வலைப்பூக்களில் பலவகையான துறைகளில் அதில் நிபணத்துவம் பெற்றவர்க்ள் தங்கள் அனுபவத்தையும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தாங்கள் கற்றதையும் எழுதி வருகிறார்கள்.. இன்னும் பலர் அவர்களின் விருப்பங்கள் பற்றியும் , சினிமா , அரசியல் எனப் பல துறைகளில் எழுதி வருகிறார்கள் அவர்களை பற்றிய சிறு குறிப்புகள் ...,
காதலின் பிரிவையும் வலியையும் ”நீயில்லாத வாழ்க்கையா ?” என அழகான கவிதையாக வடித்து மனதை கனக்க வைக்கிறார் ”குட்டி சுவர்க்கம்” அமினா ..,
தமிழ் சினிமாவின் வருங்காலம் குறித்து ஒரு விரிவான அலசலை தருகிறார் ”ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்” என்ற கட்டுரையில் தருகிறார் “கும்புடுரேனுங்க” நர்மதன்..,
புத்தக கண்காட்ச்சியில் தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைப்பட பகிர்கிறார் R கோபி .. ஈரோடு புத்தக கண்காட்சி 2011 என்ற பதிவில் சொல்கிறார்..,
புதிய புதிய வகையான உணவுகள் செய்வது எப்படி என சுமாவின் குறிப்புகள் என்னும் தன் வலைப்பூவில் சொல்கிறார் சுபா .., பால் அல்வா செய்வது எப்படி என இந்த பதிவில் சொல்கிறார்...
அழகழகான கவிதைகள் மூலம் நம் மனதில் நீக்கமற நிறைகிறார் தேணம்மை லக்ஷ்மன்... குறிப்பாய் சொல்ல வேண்டுமானால் இந்த பலூனை பற்றி சொல்லியாக வேண்டும்..,
தான் சந்தித்த ஒரு மனித தன்மையற்ற ஒரு மிருகத்தை பற்றிய ஒரு பதிவை கோவத்துடன் பதிவு செய்கிறார் அஞ்சா சிங்கம்..,
எல்லாருக்கும் தன்னுடைய அப்பா தான் ஹீரோ .., தந்தையின் பெருமைகளை சொல்லும் அருமையான கவிதையை நமக்காக தருகிறார் அஷ்வின்...
”எனது பயணங்கள்” திருமலை கந்தசாமி தனது வலைபூவில வெரைட்டியான
பதிவுகளை தருகிறார் குறிப்பாக பேச்சுரிமை குறித்த அவரது இந்த கவிதயை படித்து பாருங்கள் ...,
கைப்பேசி என்ற வலைப்பூவில் கைப்பேசி குறித்து அனைத்து விவரங்களும் நமக்கு அழகு தமிழில் கிடைக்கிறது.., அவரது எப்போது திருந்தும் ஏர்டெல் பதிவை படித்து பாருங்கள்..
நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சீரியசாகவும் எழுதுவதில் வல்லவர் “புலிவால் பிடித்தவன்”.., அவரது துது பாடுவதில் சிறந்தவர் யார் என்று அருமையான ஆராய்ச்சியை செய்துள்ளார்..
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே...,
பாராட்டுக்கள். சிறப்பான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள் !
ReplyDeleteNalla arimukangal!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கள். சிறப்பான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள் !
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள் !
ReplyDelete