அனைவருக்கும் வணக்கம்,
ஒரு வாரம் போயே போச்சு..இட்ஸ் கான்.... எல்லோருக்கும் நன்றின்னு ஒரு சின்ன வரில முடிக்காம.. வைகைன்னு என்னை அடையாளம் காண உதவிய நண்பர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்ட ஆசைப்படறேன்! நான் முதன் முதலில் படிச்ச தமிழ் ப்ளாக் ( அப்ப..இங்க்லீஷ் ப்ளாக் வேற படிச்சியான்னு கேட்டு அசிங்கப்படுத்தாதிங்க!) அடராசக்கை சிபியோட தளம்தான்! அவரை பார்த்துதான் எழுதவந்தேன்.! முதன்முதலில் எழுதிவிட்டு ஒரு நாள் முழுவதும் F5 பட்டனை அழுத்தி பார்த்து ஓய்ந்துவிட்டு போய்விட்டேன்.. மறுநாள் என்ன ஒரு ஆச்சர்யம் மாணவன் வந்து கமென்ட் போட்டு என்னை ஊக்கப்படுத்தினார்! ஒண்ணுமே தெரியாமல் தத்தி தத்தி வந்த போது வந்தே மாதரம் சசியின் பதிவுகளை வைத்துதான் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்!
என்ன எழுதுவது என்று தெரியாமல் எதையாவது எழுதியபோது இப்படியும் நகைச்சுவையாக எழுதலாம் என்று ஆசைப்படவைத்தவர்கள் சிரிப்பு போலிஸ் ரமேசும் பன்னிக்குட்டி ராமசாமியும்! எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம் ஆனா அதை இப்படியும் காட்டமாக எழுதலாம் என்று காட்டியவர் பட்டாபட்டி! ஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்! அனைவருக்கும் எனது நன்றிகள்!
இப்படி தனித்தனியாக பழகிவந்த நான் டெரர் கும்மியில் ஐக்கியமான போது இன்னும் பல புதிய நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டேன்! ஒட்டகம் மேய்த்த அனுபவத்தில் நண்பர்களை மேய்க்கும் டெரர் பாண்டியன்.. தகுதியே இல்லாமல் தன்னை தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ரமேஷ்... தலைவர் ஆவதற்கு எல்லா தகுதியும் இருந்தும் தன்னடக்கத்தோடு இருக்கும் இம்சை அரசன் பாபு... ரமேஷ் என்ன செய்தாலும் "துப்பரவாளர்கள்"(காரி)
இப்படி பல துப்புரவாளர்கள் இருக்கிறார்கள்!
அதுபோக எங்கள் டெரர் கும்மியின் மாயாவிகள் மங்குனி அமைச்சர், ஜூனியர் அருண்......அடுத்து தல வெங்கட்.இவரு எப்ப வருவாரு எப்பிடி வருவாருன்னு யாருக்கும் தெரியாது..ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துருவாரு! எங்கள் குழுமத்தின் காதல் இளவரசன் நாகராஜசோழன்... தோழிக்கு பஸ் விட்டே பஞ்சரானவர் இவர்! அடுத்து முக்கியமான ஒருத்தர் தம்பி செல்வா.. இதுக்கும் வந்து இப்ப இதனால என்னாகும்னு கேப்பாரு! இன்னொரு சயனைட் பதிவர் இருக்காரு..அவருதான் தினேஷ் குமார்! கவிதைகளால் உடனடி மரணம் என்று நிரூபித்தவர்! எங்கள் டெரர் கும்மியின் என்சைக்ளோ பீடியா எஸ்.கே.. ஹன்ட் ஃபார் ஹின்ட் விளையாட்டின் விதையை எங்களிடம் விதைத்த அருண் பிரசாத்.. இவர்களிடம் எப்படி மாட்டினோம் என்று தெரியாமலே விதியை நொந்தபடி இருக்கும் மாதவன்.. பெ.சோ.வி.. இப்படி..இதுதான் எங்கள் குடும்பம்.. இது ஒரு பல ஊர்களை சேர்ந்த குருவிகளின் கூடு! :-))
இதுவரை என்னோடு தொடர்ந்து வந்து ஆதரவு தந்த உங்களுக்கு எனது நன்றிகள்... இந்த அரிய வாய்ப்பினை அளித்த சீனா ஐயாவுக்கும் என் நன்றிகள்! அட இருங்க...படம் இன்னும் முடியல... எப்பிடி முடித்தாலும் நீங்க வைகை கவிதையாக முடித்தான்னு சொல்லணும்...அதனால கடைசியா சில கவிதைகளை பார்த்திட்டு போங்க.. :-))
காதல்.. ஒரு அற்புதமான உணர்வு.. ஒரு பெண் தன் காதலனை பார்த்து எப்படி வியக்கிறார் என்று மாலதி ரசித்து எழுதுகிறார் பாருங்கள்!
ஒரு காதலன் காதலியை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார் என்று பாருங்கள்... எங்கேன்னு கேக்குறீங்களா? மஞ்சு பாஷிணி கதம்ப உணர்வுகளில் சொலுகிறார் போய் பாருங்கள்!
இனிய உணர்வுகளோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்,
வைகை
Tata bye bye!
ReplyDeleteஹப்பா... போய்ட்டாண்டா... :))
ReplyDelete//ஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்!//
ReplyDeleteஒரு இலக்கிய தரம் வாய்ந்த எழுத்தாளர நீ இன்சல்ட் பண்ணி இருக்க.. :)
முடிஞ்சுது ....அப்பாடி!!!!
ReplyDeleteஎன்னையும் சேர்த்து நிறய பதிவர்களை அறிமுகப்படுத்திய அண்ணன் வைகைக்கு மணமார்ந்த நன்றி.
ReplyDeleteஇன்னொரு சயனைட் பதிவர் இருக்காரு.... இருடி பங்கு அடுத்து ஒரு வர்ர கவிதை உனக்குத்தான்
ReplyDeleteஎஸ்.கே said...
ReplyDeleteTata bye bye!//
நானே வருனேன் :))
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஹப்பா... போய்ட்டாண்டா... :)//
சந்தோசம்? ம்ம். :))
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete//ஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்!//
ஒரு இலக்கிய தரம் வாய்ந்த எழுத்தாளர நீ இன்சல்ட் பண்ணி இருக்க.. ://
இலக்கியம்? த்தூ..மொதல்ல தமிழ ஒழுங்கா தப்பில்லாம எழுது.. :))
NAAI-NAKKS said...
ReplyDeleteமுடிஞ்சுது ....அப்பாடி!!!//
உங்களுக்குமா? ரைட்டு.. :)
வருங்கால சிங்கை அதிபர் பங்காளி வைகை வாழ்க ....
ReplyDeleteகாந்தி பனங்கூர் said...
ReplyDeleteஎன்னையும் சேர்த்து நிறய பதிவர்களை அறிமுகப்படுத்திய அண்ணன் வைகைக்கு மணமார்ந்த நன்றி//
வாங்க காந்தி.. நன்றி :)
தினேஷ்குமார் said...
ReplyDeleteஇன்னொரு சயனைட் பதிவர் இருக்காரு.... இருடி பங்கு அடுத்து ஒரு வர்ர கவிதை உனக்குத்தான்///
கொலை செய்றதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா எப்படி செஞ்சா என்ன? : ))
// முதன்முதலில் எழுதிவிட்டு ஒரு நாள் முழுவதும்
ReplyDeleteF5 பட்டனை அழுத்தி பார்த்து ஓய்ந்துவிட்டு போய்விட்டேன்.. //
F5 பட்டனை அழுத்தினால் Page Refresh
ஆகும் என்ற அருமையான தகவலை
உங்க பதிவு படித்து தெரிந்து கொண்டேன்..
நன்றி..!!
தினேஷ்குமார் said...
ReplyDeleteவருங்கால சிங்கை அதிபர் பங்காளி வைகை வாழ்க ...//
யோவ்..நேத்துதான்யா எலக்சன் முடிஞ்சது :))
கடைசியா காதலன் காதலியை எப்படி கொண்டாடுகிறார், காதலி காதலனனை எப்படி வியர்க்கிறார் என்ற காதல் உணர்வோடு முடித்த அண்ணன் வைகைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.
ReplyDelete//////என்ன எழுதுவது என்று தெரியாமல் எதையாவது எழுதியபோது இப்படியும் நகைச்சுவையாக எழுதலாம் என்று ஆசைப்படவைத்தவர்கள் சிரிப்பு போலிஸ் ரமேசும் பன்னிக்குட்டி ராமசாமியும்!////////
ReplyDeleteபார்ரா.........?
வெங்கட் said...
ReplyDelete// முதன்முதலில் எழுதிவிட்டு ஒரு நாள் முழுவதும்
F5 பட்டனை அழுத்தி பார்த்து ஓய்ந்துவிட்டு போய்விட்டேன்.. //
F5 பட்டனை அழுத்தினால் Page Refresh
ஆகும் என்ற அருமையான தகவலை
உங்க பதிவு படித்து தெரிந்து கொண்டேன்..
நன்றி..!//
ச்ச்சே... நான் வாய் தொறந்தாவே அறிவு தகவல்கள் கொட்டுது போல? :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////என்ன எழுதுவது என்று தெரியாமல் எதையாவது எழுதியபோது இப்படியும் நகைச்சுவையாக எழுதலாம் என்று ஆசைப்படவைத்தவர்கள் சிரிப்பு போலிஸ் ரமேசும் பன்னிக்குட்டி ராமசாமியும்!////////
பார்ரா.........?///
திரும்பவுமா? :))
//////நான் முதன் முதலில் படிச்ச தமிழ் ப்ளாக் ( அப்ப..இங்க்லீஷ் ப்ளாக் வேற படிச்சியான்னு கேட்டு அசிங்கப்படுத்தாதிங்க!) அடராசக்கை சிபியோட தளம்தான்!//////
ReplyDeleteபுள்ளிய விட்டுட்டீங்க ஆப்பீசர்......
///////முதன்முதலில் எழுதிவிட்டு ஒரு நாள் முழுவதும் F5 பட்டனை அழுத்தி பார்த்து ஓய்ந்துவிட்டு போய்விட்டேன்.. மறுநாள் என்ன ஒரு ஆச்சர்யம் மாணவன் வந்து கமென்ட் போட்டு என்னை ஊக்கப்படுத்தினார்!//////
ReplyDeleteஅப்போ பதிவ போட்டுட்டு F5 பட்டனை அழுத்துனா மாணவன் வந்திடுவாரா? அடடா முன்னாடியே இது தெரியாம போச்சே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////நான் முதன் முதலில் படிச்ச தமிழ் ப்ளாக் ( அப்ப..இங்க்லீஷ் ப்ளாக் வேற படிச்சியான்னு கேட்டு அசிங்கப்படுத்தாதிங்க!) அடராசக்கை சிபியோட தளம்தான்!//////
புள்ளிய விட்டுட்டீங்க ஆப்பீசர்.....///
அவருதான் பெரும்புள்ளியாச்சே? அதான் தேவையில்லன்னு விட்டேன் :))
/////ஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்! //////
ReplyDeleteஎன்னது டெரர் பாண்டியனும் பதிவு எழுதுறாரா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅப்போ பதிவ போட்டுட்டு F5 பட்டனை அழுத்துனா மாணவன் வந்திடுவாரா? அடடா முன்னாடியே இது தெரியாம போச்சே////
அது அப்ப..இப்ப அவருதான் பிரபல பதிவராச்சே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////ஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்! //////
என்னது டெரர் பாண்டியனும் பதிவு எழுதுறாரா?//
அப்பிடி நினைச்சுதான் அது எழுதிக்கொல்லுது :))
டாடா ..பை ..பை ...மக்கா ...எப்பாட ஒருவாரம் ஆள சாகடிச்சுட்டேன்
ReplyDeleteஒரு பதிவு எப்படி இருக்ககூடாது என்பதை என் நண்பன் டெரர் பாண்டியனின் பதிவை பார்த்து கற்றுக்கொண்டேன்!//
ReplyDeletesame blood...
சந்தோசம்
ReplyDeleteஇனிய உணர்வுகளோடு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வைகை
ReplyDeleteவைகைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் வைகை - நன்றி சொல்லி விடை பெற எழுதும் பதிவில் கூட டெரர் கும்மி உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுக படுத்திய விதம் நன்று. பல ஊர்களைச் சேர்ந்த குருவிகளின் கூடாகிய டெரர் கும்மி குழுமம் வாழ்க . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் வைகை - நன்றி சொல்லி விடை பெற எழுதும் பதிவில் கூட டெரர் கும்மி உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுக படுத்திய விதம் நன்று. பல ஊர்களைச் சேர்ந்த குருவிகளின் கூடாகிய டெரர் கும்மி குழுமம் வாழ்க . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//
Thank u
வணக்கம்ணே,
ReplyDeleteகடந்த ஒருவார காலம் வலைச்சரப்பணியை செவ்வெனச் சிறப்பாக செய்து பல பயனுள்ள வலைத்தளங்களின் படைப்புகளை அறிமுகபடுத்தி அசத்திவிட்டீர்கள்... சூப்பர்ப்!
வாழ்த்துக்களும் நன்றிகளுடனும்...
உங்கள். மாணவன்
:)