அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இன்று நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
இவர் 150க்கும் மேலான இடுகைகளை, எட்டு இடுகைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர் பெற்ற மறுமொழிகளோ 320க்கும் மேல்.
சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனாவினை வாழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்
அடுத்து நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் சகோதரி சாகம்பரி. இவர் காவிரிக்கரையில் பிறந்து, மும்பையில் சில காலம் வசித்து, தற்போது மதுரையில் வசிக்கிறார். இளநிலை பொறியியலாளர் - மேலாண்மைக் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவர் - மனோ தத்துவத்தில் பட்டயப் படிப்பு - 23 ஆண்டுகளாக கல்விப்பணி - அதில் துறைத்தலைவராக 15 ஆண்டுகள் - கணவரும், இரு மகன்களும் நல்ல பணியில் இருக்க - அமைதியாகக் குடும்பம் நடத்துகிறார். மகிழம்பூச்சரம் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் ஒரு ஆண்டில் இட்டிருக்கிறார்.
சகோதரி சாகம்பரியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சகோதரி ஆமீனா
நல்வாழ்த்துகள் சகோதரி சாகம்பரி
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா
ReplyDeleteஅழகுற பணிமுடித்த சகோதரி ஆமினாவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா .... அடுத்து சகோதரி சாகம்பரி
வாங்க வாங்க
வந்து அழகிய பூக்களால் சரம் தொடுத்து
தாங்க தாங்க.....
வலைச்சரப்பணி சிறப்புற வாழ்த்துக்கள் சகோதரி.
அழகுற பணிமுடித்த சகோதரி ஆமினாவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா .... அடுத்து சகோதரி சாகம்பரி
வாங்க வாங்க
வந்து அழகிய பூக்களால் சரம் தொடுத்து
தாங்க தாங்க.....
வலைச்சரப்பணி சிறப்புற வாழ்த்துக்கள் சகோதரி.
முதன் முறையாக என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய ஆமின அக்காவுக்கு இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
ReplyDeleteசிறப்பாகப் பணியாற்றி விடைபெறும் ஆமினா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteகல்வித்துறையில் பெரும் பொறுப்பில் பல்லாண்டுகளாகத் துறைத்தலைவராக விளங்கும் திருமதி சாகம்பரி அவர்கள் நம் வலைச்சரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்பதால், வலைச்சரத்திற்கே பெருமை என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
காவிரிக்கரையில் பிறந்து, எங்கள் ஊராம் திருச்சியில் தன் குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, படித்து முன்னேறியவர் என்பதால் எனக்கு இவரின் படைப்புக்கள் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு.
புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திருமதி சாகம்பரி அவர்களை வருக! வருக!! வருக!!! என இரு கரம் கூப்பி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் பணி மிகச்சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்து வாழ்த்துவோம்.
அன்புடன் vgk
தன் பணியைச் சிறப்பாக செய்து முடித்த ஆமினாவுக்கும், தன் பணியை தொடரப்போகும் சாகம்பரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோ ஆமீனா அவர்களுக்கும் இந்த வார ஆசிரியர் சாகம்பரி அவர்களுக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
ReplyDeleteசாகம்பரி உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கலக்குங்க!
வருக வருக
ReplyDeleteவலைசரத்திற்கே ஒரு மகுடம் உங்கள் வரவு. உங்கள் வரவினால் வலைசரத்திற்குதான் பெருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் செய்த ஆமீனாவுக்கு ஒரு ஜே !
ReplyDeleteஆமினாவிற்கு வாழ்த்துக்களும் சாகம்பரி மேடத்திற்கு வரவேற்புகளும் :-))
ReplyDeleteசகோதரி அதுக்குள்ள ஒரு வாரம் முடிந்து விட்டதா..,
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்....நன்றி ஆமினா....பாராட்டுக்கள்.....
ReplyDeleteசகோதரி சாகம்பரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
ஒரு வாரம் அருமையாக கலக்கிய சகோ ஆமினா அவர்களுக்கு... வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வாரம் வந்து தூள் கிளப்ப போகும் சகோ சாகம்பரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.