வரலாறு.! அப்படினா என்ன.? இன்னும் 100 வருசம் கழித்து மக்களெல்லாம் என்னை பத்தி படிப்பாங்களே அப்போ என் வாழ்க்கை தான் வரலாறு. அதில் நான் தான் வரலாற்று நாயகன். ஹி ஹி.. இப்படி எவ்வளவோ பில்டப் கொடுத்துகிடலாம். ஏன்னா இது இப்போ என் ஏரியா.!! ஹி ஹி. சரி என்னடா இவன் இப்ப வரலாற பத்தி பேசிட்டு இருக்கானே அப்படினு நீங்க யோசிச்சா நான் சொல்றேன் இந்த பதிவு வரலாறுக்காக மட்டும் தான்.
எனக்கு பழையன, பழமை இதிலெல்லாம் ரொம்ப ஆர்வம். அப்படி என்னை போலவே ஆர்வம் வாய்ந்த சில சகாக்களின் பதிவுகள் தான் ஒரு சிறிய வரலாற்று தொகுப்பு.
முதலில் பிரபல பதிவர் மைந்தன் சிவா பக்கம் போவோம். இவர் சமீபத்தில் அசோக பேரரசர் பற்றிய ஒரு பதிவு போட்டிருக்கார். இன்னும் இங்கிருக்கும் சிலருக்கு அசோகர் இருந்தார் என்று மட்டுமே தெரிந்த நிலையில் இந்த பதிவினை சற்று எட்டி பார்த்து இன்னும் விளக்கிக்கொள்ளலாமே.!
ஈரானில் இருந்த கண்டோவன் என்னும் கிராமத்தை பற்றிய வரலாறை தருகிறார் நண்பர் அசோக். இங்கே எல்லா வீடுகளும் மலையில் குடைந்தது, கூம்பு வடிவில் தான் இருக்குமாம். படங்களோடு பதிவு பக்கா.!!
அடுத்து பிரபல பதிவர் மாணவன். நோபல் பரிசு இல்ல நோபல் பரிசு- அது எப்படி உருவாச்சு, ஆல்ஃப்ரட் நோபல் பற்றிய பதிவு. சும்மா சொல்லகூடாது நல்லாவே எழுதியிருக்காரு. போய் படிங்க. ஆனா என்கிட்ட நோபல் பரிசுன்னா என்னனு கேக்கலாம் கூடாது.
நம்ம தலைவர். சமீபத்துல மறைந்த மனிதர். மிகவும் திறமைசாலி. ஒசாமா பின்லேடனை பற்றி தெரிஞ்சுகிடணுமா.? ஹி ஹி. நான் சொல்லமாட்டேன். ஆனா ஒருத்தவங்க கூவி கூவி சொல்லிகிட்டு இருக்காங்க இங்க போய் பாத்துக்கோங்க.
உலகையே தமது இசையால் கவர்ந்த ஒருவர். தமிழகத்திலிருந்து சென்று இரண்டு ஆஸ்கர் விருதை அள்ளி வந்த ஏ.ஆர்.ரஹ்மான். அவரை பற்றி நம்ம தமிழ்வாசி பிரகாஷ் சொல்லுறாரு. இங்கிட்டு வந்து அத கொஞ்சம் பாருங்க.
லியோ டால்ஸ்டாய் கடிதங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நண்பர் வழிபோக்கன். லியோ டால்ஸ்டாய் பத்தி இங்கு நான் சொல்லி தெரியவேண்டும் என்ன அவசியம் நம்மவர் யாருக்கும் இருக்காது என நண்புகிறேன். இங்கு போய் படியுங்கள். மறக்காமல் எல்லா கடிதங்களையும் படியுங்கள்.
பேரழகி க்ளியோபாட்ரா. பிலாசபி பிரபா நோ நோ.!! கம்ப்யூட்டர் விட்டு தள்ளி போங்க. அவரை பற்றி வரலாற்று பதிவு. பாக்கும் போது எனக்கே கண்ணுகட்டுது. மனுசன் போன வருசத்தில இருந்து தொடர்ந்து எழுதுகிறார். இதுவரை 47 பகுதிகள் எழுதியிருக்கிறார். இதுல இன்னும் வேற எழுதுவாறாம். ம்ம்.. நெல்லைசாரலில் இருக்கும் இதன் முதல் பகுதி இதுல இருக்கு. அங்க போயி மத்த எல்லா பகுதியையும் படிச்சுக்கோங்க.
வைரம்.!! அட இது யாரோ ஒருவரின் பெயர்னு நினச்சுடாதீங்க. உண்மையான வைரம் தான். அதான் ஜொலிக்குமே அதேதான். அதை பற்றி ஒரு சில சுவாரஸ்ய தகவல்களோடு கமான் கமான்னு கூப்பிடுறாரு அபு அஜ்மல். வைரத்தை பத்தி தெரிஞ்சுக்க உங்களுக்கு கசக்குமா என்ன.? இங்க போய் பாருங்களேன்.
கிரிக்கெட் உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் இருப்பவர் இலங்கை அணியின் முத்தையா முரளிதரண். அவரை பற்றிய ஒரு சில குறிப்புகள் இங்கே இருக்கிறது. என்னை போலவே முரளியை புடித்தவர்களும், இல்லை விரும்பாதவர்களும் கூட போய் பாக்கலாம். முரளி கோச்சிகிட மாட்டார்.
கேட்பாரற்று கிடக்கும் ஒண்ணை தூக்கி தலையில வச்சுகிட்டு பேசுறார். வேற ஒண்ணும் இல்லைங்க நம்ம தமிழை தான். அருள்மொழிவர்மன் சங்க இலக்கியம், தமிழ் மொழியின் வரலாற்றை காட்டு கத்தாக கத்திகொண்டு இருக்கிறார். வந்து பாருங்களேன்.
இந்த வரலாற்று பகுதியின் கடைசியில் இப்போ நாம உண்மையில் ஒரு சரித்திர நாயகனை பாக்க போறோம். நான் முதலில் படித்து மயங்கிய சே குவேரா தான் அது. அவரை பற்றி நண்பர் வருணன் தொடர்ந்து எழுது வருகிறார். சற்று எட்டி பாருங்கள்.!! மனக்கதவு தட்டி திறக்கும்.
சரி இப்ப இம்புட்டு தான். அடுத்த பதிவுக்கு சீக்கிரமே ஓடுவோம்.!!
''ஒன்றை நீ அடைய எண்ணினால் முதலில் நீ அனைத்தையும் இழக்க வேண்டும்''-சே குவேரா
ஹையா வட எனக்கே
ReplyDeleteஇருங்க படிச்சுட்டு வர்றேன்
ReplyDeleteஅறிமுக விதம் நல்லாருக்கு குறும்புக்கார நண்பரே உங்களுக்கு "பதிவுலக குறும்பன்" னு பட்டம் கொடுக்கலாம்னு சிபாரிசு செய்யலாம் ...
ReplyDeleteஅனைத்து பதிவுகளும் அருமை....அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....
ReplyDeleteதம்பி அறிமுகங்கள் சூப்பர்
ReplyDeleteகலக்கல்
ReplyDeleteஅருமை
ReplyDeleteதம்பி என்னை பற்றி குறிப்பிட்டதுக்கு நன்றி.
ReplyDeleteஎல்லாமே சுப்பர் அறிமுகம்,,,,,,,,,,,,,,
ReplyDeleteவரலாற்று பக்கங்களை புரட்டிப்பார்க்க ஒரு வாய்ப்பு. கிரேட்!
ReplyDeleteஅன்பு தோழரே !எமது வலைதளத்திர்க்கு வருகை தந்தமைக்கு நன்றி மற்றவர்களின் பதிவை அப்படியே Cut & Copy செய்து தனது சொந்த பதிவை போன்று கான்பிப்பவர்களுக்கு மத்தியில் உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை !
ReplyDeleteநல்ல முயற்சி ..வாழ்த்துக்கள் ..
ReplyDeleteபுதியவர்களையும் சொல்லியிருக்கிறீர்கள்.பார்க்கவேணும் மதி.நன்றி !
ReplyDeleteவாழ்த்துகள் வாழ்த்துகள் எல்லோருக்கும்...
ReplyDeleteஎன் பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பாஸ்..
ReplyDeleteஇப்படியான பதிவுகளை பகிர இது போன்ற வரவேற்ப்புகள் தான் தூண்டுகிறன..நன்றி கூர்மதியன்
வரலாற்று ஆய்வாளர்களின் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ.
ReplyDeleteஉங்களின் முயற்சிக்கும், தேடலுக்கும் வாழ்த்துக்கள் மாப்பு.
வரலாற்று ஆய்வாளர்களின் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ.
ReplyDeleteஉங்களின் முயற்சிக்கும், தேடலுக்கும் வாழ்த்துக்கள் மாப்பு.
என் பதிவை அறிமுகம் செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள்... நண்பா....
ReplyDeleteநன்றித் தோழரே... எனது பதிவுகளை மற்ற நண்பர்களும், மற்றும் அந்த நண்பர்களின் பதிவுகளை நானும் அறிந்து கொள்வதற்கு உதவும் வண்ணம் ஒரு நல்ல முயற்சியினை செய்து உள்ளீர்கள்... மிக்க நன்றி!!!
ReplyDeleteநானும் நெல்லைசாரல் கிளியோபேட்ரா தொடர் பதிவுகளை முன்னாடியே பார்த்து அசந்தேன் கூர்..கலக்குறாரு..நீங்களும் கலக்குறீங்க..வித்யாசமான தலைப்புக்கள்..
ReplyDelete