Sunday, June 19, 2011

வலைச்சரம் - கூட்டாஞ்சோறு!!!

வலைச்சரம் வாசக நண்பர்களே, நேரம் குறைவாக இருப்பதால், நான் படித்ததில் பிடித்த சில தளங்கள் அல்லது பதிவுகளின் சுட்டிகளை எந்த கருத்துரையும் இடாமல் தருகின்றேன்.

இவை அனைத்துமே புதிய அறிமுகம் என்று சொல்வதை விடவும், நல்ல பிரபலமாக இருந்து இன்று அதிகம் எழுதாமல் பலருக்கு அறியா முகங்களாய் இருப்பவர்களுடையது தான். மிக மிகச் சிறந்த இந்த சுட்டிகளைத் தவறாமல் படியுங்கள் தோழமைகளே.

1. ராமச்சந்திரன் உஷா அவர்களின் தந்தையர் தின சிறப்பு பதிவான  "குழந்தையும் தெய்வமும்" என்ற இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்தமானது.

2. ஜியா என்ற பிரபல பதிவர் எழுதிய "முதல் மேடை" என்ற இந்த சிறுகதை, அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இந்த சிறுகதை மட்டும் ஒரு பிரபல எழுத்தாளர் பெயரில் வந்திருந்தால், மிகப்பெரிய பாராட்டையும், பரிசுகளையும் குவித்திருக்கும். புரியாதவர்கள் இரண்டாவது முறை ஆரம்பத்திலிருந்து படித்தால் ஆச்சரியப்பட வைக்கும்!

3.  "கதிர்" மிகப் பிரபலமான இந்த தளம் அதிகம் யாருக்கும் பரிச்சயமில்லை. அவசியம் படித்துப் பாருங்கள்.

நண்பர்களே.., இந்த இனிய பொறுப்பிலிருந்து இத்துடன் விடைபெறுகின்றேன். அவகாசமே இல்லாத நிலையில் இந்த "வலைச்சர ஒரு வார ஆசிரியர்" பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதனால் அதிகமான புதுமுகங்களை அறிமுகம் செய்ய இயலவில்லை.

நடுவில் இரண்டு நாட்கள் திடீரென வந்த சொந்த வேலையின் காரணமாகவும் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. இன்னொருமுறை இரண்டு வாரகாலம் அவகாசம் கொடுத்து விட்டு எழுத அழைக்கிறேன் என்று திரு. சீனா சார் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

அப்படி ஒரு வாய்ப்பு வருமாயின் அவசியம் முன்கூட்டிய திட்டமிடலோடு, சிறந்தமுறையில் செயல்படுவேன் என்ற உறுதியுடன் உங்கள் அனைவரிடமும் இருந்து தற்பொழுது விடை பெறுகின்றேன்.

நன்றி.

சௌம்யன்.

4 comments:

  1. //அப்படி ஒரு வாய்ப்பு வருமாயின் அவசியம் முன்கூட்டிய திட்டமிடலோடு, சிறந்தமுறையில் செயல்படுவேன் //

    மறுபடியும் மொதலேருந்தா... ?

    -- இதுகூட சும்மாதான்

    ReplyDelete
  2. சிறப்பான வாரம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்க பணியை நீஙக சிறப்பாகவே
    செய்தீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்பின் சௌம்யன்

    ஏற்ற பணியினை நிறைவாகவே செய்தீர்கள் . பணிச்சுமை, நினைத்ததை நிறைவேற்ற தடை போட்டிருக்கும். பரவாய் இல்லை. நல்லதொரு சந்தர்ப்பத்தில் நினைத்ததை நிறைவேற்றலாம். கவலை வேண்டாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete