நம்ம கூகுலாண்டவர் கொடுத்துள்ள வரங்களில் மிகச் சிறப்பான ஒன்று "Groups" எனப்படும் குழுமங்கள். இந்த வரத்துக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு அந்தஸ்த்து? என நீங்கள் கேட்பது புரிகிறது!. இருக்கிறதே! இணையத்தில் உலவுகின்றவர்களெல்லாம் யார்?
ஒரு விஷயத்தை முப்பரிமாணத்தோடு மேலிருந்து நோக்குகின்றவர்கள். அனைவருக்கும் ஒருவித மேட்டிமைத்தனமும், அறிவுஜீவித் தன்மையும் இருப்பது இயல்பானதே. சுறுக்கமாகச் சொல்லவேண்டுமானால் எந்தவொரு விஷயம் அல்லது பிரச்சினைக்குமே, ஒரு கொள்கையை வரையறுத்துக் கொண்டோ அல்லது இதுதான் தீர்வு என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதிலேயே உறுதியுடன் உறைந்து நிற்பார்கள். கிட்டத்தட்ட "சுட்டமண்" நிலையிலிருப்பார்கள். சுட்டமண் ஒட்டாதல்லவா? அதைப்போன்று.
அப்படிப்பட்ட நிலையிலிருப்பவர்களையும் ஒட்டவைத்து ஒரு குழுவாக இயங்கவைத்து, அக்குழுவில் இருக்கின்ற பல்வேறு குணாதிசயம், கருத்துக்கள் அல்லது கொள்கைகள் கொண்டவர்ளோடு, இசைந்து கொடுத்து "ஒத்தக் கருத்தோடு" ஒரு கட்டுரை சமைத்து அதை பதிவிடுவது என்பது சாதனை அல்லவா? அதை சாத்தியப் படுத்தியிருக்கின்ற கூகுளாண்டவரின் இந்த "வரம்" சிறப்பான ஒன்று தானே? (அப்பாடி ஒருவழியா..... வேணாம் எதாவது கெட்ட வார்த்தைல திட்டுவீங்க!)
இணையத்தில் நூற்றுக்கணக்கான குழுமங்கள், அதில் நிறைய கருத்து விவாதங்கள் என்று நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அவற்றில் வெகு சிலதே பதிவுகளை எழுதி அதை தங்களுக்கான வலைதளத்தில் பதிவிடுகின்றார்கள். அப்படிப்பட்ட குழுமம் அல்லது குழுவாக இயங்கி பதிவு எழுதி வெளியிடும், எனக்கு நன்கு பரிச்சயமான மூன்று குழுமங்களையும் அவற்றில் என்னைக் கவர்ந்த சில பதிவுகளையும் இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்:
வவாச என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சங்கத்தில் "கைப்புள்ள" என்ற தலைவரின் கீழ் எழெட்டு சிங்கங்கள் உலாவந்து கொண்டிருந்தன. இந்த சிங்கங்களும், தலைவரும் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்கிற அளவிற்கு, அந்த வலைதளத்தில் நுழைந்தாலே மனம்விட்டு சிரிக்க கேரண்டி நிச்சயம். நம் வலைச்சரத்தில் வாரம் ஒரு ஆசிரியரை பொறுப்பேற்க அழைப்பது போல், வவாச விலும் சங்கத்தில் "அட்லஸ் வாலிபர்" என்ற பட்டத்தோடு ஒரு மாதகாலம் எழுதுவதற்கு அழைத்து எழுதச் சொல்வார்கள்.
இன்று வலையுலகில் மிகப் பிரபலமாக இருக்கும் பல பதிவர்கள் வவாச வின் அட்லஸ் வாலிபராக இருந்து பல அற்புதமான நகைச்சுவை பதிவுகளை எழுதியிருக்கின்றார்கள். அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு சிலதை இங்கு தருகிறேன்.
"டெவில் ஷோ - நகரத்தில் ஆன்மீகப் பதிவர்கள்" KRS எனப்படும் திரு. கண்னபிரான் ரவிசங்கர் அவர்கள் சங்கத்தின் அட்லஸ் வாலிபராக இருந்த பொழுது எழுதிய இந்த தொடர்.... படிச்சிட்டு சொல்லுங்க.
வெட்டி கலக்கும் விவாஜி The Farmer - சங்கத்தின் சின்ன பாஸ் போர்வாள் தேவ் எழுதியிருக்கும் இதப் படிச்சிட்டு சிரிக்காட்டி..... சிரிக்கலன்னா அப்புறமா நான் எதாவது சொல்ல நீங்க கோவக்காரரா ஆயிடுவிங்க சொல்லிட்டேன்!
சங்கத்து சிங்கம் நாகை சிவா, விஜய் டீவில ஒரு நிகழ்ச்சியில் நடந்த சிம்பு - பப்லு சண்டையை வைத்து எழுதிய இந்தப் பதிவை படித்துவிட்டு... மக்களே கொஞ்சம் சீரியஸா முகத்த வச்சிகிட்டு வாங்க, ஏன்னா அடுத்த குழுமம் அப்பிடி. கொஞ்சம் கேர்லெஸா இருந்தாலும் டேமேஜ் தான்!
வினவு
தற்பொழுது நம் தமிழ் இணைய பக்கங்களில் பிரபலமாகவும், தொடர்ந்து விழிப்புணர்வு கட்டுரைகளை தந்து கொண்டிருக்கும் தளமாகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பது இந்த "வினவு" தளம். இங்கு யார் யார் உறுப்பினர்கள் என்பது முக்கியமில்லை. (அவ்வளவாக தெரியவும் தெரியாது) ஆனால் எந்த கட்டுரையானாலும் அது வினவு என்ற ஒற்றை அடையாளத்துடன் தான் வரும். ஆட்சியாளர்களின் அட்டூழியங்களையும், அரசின் அவலங்களையும் (எந்த ஆட்சியானாலும்) அஞ்சாமல் புட்டுப் புட்டு வைப்பதும், அடித்தட்டு மக்களுக்கு எதிரான சுரண்டல்களை தோலுரித்துக் காட்டுவதும் அவர்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு கவசமாக விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதி பதிவிடுவதும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இணைய வளர்ச்சியை தங்களது கொள்கைகளுக்காக மிகச் சரியாகவும், மற்ற இயக்கங்களை விட அதிக அளவிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு குழுமம் இது என்று சொன்னால் அது மிகையில்லை. இணையத்தில் இருப்பவர்களில் பலர் இந்த தளங்களுக்கு வந்து படித்தாலே பிரச்சினை ஆகிவிடுமோ? என்று எண்ணுவது போல் தெரிகின்றது.
அப்படியில்லை, நம் வீட்டைவிட்டு வீதியில் இறங்கி திரும்பவும் வீட்டிற்குள் நுழையும் வரையிலும் உள்ள இடைப்பட்ட நிலையில் நமக்கு வரக்கூடிய அனைத்து இடைஞ்சல்களுக்கும் எதிரான குரல் தான் வினவின் குரல் என்பதைப் புரிந்து கொண்டால், அவர்களும் தோழர்களாகத் தான் நமக்குத் தெரிவார்கள்.
வினவில் எந்தவொரு பதிவுமே உப்புக்குச் சப்பாணியாக இருக்காது. அனைத்துமே அதிரடி தான். எல்லாவற்றையும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் அதில் எனக்குப் பிடித்தவற்றை உங்களுக்கும் அறிமுகம செய்கின்றேன்.
இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம்
மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்.
இப்படி நிறைய லிங்க் கொடுத்துக் கொண்டே செல்லலாம். ஆனால் தனக்கு சரியென்று பட்ட ஒரு கொள்கைக்காக எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தொடர்ந்து சேவையாற்றும் இதைப் போன்ற தளங்களுக்கு ஒரு சல்யூட். தளத்தை அழகாக வடிவமைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் சென்று பிடித்த தலைப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். நிறைய இன்ஃபர்மேஷன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கழுகு
நிச்சயமாக இந்த குழுமத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். வலதும் இல்லாமல், இடதும் இல்லாமல் ஒருவித யதார்த்தத்தோடு கட்டுரைகளை உருவாக்கி தந்து கொண்டிருக்கும் இளமையான முதிர்ச்சியுடன் உயரே உலாவரும் ஒரு குழுமம்.
இடது பக்கம் நின்று ஓங்கி ஒலிப்பதற்கு வினைப் போல் பல தளங்களும் இயக்கங்களும் இருந்தாலும், கீழேயும் இல்லாமல் மேலேயும் இல்லாமல் இங்கே இணையத்தில் உலவுகின்ற அனைவரின் வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ள நெருக்கடிகளை, தனிநபர் பிரச்சினைகளை, அரசு செய்ய வேண்டிய கடமைகளை... இப்படியாக பகுத்துப் பகுத்து அந்தந்த நிலையிலிருந்து தொகுத்து விவாதித்து கட்டுரைகளாக ஒத்தக் கருத்துடன் ஆக்கித் தருகிறது இந்தக் குழுமம்.
படிப்படியாக பிரபலமாகிக் கொண்டுவரும் இந்த குழுமத்தில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதில் பெருமையே! வினவைப் போலவே இக் குழுமமும் இதுவரை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் எதுவுமே உப்புக்குச் சப்பாணி ரகம் இருந்ததில்லை. அனைத்துமே தனிநபர் ஒழுக்கம், சமூக சீரமைப்பு, நடுத்தரவர்க்கத்தினருக்கான அரசியல் எதிர்பார்ப்புகள்... இப்படியாகத் தான் அமைந்திருக்கின்றன. இணைய உலகை திரும்பிப் பார்க்க வைக்கின்ற அளவிற்கு இன்னும் பல நுணுக்கமான கட்டுரைகளும், பிரபலங்களின் அல்லது துறை சார்ந்தவர்களின் நேர்முகங்களும் வரவிருக்கின்றன.
கழுகில் வெளிவந்த என்னைக் கவர்ந்த ஒரு சில பதிவுகளை இங்கு பட்டியலிடுகிறேன்.
மாணவர்களும் மன அழுத்தமும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!
இணையம் என்னும் வசியக்காரன்... ஒரு பகீர் ரிப்போர்ட்!
ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை என்ற மிகவும் உபயோகமான தொடர்
விவசாயம் - ஒரு ஆழமான பார்வை
மேய்ப்பனில்லா ஆடுகள்.... மாணவ சமுதாயம் பற்றிய ஒரு கழுகு பார்வை.
ஜூன் 6 இல் மேட்டூர் அணை திறப்பு - சாதனையா? வேதனையா?
இன்னும் நிறைய சுட்டிகளைத் தந்து கொண்டே இருக்கலாம். அத்தனையும் உபயோகமானவை தான். சந்தேகமில்லை.
தோழமைகளே.., எனக்குத் தெரிந்தவரையில் இதுவரையிலும் குழுமங்களை பெரிய அளவில் அறிமுகப்படுத்தியதாக நினைவில்லை. அதனால் தான் "வலைச்சரம்" வாசகர்களுக்கு தமிழ் இணைய உலகில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் குழுமங்களையும் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துள்ளேன். அனைத்து குழுமங்களையும் பற்றிச் சொல்லவேண்டுமானால் ஒரு வாரமும் போதாது. குழுமங்களை அறிமுகம் செய்ததை ஒரு சேவையாகத்தான் கருதுகிறேன். ஏனெனில் அங்கு எழுதுபவர்கள் யாருமே தங்களை முன்னிலைப் படுத்தாமல் ஒரு நோக்கத்திற்காக, ஒரு குறிக்கோளுக்காக, ஒரு கொள்கைக்காக... சுறுக்கமாகச் சொன்னால் மற்றவர்களுக்காக எழுதுகிறார்கள், எந்த எதிர்பார்ர்புமின்றி!
ஆகையால் இன்றைய வலைச்சரத்தில் குழுமங்களையும் அதன் சில பதிவுகளையும் அறிமுகம் செய்ததில் ஒரு சேவை (இடியாப்ப சேவை இல்லை மக்களே!) செய்த திருப்தியோடு விடைபெறுகிறேன். மீண்டும் சில உற்சாகமான பதிவுகளுடன் வந்து உங்களையெல்லாம் சந்திக்கின்றேன். வணக்கம்.

அட்டகாசம் செளம்யன்....!
ReplyDeleteஇது வரையிலும் யாரும் தொடாத ஒரு களத்தினை தொட்டிருப்பதற்கு நன்றிகள்....மற்று வாழ்த்துக்கள்....!
உங்களோடு தொடர்ந்து....
அட செம பதிவு யாரும் செய்யாத புது அறிமுகம்...!!! அனைத்து சூப்பர் கலக்குறீங்க சௌம்யன் சார்
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteரொம்ப நல்ல அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஅட்டகாசம். அருமை.
ReplyDeleteவலைச்சரத்தில் பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் அறிமுகம் செய்து பார்த்திருக்கிறேன்/படித்திருக்கிறேன். வித்தியாசமாக குழுமங்களை அறிமுகபடுத்தி இருப்பது நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபலருக்கும் இந்த குழுமங்களை பற்றி தெரியாமல் கூட இருக்கலாம். எனக்கு வினவு + கழுகு தெரியும், இரண்டாவதாக உள்ள குழு தெரியாது . இன்று தெரிந்துகொண்டேன். நன்றிகள் சௌமியன்.
பாராட்டுகள்...உங்களின் வித்தியாசமான அறிமுகங்கள் தொடரட்டும்.
ஆகா வவாசங்க அறிமுகம் செய்யப்பட்டிருக்கே! மிக்க நன்றி! மிக்க நன்றி!
ReplyDeleteஆகா அதும் சங்கத்து லிங்ல இருக்கும் நாகை சிவாவின் பதிவுக்கு முன்ன இரண்டு பதிவு லிங் தர்ரேன். அதையும் படிச்சு அதிலே இருக்கும் யூ டியூப்பையும் பார்த்து விட்டால் சிரிப்புக்கு நான் கேரண்டி.
ReplyDeletehttp://idlyvadai.blogspot.com/2007/10/vs.html இட்லி வடையின் இந்த பதிவு. பின்னே
வெட்டிபாலாஜியின் http://vavaasangam.blogspot.com/2007/10/1.html இந்த பதிவு. இரண்டையும் படிச்சுட்டு இந்த பதிவில் கொடுத்திருக்கும் பதிவை படிங்க மக்கா!
வலைச்சரம் - குழும பதிவுகளின் தாக்கமும், கதம்ப பக்கோடாவும்!" நிறைய தகவல்கள். பகிர்வ்க்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவித்தியாசமான அறிமுகங்கள் நண்பரே... வாழ்த்துக்கள்
ReplyDeleteசங்கத்தை சேர்த்துகிட்டதுக்கு நன்றி :)
ReplyDeleteஅன்பின் சௌம்யன்
ReplyDeleteகுழுமங்களை பெரும்பாலும் யாரும் அறிமுகம் செய்வது கிதையாது. பல் குழுமங்கள் இருப்பினும் சிலவற்றைத் தேர்நெத்டுத்து அறிமுகப்படுத்தியது நன்று. சென்று படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆஹா... புதுமையான அறிமுகம். குழு பற்றிய தங்கள் அறிமுகம் அருமை. தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா... புதுமையான அறிமுகம். குழு பற்றிய தங்கள் அறிமுகம் அருமை. தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான விசயத்தை கூறியுள்ளீர்கள்!வாழ்த்துக்கள்!
ReplyDeleteவந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் உளமாற நன்றி கூறுகின்றேன்.
ReplyDelete:)
ReplyDeletewishes
2007 இல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்குப் போட்டியா பயமறியாப் பாவையர் சங்கம் இம்சைஅரசி தலைமையில் ஜி3, கவிதாயினி காயத்ரி, மைஃபிரண்ட் எல்லாரும் சேர்ந்து ஆரமிச்சாங்க. வலை உலகம் வெகு ஆக்டிவாக இருந்த காலம் :(
ReplyDeleteஎன்ன அபுது அண்ணே ! கொசுவத்தி சுத்தறீங்களா ! 2007 நான் வலையுலகத்திற்கு வந்த காலம் - அப்பொழுது இக்குழுமங்களுக்கு அடிக்கடி செல்வேன் - ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா
ReplyDelete