Tuesday, March 29, 2011

செவ்வாயன்று இறைவன்

'செவ்வாய் வெறும் வாயாகிப் போனது' என சொல்வார்கள். காரணம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகம் உயிரினங்களை கொண்டிருந்ததாக ஒரு கணக்கு உண்டு. அது உண்மையா என்பதை நிரூபணம் செய்ய எந்த ஒரு ஆதாரமும் கிடைத்தபாடில்லை. அதுபோலவே இறைவன் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி இறைவன் எங்கே எனும் ஆதாரம் இன்னும் இங்கே கிடைத்தபாடில்லை என்றாலும் மனது வைத்தால் இறைவன் தெரிவார் என சொல்லலாமோ. இதோ கோவி கண்ணன் அவர்களின் இறைவன் பற்றிய பார்வை. அவரது வலைப்பூவின் பெயர் காலம். மதங்கள், மனிதாபிமானங்கள் என பலவித கலவையுடன் அவர் எழுதி வரும் விதம் பாராட்டுக்குரியது. இருமுறை தமிழ்மண விருதுகள் வென்றவர். 

சத்தியத்தின் வழி நிற்க தெரிந்த மனிதர்கள் இப்போதெல்லாம் மடையர்களாகவே கருதப்படுகிறார்கள். நேர்மை, நியாயம் என்பதெல்லாம் இன்றைய உலக சூழலுக்கு மட்டுமல்ல என்றைய உலக சூழலுக்கும் பொருந்தி வருவதில்லை. உண்மையாகவே இருப்பவரே இறைவனுக்கு உகந்தவர் என எடுத்துக் கொண்டால் இறைவன் அவதாரங்கள் கூட தோற்றுப் போய்விடும். வாய்மை எனப்படுவது யாதெனின் தீமை இலாத சொலல். யாருக்கு தீமை இல்லாமல் போக வேண்டும், யாருக்கு தீங்கு நேர வேண்டும் என்பதை எவர் தீர்மானிப்பது. அற்புத கதைகளுடன் ஒரு அழகிய பதிவுதனை படிக்க இதோ கபீரன்பனை அணுகுங்கள். அவரின் வலைப்பூவின் பெயர் கபீரின் கனிமொழிகள். 

மெய்ப்பொருள் என சொல்லும்போதே அதில் பொருள் ஒட்டி இருக்கிறது. பொருள் அல்ல இறைவன். இறைவன் பொருள் எனும் சமன்பாட்டில் ஒருபோதும் அமர்வதில்லை. இறைவன் நமது எல்லைக்கு உட்பட்டால் அது இறைவனே அல்ல. ஆனால் இதோ நூருல் அமீன் அவர்கள் தனது புல்லாங்குழல் வலைப்பூவில் அருமையாக எழுதி எனது எண்ணத்தை மாற்ற சொல்லும் வரிகள் தான் எத்தனை அழகு. ''இன்ன பொருள் என சொல்ல முடியாத ஆன்மாவின் இருப்பே அந்த ஆன்மாவை வழங்கிய ஒப்புவமை இல்லாத இறைவனின் இருப்புக்கு மகத்தான சாட்சியாக இருக்கின்றது. ஆன்மா என்னும் அகக்கண்ணைக் கொண்டு தான் நாம் அனைத்தையும் அறிகின்றோம் என முந்திய இடுகையில் பார்த்தோம். இமாம் கஸ்ஸாலி போன்ற ஆன்மீக அறிஞர்கள் நமது “புறக்கண்களுக்கு” பார்க்கும் திறன் இருந்தாலும் சூரியனின் வெளிச்சம் ஒளி வழங்கி உதவுவது போல இந்த ஆன்மீக பார்வையை வழங்கும் ஆன்மா என்னும் அகக்கண்ணுக்கு வெளிச்சம் வழங்கும் சூரியன் என இறைவேதத்தை கூறுகின்றார்கள்.''

செவ்வாயன்று இறைவன் இன்னும் வளரும்.



9 comments:

  1. நல்ல பகிர்வு நண்பரே.... எழுத்து நடை அருமை...வாழ்த்துக்கள்.


    எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

    ReplyDelete
  2. மிக்க நன்றி தமிழ்வாசி

    ReplyDelete
  3. மிகவும் நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல தேர்வுகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  6. உங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதரரே!

    ReplyDelete
  7. மிக்க நன்றி லக்ஷ்மி

    மிக்க நன்றி சித்ரா

    மிக்க நன்றி ராம்சாமி

    மிக்க நன்றி அமீன்

    ReplyDelete
  8. பதிவைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி இராதாகிருஷ்ணன் ஐயா.

    ReplyDelete
  9. மிக்க நன்றி கோவியாரே.

    ReplyDelete