Sunday, August 21, 2011

சரம் 7 – கிளம்புறேங்க..



ஆறு நாள் முடிஞ்சு இன்னைக்கு ஏழாவது கடைசி சரம்.. எல்லாரும் கரெக்டா வந்துட்டீங்க போல..
இன்னைக்கு கடைசி நாள்ங்குறதுனால ஏதாவது பன்ச் அடிக்கலாம்னு யோசிக்கிறேன். அதுக்கு முன்னாடி எஞ்சியுள்ள நண்பர்களோட தளங்களையம் பகிர்ந்துட்றேங்க..
பெரும்பாலும் நம்மளோட தேடுதல்களுக்கு இணையதளத்தை, முக்கியமா வலைதளத்தை அதிகமா உபயோகிப்போம். உதாரணத்துக்கு தகவல் தொழில்நுட்பம், புகைப்படஙகள் அவ்வளவு ஏன்.. பாடல் வரிகள் தேட்றதுக்கு கூட வலைதளம் ஒரு நல்ல ஊடகம் தான்.
அந்த மாதிரியான தேடல்களுக்கு உபயோகப்படும் வகைல இருக்குற வலைதளங்கள் சிலவற்றைப் பகிர்ந்துக்கிறேங்க.
1. தகவல் தொழில்நுட்பம் – இந்தத் தளத்துல இணைய மென்பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் பத்தி நெறைய தகவல்கள் நமக்கு உபயோகமான வகைல கிடைக்குதுங்க..
2. சந்தை நிலவரம் – பங்குச்சந்தை தொடர்பான பலப்பல தகவல்கள் இந்த தளத்துல தாராளமா கிடைக்குதுங்க..
3. புகைப்படங்கள் – இந்த தளத்துல அரிய வகைப் புகைப்படங்களும், ஆச்சர்யப்படுத்தும் அழகான மற்றும் உபயோகமான பல புகைப்படங்கள் கிடைக்கப் பெறலாமுங்க..
4. பாடல் வரிகள் – இந்தத் தளத்துல திரைப்படப் பாடல் வரிகளின் தேடல்களுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கலாம். பழைய, புதிய பாடல்களின் வரிகளுக்கெனவே இருக்குற தளங்கள்ல இதுவும் ஒண்ணு.
5. உலக சினிமா – இந்த் வலைதளத்துல உலக சினிமா பற்றிய தகவல்கள் மற்றும் விமர்சனங்கள், பொருத்தமான புகைப்படங்களோட தாராளமா கிடைக்குதுங்க..
6. விஞ்ஞானம் – அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தமான தகவல்கள் இந்த வலைதளத்துல இருக்குதுங்க..
7. கணிணி மற்றும் ப்ளாக் மென்பொருட்கள் – இந்தத் தளத்துல கணிணிக்கான மென்பொருட்கள் மற்றும் நம்ம ப்ளாகுக்கு என்னென்ன மென்பொருள் வேணுமோ அவ்வளவும் கிடைக்குமுங்க..
இது வரைக்கும் சரங்களில் இடம்பெற்ற நண்பர்களோட தளங்களுக்கெல்லாம் போய்ப் பாருங்க.. உங்களுக்கு நிச்சயம் உபயோகமா இருக்கும்.
ஒரு வழியா ஏழு நாட்களும் வரிசையா சரம் தொடுத்துட்டேன். முடிஞ்சவரைக்கும் நல்லவிதமா தொடுத்துருக்கேன்னு நெனைக்கிறேன்.
இன்னைக்குரிய தத்துவம்...

வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும்  அனுபவித்து விடுங்கள்.
நாளை, ஒருவேளை திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.

மனசுல என்ன கவலைகள் இருந்தாலும் “இதுவும் கடந்து போகும்“னு நெனச்சுகிட்டு எல்லாரும் சந்தோசமா இருங்க.. (எப்படி நம்ம பன்ச்???? யாருப்பா அது காரி துப்புறது??).
ம்ம் எல்லார் முகத்துலயும் ஒரு சந்தோசம் தெரியுற மாதிரி இருக்கே.. ஆறு சரத்தையும் படிச்சதுனால வந்த சந்தோசம் மாதிரி தெரியல.. அப்பாடா.. ஒரு வழியா வலைச்சரத்துல இந்திராவோட மொக்கை முடியுதுங்குற குஷில இருக்கீங்க போலயே.. அதுனால என்ன? நம்மளோட மொக்கை போடுற பணி, “படிக்காதீங்க“ ப்ளாக்ல வழக்கம்போல தொடரும்.. (இப்ப என்ன பண்ணுவீங்க.... இப்ப என்ன பண்ணுவீங்க..).
அடுத்ததா ஆசிரியர் பொறுப்பேற்கப்போகும் நபருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கிளம்புறேங்க.. வழக்கம்போல நம்ம வலைப்பக்கம் சந்திக்கலாமுங்க...
நன்றி
.
.

15 comments:

  1. இனிய பயணம்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஏற்றுக்கொண்ட பொறுப்பை செம்மையாக
    நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்கப் புண்ணியத்துல நிறைய புதிய பயனுள்ள வலைப்பூக்களை அறிய முடிந்தது. அதற்காக சிறப்பு நன்றியினை உரித்தாக்குகின்றோம்.

    ReplyDelete
  4. அடுத்ததா ஆசிரியர் பொறுப்பேற்கப்போகும் நபருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

    எங்களுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .உங்கள் அருமையான படைப்புகளுக்கு
    தலைவணங்குகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிகள்
    அனைத்தும் வெற்றிபெற..

    ReplyDelete
  5. நல்ல முறையில் அத்தனையும் முடித்து விட்டீங்கள் சார்..
    பத்திரமாய் சென்றுவாருங்கள்.அடுத்து பொறுப்பேற்றவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. “வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும் அனுபவித்து விடுங்கள்.
    நாளை, ஒருவேளை திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.“//

    தத்துவம் அசத்தலாக உள்ளது...

    ReplyDelete
  7. கோகுல் said...
    இனிய பயணம்.வாழ்த்துக்கள்!//

    ஹா ஹா யோவ் கோகுலு நீ பயணம் செஞ்சிட்டு அவங்கள வாழ்த்திட்டுப்போற...ஹா

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. என்னதான் காமெடியா கலாய்ச்சிட்டு போனீங்கன்னாலும் கிளம்புறேங்கன்னு சொல்றப்ப ஃபீலிங்கா தாங்க இருக்கு.. இதுல ரெயில்வெ ட்ராக்ல சூட்கேஸோட போற குழந்தையை பாக்கும்போது பிரிவின் துயரம் தெரியுது.. என்னப் பன்றது உங்க ப்ளாக்குல தொடரவேண்டியதான்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள். சென்று வாருங்கள்.

    ReplyDelete
  11. அப்பாட ஒரு வழிய முடிச்சிட்டாங்க :)..


    அவங்க(INDIRA)முகத்தில எவ்ளோ சந்தோசம்..

    டீச்சர் பணி என்றால் சும்மாவா..
    தத்துவமும்
    அறிமுகமும்
    புகைப்படமும்
    கலக்கல்

    ReplyDelete
  12. உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete