Saturday, May 28, 2011

கதைகளும்.. கவிதைகளும்...!!

ஏற்கனவே தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள்.தெரியாதவர்கள் பயன் பெறுங்கள். இணையத்தில் உள்ள நான் அடிக்கடி பார்க்கும் சில எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் தளங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன்.


தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு வலைத்தளம்.கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதைகள்,நேர்காணல்கள் என இந்தியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி,இலங்கை,மலேசியா,சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது.


எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் பதிவுகள் கிருஷ்ணதுளசி என்பவரால் தொகுக்கப்படும் பலகணி.ஆன்மிக தேடல் உள்ளவர்களுக்கு ஏற்ற தளம்.



இப்போதுள்ள எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர்.இவருடைய கதைகளும் கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள்.வாசிப்பவர்களை கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான எழுத்து இவருடையது.எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.



சமீபத்தில் சூடிய பூ சூடற்க எனும் படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாஞ்சில்நாடன் அவர்களின் படைப்புகளை சுல்தான் என்பவரால் தொகுக்கப்படும் தளம்.ஆனந்தவிகடனில் இவர் எழுதிய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.



நவீன தமிழ்சிறுகதை உலகிம் முடிசூடா மன்னன் என்ற பாராட்டு பெற்ற வண்ணதாசன் அவர்களின் தளம்.புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும் என்று சுஜாதாவால் பாராட்டப்பெற்றவர்.


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளம்.சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்பும் இவரது எழுத்துகளால்...எந்த ஒரு விஷயத்திலும் மாறுபட்ட பார்வை கொண்டவர்.நான்கடவுள்,அங்காடித்தெரு திரைப்படங்களின் வசனகர்த்தாவும் கூட...



ஜெ.மோவைப்பற்றி எழுதிவிட்டு சர்ச்சைக்குரிய சாருநிவேதிதாவைப்பற்றி எழுதாமல் விடக்கூடாது.தமிழ்நாட்டைவிட கேரளாவிலும்,      வெளிநாடுகளிலும்தான் அதிகம்பேருக்கு தெரிந்திருக்கிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.இவர் அடிக்கடி மேற்கோள் காட்டும் எழுத்தாளர்களின் பெயர்களை படிக்கும்போது பெயரையே நம்மால் படிக்கமுடிய வில்லையே இவர் எப்படி அவர்களுடைய படைப்புகளை படிக்கிறாரோ..?!என்று வியந்துபோவேன்.சுவாரசியமான எழுத்து.அவ்வப்போது வாசகர்களை திட்டுவதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.  :)



எழுத்தாளர் பா.ராகவனின் அவர்களின் வலைப்பூ. அபாரமான நகைச்சுவை உணர்வுடன் இவர் எழுதும் கட்டுரைகளை வாசித்து பாருங்கள்.காஷ்மீர்,பாகிஸ்தான் ஒரு புதிர், அல்கொயிதா, டாலர்தேசம், நிலமெல்லாம் இரத்தம், ஹிட்லர் என்று பல தலைவர்களின் வரலாற்றையும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.



பயமறியா பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களின் வலைத்தளம்.எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக விவாதிக்க கூடிய அதன் பொருளை மக்களுக்கு உணர்த்தக் கூடிய பத்திரிக்கையாளர்.யார் ஆட்சியில் இருந்தாலும் நான் நிரந்தர எதிர்கட்சிபோல் மக்களுக்காக விமர்சிப்பேன் என்று கல்கியில் வரும் ஓ பக்கங்களில் எழுதியுள்ளார். பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பத்திரிக்கையாளர்.



சுஜாதா அவர்களின் மீதுள்ள பற்றால் சுஜாதாதேசிகன் என்ற பெயரால் எழுதிவரும் மென்பொருள் பொறியாளரான தேசிகன் என்பவருடைய தளம்.சுஜாதா அவர்களால் என் கதைகளின் அத்தாரிட்டி இவர் என்ற பாராட்டை பெற்ற இவருடைய எழுத்துகளும் சுஜாதா பாணியில் அமைந்துள்ளது.



திரைப்பட கவிஞர் யுகபாரதியின் தளம்.கவிதைகள் மட்டுமன்றி நல்ல பல கட்டுரைகளையும் எழுதுகிறார்.


காதல்கவிஞன் தபூ சங்கரின் வலைப்பூ.அழகியலோடு இவர் கவிதைகள் மனதை கொள்ளை கொள்ளும்.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,விழியீர்ப்பு விசை,அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ என இவர் எழுதியிருக்கும் தொகுப்புகளின் தலைப்புகளே வசியப்படுத்துகின்றன.



விகடனில் அதிகமாக வந்திருக்கிறது இவரது கவிதைகள்.புகைப்பட கலைஞராகவும், டிசைனராகவும் உள்ள இவரது தளத்தின் முகவரி.



சமீபத்தில் திரைக்கு வந்த நஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடலாசிரியர்.தமிழ்ப்புலமை பெற்றவர்.இவரின் வலைப்பூவில் அண்மைய பதிவை படிக்கும் போது இதை எழுதும் எனக்கு சற்று பயமாகத்தான் இருக்கிறது. :)



18 comments:

  1. முதலில் எல்லா பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. பால குமாரன் நாஞ்சில் நாடன் இவர்கள் கதைகளை நான் படித்திருக்கிறேன்...

    ReplyDelete
  3. யுகபாரதி அவர்களின் தளத்தை இன்று தான் பார்க்கிறேன்...

    ReplyDelete
  4. நண்பர் தபுசங்கர் தளத்தை இன்றுதான் பார்க்கிறேன்..

    அவருடைய காதல் கவிதைகளில் கரைந்துப்போனவன் நான்..

    காதலை அவ்வளவு எளிமையாகவும் அவ்வளவு அற்புதமாகவும் சொன்னவர்கள் யாரும் இல்லை...

    எனக்கு பிடித்த புத்தகம்
    தேவதைகளின் தேவதை....

    மிகவும் ரசித்து படித்திருக்கிறேன்..

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு தேவா...
    வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    கவிதைவீதி சௌந்தர்...

    ReplyDelete
  6. அனைவரும் பிரபலமானவர்கள் நன்றி தேவா அணைத்து லிங்கும் ஒரே பதிவில் கொடுத்ததற்கு

    ReplyDelete
  7. பிரபலங்களின் அறிமுகங்கள் நன்று தேவா...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மகுடேஸ்வரன் அவர்களின் அந்தப் பதிவை வலையுலகில் அனைவரும் படிக்க வேண்டும்...
    அவரின் கேள்வி பதில்களும் அருமையாக இருக்கும்...

    ReplyDelete
  9. இவர்களுக்கெல்லாம் அறிமுகம் தேவை இல்லை, இவர்கள் எழுத்துலகின் பிரம்மாக்கள்!!!!

    இருந்தாலும் வாழ்த்துகள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  10. நல்ல அறிமுகம் பஸ் ..

    ReplyDelete
  11. Very useful.thanks

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  12. அனைத்து பிரபலமானவர்களைப் பற்றிய லிங்க் பயனுள்ளதாய் இருந்தது....தொகுத்த விதமும் அருமை...மிக்க நன்றி

    ReplyDelete
  13. @ # கவிதை வீதி # சௌந்தர்

    விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சௌந்தர்..!! :)

    ReplyDelete
  14. @ சசிகுமார்

    தொடர்ந்த ஆதரவிற்கும்,பின்னூட்டங்களுக்கும் நன்றி சசி..!!

    ReplyDelete
  15. @ கலாநேசன்

    நன்றி அண்ணா.. மகுடேசுவரனின் பதிவை படித்தே ஆக வேண்டும்.நல்ல தமிழ் வளர்ப்போம். :)

    ReplyDelete
  16. @ MANO நாஞ்சில் மனோ

    இவர்களை அறிமுகம் செய்யவில்லை நண்பரே...பெருமைபடுத்தியுள்ளோம்.பலபேருக்கு தெரிந்தாலும் சில பேருக்கு தெரியவில்லை.நாலு பேருக்கு நல்லதுன்னா...(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்) :)

    ReplyDelete
  17. @ கந்தசாமி,குணசேகரன்,ரேவா

    வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே..!! :)

    ReplyDelete