Wednesday, April 6, 2011

கதை சொல்றேன் வாங்க..!!!




எல்லாருக்கும் வணக்கம். அம்மா தாங்க எப்பவும் கதை சொல்லி சாப்பாடு போடுவாங்க. நான் சாப்பாடு போட்டுக் கதை சொல்லப் போறேன்...ஆமாங்க பாருங்க அவங்க அவங்க சொந்த கதை, சோக கதை, கற்பனை கதை, இன்னும் நிறைய இருக்குங்க. எப்படி எல்லாம் யோசிச்சு எழுதுறாங்க படிக்க படிக்க அவ்வளவு விறு விறுப்பா ருக்கு...நீங்க கட்டாயம் படிச்சுப் பார்க்கணும்...



காமெடி நடிகர்களைப் பார்த்தால் சார் ஒரு காமெடி செய்துகாட்டுங்கள்னு சொல்வார்களாம் அதே மாதிரி செல்வாவை எங்கு பார்த்தாலும் செல்வா கதைகள் சொல்லுங்கள் என கேட்கப் போகிறார்கள்...இவர் எழுதும் கதைகள் எல்லாம் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்..தினமும் செல்வா கதைகள் எழுதுகிறார். வரும் நாளில் இவருடைய கதைகள் புத்தகமாக வரும்...இவர் எலிமருந்து வாங்குவதற்கு எப்படியெல்லாம் டெஸ்ட் பண்றாருனு  நீங்களும் பாருங்க...


இவர் தீவிர சுஜாதா ரசிகர் ...அறிவியல் சம்பந்தமாக அதிகம் பதிவு எழுதுவார்...இப்பொழுது காதலிப்பது எப்படினு சொல்லித் தருகிறார். இவர் பதிவைப் படித்தால் இவருக்கு ரசிகர் ஆகிடுவிங்க ...காதலின் பரிசு என்று சொன்னார். ஏதோ உயிர் பிரச்சினை. ஒரு மாதரி சொன்னார் நானும் ஆர்வமாகப்  படித்தேன்..அப்படி என்ன தான் பரிசு அது நீங்களும் படித்து பாருங்கள் புரியும்..!!

விண்ணோடும் முகிலோடும் என்ற பாடலை பாடிக்கொண்டே தன் பயண அனுபவத்தைக் கதையாகச்  சொல்கிறார்...சுவாரசியமாக சொல்வது தான் இவரின் சிறப்பு...கதை சொல்லும் பொழுது சின்னச் சின்ன விஷயங்களை கூட கவனித்துச் சொல்கிறார்.....தன் பயணக்கதையைச் சொல்லும் பொழுது ஆங்காங்கே சமூகம் பற்றி சொல்வது தான் இவரின் சிறப்பு. தன் சமூகம் மாறவேண்டும் என்பது இவரின் எழுத்திலே தெரிகிறது...இந்த சமுகத்தை எப்படி மாற்றலாம் என்று கேள்வி கேட்டால்...இவுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...!!   சொல்றார் 


சமுத்ரா என்று பெயர் வைத்திருக்கிறார்.... ஏன் இந்த பெயர் என்றால் ஓஷோவின் 'oceanic experience 'என விளக்கம் தருகிறார்... இவர் சிறுகதை எழுதுவதில் மிகவும் திறமைசாளி பீட்டாசயின்ஸ்  பதிவு எழுதி இருக்கார் பாருங்க அப்படியே இங்கிலீஷ் படம் பார்க்குற மாதிரி இருக்கு...அணு அண்டம் தொடர் வேற எழுதி வருகிறார்...


இவங்க தான்  யோஹன்னா யாழினி சாந்தி தெரு - 2 காமன் சென்ஸ்  கதை எழுதி இருக்காங்க பாருங்க ரெண்டு பெண்கள் சண்டை போடுவது போல் ....இவங்க போட்ட சண்டையை பத்தி தான் கதை எழுதி இருப்பாங்களோ....??


தொடர் கதை :

தொடர் நாயகி ச்சே தொடர்கதை நாயகி ஆமாங்க இவங்க தொடர் கதை எழுதுறாங்க பாருங்க...முதலில் "அதே கண்கள்" தொடர்கதை எழுதி இருந்தாங்க. கதையை படித்த மக்கள் எல்லாம் தொடரை "முடிக்காதீங்க முடிக்காதீங்க" சொன்னாங்க இருந்தாலும் இவங்க முடிச்சுட்டாங்க...இப்போ ஜில்லுன்னு ஒரு காதல் தொடர் கதை எழுதுறாங்க....ஆமாங்க இந்த கதையும் சூப்பரா போகுதுங்க...இவங்களோட ஸ்பெஷலே போர் அடிக்காமல் கதை சொல்றது அதாங்க...பதிவின் நீளம் பெருசா இருந்தாலும் படிக்க சுவாரசியமா இருக்கும்...ஒரு தொடர் கதை படிச்சு பாருங்க அடுத்து என்ன நடக்கும் உங்களுக்கே ஒரு ஆர்வம் வரும்... 


இன்றைய பிரபலம்:

இவர் பேருதாங்க வெறும்பய. பேருதான் வெறும்பய ஆனா அவர் உண்மைலேயே பெரும்பய ங்க. ஆளோட ஒடம்ப சொல்லல. அவ்ளோ அறிவு இருக்குனு சொன்னேன். இவர் பிரபலாம் ஆனதே ஜோதி கதையாலதான். ஏன்னா அந்தக் கதை அவரோட கதை. அப்படின்னா மத்தவங்க எழுதுறது அடுத்தவங்களோட கதைன்னு கேக்காதீங்க . அதாவது அவரோட கதைன்னா அவர் வாழ்க்கைல நடந்த கதை. ஜோதி கதைல சில விசயங்கள் அவர் வாழ்க்கைல நடந்தது.


என்னங்க கதையெல்லாம் பிடிச்சு இருக்கா...? பொறுமையா இருந்து படிச்சிட்டுப் போங்க....யாரோ என்னை கூப்பிடுறாங்க என்னனு கேட்டுட்டு வரேன்...!!! 
( நான் வேணா ஒரு கதை சொல்லட்டுமா ? )




40 comments:

  1. கதை சொல்பவர்களை பற்றிய் ஒரு கதையா சொல்லி அறிமுகப்படுத்தியிருப்பது அருமை...தம்பி....! படிக்காத கதைகளை படித்துக்கொள்கிறேன்...

    கீப் ராக்கிங்!!!!

    ReplyDelete
  2. ஆஹா கதை சொல்பவர்கள் பற்றியே நீங்க கதை மூலமே அறிமுகப்படுத்தும் விதமே தூள்கிளப்புது. நடத்துங்க.

    ReplyDelete
  3. நல்ல ஸ்டைல்.. கலக்குங்க.. கலக்குங்க..

    ReplyDelete
  4. நீங்கள் அறிமுகப்படுத்துகிற விதம், அருமையாக இருக்குது சௌந்தர். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. செம flow தம்பி.... கலக்கு

    ReplyDelete
  6. நல்லா கலர் கலரா கதை விட்டிருக்கே......!

    ReplyDelete
  7. ///////அதாவது அவரோட கதைன்னா அவர் வாழ்க்கைல நடந்த கதை. ஜோதி கதைல சில விசயங்கள் அவர் வாழ்க்கைல நடந்தது.//////

    சில விஷய்ஙகள் மட்டுமா?

    ReplyDelete
  8. சௌ...கலக்கிட்டு இருக்க...நடத்து..நடத்து...:)) நீ குறிப்பிட்ட பதிவர்களின் படைப்புக்கள் பெரும்பாலும் நான் ரசித்தது தான்...எல்லாமே அருமையான தேர்வு....

    ReplyDelete
  9. dheva said...
    கதை சொல்பவர்களை பற்றிய் ஒரு கதையா சொல்லி அறிமுகப்படுத்தியிருப்பது அருமை...தம்பி....! படிக்காத கதைகளை படித்துக்கொள்கிறேன்...

    கீப் ராக்கிங்!!!!/////

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா கண்டிப்பா கதையெல்லாம் படிங்க...

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...
    கலக்குங்க மக்கா///

    நன்றி மக்கா உன் வருகைக்கும் கருத்திற்கும்...!!!

    ReplyDelete
  11. Lakshmi said...
    ஆஹா கதை சொல்பவர்கள் பற்றியே நீங்க கதை மூலமே அறிமுகப்படுத்தும் விதமே தூள்கிளப்புது. நடத்துங்க.///

    ரொம்ப ரொம்ப நன்றிம்மா...

    ReplyDelete
  12. Madhavan Srinivasagopalan said...
    நல்ல ஸ்டைல்.. கலக்குங்க.. கலக்குங்க..////

    ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...!!!

    ReplyDelete
  13. அமைதிச்சாரல் said...
    கலக்கல்..///

    நன்றி...

    ReplyDelete
  14. Chitra said...
    நீங்கள் அறிமுகப்படுத்துகிற விதம், அருமையாக இருக்குது சௌந்தர். பாராட்டுக்கள்!///

    ரொம்ப ரொம்ப நன்றி..... :)

    ReplyDelete
  15. அருண் பிரசாத் said...
    செம flow தம்பி.... கலக்கு///

    தேங்க்ஸ் அண்ணா...!!!

    ReplyDelete
  16. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    நல்லா கலர் கலரா கதை விட்டிருக்கே......!////

    ஹி ஹி ஹி ரொம்ப புகழாதீங்க....!!!

    ReplyDelete
  17. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////அதாவது அவரோட கதைன்னா அவர் வாழ்க்கைல நடந்த கதை. ஜோதி கதைல சில விசயங்கள் அவர் வாழ்க்கைல நடந்தது.//////

    சில விஷய்ஙகள் மட்டுமா?///

    அப்படின்னு சும்மா சொல்ல வேண்டியது தான் :) என்னதான் நமக்கு உண்மை தெரிஞ்சாலும் வெளிய சொல்ல கூடாது இல்லையா

    ReplyDelete
  18. ஆனந்தி.. said...
    சௌ...கலக்கிட்டு இருக்க...நடத்து..நடத்து...:)) நீ குறிப்பிட்ட பதிவர்களின் படைப்புக்கள் பெரும்பாலும் நான் ரசித்தது தான்...எல்லாமே அருமையான தேர்வு..../////


    வாங்க வாங்க....ரொம்ப ரொம்ப நன்றி...

    ReplyDelete
  19. நீங்கள் அறிமுகப்படுத்துகிற விதம், அருமையாக இருக்குது சௌந்தர். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  20. நான் கூட நதிநின்னு ஒரு கதை எழுதினேன். அந்த லிங்க் எங்க?

    ReplyDelete
  21. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    நீங்கள் அறிமுகப்படுத்துகிற விதம், அருமையாக இருக்குது சௌந்தர். பாராட்டுக்கள்!/////

    ரொம்ப நன்றிங்கோ...!!!

    ReplyDelete
  22. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    நான் கூட நதிநின்னு ஒரு கதை எழுதினேன். அந்த லிங்க் எங்க?///

    wow நீங்க பதிவரா....வாழ்த்துக்கள்..கதையெல்லாம் எழுத தெரியுமா..??

    ReplyDelete
  23. நீ கலக்கு மச்சி....:))

    ReplyDelete
  24. சௌந்தர் said...
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    நான் கூட நதிநின்னு ஒரு கதை எழுதினேன். அந்த லிங்க் எங்க?///

    wow நீங்க பதிவரா....வாழ்த்துக்கள்..கதையெல்லாம் எழுத தெரியுமா..??////



    இவர் பதிவர் அல்ல.. இவர் ஒரு புகைப்பட கலைஞர்... எப்பவும் போட்டோ மட்டும் போடுவார்...:))

    ReplyDelete
  25. அசத்தல் அறிமுகங்கள்,
    வாழ்த்துக்கள் சௌந்தர்

    ReplyDelete
  26. இந்த அறிமுகங்களும் சூப்பர். சாப்பாடு அப்புறம் கதை அடுத்து ? கொயட் இண்ட்ரெஸ்டிங்..நிறைய வாசிக்க வேண்டியது இருக்கே!

    ReplyDelete
  27. கதை சொல்பவர்களை பற்றிய் ஒரு கதையா சொல்லி அறிமுகப்படுத்தியிருப்பது அருமை...தம்பி....! படிக்காத கதைகளை படித்துக்கொள்கிறேன்...

    கீப் ராக்கிங்!!!!

    ரிப்பீட்டு

    ReplyDelete
  28. வித்தியாசமாக பதிவுகளை அறிமுகப்படுத்தறீங்க..வாழ்த்துகள். :)

    ReplyDelete
  29. அசத்துங்க அசத்துங்க...

    ReplyDelete
  30. நல்லாயிருக்குங்க உங்க கதை

    அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  31. ஐ... செல்வாகதைகளையும் அறிமுகம் பண்ணிருக்காங்க .. நன்றி சொல்லனுமா ? ஹி ஹி

    ReplyDelete
  32. //வரும் நாளில் இவருடைய கதைகள் புத்தகமாக வரும்... இவர் எலிமருந்து வாங்குவதற்கு எப்படியெல்லாம் டெஸ்ட் பண்றாருனு நீங்களும் பாருங்க...// ஹி..ஹி..ஹி.. அந்த எலியை விட இந்த (செல்வா) பெருச்செலித்தொல்லை ரொம்ப ஓவராத்தான் இருக்கு... ஹா..ஹா.ஹா...

    ReplyDelete
  33. அனைத்து அறிமுகப்பதிவுகளும் செம கலக்கல்..!!! சூப்பரா தொகுத்து இருக்க சௌந்தர்.

    ReplyDelete
  34. மிக்க நன்றி சௌந்தர்...என்னையும் இதுல சேத்துகிட்டதுக்கு...அடுத்த கதைல உங்களுக்கு ஒரு ரோல் குடுத்துடலாமா... ஹா ஹா....:))

    ReplyDelete
  35. அட சௌந்தர், நமக்கு குடுத்த பில்டப்பு....டாப்பு தான் போங்க...! ரொம்ப ரசிச்சேன்...! சரத்தில் ஒரு பூவாய் கோர்த்தமைக்கு மிக்க நன்றி...நண்பா...! பிற பூக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...!!

    ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்த விதம் அருமை...! அருமை...!

    ReplyDelete
  36. வர வர நீ உரிபடியான காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட டா தம்பி ... ம்ம்ம் கலக்கு ... கீப் ராக்கிங் டா

    ReplyDelete
  37. அறிமுகங்களுக்கு நன்றி சௌந்தர்!!

    ReplyDelete
  38. மிக்க நன்றி...! இது எங்கள் தெருவில் நடந்த சண்டையை வேடிக்கை பார்க்க போய் அதுவே பதிவாக வந்துவிட்டது.பிறகு பதிவு எழுதுவதற்காகவே இந்த மாதிரியான சுவாரஸ்ய சண்டைகள் நடக்காத என எதிர்பார்க்க வேண்டியதாகிவிட்டது..மற்றபடி இது நான் போட்ட சண்டை இல்லை என்பதை அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவித்துகொள்கிறேன்.... என்னை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பலகோடி...! நன்றி...! நன்றி...!

    ReplyDelete