நேற்று ஆரம்பித்த இந்த வலைச்சர வாரத்தில் இன்று முதல் நான் ரசிக்கும் சில வலைப்பூக்களைப்பற்றி எழுதப் போகிறேன். அதற்கு முன் இந்த செவ்வாய்க் கிழமையை ஒரு நல்ல சிந்தனையுடன் ஆரம்பிப்போமா?
சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் –
அது இதயத்தின் இசை
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் –
அது சக்தியின் பிறப்பிடம்
விளையாட நேரம் ஒதுக்குங்கள் –
அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுக்குங்கள் –
அது அறிவின் ஊற்று
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் –
அது மகிழ்ச்சிக்கு வழி
உழைக்க நேரம் ஒதுக்குங்கள் –
அது வெற்றியின் விலை.
வலைப்பூ எழுதும் நம்மில் தக்குடு வலைப்பூவினை நுகர்ந்து ரசிக்காதவர் உண்டோ? நான் சொல்லப்போவது அதைப் பற்றி அல்ல. அவரது உம்மாச்சி காப்பாத்து என்ற வலைப்பூவில் சில பதிவுகளே எழுதி இருந்தாலும் நிறைவாக எழுதி இருக்கிறார். நம்மைக் காப்பாற்ற உம்மாச்சியை விட்டா யார் இருக்கா?
”நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காது. ஆனால் நாரத்தங்காய்நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்?” இதை நான் கேட்க வில்லை. இப்படி கேட்பது கீதா சாம்பசிவம் அவர்கள். கேட்டது அவரின் ”சாப்பிடலாம் வாங்க” பக்கத்தில். போய் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.
நவராத்திரி முடிந்து விட்டது. நிறைய வீடுகளில் கொலுவைப் பார்த்து விட்டு வந்த சிலர் அவர்களது வீட்டிலும் வைக்க ஆசைப்படுவார்கள். ஆனால் எப்படி வைப்பது என்று தெரியாமல் இருக்கலாம். அவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் சீக்கிரமா போய் படிக்க வேண்டியது சிமுலேஷன் படைப்புகள் பக்கத்தினை. ”கொலு வைப்பது எப்படி? என்று பகுதி பிரித்து எழுதி இருக்கிறார். அடுத்த வருடம் கொலு வைத்து அசத்துங்க! மறக்காம சுண்டல் வாங்கிக்க என்னையும் கூப்பிடுங்க!
திலகாஷ்ட மகிஷபந்தனம் அப்படின்னு ஒரு நூல் உங்களுக்குத் தெரியுமா? அதைப்பற்றித் தெரிந்து கொள்ள ருக்மணி சேஷசாயி அவர்களின் பாட்டி சொல்லும் கதைகள் பக்கத்திற்கு உங்களை அழைக்கிறேன். உங்கள் சுட்டிகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைக்க தினம் தினம் நீங்கள் அல்லாட வேண்டாம். நிறைய கதைகள் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.
”மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்: என்று தன் பக்கத்தில் சொல்லும் மாதேவி தனது அனுபவங்கள், சுற்றுலா என்று பல பக்கங்களில் ரம்யமாய் உலா வருகிறார். அவரின் ’நிமிர்ந்தெழும் கடலலையருகே நிறையழகாய் மணற்காடு’ பகிர்வில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்கிறது.
இந்த வருட மே மாதத்தில் தன் வலைப்பூ பயணத்தினை தொடங்கி இருக்கும் சீனுவாசன். கு. தனது வலைப்பக்கத்தில் நிறைய குறுஞ்செய்திகள், மெட்டுப் பாடல்கள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள் என இது வரை 231 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவரின் இந்த “ல” வரிசைப் பாட்டு லவ்லியாக [அட ‘ல’-னாவுக்கு ‘ல’-னா] இருந்தது.
இன்னிக்கு இது போதும். நாளை எங்க ஏரியாவுக்கு உங்களை அழைத்துப் போகிறேன். அதுவரை இன்று தந்த சுட்டிகளைச் சென்று பார்த்து படித்து ரசியுங்களேன்.
நாளை மீண்டும் சந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
பின்குறிப்பு: ”இந்த பகிர்வுக்கும் டோராவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்பவர்களுக்கு, இதற்கு விடை உங்களுக்கு ஞாயிறன்று கிடைக்கும். பொறுத்திருங்கள்…
சோதனை மறுமொழி….
ReplyDeleteசீனுவாசன் பக்கங்கள் புதிய அறிமுகம்.நன்றி
ReplyDeleteவாழ்த்துகள் ஆதி.பதிவுகளை சென்று பார்க்கிறேன்.டோராவோட எதோ பெரிய ப்ளானில் இருக்கீங்க போலருக்கே.இப்பவே சொல்லி எதிர்பார்க்க வச்சுடீங்களே.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ..
ReplyDeleteபொன்மொழியோடு ஆரம்பித்து அருமையான அறிமுகங்கள் ... டோரா ...ஞாயிறு வரை சஸ்பென்ஸ் ... அதற்கும் வாழ்த்துகள்
ReplyDeletevalaichara asiriyaruku valthukkal
ReplyDeleteஆசிரியரானதற்கு வாழ்த்துகளும், எனது வலைப்பதிவைக் குறிப்பிட்டதற்கு நன்றிகளும். - சிமுலேஷன்
ReplyDeleteசிந்தனை செய்யவைக்கும் அருமையான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்!
ReplyDelete"டோராவின் பயணங்கள்” சிறப்பாக, விறுவிறுப்பாக அமைய வாழ்த்துகள்!! :-)))))
ReplyDeleteI think Husainamma has found out the Dora suspense.
ReplyDeleteஆரம்பத்தில் சொன்ன பொன்மொழிகள் அருமை. அறிமுகங்களுக்கு வழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபோய் படிக்கிறேன், நாளை வருகிறேன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteபுதிரும் உண்டோ?
தொடருங்கள்.
அருமையான பயனுள்ள பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஅருமையான சிந்தனைகள் .. அறிமுகங்கள்
ReplyDeleteஇன்று என் வலையில் ..
ReplyDeleteஅரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?
உங்கள் சிந்தனைகளும் அருமை
ReplyDeleteரோஜாவும் அழகு
அறிமுகங்களும் அருமை
டோராவும் சூப்பர்
வாழ்த்துக்கள்.
டோராவின் பயணங்கள்ல நாங்களும் கலந்துக்க ஆர்வமா இருக்கோம் :-)
ReplyDeleteஅனைத்தும் அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்களும்.
பாராட்டுக்களும், உங்களுக்கும் சேர்த்துத் தான்.
சூப்பர் அறிமுகங்கள்
ReplyDeleteமுதல் பயணம்
ReplyDeleteஆரம்பம் முதல் அருமை...
அறிமுகப் பதிவர்களை சென்று பார்க்கிறேன் சகோதரி..
அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கும், அறிமுகப்படுத்தியவருக்கும்!
ReplyDeleteபுஜ்ஜி எங்கே??
அறிமுகங்களில் சில பார்க்காதவைகள்.இனி மேல் தான் படிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் மேடம்.
ReplyDelete@ கலாநேசன்: வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ thirumathi bs sridhar: டோரா படம் தினமும் போடலாம் என்று நினைக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஆச்சி.
ReplyDelete@ Madhavan Srinivasagopalan: வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ பத்மநாபன்: காத்திருங்கள் ஞாயிறு வரை... வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க சகோ.
ReplyDelete@ புதுகைத் தென்றல்: வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
ReplyDelete@ Simulation: வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ ஹுஸைனம்மா: ”பயணங்கள்” நல்லபடியாக அமைய வேண்டும். வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ மோகன் குமார்: ஹுஸைனம்மா சொல்வது போலவும் இருக்கலாம்.பார்க்கலாம்...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.
@ Lakshmi: அந்த பொன்மொழிகள் எங்கள் வீட்டில் ஒரு புத்தகத்திலிருந்த வரிகள்.நன்றாக இருந்தது.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.
@ கோகுல்: வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ suryajeeva: பொறுமையாக படித்துப் பாருங்கள். வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ சே.குமார்: ஒவ்வொருவரும் யோசித்து வையுங்கள்.புதிருக்கு விடை ஞாயிறு காணலாம்.வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ வேங்கட ஸ்ரீனிவாசன்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா.
ReplyDelete@ "என் ராஜபாட்டை"- ராஜா: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ Jaleela Kamal: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ அமைதிச்சாரல்: எல்லோருக்கும் டோரா தான் புடிச்சிருக்கு போலருக்கே...:))
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
@ வை.கோபாலகிருஷ்ணன்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
ReplyDelete@ வைரை சதிஷ்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ மகேந்திரன்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ RAMVI: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ middleclassmadhavi: புஜ்ஜி வரும் நாட்களில் வருவான். தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ அமுதா கிருஷ்ணா: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteஉங்கள் வாரம் இனிதாக சிறக்கட்டும்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ரம்யம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
தலைப்பே அருமை!!நல்ல சிந்தனை..அறிமுகப்படுத்திய விதமும் நன்றாக இருந்தது..டோராவுக்காக sunday வர waiting'ஆஆ....வ்.
ReplyDeleteஅழகான தொகுப்பு.
ReplyDeleteடோரா... ஞாயிறுவரை எதிர்பார்ப்பு...
ரைட்டு ...
இன்று என் வலையில்:
"விகடனும் நானும்!"
அனைவருக்கும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteபாராட்டுக்களும்.
சிந்தனை செவ்வாய் அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
நல்ல அறிமுகங்கள் .
வலைசர அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி மேடம்!! நீங்க வெங்கட் அண்ணாவோட தங்கமணியா?? ரொம்ப சந்தோஷம்!!
ReplyDelete@ மாதேவி: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ விச்சு: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ NIZAMUDEEN: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ கவியின் கவிகள்: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
ReplyDelete@ கோமதி அரசு: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.
ReplyDelete@ தக்குடு: ஆமாம். தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ReplyDeleteகடைசியா டோராவைப் போட்டு புதிரும் போட்டீங்களே ஆதி.சரி அறிமுகப் படுத்திய பதிவுகளை பாத்துட்டு வரேன்.
ReplyDeleteதக்குடு தவிர எல்லாமே எனக்கு புது பதிவர்கள்தான்.பகிர்விற்கு நன்றி.
தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்
அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய பதிவுக்கு முதல் வரவுக்கும், நன்றி. வலைச்சரம் ஆசிரியர் ஆனமைக்குப் பாராட்டுகள்.
ReplyDelete@ ராஜி: மன்னிப்பெல்லாம் வேண்டாம்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.
@ geethasmbsvm6: தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா.
ReplyDeleteஎன் மனக்குறையை போக்கி விட்டீர்கள்!
ReplyDeleteஉண்மையில் அனைத்து எழுத்துக்களையும் பிள்ளைகள் சுலபமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பாடல்களை நான் எழுதினேன்.எம் பள்ளி பிள்ளைகள் அனைவரும் இப்பாடல்களை இசையோடு பாடுவார்கள்!தங்கள் கருத்துரைக்கு நன்றி!
@ சீனுவாசன். கு: குழந்தைகளின் நன்மைக்காக தாங்கள் எழுதும் இந்த பாடல்கள் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.