Saturday, October 1, 2011

மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

இன்று புரட்டாசி மாதத்தின் ஒரு சனிக்கிழமை!. என்ன திடீர்னு பஞ்சாங்கம் படிக்கிறேன்னு பார்க்கறீங்களா, புரட்டாசி மாத சனிக்கிழமைன்னாலே எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்! (வீட்டில் ஒருத்தரையும் பாக்கி வைக்க மாட்டாங்களா என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது!!. இல்லை, இன்னும் நிறைய பேர் இருக்காங்க!) என் அப்பா சொன்ன ஒரு துணுக்கைத் தான் சொல்லப் போறேன்.

ஆங்கிலேயர்களிடம் நம் நாட்டவர்கள் கைகட்டி வாழ்ந்திருந்த காலம். அப்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் விடுமுறை, பண்டிகைகளைத் தவிர!. ஒரு புரட்டாசி சனிக்கிழமையன்று எப்படியாவது விடுமுறை வாங்க வேண்டுமென்று வெள்ளைக்கார மேலதிகாரியிடம் நான்கைந்து பேராகப் போனார்களாம்! புரட்டாசி சனிக்கிழமை ஒரு இந்துப் பண்டிகை என்று சொல்லி விடுப்பு கேட்க, புதிதாக வந்திருந்த அந்த அதிகாரியோ, 'போன வருடம் இதற்கு விடுமுறை விடப்பட்டதா?' என கேட்டாராம்! இந்தப் புத்திசாலிகள், 'லாஸ்ட் இயர் புரட்டாசி சனிக்கிழமை ஃபெல் ஆன் அ சண்டே சார்! (Last year purattasi sanikkizhamai fell on a Sunday Sir) என்று சொல்லி லீவ் விட வைத்தார்களாம்!

இன்று உலக முதியோர் தினமுமாகும். இன்று முதியோரை நாம் மதித்து வாழ்ந்தால் தான், இதைப் பார்த்து வளரும் நம் குழந்தைகளுக்குப் பெரியவர்களின். பெற்றோரின் பெருமை புரியும், நாம் முதியோராகும் போது அது நமக்குப் புரியும்!!
இன்றைய இடுகையில், அவரவர் வல்லமையைச் சொல் திறத்தில் காட்டி, மாநிலம் பயனுற வாழும் பதிவர்களைப் பார்ப்போமா?

தமக்கு முதல் (கிண்டல்) விமர்சகராகத் தன் 'மைண்ட் வாய்ஸை' வைத்திருக்கும் அப்பாவி தங்கமணி! (இவர் பாணியை நானும் ஒரு பதிவில் காப்பியடிச்சேன்!) அப்பாவி தங்கமணிகளின் பிரதிநிதியாக என்னை அதிகாரபூர்வமாக ஏற்று கொண்ட சக தங்கமணிகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி என்று தம் வலைப்பூவில் பிரகடனப்படுத்தியுள்ளார்!!. ஒரு நட்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்றாங்க, இந்தக் கவிதையில்! கோவை சரளாவுடன் பேட்டியும் எடுத்திருக்காங்க!!

'யார் சார் இந்தப் பையன்?' என்று கேட்க நினைக்க வைக்கும் 'Philosophy Prabhakaran'! வலைப்பூவின் பெயரே கருத்தைக் கவரும் - பிரபாகரனின் தத்துபித்துவங்கள்! ஒரு உளவுத்துறை செய்தியை - முரண் - பதிவில் விளக்கியிருக்கிறார்!! பிரபாகரனின் ஒயின் ஷாப் என்று பெண்களுக்குப் பிடிக்காத பெயரை வைத்து பற்பல செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார்! புதிய பதிவர்கள் அனைவருக்கும் முன்னின்று ஆதரவு தரும் மூத்த பதிவர்!

'வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்' என்னும் கொள்கையோடு குடந்தையூர் என்ற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறார், r.v.saravanan. மருமகளான மாமியார் எனச் சிறுகதையும் படைப்பார், எனது கேள்விக்கு எனது பதில் என்னும் பல்சுவைப் பதிவும் கொடுப்பார்!


'தேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு' என்று தன் வலைப்பூவில் போட்டுக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன், 'நானோர் பரதேசி.. நல்லோர் கால் தூசி' என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார்! சமூகத்தில் அவ்வப்போது எழும் பிரச்னைகளுக்குத் தம் பார்வையில் பதிவுகளைச் சுவையாகத் தருபவர். ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றித் தற்சமயம் பகிர்ந்துள்ளார்! நாழிகை தமிழ்ச் சொல்லா என்ற இடுகையும் நான் ரசித்தவற்றுள் ஒன்று!

'விச்சு என்ற புனைபெயரில் எழுதும் மாரிமுத்து.நிறைய எழுத ஆசை' என்று சொல்லும் இவர், அலையல்ல...சுனாமி என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார். செப்டம்பர் 2011 வலைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கும் இவர் தாவரவியல் - அறிவியல் சம்பந்தமாக நிறையப் பயனுள்ள இடுகைகளைப் பதிந்துள்ளார்! டிகிரியோ டிகிரி என்ற பதிவின் பெயரும் கருத்தும் என்னைக் கவர்ந்தன! நீரில் மிதக்கும் ஊசி - எளிமையான முறையில் அறிவைப் புகட்டுகிறது!

நீ-நான்-உலகம் - அருண்குமாரின் இந்த வலைப்பூ சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. ரத்த வகைகள் பற்றி நன்றாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் பற்றியும் விளக்கியிருக்கிறார். அரசியல், சினிமா பதிவுகளும் நன்றாக எழுதுகிறார்.

'நினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..' -லோகு - இவர் தம்மை 'சாம்பலாய் போன வாழ்க்கையில் கல்லறையாய் எழுந்து நிற்கிறேன்..பூஜைக்கு போகாது என தெரிந்தும் மலர்ந்து கிடக்கின்றன மலர்கள் என்னில்.. சில நினைவுகளாய்.' என்று சொல்லிக் கொள்கிறார். அவர் வலைப்பூ மறவாதே கண்மணியே.. ஒரு கவிதைப்பூங்கா! காதலின் சோகத்தை சொல்லும் அவர் கவிதைகள் - குட்டி, அன்பே, அன்பே...

எனக்குப் பிடித்த வானவில் இடுகைகள் உங்களுக்கும் உகந்ததாயிருக்கும் என நம்பகிறேன். வானவில்லின் ஆரஞ்சு நிறம் அறிவார்ந்த சிந்தனையையும் ஆளுமையையும் குறிப்பதாம்! ஒருவரின் படைபாற்றலைத் தூண்டி வாழ்வில் நிலையான தன்மையையும் தருமாம்!

தமிழ்மணத்தில் ஓட்டுப் போட மறக்காதீங்க!

38 comments:

  1. நல்ல அறிமுகங்கள். சனிக்கிழமை குறித்த தகவலோடு.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ''...மாநிலம் பயனுற வாழும் பதிவர்களைப் பார்ப்போமா?...''


    அனைவருக்கும் வாழ்த்துகள் சகோதரி. உங்களுக்கும் வாழ்த்துகள்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  5. சிவப்பு சிந்தனைகளா?

    ReplyDelete
  6. என்னை முதல் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி மாதவி.

    பிற அறிமுகங்களுக்கம் உங்களக்கும் எனது வாழ்த்துக்கள்.

    -நீ நான் உலகம் Arun Kumar.

    ReplyDelete
  7. என்னை முதல் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி மாதவி.

    பிற அறிமுகங்களுக்கம் உங்களக்கும் எனது வாழ்த்துக்கள்.

    -நீ நான் உலகம் Arun Kumar.

    ReplyDelete
  8. புதிய அறிமுகங்கள்.... ஒவ்வொன்றாய் படிக்கிறேன்....

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. எப்டி எப்டி புரட்டாசி சனிக்கிழமை லாஸ்ட் இயர் சண்டேல வந்துடுத்தா? பேஷ் பேஷ் வெளிநாட்டுக்காரவாள இப்படி கூட ஏமாத்த முடியறதே.....

    இன்னைக்கு புரட்டாசி சனிக்கிழமை தளிகை போடுறீங்களா? அப்பா நல்லா யோசிச்சு தான் லீவ் வாங்கி இருக்கார் தன் சகாக்களோடு போய்..... எனக்கு சிரிப்பு வந்துவிட்டது லாஸ்ட் இயர் சண்டேல வந்ததுன்னு சொன்னதை படிச்சப்ப...


    அருமையான தொடக்கம் மாதவி.....
    வானவில்லின் நிறம் ஆரஞ்சுக்கு இன்னைக்கு சூர்யஜீவா என்ன சொல்றாருன்னு பார்த்தேன்.....

    அன்பு வாழ்த்துகள்பா அருமையான பகிர்வுக்கு....

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  10. அப்பா சொன்ன புரட்டாசி சனிக்கிழமை ஜோக் அருமை.

    பதிவர்களின் சிறப்பை அடையாளம் காட்டிடும் படலத்தை அப்பாவித் தங்கமணி அவர்களிடமிருந்து ஆரம்பித்தது அருமையோ அருமை.
    ஆஹா என்னப்பொருத்தம் ....
    நமக்குள் இந்தப்பொருத்தம் ....
    என்று பாடத் தோன்றுகிறது.
    எனக்கு அவர்களின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்.

    இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    உங்களுக்குன் என் பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  11. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி மாதவி.

    அன்பு வாழ்த்துக்கள்

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உண்மையிலேயே மிகச் சந்தோஷமாக உள்ளது. நீங்கள் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  13. மேடம் என்ன இது மூத்த பதிவர் அது இதுன்னு ஓவரா சொல்லியிருக்கீங்க... முடியல... இருந்தாலும் நன்றி மேடம்...

    ReplyDelete
  14. புரட்டாசி சனிகிழமை ஜோக் செம காமடி . ஹா ஹா ஹா . பெரியவர்களிடம் பேசினால் இது போன்று பல விஷயங்கள் திரட்டலாம் . பதிவர்களை பற்றிய பார்வை ரசிக்க வைத்தது

    ReplyDelete
  15. ஆங்கிலேயர்களை விட நம்ம மக்கள் எவ்வளவு இன்டெலிஜென்ட் பாத்தீங்களா?

    இந்த வார வலைச்சரத்தை மாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டில் வசிக்கும் பதிவர்களுக்கும் சேர்த்து பயனுள்ளதாக
    அமைத்திருக்கிறீர்கள்!பல பதிவர்களை அறிமுகம் செய்து வானவில்லின் தகவல்களும் தந்து ரசிக்கும்படியாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள்.நன்றி

    ReplyDelete
  16. @ தமிழ் உதயம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. @ விக்கியுலகம் - நன்றி!

    ReplyDelete
  18. @ kavithai(kovaikkavi) - வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  19. @ suryajeeva - இன்னிக்கு ஆரஞ்சு தான்!

    ReplyDelete
  20. @ Arun Kumar - உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. @ மஞ்சுபாஷினி - கருத்துக்கு நன்றி! போய் லீவ் கேட்டது என் அப்பா இல்லை! அவர் இருந்த வரை ஒவ்வொரு வருடமும் இதைச் சொல்வார்! இன்னும் தீபாவளி முதல் நாள், 'விடிந்தால் தீபாவளி, பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது'ன்னும் சொல்வார்!!

    ReplyDelete
  22. @ வை.கோபாலகிருஷ்ணன் - கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    ReplyDelete
  23. @ வெங்கட் நாகராஜ் - உங்கள் கருத்துக்கும் தொடர்ந்த ஊக்கத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. @ r.v.saravanan - உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்! நீங்கள் ஆற்றி வரும் பணி மென்மேலும் சிறக்கட்டும்!

    ReplyDelete
  25. @ விச்சு - நீங்கள் ஆற்றி வரும் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. @ Philosophy Prabhakaran - //என்ன இது மூத்த பதிவர் அது இதுன்னு ஓவரா சொல்லியிருக்கீங்க... // உண்மையாகத் தான்.. எந்த புதிய பதிவரின் வலைப்பூவிற்குப் போனாலும் அதில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  27. @ பார்வையாளன் - வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  28. @ பார்வையாளன் - வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  29. @ raji - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  30. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு
    நன்றி சகோ..

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. அழகான முறையில் அறிமுகம் :-)

    ReplyDelete
  32. அறிமுகங்களின் விதம் அருமை..
    அறிமுகப்படுத்தப்பட்ட உறவுகளுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  33. முதியோர்களை என்றும் மதிப்போம்.... இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அறிமுக பதிவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. @ logu - நன்றி! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. @ ஜெய்லானி - //அழகான முறையில் அறிமுகம் :-) // நன்றி!

    ReplyDelete
  36. @ vidivelli - வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  37. @ மாய உலகம் - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  38. ரெம்ப நன்றிங்க மாதவி... சாரிங்க... கொஞ்சம் ஆபீஸ்ல பிஸி... அதான் முன்னாடியே பாக்க முடியல... மிக்க நன்றி

    ReplyDelete