Friday, October 21, 2011

வெள்ளி ஸ்வரம் 'ம'


                                                                             


Animated Guitar Colorful Bright
கிடார்: ஆறு தந்திகள் கொண்ட தந்தி வாத்தியம்.
கடம்: மண்பானையால் ஆன தாள வாத்தியம்
ஆர்மோனியம்: விசைப்பலகை வகையைச் சார்ந்த வாத்திய கருவி.இதன் உலோக நாக்குகளை அழுத்துவதால் காற்று புகுந்து இசையை எழுப்புகிறது.

4. மத்திமம்: ஏழு ஸ்வரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் ஸ்வரம் மத்திமம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து ""

 நம் உடலில் மத்திம பாகத்தில் உணவை செரிக்க உதவும் பாகமான வயிறு
இருப்பதாலும்,இதற்கு முன் ஸ்வரமாக 'க' பார்த்த பின் 'ம'  வந்து கம கம வாசனையை நினைவு படுத்துவதாலும் இன்று சமையல் சாப்பாடு சம்பந்த பதிவு. கம கமப்பவர்கள் யார் யாரென பார்க்கலாம்

ஓட்ஸ் உடம்புக்கு நல்லது.டயட்ல இருக்கறவங்களும் இந்த உப்புமா செஞ்சு சாப்பிடலாம்.அதை எப்படி செய்யணும்னு இங்க கத்துக்கலாம்.சமைத்து அசத்தலாம்னு பேரை படிக்கும்போதே சாப்பிட ஆர்வம் வந்துடும் போல.

எல்லாருமே அடை சாப்பிட்டிருக்கோம்.ஆனா புளி அடை சாப்பிட்டிருக்கீங்களா?நான் சாப்பிட்டிருக்கேன்.இவங்க பதிவுல படிச்சுட்டு செஞ்சு பாத்து வீட்டில எல்லாருக்கும் இது பிடிச்சு போச்சு.

இந்த தம் ஆலு பாருங்க.சப்பாத்திக்கு தொட்டுக்கலாம்.சாதத்துல பிசைஞ்சு சாப்பிடலாம். அப்படியே சாப்பிடுவேன்னு சொல்ற ஆளுங்க அப்படியேவும் சாப்பிட்டுக்கலாம்.

ரொம்ப ஈசியா இட்லி பொடி எப்படி செய்யறதுன்னு இங்க ஒருத்தர் சொல்லித் தராங்க பாருங்க.ரொம்ப வித்தியாசமா இருக்கு இது.

பானி பூரி சாப்பிட ஆசை இருந்தா அதை வெளியில வாங்காம நாமே நம்ம வீட்டில செஞ்சு சாப்பிட்டா திருப்தியாவும் சுகாதாரமாவும் இருக்கும் இல்லையா?அதை செய்ய தெரியாதேன்னு நீங்க கவலைப் பட வேண்டாம்.
சமையல் எனும் கலைன்னு சொல்லி இவங்க சொல்லித் தராங்க.

மாலைச் சிற்றுண்டிக்குன்னு வித்தியாசமா இதை செய்யலாம்.அவல் உடம்புக்கும் ரொம்ப நல்லது.இதைக் குழந்தைகள் பள்ளியிலேருந்து பசியோட வரும்போது செஞ்சு கொடுத்தா ஆர்வமா சாப்பிடுவாங்க.தயிர் அவல் சாப்பிட்டு பாத்து சொல்லுங்க.

வார விடுமுறைகள்ல எல்லாரும் வீட்டுல இருக்கும்போது இந்த மாதிரி பிசிபேளாபாத் செய்யலாம்.எல்லா காய்கறிகளும் நிறைய போடறதால உடம்புக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.சாப்பிடவும் நல்லா இருக்கும்.
இவங்க தன் பதிவுல ஃப்ரூட் சாலட் செய்யவும் சொல்லித் தராங்க.இதைச் சாப்பிடறதால எல்லா பழங்களோட சத்தும் நமக்கு கிடைக்குது.தனியா பழம் சாப்பிட படுத்தற குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுக்கலாம்.

இந்த சப்போட்டா பேரிச்சம் டிலைட்டைப் பாக்கும்போதும், படிக்கும்போதும்
இப்பவே சாப்பிடலாம் போல இருக்கே.செய்யறதுக்கு ரொம்ப ஈசியாவும் இருக்கும் போல இருக்கு.

தீபாவளி வருது.பண்டிகைக்கு என்ன ஸ்வீட்,காரம் செய்யறதுன்னு யாரும் குழம்ப வேண்டாம்.செய்யத் தெரியாதுன்னு வெளில வாங்கவும் வேண்டாம்.
இந்த பெட்டகம் படிச்சு பாருங்க.30 வகை ஸ்வீட் காரம் செய்ய சொல்லித் தந்துருக்காங்க.

இரவு உணவுக்கு நிறைய பேர் சப்பாத்திதான் சாப்பிடறாங்க.சப்பாத்தி செஞ்சா தொட்டுக்க என்ன செய்யறதுன்னு நினைச்சீங்கன்னா இந்த புது
வித குறிப்பை செஞ்சு பாருங்க.அவங்களே நம்பளை சப்பாத்தி சாப்பிடலாமான்னு கூப்பிடறாங்க பாருங்க.

இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நாங்க என்ன பண்ணப் போறோம்னு ரங்கமணிகள் ஒதுங்க வேண்டாம்.தங்கமணிகளுக்கு உதவலாம்.
நள பாகம்னுதான் சொல்லுவாங்க இல்லையா?!

சாப்பாட்டு பதிவுல இந்த பாட்டு இல்லாட்டி எப்படி? பாடலை ரசிக்கறதா?நடிகர் 
எஸ் வி ரங்காராவ் அவர்களின் முக பாவங்களை ரசிக்கறதாங்கற அளவு இருக்கும்.


இப்ப கீழே இருக்கற ஆடியோவைக் கேளுங்க.இதை பாடின குரல் யாரோடதுன்னு பின்னூட்டத்துல சொல்லலாம்

Voice-0001


துர்கா:

இந்த ஆடியோவில் பாடப்பட்டிருக்கும் ராகம் துர்கா.சுத்த சாவேரியிலிருந்து பெறப்பட்ட வட இந்திய வகை ராகம். பின்னிரவில் பாடக் கூடிய ராகம்.துர்கையின் பெயரால் அமையப் பெற்றது.இது ஔடவ் வகையினைச் சேர்ந்த ராகம்.அதாவது ஆரோகணம், அவரோகணம் இரண்டிலுமே ஐந்து ஸ்வரங்கள் பெறப்பட்டிருக்கும்.இந்த வகையைச் சேர்ந்த மற்றொரு ராகம் ரேவதி.

செவிக்கு உணவும், சாப்பாடும் பலமா??!!!!!!!!!!!!!!!!!

27 comments:

  1. Samayal siRappu padhivil vadai enakku !

    ARimugankaLukku vaazhthukkaL!

    ReplyDelete
  2. இன்றைய அறிமுகம் சமையல் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.நேரமிருக்கும்போது சென்று பார்க்கிறேன்.

    கடைசியில் உள்ள ஆடியோ கிளிப்பிங்கில் உள்ள குரல் யாருடையதுன்னு சொல்ல பர்மிசன் கொடுத்துவிட்டீர்கள்.அப்ப நானே முதல்ல சொல்லிடுறேன்.அந்த குரலுக்கு சொந்தக்காரர் இந்த வார வலைச்சர ஆசிரியரதான்..பாட்டும் குரலும் நல்லாயிருக்கு.அசத்துங்க.வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் இ.வா.ஆசிரியர். கண்டுபிடித்த எனக்கு என்ன தருவீர்கள்? :-)

    ReplyDelete
  5. கிச்சன் ஸ்பெஷல்ஸ்? வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அட!!.. பிரபல பாடகி லாஜியோட கால்ஷீட் எப்டீங்க கிடைச்சது உங்களுக்கு?.. அவங்க ரொம்ப பிஸின்னு சொன்னாங்களே :-)

    ஜூப்பருங்க. இந்த வாரம்.

    ReplyDelete
  7. ஆஹா இன்னிக்கு சமையல் ஸ்வரமா... வாவ்... ”சந்தேகத்துக்கு சாம்பார்” மாதிரி கடைசியில் கல்யாண சமையல் சாதம் பாட்டு...

    ரசித்தேன்.

    ReplyDelete
  8. @மாதவி

    முதல் வருகைக்கு நன்றி
    வடை நல்லாருந்துச்சா?

    @மாய உலகம்

    வருகைக்கு நன்றி

    @திருமதி பி எஸ் ஸ்ரீதர்
    மிகச் சரியாக சொன்னதற்காக உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.பிடியுங்கள்.

    @RVS

    உங்களுக்கு பொற்'கிழி' சார்

    @சி பி செந்தில்குமார்
    நன்றி

    @அமைதிச்சாரல்

    ஆமாம் சாந்தி.கால்ஷீட் கிடைக்கலதான்.நான் விடுவேனா?அவங்க கச்சேரிக்கு கார்ல போயிட்டிருக்கும்போது விடாம போயி ஒட்டிக்கிட்டு கார்ல வச்சு, மைக்ல அவங்க குரலை ரெகார்ட் பண்ணிக்கிட்டு வந்துட்டேன்.அதனாலதான் பேக்ரவுண்ட் ம்யூஜிக் இல்லை பாருங்க. ஹி.......ஹி.......

    @வெங்கட் நாகராஜ்

    ஆமாம் சார் சமையல் கூட சங்கீதம் மாதிரிதான்.ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. ’செவிக்குணவு இல்லாத போது சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்”
    என்று படித்திருக்கிறோம்.
    இங்கே இரண்டுமே இருக்கிறதே! நன்றிகள்.

    ReplyDelete
  10. சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன்னு கிளம்பிட்டு இப்போ மறுபடியும் சாப்பாட்டுலே தூள் கிளப்பறீங்க. ஆர்விஸ்க்கு பொற்கிழி கொடுக்ககூடாது அவர் தப்பாட்டம் ஆடறார். நேத்திக்கே தெரியும் அவருக்கு.துர்கா ராகம் விவரம் நல்லா இருக்கு என்னை மாதிரி சங்கீதஞான்சூன்யங்களுக்குகூட புரியராமாதிரி சொன்னதுக்கு நன்றி

    ReplyDelete
  11. .இந்த வகையைச் சேர்ந்த மற்றொரு ராகம் ரேவதி.

    இதுக்கு க்ளுவேறே கொடுத்து அப்பறம் என்ன ஆர்விஸ் கண்டுபிடித்தார்ன்னு பொற்கிழிவேறே

    ReplyDelete
  12. காயதிவனமாலியில் உங்கல் குரல் மென்மையாக இருக்கு.நல்லா பாடியிரிக்கீங்க.நாளைக்கு பஞ்சமம் உச்சிக்கு கொண்டுபோய் ஒரு பிடி பிடிக்கனும் வலச்சரத்தை

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு..மிக்க நன்றிங்க,என்னை இத்தனை அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. @வேங்கட ஸ்ரீனிவாசன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

    @RVS

    உங்களுக்கு பொற்கிழி கொடுக்கறதுல கண்டனம் இருக்கறதால பொற்கிழி கேன்சல் :(((((

    @தி ரா ச

    பொற்கிழி பிடுங்கப் பட்டது.

    பஞ்சமத்தை பிடிச்சுடலாம்

    ReplyDelete
  15. @தி ரா ச

    //என்னை மாதிரி சங்கீதஞான்சூன்யங்களுக்குகூட புரியராமாதிரி சொன்னதுக்கு நன்றி//

    நீங்களே இப்படிச் சொல்லிட்டா வாழ்க்கைல சங்கீதமே கத்துக்காத நான்
    என்னை அஞ்ஞான பிம்பம்னுதான் சொல்லிக்கணும்.

    ReplyDelete
  16. என்றும் தங்கமணிகளின் சமையலை விட ரங்கமணிகளின் சமையல் தான் அருமையாக இருக்கும்... ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது மேடம்

    ReplyDelete
  17. என்றும் தங்கமணிகளின் சமையலை விட ரங்கமணிகளின் சமையல் தான் அருமையாக இருக்கும்... ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது மேடம்

    ”உங்ககுடும்ப ரகசியத்தையெல்லாம் சபையிலேபோட்டு உடைக்ககூடாது”


    உங்களுக்கு பொற்கிழி கொடுக்கறதுல கண்டனம் இருக்கறதால பொற்கிழி கேன்சல் :(((((

    அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு

    ReplyDelete
  18. என்னுடைய பொற்கிழியை திரும்ப பெற்றதுக்கு கண்டனத்துக்கு கண்டனம். தயவுசெய்து அதை திருப்த்திப்பட்ட சங்கீத சிரோன்மணி டி.ஆர்.சி மாமாவுக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். :-))

    ##எப்படியும் அவர்கிட்டேயிருந்து தட்டிடலாம்...

    ReplyDelete
  19. முதலில் காட்டியுள்ள கடம் (மண்பானை) ரொம்ப நல்லா இருக்கு.

    கல்யாண சமையல் சாதம்....
    காய்கறிகளும் பிரமாதம் பாட்டும்
    பிரமாதம் .. நல்ல பொருத்தமாக.

    இறுதியில் கொடுத்துள்ள ஆடியோ பாடல் இனிமையாக உள்ளது.

    பாடுபவர் யார் என்று வீடியோவாகக் காண்பித்திருக்கலாமே?

    அது யார் என்று கண்டுபிடிக்க [முன்னே பின்னே இந்தக்குரலைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்காத) எங்களுக்குக் கஷ்டமில்லாமல் இருந்திருக்குமே!

    Anyhow அந்தப் பிரபலப் பாடகிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இன்றைய அறிமுகங்கள் அருமை.
    அனவருக்கும் வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  20. @asia omar

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
    தங்களின் அந்த பதிவை படித்த அன்று வெஜ் ஓட்ஸ் கிச்சடி செய்தேன்.மாமனார் மாமியாருக்கு மிகவும் பிடித்து விட்டது.பகிர்விற்கு நன்றி.

    @suryajeeva

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆனா எல்லா ரங்கமணிகளுக்கும் சமைக்கத் தெரிவதில்லை.

    @அருள்
    வருகைக்கு நன்றி.தங்கள் பதிவில் கருத்துரைத்துள்ளேன்.

    @RVS

    கண்டு பிடிக்கறவங்களுக்குத்தான் கொடுக்க முடியுமே தவிர கண்டனம் செய்யறவங்களுக்கு இல்லை.

    @வை கோபாலகிருஷ்ணன் சார்

    கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ஆடியோவிற்கு குரல் நானே ரெகார்ட் செய்ய இயன்றது.வீடியோவாக போடுவதற்கு
    இயலவில்லை.இருப்பினும் ரசித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  21. ராஜி, அறிமுகங்களை நன்கு தேர்வு செய்திருக்கிறீர்கள்.

    கீழ்க்குரலில்அழகான பாட்டு. இந்தக் குரல் என் அம்மா பாடின தாலாட்டு போல இருக்கிறது. தூக்கமும் சொக்குகிறது. பாடிய பாடகிக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. @ மோகன்ஜி

    கருத்திற்கு நன்றி.

    அந்த பாடலைப் பாடியது நான்தான்.
    பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜி

    ReplyDelete
  23. மத்யமத்தை ஒரு பிடி பிடுச்சுருக்கேளே!! அப்புறம் இன்னொரு விஷயம், இந்த ரேவதி எப்பிடி அருமையான ராகமோ அதே மாதிரி இந்த பேர் உள்ளவா பேசர்து/எழுதர்து கூட பாடர மாதிரி இனிமையா இருக்குமாம் அக்கா! :))

    ReplyDelete
  24. @தக்குடு

    இது திருவாளர் தக்குடு அவர்களின் கண்டுபிடிப்பா? :-))))

    ReplyDelete
  25. அன்பிற்கினிய சகோதரி ராஜி அவர்களுக்கு வணக்கம். தங்களின் வலைச்சரத்தில் எனது பெட்டகம் (www.pettagum.blogspot.com)வலைப்பூ வை இணைத்து தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு அன்புடன் நன்றிகள் பலப்பல உரித்தாக்குகிறேன். தங்களின் வலைப்பூ ஆமினா அவர்கள் தொகுத்துள்ள இந்த வார வலைப்பூமாலை மிகவும் மணமிக்கதாக உள்ளது. நானும் தொடர்ந்து பார்த்து கருத்துக்களை தெரிவிக்கின்றேன். தங்கள் அனைவருக்கும் என் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்களுடன் அன்பு சகோதரன் A.S.முஹம்மது அலி

    ReplyDelete
  26. என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  27. @Mohamed Ali Blog

    வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி :-)

    ReplyDelete