சினிமாப் பாடல்கள் என்றாலே
இரட்டை அர்த்தங்களும் முகம் சுளிக்கச் செய்யும்
முனகல்களும் நிறைந்த இந்த காலத்தவர்களுக்கு
சில பழைய பாடல்களை அறிமுகப் படுத்தலாம் என நினைக்கிறேன்
பதிவின் நீளம் குறித்த அக்கறையில் சுருக்கமாகவும்
இரண்டு பாடல்களை மட்டும் கோடிட்டுக் காட்டிப் போகிறேன்
அவசியம் என்றால் தொடர்ந்து பதிவாகத் தர உத்தேசமும் இருக்கிறது
தேவை இல்லாத பாடல்களில் கூட ஆபாசமான வார்த்தைகளை
போடத் தயங்காத இன்றைய பாடலாசிரியர்களுக்கு
உடலுறவு குறித்து சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் கூட
கண்ணியமாக எழுதப்பட்ட கவியரசு கண்ணதாசன் அவர்களின்
பாடல் ஒன்று இது "தேனும் பாலும்" என்கிற படத்தில் வருகிறது
தவிர்க்க முடியாத சூழலில் இரு மனைவியருடன்
வாழ வேண்டிய நிலையில் கதாநாயகன் இருக்கிறார்.
அப்போது ராமனாக கணவன் இருக்கவேண்டும்
என எண்ணுகிற மனைவி
ஒரு மனைவியுடன் கூடி இருக்கும்போது அடுத்த பெண் குறித்த
சிந்தனையில் இருப்பவன் எப்படி முழு இன்பம் அடைய முடியும்
என்பதை சொல்லவேண்டும் .
அதை ஆபாசமில்லாமல்
எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்களேன்
" கங்கையிலே குளிக்கையிலே
காவிரியில் மனசு வைத்தால்
இந்த சுகம் அது தருமோ
அந்த சுகம் இது தருமோ "
அடுத்து பாகப்பிரிவினையில் ஒரு காட்சி
படிப்பறிவற்ற உடல் ஊனமுற்ற கதா நாயகனுக்கு திருமணம்
முடிந்து முதலிரவு ஏற்பாடாகிறது.
படிப்பறிவற்றவன் என்பதால் உடல் ஊனமுற்றவன் என்பதால்
தன் ஆண் தன்மையிலும் ஏதாவது
குறையிருக்குமோ என்ற பயத்தில் ஆழ்ந்து போகிறான்
அவனை தேற்றும் விதமாக பெண் பாடும் பாடலை
ஆபாசமற்று எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்களேன்
" தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ-உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ..
பாடல் முழுவதுமே இப்படி அழகாக ஆபாசமின்றி
அந்தப் பாடல் மனக் குறையுள்ளவனுக்கு தேறுதல் சொல்லிப்போகும்
கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள்
"சும்மாவே ஆடுவான் கொட்டடிச்சா சொல்லவா வேனும் " என்று
அதைப்போல கோவில் திருவிழா ,கணவன் மனைவி பாடும்
காட்சியிலேயே எப்படி ஆபாசத்தைச் சேர்க்கமுடியும் என
மூளையைக் கசக்கும் இன்றைய கவிஞர்களுக்கு
இதுபோன்ற காட்சியமைப்பு கிடைத்தால் லட்டு கிடைத்த
மாதிரியல்லவா இருக்கும்
சரி அது கிடக்கட்டும் அறிமுகத்துக்கு வருவோம்
புகழ் விரும்பி எழுதுவது ,பொழுதுபோக்காக எழுதுவது என்கிற
எல்லைகளைக் கடந்து ,எழுதுவது பயன்படத் தக்கதாய்
(இதை விரிவான பொருளில் கொள்ள வேண்டும்)
இருக்கவேண்டும் என எழுதுகிற பல பதிவர்கள்
பதிவுலகில் இருக்கிறார்கள்.அவர்களில் நான் அறிந்த சிலரை
இந்தப் பதிவில் அறிமுகம் செய்கிறேன்
1.வை கோபால கிருஷ்ணன்http://gopu1949.blogspot.com/
நாம் அன்றாடம் சந்திக்கின்ற சிறு சிறு நிகழ்வுகள்
மிகச் சாதாரண மனிதர்கள் இவரது கண்களில் பட
அது கதையாகி ஒருகாவியமாகிப் போவது ஆச்சரியம்தான்
மிக மிக எளிமையான சொற்களைக் கொண்டே
அவர் படைக்கும் கதைகள் படிப்பவர் மனதில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப்போவது அவரின்
எழுத்துத் திறமைக்கு அத்தாட்சி உதாரணத்திற்கு
இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் புரியும்
2,ஜி.எம்.பாலசுப்ரமணியன்http://gmbat1649.blogspot.com/
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் சுவையிருக்கும் என்கிற
பாடல் கேட்கும் போதெல்லாம் ஜி.எம்.பி.சாரைத்தான் நினைப்பேன்
அவருடைய வார்த்தைகளிலேயே சொன்னால்
இவர் 72 வயது இளைஞர்
இவருடைய படைப்புகள் எல்லாம் படிப்பவருக்குள்
ஒரு சிந்தனைத் தீயைபற்ற வைத்துப்போகும்.
அவர் எழுதுவதின் நோக்கமும் அதுதானேதானே
இதை ஒருமுறை படித்துப் பாருங்களேன்
3லெட்சுமிhttp://echumi.blogspot.com/
நான் எப்போதெல்லாம் கொஞ்சம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம்இவருடைய அனுபவச் சுரங்கமாய் உள்ள
பதிவுகளை ஒருமுறை படித்து என்னை
உற்சாகப் படுத்திக்கொள்வேன்..
உள்ளத்தில் உள்ளதைஎவ்வித வார்த்தை அலங்காரங்களும்
கலந்து விடாதபடி மிக அழகாகஎழுதிப்போகும் இவரது
எழுத்தின் லாவகம் நாம் அனைவரும்
கற்றுத் தேறவேண்டிய ஒன்று
இதைப் படித்துப் பாருங்களேன்
4.சுகராஜிhttp://suharaji.blogspot.com/
எதையும் நேர்மறைச் சிந்தனையுடனும் அணுகுவதும்
பின்னூட்டங்களில் பாராட்டப்பட வேண்டியவர்களை
மிகச்சரியானவார்த்தைகளில் பாராட்டிப் போவதும்
தீயவைகளைச்சாடுகையில் ருத்திரம் கொள்வதும்
இவர் பதிவுகளில் நான் ரசிப்பது
இவர் இப்போதெல்லாம் அதிகம் எழுதாதிருப்பது அதிகமாக
பின்னூட்டப் பதிவுகளில் தென்படாமல் இருப்பது எனக்கு
கொஞ்சம் வருத்தமே.இவரைப் பற்றி இவரே சொல்லும்
இந்தப் பதிவைப் படித்தால் இவரைப் புரிந்து கொள்ளலாம்
5.சுந்தர்ஜிhttp://sundargprakash.blogspot.com/
ஏகலைவன் போல் நேரடியாகச் சந்திக்காமலேயே இவரது
படைப்புகள் மூலம் இவருக்கு சீடனாகிப் போனவன் நான்
இவருடைய கவிதைகள் ஆகட்டும்,கட்டுரைகள் ஆகட்டும்
ஒவ்வொன்றும் அதன் தனமை புரிந்து
படிப்போருக்கு ஒரு நல்ல பயிற்சி நூல்தான்
6.தமிழ் உதயம் http://tamiluthayam.blogspot.com/
2009 ல் இருந்து கதை கவிதை கட்டுரை என அனைத்துத்
துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்து வரும் இவர்
இதுவரை சுமார் 200 க்கும் மேற்பட்ட பதிவுகளைக்
கொடுத்துள்ளார். அனைத்துப் பதிவுகளும்
அனைவரும் படித்தறிய வேண்டிய பயனுள்ள பதிவுகள்.
இவர் கடைசியாக பதிவிட்டுள்ள " ஒளிமயமான எதிர்காலம் "
என்றகட்டுரையைப் படித்தாலே உங்களுக்குப் புரியும்
7.போளூர் தயா நிதி:http://polurdhayanithi.blogspot.com/
இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காரணமாக ஒரு பதிவும்
சித்த மருத்துவர்என்பதால் அதற்கென ஒரு பதிவும் கொண்டு
மிகச் சிறப்பான பதிவுகளைக்கொடுத்துக்கொண்டு வரும்
இவருடைய பதிவு அவசியம் அனைவரும்
தொடர வேண்டிய ஒரு பதிவாகும். தரமான பதிவுகளாகத் தரவேண்டும்
என்பதற்காகவே மாதம் ஒன்றுக்கு ஐந்து அல்லது ஆறு பதிவுகளுக்கு
மேற்படாமல் பதிவிட்டுவருகிறார்.இவருடைய கடைசிப் பதிவான
"மண் சோறும் குழந்தைப் பேறும்" என்ற பதிவை படித்தாலே
நீங்களே இந்தப் பதிவை தவறவிடமாட்டீர்கள்
8 முனைவர் குணசீலன்http://gunathamizh.blogspot.com/
கவிதை என்று சொன்னாலே சினிமா பாடல்கள்தான் எனவும்
இலக்கியக் கூட்டம் என்றாலே சிரிப்புத் துணுக்குகளை உதிர்க்கிற
பட்டிமண்டபக் கூட்டங்கள் எனவும் மனம் குறுகிப்போன அல்லது
அதற்குமேல் இருப்பதை அறியாத படைப்பாளிகளுக்கு (?)
சங்க கால இலக்கியங்களை பாமரனும் புரிந்து கொள்ளத் தக்க வகையில்
விளக்கிப் போகும் அருமையான தளம் இவருடையது
கவிதை செய்ய முய்ல்வோர் தொடர்ந்து இவர் தளத்தை படித்துவந்தால்
நிச்சயம் ஒரு நாள் ஒரு நல்ல கவிதை படைப்பார்கள்
அல்லது அது பாவம் பிழைத்துப் போகட்டும் என விட்டுவிடுவார்கள்
9.கலா நேசன் .http://somayanam.blogspot.com/
இவருடைய பெயரும் காரணப் பெயர்தான் என்பது இவருடைய
தரமான பயனுள்ள கதை கவிதை கட்டுரைகளைப் படித்தாலே
எளிதில் புரிந்து போகும்.2009 ல் இருந்து பதிவிடத் துவங்கி
100வது பதிவை எட்ட இருக்கும் இவரின் பதிவுக்கு நான் தீவீர ரசிகன்
இவருடைய "பறந்து கொண்டே இருப்போம் " என்கிற சமீபத்திய
கட்டுரையைப் படித்தாலே நீங்களும் ரசிகர் ஆகிப் போய்விடுவீர்கள்
10 அன்புடன் நான் - சி.கருணாகரசு
2009 முதல் இதுவரை 130 பதிவுகள் இட்டு
208 க்கு மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்
சமூகக் கண்ணோட்டம் கொண்ட கதை கட்டுரை கவிதை கொண்ட
இவரது வலைத்தளம் அனைவரும் அவசியம் தொடரத்தக்க
ஒரு தரமான தளமாகும்.
தூய தமிழின் அவசியம் குறித்த
இவரது ஆர்வமும் ஆதங்கமும் நிச்சயம் இவரது
பதிவைத் தொடர்ந்தால் உங்களையும் பற்றிக் கொள்ளும்
நாளை ஆனந்தம் நிறைந்த ஆறாம் நாள்
தொடர்ந்து சந்திப்போம்
நேற்றைய கேள்விக்கான சரியான விடை
சவுடால் வைத்தி -நாகேஷ்தான்
ஏறக்குறைய எல்லோருமே மிகச் சரியாகவே
பதில் சொல்லியிருக்கிறார்கள்
இன்று ஒரு பழமொழி அதற்கான அதற்கான
விளக்கம் தாருங்களேன்
அதிகம் படிச்ச முஞ்சுறு
கழனிப் பானையிலே
அறிமுகங்கள் அபாரம்.வாழ்த்துக்கள்.
ReplyDelete//தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்தரத்தினில் குறைவதுண்டோ-உங்கள்அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்அன்பு குறைவதுண்டோசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்சீற்றம் குறைவதுண்டோசிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலேமாற்றம் காண்பதுண்டோ..//
ReplyDeleteஆஹா.. இப்படி ஒரு மனைவி அமைந்தால் அனைவரும் பாக்கியசாலிகள் தான்... மனைவி என்பவள் அன்பை நேசித்து அன்பை வழங்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்... கணவன் ஆண்மை உள்ளவனாக இருப்பதும் ஆண்மையற்றவனாக ஆவதும் மனைவியின் சொல்லில் என்பதை அருமையாக உணர்த்தும் பாடல் அதை அழகாக சுட்டிகாண்பித்தமைக்கு நன்றிகள் சகோ
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteகொத்தமங்கலம் சுப்பு சிலாகித்த நடிகர்/நடிகை யார் என்று சொல்லவில்லையே...!
சிறப்பான அறிமுகங்கள் தொடர வாழ்த்துக்கள் சார் :)
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்புறம் நேற்றைய கேள்விக்கு பதில் நீங்க சொல்லலையே
ReplyDeleteஸ்ரீராம்.//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
பதிவின் கீழே பதிலைக் கொடுத்துள்ளேனே!
கலாநேசன்//
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
பதிவின் கீழே பதிலைக் கொடுத்துள்ளேனே!
ஸாதிகா //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும்
விரிவான
மிக்க நன்றி
மாய உலகம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
விரிவானவாழ்த்துக்கும்
மிக்க நன்றி
மாணவன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
//அதிகம் படிச்ச முஞ்சுறு
ReplyDeleteகழனிப் பானையிலே//
அதிகம் வடிச்ச முன்சோறு
கழனிப்பானையிலே.... கரெக்டா!!.
குக்கர் இல்லாத காலத்துலயும், வீடுகள்லயும் உலைவெச்சு சோறு பொங்கி, அதிகப்படியான தண்ணீரை வடிச்செடுப்பாங்க. அப்படி வடிச்செடுக்கையில் முதலில் விழும் சோறு (முன்சோறு) வடிதண்ணீர்ப்பாத்திரத்தில் விழும். அது அனேகமா மாட்டுக்கென இருக்கும் கழனிப்பானையில்தான் ஊற்றப்பட்டுவிடும்... விளக்கம் சரிதானா :-))
இன்றைய அறிமுகங்களும், பாடல்பகிர்வுகளும் அபாரம்...
நல்ல அறிமுகங்கள். அறிமுகம் ஆனவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தொடருங்கள்.
ReplyDeleteஅமைதிச்சாரல் //..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteவை. கோ. ஐயா அவர்களின் வெல்லசீடையாய் --ஒரு சாதனைப் படைப்பு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அருமையான அறிமுகம்கள்
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்//
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
தமிழ் உதயம்//
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
தமிழ் உதயம் அவர்களுக்கு
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி
நல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள். தொடருங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள். தொடருங்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். ஆனால் புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்
ReplyDeleteதங்கள் அறிமுகத்தில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteஅருமை. பாடல்களின் வரிகளும் அழகு.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteரமணி சார். மற்ற வர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteபழமொழி--
”அதிகம் வடித்த முன்சோறு
கழனிப்பானையில் விழுந்தது”
சே.குமார் //
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
சமுத்ரா //
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
அமைதி அப்பா//
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
Chitra said...//
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
Lakshmi //
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
சென்னை பித்தன்//
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும் நன்றி
இந்த பதிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளவர்களின் வலைப்பூக்கள் எனக்கு பரிட்சயமானவைதான். அத்தனையும் உற்சாகமூட்டும் அருமையான பதிவுகள்.
ReplyDeleteகங்கையிலே ... பாடல் அந்தந்த நிமிடத்தை உணர்ந்து வாழ்வது பற்றி சொல்வதாகவே எடுத்துக் கொள்கிறேன். நன்றி ரமணி சார்.
அன்புடைய ரமணி சார்,
ReplyDeleteதங்களால் இன்று நான் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை என் வாழ்நாளில் நான் செய்த மிகவும் ஒரு பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.
மிக்க நன்றி.
அன்புடன்
vgk
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete//அருமையான அறிமுகங்கள்.
வை. கோ. ஐயா அவர்களின் வெல்லசீடையாய் --ஒரு சாதனைப் படைப்பு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன் vgk
இன்று ”அன்புடன் ஐந்தாம் நாள்” இல் [ஆடி வெள்ளிக்கிழமையில்] சிறந்த எழுத்தாளர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன் அருமை நண்பர், யாதோ ரமணி அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
vgk
சகோ!
ReplyDeleteஎடுத்த பணியினை
சிறப்பாகச் செய்து வருகிறீர்
நல்ல பதிவர்களை
நாட்டுக்கு அறமுகப் படுத்திய பாங்கு நன்று,
புலவர் சா இராமாநுசம்
அமைதிச்சாரல் said...
ReplyDelete//அதிகம் படிச்ச முஞ்சுறு
கழனிப் பானையிலே//
அதிகம் வடிச்ச முன்சோறு
கழனிப்பானையிலே.... கரெக்டா!!.
குக்கர் இல்லாத காலத்துலயும், வீடுகள்லயும் உலைவெச்சு சோறு பொங்கி, அதிகப்படியான தண்ணீரை வடிச்செடுப்பாங்க. அப்படி வடிச்செடுக்கையில் முதலில் விழும் சோறு (முன்சோறு) வடிதண்ணீர்ப்பாத்திரத்தில் விழும். அது அனேகமா மாட்டுக்கென இருக்கும் கழனிப்பானையில்தான் ஊற்றப்பட்டுவிடும்... விளக்கம் சரிதானா :-))//
தங்களின் இந்த விளக்கம் மிகவும் அழகாக தெளிவாக உள்ளது. அநேகமாக உங்களின் இந்த விடை தான், அந்தப்பழமொழிக்கு, மிகச்சரியான விடையாக இருக்கக்கூடும்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
புலவர் சா இராமாநுசம்//
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வை.கோ சார்
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
சாகம்பரி /
ReplyDeleteதங்கள் மேலான வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி//
என்றும் இனிமை பழைய பாடல்கள் தான். கேட்க கேட்க தெவிட்டாத இன்பம். பதிவர்களின் அறிமுகமும் மிக அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சார்
ReplyDeleteபிற அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பாடல்களும் அருமையான பாடல்கள்
சில சொந்த வேலைகளின் காரணமாக தற்பொழுது அடிக்கடி பதிவிட இயலவில்லை பின்னூட்டங்களும்
உடனுக்குடன் அளிக்க இயலவில்லை.இன்னும் பத்து நாட்களுக்கு பிறகு
நிலைமை சீராகிவிடும்.அதன் பின் பதிவுகள் எப்பொழுதும் போல் தொடரும்.ஊக்கத்திற்கு மிக்க நன்றி
நல்ல அறிமுகங்கள் சார். அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteArimukangal arumai.
ReplyDeleteகே. ஆர்.விஜயன்//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்
raji //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்
கோவை2தில்லி//
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்
NIZAMUDEEN //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்
ரமணி சார்
ReplyDeleteஉங்களின் அறிமுகங்களை
நீங்கள் ரசித்தவிதம் சொல்லி
அறிமுகப்படுத்துவது
அமர்க்களமாக உள்ளது சார்
பெருந்தன்மையின்
பொக்கிஷம்
நீங்கள்.......................
உங்கள் அறிமுகங்கள் வாயிலாகவே இந்த வலைச்சரங்களைக் கண்டேன்.
ReplyDeleteநூறாய்...ஆயிரமாய் இருப்பதில் பார்ப்பதே மிகக் குறைவு எனும்போது பாராட்டுவது எங்ஙனம்?ரமணி சார்,
பூக்களை அழகிய சரமாய்த் தொடுத்துவிட்டீர்கள்.நன்றி.
Murugeswari Rajavel //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி
ரமணி சார்,
ReplyDeleteஒவ்வொரு வலைப்பூவையும் பார்க்கையில் மலைப்பு!கலாநேசனின் சோமாயணம் மிக அருமை.
பழைய பாடல்களில் சிறந்த பாடல்களும்,சிறப்பான எனக்கும் பிடித்த பதிவர்களும்.நன்றி !
ReplyDeleteநன்முத்துக்களாய் தேர்ந்திருக்கிறீர்கள் ரமணி சார்! வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஹேமா //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
மோகன்ஜி //.
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
தமிழ் ரசிகா //...
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
மனம் கனிந்த வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
இசை என்றாலே இனிமை… அந்த இனிமையில் அமிழ்ந்துவிட வரிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்… அதற்கு நீங்கள் எடுத்துக்காட்டிய பாடல் வரிகள் மிக அருமை ரமணி சார்…
ReplyDeleteஉண்மையே ரமணி சார் நீங்கள் சொல்வது. பழைய பாடல்களில் இருக்கும் இனிமை, மென்மை, வரிகளில் இருக்கும் தூய்மை இப்போதிருக்கும் புதிய பாடல்களில் அதிகம் காண முடிவதில்லை….
கவிஞர் கண்ணதாசனின் பழைய பாடல்களின் வரிகளில் அன்பு, காதல், கம்பீரம் எல்லா உணர்வுகளுமே மிக அருமையாக வடித்திருக்கும்…
ஆணின் கம்பீரத்தை முழுமையாக மனைவியால் மட்டுமே எடுத்துரைக்கப்படும் என்ற நிலையில் ஊனத்தை மனதில் வைத்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் குன்றி விடாதிருக்க வரித்த மிக அருமையான பாடல் வரிகள் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ… கம்பீரத்திற்கு சிங்கத்தை உவமையாகக்கொண்டு சொல்லப்பட்ட வரிகளின் அழகு இப்போதுள்ள புதிய பாடல்களில் அத்தனை காண முடிவதில்லை…
மிக அருமையான பகிர்வு ரமணி சார். தமிழுக்கு அடுத்து நான் மிகவும் ரசிக்கும் கவிதை வரிகள் பழைய ஹிந்தி திரைப்பட பாடல் வரிகள். மிக அருமையாக இருக்கும்… கன கச்சிதமாக இசையை துணைக்கொண்டு வரிகளை ரசிக்க பழைய பாடல்களே அருமையான தேர்வு….
அறிமுகப்படுத்தப்படும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்…நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்களின் வலைப்பூவை நானும் பார்க்கிறேன் ரமணி சார்.. மிக மிக அருமையாக இருக்கிறது...
பொன்னான பகிர்வினை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்…
என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபோளூர் தயாநிதி//.
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
விரிவான வாழ்த்துக்கும்
மிக்க நன்றி