Wednesday, July 20, 2011

மாணாக்கர் தமிழ்.




மாணாக்கர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பவர்களாவர். அதனால் தான் அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுடன் உரையாடுவதில் பெரிதும் ஆர்வமுடையவராக இருக்கிறார். மாணவர்களுடன் உரையாடுவதில், அவர்களைச் சிந்திக்கச் செய்வதில் கிடைக்கும் நிறைவு எனக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை. 24 மணிநேரத்தில் 7 மணிநேரத்துக்குக் குறையாமல் அவர்களுடன் இருக்கிறேன். வகுப்பில் மாணவர்களுடன் உரையாடும் போது புற உலககங்களில் இருந்து விடுபட்டு மாணாக்கர்களின் உலகத்துக்கே சென்றுவிடுவேன். மாணவர்களின் சிறுசிறு அறியாமை எனக்குச் சிரிப்பைத் தோற்றுவித்தாலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய பண்புகள் உள்ளமையை நான் நன்கறிவேன்.

நான் மாணவர்களுக்குக் குரு என்பதை விட
எனக்கு மாணவர்கள் குரு என்பதையே நான் ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன்.
இன்று இணையத்தில் நான் கண்ட மாணாக்கர்களின் வலைப்பதிவையும், அவர்களுக்கு பயன்தரும் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்யவிரும்புகிறேன்.


27.கோ.மணிகண்டபிரபு அவர்கள் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் .முடித்தவராவார்.இவர் கணினியில் மட்டுமின்றி தமிழின் மீதும் மிகுந்த பற்றுடையவர். கடவுள் மறுப்புக்கொள்கையிலும் ஈடுபாடு கொண்டவராவார். இவரது “சிகரங்களை நோக்கி“ என்னும் வலைப்பதிவில் பல்சுவைத் தகவல்களையும் தமிழ்நயத்துடன் தந்துவருகிறார். இவரது இடுகைகளுள் “சாக்கரடீஸ் ஒரு முட்டாள்“ என்னும் இடுகை இவரிடம் எனக்குப் பிடித்ததாகும்.

******

28. வைகறை தங்கராஜ் அவர்கள் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவராவார். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமி்ழ் இலக்கியம் பயின்றுவருகிறார். தமிழின் மீதும், ஈழத்தமிழர்கள் மீதும் பற்றுதல் கொண்ட இவர் சமூகவிழிப்புணர்வும் வாய்க்கப்பட்டவராவார். இவரது “வைகறை என்னும் வலைப்பதிவே இதற்குச் சான்றாகும். இவரது இடுகைகளில் “குறள் கூறும் ஊடல் உவகை(காதலர்களுக்காக)“ என்னும் இடுகை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

******


29.த.மணிகண்டன் அவர்கள் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். தமிழ்மீது மிகுந்த பற்றுதல் கொண்ட இம்மாணவர் பிறமொழி கலவாத் தனித்தமிழ் பேசுவதில் வல்லவராவர். சமூகம் தன்னைப் பார்த்து சிரித்தாலும் தனித்தமிழ் பேசுவதற்காக இவர் வருத்தப்பட்டதில்லை.
மதன்மணி என்னும் வலைப்பக்கத்தைக் கொண்ட இவர் கவிதை எழுதுவதில் சிறப்புடையவராவார். கவிதைச்சுவையைவிட அதை வாசிக்கும் திறமை இவருக்கு நன்கு கைவரப்பட்டிருக்கிறது.

******
30. சூசைப் பிரகாசம் அவர்கள் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து தற்போது தமிழில் ஆசிரியப் பட்டம் படித்து வருகிறார். இவர் தமது வலைப்பதிவை (மறுமலர்ச்சி) தம் அலைபேசி வாயிலாகவே வடிவமைத்து, இற்றைப்படுத்திவருகிறார். தமிழின் மீதும் இணையத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இம்மாணவரின் முயற்சிக்கு யாரும் மதிப்பளிப்பர். சான்றாக “உலகத்தமிழ் மாநாடுகள்“ என்னும் கட்டுரையைக் கூறலாம்.

******
31. எம்.சதீசுகுமார் அவர்கள் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் முடித்து தற்போது அரசுகலைக்கல்லூரியில் முதுகலை பயில்கிறார். தீராத தேடல் கொண்ட இம்மாணவர் கவிதை, கட்டுரை எழுதுவதில் வல்லவராவார். இவரது வலைப்பதிவுக்கு “அமுதம் தமிழ்“ என்று பெயரிட்டுள்ளார். “போட்டித்தேர்வுகளுக்கான தமிழ் வினா மாதிரிகளைத்“ தொகுத்து வருகிறார்.

******

32. அன்னை பூபதி10ஆம் வகுப்பு என்னும் வலைப்பக்கத்தை நீங்கள் அறிவீர்களா? சென்று பாருங்கள் பல சுவையான தகவல்களைப் பெறுவீர்கள்.

******

33. “ஆங்கிலம் “ என்னும் வலைப்பதிவு உங்களில் பலரால் நன்கு அறியப்பட்டதாகும். மாணவர்கள் மட்டுமன்றி, ஆங்கிலம் பேசவிரும்பும் யாவரும் தமிழ்வழியிலேயே கற்க இப்பதிவு பெரிதும் துணைநிற்கிறது.

******

34. நண்பர் இரவி அவர்களின் “ஆங்கில வழி மாணவர்கள் அறிவாளிகளா? என்னும் இடுகை சமூக நிலையை அழகாகப் எடுத்தியம்புவதாக உள்ளது.

******

35. “யாழ்கணினி நூலகம்“ என்னும் வலைப்பதிவை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் நடத்தி வருகிறார். கணினி நுட்பங்கள் தொடர்பாக பல பயனுள்ள இடுகைகளை இவர் பக்கத்தில் காணமுடிகிறது. “உங்கள் கணினிக்கு ஒரு மானேஜர்“ என்னும் பதிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.


******

36. பிரபல பதிவரான கோவிகண்ணன் அவர்கள் ஒரு பொறியாளராவார். இவரது எழுத்துக்களால் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தவராவார். இரண்டுமுறை தமிழ்மண விருது பெற்ற இவருடைய பதிவுகளை நீண்ட காலமாகவே நான் படித்து வருகிறேன். மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் இவரது “தமிழ்வழி தொழில்நுட்பப் பட்டப்படிப்பு தேவையா?“ என்னும் கட்டுரைத் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

******

37. கழுகு என்றொரு வலைப்பக்கம் இதில் எது கல்வி என்றொரு கட்டுரை கல்வியின் நிலையை அழகாக எடுத்தியம்புவதாகவுள்ளது

******
38. இம்சைஅரசன் பாபு அவர்களின் சமகாலக் கல்வி குறி்த்த கட்டுரை கல்வியின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக மாணவர்களைச் சிந்திக்கச் செய்வதாக அமைகிறது.

******
39. இதோ ஒரு தமிழ்ப்பள்ளியின் வலைப்பக்கம் பார்ப்போர் பாராட்டும் விதமாக உள்ளது நீங்களும் பாருங்களேன்.

******

40. இதோ ஆசிரியர்களும் மாணவர்களும் அறியவேண்டிய பயனுள்ள தளத்தை தசன் அறிமுகம் செய்கிறார். “ஆசிரியர், மாணவர்கள் அறிய வேண்டிய - பயனுள்ள இணையதளம் ஓர் பார்வை“
******

41.தமிழகத்தில் விருதுநகரில் செயல்படும் “கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா” பள்ளியின் வலைப்பக்கத்தைப் அவர்கள் அழகாக வடிவமைத்துள்ளனர்.
*****
அன்பு நண்பர்களே!
மாணவர்கள் நாட்டின் கண்கள்.
நம் இலக்குகளின் எதிர்காலம்.
நம்மால் முடிந்தவரை தம் கருத்துக்களை மாணவர்கள் இணையவழி சொல்லத் துணைநிற்போம்.

34 comments:

  1. என்னை பற்றி அறிமுக படுத்தியதற்கு நன்றி ..குணசீலன் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றியை கூறி கொள்கிறேன்

    ReplyDelete
  2. இதில் சில தளங்கள் படித்திருக்கிறேன், படிக்காத தளங்களை இன்று தெரிந்து கொண்டேன்.

    நல்ல அறிமுகங்களுக்கு நன்றிகள் !

    இதில் இம்சைஅரசன் பாபு தளத்தின் லிங்க் கொடுக்கவில்லை. கொடுத்தால் சென்று படிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. நன்றி கௌசல்யா.

    இணைப்பு கொடுத்துவிட்டேன்

    அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இளஞர்கலை(மாணவர்களை) அறிமுகப்படுத்தியது , அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அதற்காக உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    இம்சை பாபு “அண்ணனும்” இளைஞரா????( அப்பாடா நம்ம வயசை குறைச்சுகிட்டாச்சு....)

    ReplyDelete
  5. இளஞர்கலை = இளைஞர்களை
    பிழைக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  6. பல அறியாதிருந்த தளங்களை இந்த மாக்கானுக்கு அறியத்தந்த மாப்பிள்ளைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்களுக்கு நன்றிகள் !

    ReplyDelete
  8. பயனுள்ள அறிமுகங்கள்

    ReplyDelete
  9. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வணக்கம் அன்பரே
    அருமையான அறிவான வலைதளங்களை, அற்புதமாக
    அறிமுகம் செய்கிரீர்கள்
    நன்றி

    ReplyDelete
  11. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா. என்னால் தொடர்ந்து இடுகைகளை பதிவு செய்ய முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன். விரைவில் நான் தொடர்ந்து பதிவு செய்ய முயற்சிக்கிறேன். எனது தேடல்கள் முடியாது.... இது ஒரு சிறிய தேக்கம் தான்.....

    ReplyDelete
  12. முனைவர் அவர்களே... ஒவ்வொரு நாளும் பதிவு மெருகு கூடுகிறது.

    ReplyDelete
  13. மாணவர்கள் என்றால் சிறுவர்கள்தானே என்று விட்டுவிடாமல்,அவர்களையும் அறிமுகப்படுத்தியது உங்கள் உயர்ந்த மனதை காட்டுகிறது.நல்ல அறிமுகங்கள்.நன்றி.

    ReplyDelete
  14. நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

    ReplyDelete
  15. நான் அறிவேன் மணி மீண்டும் புதுப்பொலிவுடன் வரவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. guna ithai vaigarai avargal mattum ariven matravargal arinthadhu illai...therumbi parkamal odidalamanu iruku..en arivuku ithu elam yettumanu theriyalai anaivarukum vaazhuthukkal..

    ReplyDelete
  17. மதிப்பிற்குரிய வலைதள சேவையை செய்து கொண்டிருக்கும் தங்களுக்கு என் தாமதமான வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  18. அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. வலைச்சரம் என்னும் மாலையில் பூத்த மலர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. புதிய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்வதே என் முதல் நோக்கம் அதனால் இவர்களை நீங்க அறியாததில் வியப்பொன்றுமில்லை தமிழ்.
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  21. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உலகறியச் செய்தமைக்கு நன்றி அய்யா.......

    ReplyDelete
  22. நாளும் மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கம்.

    ReplyDelete
  23. மதிப்பிற்குரிய அய்யா என்னைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல...

    தங்கள் உதவியால் எனது வலைப்பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன் .மிக்க நன்றி அய்யா

    ReplyDelete