மை.
இவர்களில் சில பதிவர்கள்
தளத்தை இன்று தான் நான்பார்க்கின்றேன்.அருமையா உள்ளது கவிதாயனி.நன்றி//
அப்படியா மகா. ரொம்ப சந்தோஷமாக இருகிறது நானும் தேடிதான் போய் கொண்டுவந்துள்ளேன் எனக்கும் பலர் தேடும்போதுதான் தெரிந்தது. தேடுதல் வேட்டையைதந்து எனக்கும் அறியத்த வலைச்சரத்துக்கு எனது பாராட்டுக்கள்.
மிக்க நன்றி மகராஜன்..
///அதிலும் பல போலிகள் நடமாடி காக்க வேண்டிய உயிரை, மாய்க்க வைப்பவர்களும் இருக்கிறார்கள் உயிர் ஊசலாடும் சமயத்திலும் விலைபேசக் கூடியவர்களுமிருக்கிறார்கள். அவர்கள் எவ்வகையிலும் சேராத மனித உயிர்திண்ணிகள். அட எல்லாத்திலும் இப்படி நிறைய உண்டுங்க அப்படிங்கிறீங்களா! அதுவும் நெசந்தேன்ன்ன்ன்///
ReplyDeleteநெசந்தான்...!
நல்வாழ்வுக்கு
வழிக்காட்டும் பதிவர்களை
அறிமுகப்பத்தி
அமர்க்களப்படுத்திய மலிக்காவுக்கும்....!
மருத்துவ தொடர்பான பதிவர்களுக்கும்....!
வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
சரி... சரி...!
எங்கள் "சந்தேகப்பதிவு சங்கத்தின்" தலைவர்...
சந்தேகச் செம்மல்... சந்தேக ஜீனியஸ்... ஆருயிர் அண்ணன் ஜெயலானிப் பெயரைக் குறிப்பிடாத...
"அன்புடன் மலிக்கா" ..............! .........! .............!
காஞ்சி முரளி said...
ReplyDelete///அதிலும் பல போலிகள் நடமாடி காக்க வேண்டிய உயிரை, மாய்க்க வைப்பவர்களும் இருக்கிறார்கள் உயிர் ஊசலாடும் சமயத்திலும் விலைபேசக் கூடியவர்களுமிருக்கிறார்கள். அவர்கள் எவ்வகையிலும் சேராத மனித உயிர்திண்ணிகள். அட எல்லாத்திலும் இப்படி நிறைய உண்டுங்க அப்படிங்கிறீங்களா! அதுவும் நெசந்தேன்ன்ன்ன்///
நெசந்தான்...!
நல்வாழ்வுக்கு
வழிக்காட்டும் பதிவர்களை
அறிமுகப்பத்தி
அமர்க்களப்படுத்திய மலிக்காவுக்கும்....!
மருத்துவ தொடர்பான பதிவர்களுக்கும்....!
வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!//
வாங்க சகோ. தாங்களின் அன்பான வருகைக்கும் அமர்க்களப்படுத்துத்தும் கருத்துக்களுக்கும் பாசமான வாழ்த்துக்களுகும் மனமார்ந்த்த நன்றிகள் பல.
என்ன அடுத்ததுக்கு பதிலைக்காணோமேன்னு பார்க்கிறீங்களா இதோ அடுத்து..
சரி... சரி...!
ReplyDeleteஎங்கள் "சந்தேகப்பதிவு சங்கத்தின்" தலைவர்...
சந்தேகச் செம்மல்... சந்தேக ஜீனியஸ்... ஆருயிர் அண்ணன் ஜெயலானிப் பெயரைக் குறிப்பிடாத...
"அன்புடன் மலிக்கா" ..............! .........! .............!//
சந்தேகக் கலைமாமனி அவர்களை
அறிமுகப்படுத்துபோதும் சந்தேகத்தோடு யாரும்
சந்தேகம் கேட்டு
சந்தேகத்துகே சந்தேகம் வந்துவிடக்கூடாதேன்னு
நல்ல நோக்கில் நான் செய்த இந்த நல்லகாரியதிற்கு
சந்தேகத்திலகம் வந்து பாராட்டுவாங்கபாருங்க சந்தேகமேயில்லாம.
அம்மாடியோ எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கவேண்டியிருக்கு ஹூம் ...
எனது வலை தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !!!
ReplyDeletedr.rajmohan md
வலைச்சரத்திலும் முத்திரை பதிக்கிறீர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுழந்தை நல மருத்துவன்! said...
ReplyDeleteஎனது வலை தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !!!
dr.rajmohan md//
வாங்க டாக்டர். அனைவரும் அறியவேண்டியதை அறியதந்துள்ளேன். மிகுந்த மகிழ்ச்சி தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete//Chitra said...
ReplyDeleteவலைச்சரத்திலும் முத்திரை பதிக்கிறீர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
ஹை மெய்யாலுமா சித்ராக்கா. ரொம்ப சந்தோஷம் தாங்களின் வருகைக்கும் அன்பானகருத்துக்கும் மிக்க நன்றி.
சொல்ல மறந்துட்டேன்ன்ன்ன்ன்ன்
மேடம்மக்கா.
சே.குமார் said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சே.குமார் ..
Super ARIMUGANGAL... VAZHTHTHUKKAL AKKA.
ReplyDeleteநல்ல வேட்டை ....
ReplyDeleteஎன் வலைப் பூவையும் வலைச்சரத்தில் இணைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி மலிக்கா. உங்கள் தேடல்கள் எல்லாமே சிறப்பாக உள்ளன. சிற்ந்த சேவை. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...
ReplyDeleteஅனைவருமே சிறப்பான அறிமுகங்கள்....
வாழ்த்துக்கள்
சிலசமயம் தேடும்போது சிலது கிடைக்காது.......உங்கள் தொகுப்புகள் அருமை....நன்றி!
ReplyDeleteஎல்லாமே சிறப்பாக உள்ளன. சிறந்த நல்ல தேடுதல் வேட்டை
ReplyDelete//சே.குமார் said...
ReplyDeleteSuper ARIMUGANGAL... VAZHTHTHUKKAL AKKA.//
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
மிக்க நன்றி சே.குமார் ..
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநல்ல வேட்டை ....//
தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி சௌந்தர்..
//Sofia said...
ReplyDeleteஎன் வலைப் பூவையும் வலைச்சரத்தில் இணைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி மலிக்கா. உங்கள் தேடல்கள் எல்லாமே சிறப்பாக உள்ளன. சிற்ந்த சேவை. பாராட்டுக்கள்.//
வாங்க சோஃபியா. அரிய தகவல்களை அறிதருவதில் எனக்கும் மகிழ்ச்சியே. குழந்தைகளின் மனநிலைகளை அழகாக விளக்கி அதற்குதகுந்தார்போல் நடமுறைபடுத்த தாங்கள் சொல்லிதருவது சிறப்பு..
தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
மாணவன் said...
ReplyDeleteமிகவும் பயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...
அனைவருமே சிறப்பான அறிமுகங்கள்....
வாழ்த்துக்கள்.. மிகவும் சந்தோஷம் மாணவன். அனைவரும் பயன்பெற்றால் அதுவே திருப்தி.
தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
//வைகை said...
ReplyDeleteசிலசமயம் தேடும்போது சிலது கிடைக்காது.......உங்கள் தொகுப்புகள் அருமை....நன்றி.//
நீங்க தேடியதில் ஏதும் இங்கே
கிடை[க்கி]த்ததா வைகை..
தாங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
//குழந்தை said...
ReplyDeleteஎல்லாமே சிறப்பாக உள்ளன. சிறந்த நல்ல தேடுதல் வேட்டை.//
வாங்க குழந்தை. பச்சைக்குழந்தையா [என்னைபோல் ஹி ஹி]
தாங்களின் வருகைகும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ..
தொடக்கமும் முடிவும்?
ReplyDeleteஎன் நெஞ்சு படபடவென்று அடிப்பது போலிருக்கு.
அற்புதம்.
ஜோதிஜி said...
ReplyDeleteதொடக்கமும் முடிவும்?
என் நெஞ்சு படபடவென்று அடிப்பது போலிருக்கு.
அற்புதம்//
வாங்க ஜோதிஜி.
ஆகா நெஞ்சு படபடன்னு அடிக்கிறதா! எதைக்கொண்டு அடிக்கிறது என்று
முதலில் பார்த்தேளா!
பார்த்துட்டு சொல்லுங்கோ [சும்மா சும்மா இது தமாஸாம் ]
தாங்களின் வருகைகும் படபடவென்ற கருத்துக்கும் மிக்க நன்றி ..
ஜோதிஜி said...
ReplyDeleteதொடக்கமும் முடிவும்?
என் நெஞ்சு படபடவென்று அடிப்பது போலிருக்கு.
அற்புதம்//
வாங்க ஜோதிஜி.
ஆகா நெஞ்சு படபடன்னு அடிக்கிறதா! எதைக்கொண்டு அடிக்கிறது என்று
முதலில் பார்த்தேளா!
பார்த்துட்டு சொல்லுங்கோ [சும்மா சும்மா இது தமாஸாம் ]
தாங்களின் வருகைகும் படபடவென்ற கருத்துக்கும் மிக்க நன்றி ..
//மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள்.//
ReplyDeleteஉண்மைதான். அருமையான அறிமுகங்கள் என்பதை மறுக்க முடியாது.
பதிவர்களின் நலனைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட மல்லிகா வாழ்க..
மருத்துவ வலைப் பதிவுகள் பற்றி அருமையான பகிர்வு மலீக்கா.. அசத்துறீங்க..:))
ReplyDeleteவாவ் மருத்துவர்களா புதுமை.
ReplyDeleteமல்லி மலிக்கா மலிக்கா நீங்க கலக்குங்க.
அருமையான புதுமையான அறிமுகஙக்ள்,
இதில் எனக்கு தெரியாத புது முகங்களும் உண்டு.. பார்த்துடுவோம்
////நல்லெண்ணம் கொண்ட மல்லிகா வாழ்க///
ReplyDeleteஹி.....! ஹி.....! ஹி.....!
மல்லிகா..... இல்ல... இந்திரா.......
மலிக்கா....!
*******
மலிக்கா...!
///பச்சைக்குழந்தையா [என்னைபோல் ஹி ஹி]///
அய்யோ...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..?
மக்கள் நலம் பேணும்
ReplyDeleteமருத்துவர்களின் அறிமுகங்கள்...
நல்ல பயனுள்ள அறிமுகங்கள்.
கவிஞரே, வாழ்த்துக்கள்!
...35...
எனது வலத்தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇவ்வளவு மருத்துவத் தளங்களா என ஆச்சரியமாக இருக்கிறது.
பயனுள்ள பதிவர்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅழகிய முறையில் தொகுத்ததர்க்கு வாழ்த்துக்கள்.
பேஸ்புக்கிலும் கலக்குறீங்க உங்களுக்கென்ற வலைகளிலும் அசத்துறீங்க இங்கேயும் சூப்பர்
ReplyDeleteமக்கள் நலம் பேணும்
மருத்துவர்களின் அறிமுகங்கள்.
எல்லாமே சிறப்பாக உள்ளன.
நல்ல தேடுதல் வேட்டை
எப்படியெல்லாம் அசதுறீங்க மலிக்கா
அருமை அருமை அருமை எத்தனை அருமை சொன்னாலும் தகும் வாழ்த்துக்கள் உங்கள் பணி மிகச்சிறப்பாக உள்ளது.
இது வலைச்சரத்துக்கே பெருமை..
நல்ல தேர்வு இந்த கவிஞர் மலிக்கா
//வலைச்சரத்திலும் முத்திரை பதிக்கிறீர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
ReplyDeleteரிபீட்டூஊஊஊஊஊஊஊஊஊஉ
மிகவும் பயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
ஆஹா மலிகாக்கா,
ReplyDeleteநீங்கதேன் இந்த வார ஆசிரியரா? நான் கவனிக்கலை பாருங்க. ரெம்ப நாளா போஸ்ட் செஞ்சிருக்கீங்க. வித்தியாசமா ப்ரொஃபைல் ஃபோட்டோ போட்டு அதுலயே உங்க அபிமானத்தையும் எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். :)
இந்திரா said...
ReplyDelete//மனிதர்களை பூமியில் பாதுகாப்பாய் படைத்து, அதனை உயிருள்ளவரை பாதுகாக்க நாடிய இறைவன்.அதே மனிதர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுக்கிறான். அதில் மருத்துவர்களும் அடங்குவார்கள்.//
உண்மைதான். அருமையான அறிமுகங்கள் என்பதை மறுக்க முடியாது.
பதிவர்களின் நலனைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட மல்லிகா வாழ்க..//
வாங்க இந்திரா. தாங்களின் வருகைக்கும் அன்பு நிறைந்த கருத்திற்க்கும் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி.
சகோ முரளி சொன்னதுபோல் என்பெயர் மல்லிகா அல்ல மலிக்கா. நன்றி இந்திரா.
அசத்தலான மருத்துவத்துடன் கூடிய மனோத்த்துவ பதிவு கலக்குங்க...!!
ReplyDelete//சந்தேகக் கலைமாமனி அவர்களை
ReplyDeleteஅறிமுகப்படுத்துபோதும் சந்தேகத்தோடு யாரும்
சந்தேகம் கேட்டு
சந்தேகத்துகே சந்தேகம் வந்துவிடக்கூடாதேன்னு
நல்ல நோக்கில் நான் செய்த இந்த நல்லகாரியதிற்கு
சந்தேகத்திலகம் வந்து பாராட்டுவாங்கபாருங்க சந்தேகமேயில்லாம.//
யாராவது என் முகத்தில தண்ணிய தெளிங்கப்பா ...இப்பவே கண்னை கட்டுதே..........
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteமருத்துவ வலைப் பதிவுகள் பற்றி அருமையான பகிர்வு மலீக்கா.. அசத்துறீங்க..:))//
வாங்கக்கா
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி..
//Jaleela Kamal said...
ReplyDeleteவாவ் மருத்துவர்களா புதுமை.
மல்லி மலிக்கா மலிக்கா நீங்க கலக்குங்க.
அருமையான புதுமையான அறிமுகஙக்ள்,
இதில் எனக்கு தெரியாத புது முகங்களும் உண்டு.. பார்த்துடுவோம்.//
வாங்கக்கா அப்படியா சந்தோஷமாயிருக்காக.
போய்பாருங்கக்கா
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
காஞ்சி முரளி said...
ReplyDelete////நல்லெண்ணம் கொண்ட மல்லிகா வாழ்க///
ஹி.....! ஹி.....! ஹி.....!
மல்லிகா..... இல்ல... இந்திரா.......
மலிக்கா....!
*******
மலிக்கா...!
///பச்சைக்குழந்தையா [என்னைபோல் ஹி ஹி]///
அய்யோ...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..?//
இந்திராவுக்கு விளக்கியமைக்கு
மிக்க நன்றி சகோ..
ஒத்துக்கமாட்டியளே ஒத்துக்காட்டியும் அதான் நெசம்.......
//NIZAMUDEEN said...
ReplyDeleteமக்கள் நலம் பேணும்
மருத்துவர்களின் அறிமுகங்கள்...
நல்ல பயனுள்ள அறிமுகங்கள்.
கவிஞரே, வாழ்த்துக்கள்!
...35...//
வாங்கண்ணா. ரொம்ப மகிழ்ச்சிண்ணா.
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
Dr.எம்.கே.முருகானந்தன் said...
ReplyDeleteஎனது வலத்தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
இவ்வளவு மருத்துவத் தளங்களா என ஆச்சரியமாக இருக்கிறது.//
வாங்க டாக்டர்.
தாங்களைபோன்று சேவைகள் செய்யும் பலர் உண்டு அதில் சிலர்தானிங்கே என நினைக்கிறேன் டாக்டர் தாங்களின்
வருகைக்கும் கருத்துக்கும்,
மிக்க நன்றி..
ராஜவம்சம் said...
ReplyDeleteபயனுள்ள பதிவர்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
அழகிய முறையில் தொகுத்ததர்க்கு வாழ்த்துக்கள்.//
வாங்க சகோ
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
//கார்த்திகேயன் said...
ReplyDeleteபேஸ்புக்கிலும் கலக்குறீங்க உங்களுக்கென்ற வலைகளிலும் அசத்துறீங்க இங்கேயும் சூப்பர்
மக்கள் நலம் பேணும்
மருத்துவர்களின் அறிமுகங்கள்.
எல்லாமே சிறப்பாக உள்ளன.
நல்ல தேடுதல் வேட்டை
எப்படியெல்லாம் அசதுறீங்க மலிக்கா
அருமை அருமை அருமை எத்தனை அருமை சொன்னாலும் தகும் வாழ்த்துக்கள் உங்கள் பணி மிகச்சிறப்பாக உள்ளது.
இது வலைச்சரத்துக்கே பெருமை..
நல்ல தேர்வு இந்த கவிஞர் மலிக்கா.//
வாங்க கார்த்தி.ரொம்ப ரொம்ப சந்தோஷம்
தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும்,
வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..
teedummanam said...
ReplyDelete//வலைச்சரத்திலும் முத்திரை பதிக்கிறீர்கள்..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
ரிபீட்டூஊஊஊஊஊஊஊஊஊஉ
மிகவும் பயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..//
வாங்க தேடும்மனம்.
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
அன்னு said...
ReplyDeleteஆஹா மலிகாக்கா,
நீங்கதேன் இந்த வார ஆசிரியரா? நான் கவனிக்கலை பாருங்க. ரெம்ப நாளா போஸ்ட் செஞ்சிருக்கீங்க. வித்தியாசமா ப்ரொஃபைல் ஃபோட்டோ போட்டு அதுலயே உங்க அபிமானத்தையும் எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். :)//
வாங்க அன்னு.
நாமதான் இந்த வாரம். இந்த பச்சகுழந்தையை நம்பி இவ்வளோ பெரிய பொருப்பை ஒப்படச்சிட்டாங்களே அன்னு...
இப்படியா நீங்க வந்து பார்க்கமயிருப்பது போங்க உங்கக்கூட டுக்கா.
தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
ஜெய்லானி said...
ReplyDeleteஅசத்தலான மருத்துவத்துடன் கூடிய மனோத்த்துவ பதிவு கலக்குங்க...!!//
என்னது,,,,,,,,,கலக்கவா. ஆகா என்னைய மாட்டிவிடத்தானே இந்த ஐடியா. இந்த துறையில் கலப்புடாது அப்புறம் நம்மலையே கலக்கிடுமுல்ல அண்ணாத்தே..
யாராவது என் முகத்தில தண்ணிய தெளிங்கப்பா ...இப்பவே கண்னை கட்டுதே..........//
ReplyDeleteயாரும் தெளிச்சிடாதீங்கப்பு..
இது தண்ணியதெளிச்சாலும். பன்னீரத்தெளிச்சாலும் தெளியாதுங்கோ.
கண்ணை கட்டிச்சா அப்போ
காட்டில் விட்டிருக்குமே!