வெள்ளி முளைத்து பரிதியின் வருகைக்கு கட்டியம் கூற
தாய் பறவைகள் பிள்ளை வயிற்று பசிக்காய் பறந்திட
நேற்றைய பன்னீர் பூக்கள் மணம் வீசி உறக்கம் கலைய
கீழ் வானத்தின் சிவப்பில் புதிய கவிதை எழுதுவோம்.
இன்றைக்கு விடியலை பார்ப்போமா? உறக்கம் கலைத்து எழுந்திருங்கள். என்னுடன் வாருங்கள். தோட்டத்து பக்கம் ஒரு சிறுநடை பயிலுவோம். புற்களையும் அதை அண்டி வாழும் சிற்றுயிர்களையும் துயில் கலைக்காமல், நடை பாதையிலேயே செல்லுவோம். விடியல் இரவின் தொடர்ச்சி. இருள் இன்னும் நீடிக்கிறதல்லவா?. இதோ... சுத்தமான குளிர் காற்று நெஞ்சத்தை நிரப்பி கன்னத்தை வருடிச்செல்கிறது. மிக மென்மையாக... அம்மாவின் மெல்லிய கரங்களின் வருடல்கள் நினைவிற்கு வருகிறது.. அதோ சில பூக்கள் மலர காத்திருக்கின்றன. இந்த பன்னீர் மரத்தின் கீழே மட்டும் இரவில் மலர்ந்த பூக்கள் தரையில் உதிர்ந்து வெள்ளை போர்வை போர்த்தியிருக்கிறது - இருக்கட்டும்... பூமித்தாய்க்கு மட்டும் குளிராதா என்ன?. ஒரு பதில் மட்டும் சொல்லுங்களேன். குமரிப்பெண்ணின் காதில் ஆடும் முத்து தொங்கல் போல பன்னீர் பூக்கள் மட்டும் ஏன் தரை நோக்கி ரம்மியமாக ஆடுகின்றன?
சற்று நேரம் அமரலாமா? இங்கிருந்து அடிவானம் சூரியனின் வருகை கண்டு சிவக்க ஆரம்பிப்பது நன்றாக தெரிகிறதல்லவா? புற்கள் பொக்கிசமாக சுமக்கும் பனித்துளி ஆதவன் வந்தபின் தன் ரகசியம் உடைத்து சில்லென்று பனி நீரை தெளித்து மொட்டுக்களை மலர்விக்கும். பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும், தென்றல் வீசும், வானம் வர்ணஜாலம் பூசிக் கொள்ளும். தினம் தினம் நடக்கும் இத்தனை கொண்டாட்டங்களுக்கும் ஒரு பின்னனி இசை வேண்டாமா?
அங்கே தொலைவில் உள்ள ஒரு ஆல மரத்திலிருந்து பறவைகள் பறக்கும் ஓசையும், அவை இசைக்கும் கீச்சொலிகளும் யுகம் யுகமாக காலை நேரத்து பூபாளம் இசைக்கின்றனவே. அந்த இசைதான் இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம். ஆமாம்... அந்த பறவைகள் என்ன சொல்கின்றன? நேற்றைக்கு நம் பசியை தீர்த்த இறைவன் இன்றைக்கும் நம் வயிற்றுக்கு உணவு தருவான் என்பதுதான். நமக்கும் அப்படித்தான், விடியல் என்பது இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் இன்றைக்கும் நல்லதே நடக்கட்டும் என்றோ அல்லது இன்றைக்காவது நல்லது நடக்கட்டும் என்றோ நம்பிக்கை துளிர்க்கும் நேரம்.
சற்று நேரம் அமரலாமா? இங்கிருந்து அடிவானம் சூரியனின் வருகை கண்டு சிவக்க ஆரம்பிப்பது நன்றாக தெரிகிறதல்லவா? புற்கள் பொக்கிசமாக சுமக்கும் பனித்துளி ஆதவன் வந்தபின் தன் ரகசியம் உடைத்து சில்லென்று பனி நீரை தெளித்து மொட்டுக்களை மலர்விக்கும். பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும், தென்றல் வீசும், வானம் வர்ணஜாலம் பூசிக் கொள்ளும். தினம் தினம் நடக்கும் இத்தனை கொண்டாட்டங்களுக்கும் ஒரு பின்னனி இசை வேண்டாமா?
அங்கே தொலைவில் உள்ள ஒரு ஆல மரத்திலிருந்து பறவைகள் பறக்கும் ஓசையும், அவை இசைக்கும் கீச்சொலிகளும் யுகம் யுகமாக காலை நேரத்து பூபாளம் இசைக்கின்றனவே. அந்த இசைதான் இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம். ஆமாம்... அந்த பறவைகள் என்ன சொல்கின்றன? நேற்றைக்கு நம் பசியை தீர்த்த இறைவன் இன்றைக்கும் நம் வயிற்றுக்கு உணவு தருவான் என்பதுதான். நமக்கும் அப்படித்தான், விடியல் என்பது இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் இன்றைக்கும் நல்லதே நடக்கட்டும் என்றோ அல்லது இன்றைக்காவது நல்லது நடக்கட்டும் என்றோ நம்பிக்கை துளிர்க்கும் நேரம்.
உங்களுக்குத் தெரியுமா இப்போது மட்டும் நான் தேவதையாகிவிட்டேன்!. தேவதை என்றால் வரம் தர வேண்டுமல்லாவா? உங்களுக்குப் பிடித்த ஐந்து நபர்களின் பெயர்களை சொல்லுங்கள். அவர்களுக்கு இன்றைக்கு நல்லது செய்வோம். அட... சொல்லி முடிக்கும் முன் சட்டென்று சொல்லி விட்டீர்கள். சரி, இப்போது தண்டிக்கவும் செய்யலாம். உங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயர்கள்...?. என்னது ஒன்றும் நினைவிற்கு வர மாட்டேன் என்கிறதா? ஒருவர் கூடவா இல்லை..!
ஒரு மனோவியல் ரகசியம் சொல்லவா... நமக்கு யாரிடமும் கோபம், வெறுப்பு ஆகியன இந்த நேரத்தில் வராது. அதுதான் குழந்தை மனதின் ஆளுமை. நல்லதே நாடும் மனம். யாருக்கும் தீங்கு செய்யாத எண்ணங்கள். இந்த சமயத்தில் வாழ்க்கையினை பற்றி சிந்தியுங்கள். நேற்றைய பிழையான குறிப்புகளை திருத்தி இன்றைக்கு ஒரு புது ஆரம்பம் கிட்டட்டும்.
இன்றைய குறிப்புகள்: நம்பிக்கை, குழந்தை, தாய்மை, ஒரு நல்ல ஆரம்பத்திற்கான அறிகுறி, சுத்தமான காற்று.
இப்போது பதிவுகளின் அறிமுகம்:
1. என் மகளாக நான் நினைக்கும் பதிவுல உறவு - கற்றலும் கேட்டலும் ராஜி சொல்வதை கேளுங்கள். மௌனத்தின் விடியல்
2. சிறந்த சங்கத்தமிழ் கவிதைகள் உலா வரும் வலைப்பூ வேதாவின் வலை, மதிப்பிற்குரிய கோவைக்கவி அவர்களின் விடியல் படியுங்கள்.
3. தமிழ்வாசி பிரகாசின் வலைப்பூவில் எப்போதாவது கவிதை வரும். இதோ நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கவிதை. விடியல் வருமா
4. மனம் தெளிந்தால்தான் மார்க்கம் கிட்டும். திரு.மகேந்திரனின் வசந்த மண்டபத்தில் தென்றெலென உலாவரும் தமிழ்கவிதைகளில் நம்பிக்கை பற்றிய கவிதையை படியுங்கள். அகமழித்து மீண்டுவா!!
5. அழகான வார்த்தைகளின் கோர்வையாக கவிச்சரம் கிட்டும், தமிழ் காதலனின் இதயச்சாரல் வலைப்பூவில் "விழிகள் தேடும் விடியலை
நாமும் தேடலாம் வாருங்கள்.
6. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் சில கவிதைகளை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி. இதோ கவிதை வீதியில் பூத்த குழந்தை பற்றிய அழகுக் கவிதை படியுங்கள். கவிதை வீதி...
7. தேடலும் தெளிதலும் புரிதலும் யாவர்க்கும் சிறப்பே. அருமையான தமிழில் சந்திரகௌரியின் வலைப்பூ. வலைப்பூவில் கண்ட கவிதை. அன்னைக்குப் பெருமை
8. இறையியல் படிப்பு மாணவியான மீனாவின்-எண்ணங்கள் வலைப்பூவில் உள்ள இந்த கவிதை மனதை குழந்தையாக்கி பாடுகிறது. இன்றைய சரத்திற்கான விளக்கங்களை எழுதியபின்தான் இந்த கவிதையை படித்தேன். மிகப் பொருத்தமாக இருக்கிறது. குழந்தை மனம்
9. அருமையான மருத்துவ குறிப்புகள் கொண்டிருக்கும் உங்களுக்காக வலைப்பூவில் கோபி.கே.அசோக். விடியலில் செய்யப்படும் மூச்சுப்பயிற்சிகள் எப்படி ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகின்றன என்பதை மூச்சில் முன்னூறு விஷயத்தில் சொல்கிறார்.
10. விடியலை பற்றி இன்னும் சில விசயங்கள் சொல்கிறார் திரு. தங்கம் பழனி கேளுங்களேன்.
11. புதிய வசந்தம் என்ற வலைப்பூவில் புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி என்று ஆயிஷா பானு சொல்வதை படியுங்கள். இவர் குழந்தை வளர்ப்பு பற்றி அருமையான பதிவுகளை பதிகிறார்.
12. புன்னகையின் ரகசியத்தை கூறும் வலைப்பூவில் தனலட்சுமி நீயும் போதி மரமாவாய் என்று நம்பிக்கை வரிகளை கூறுகிறார். படித்து பாருங்களேன். விதை .
குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டே இதனை அருந்துங்கள். உற்சாகம் பிறக்கட்டும்.
உங்களுடன் இந்த விடியல் நேரம் இனிமையாக கழிந்தது நன்றி. நாளை (காலையில்) சந்திப்போம். நன்றி
அறிமுகம் ஆன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்... தொடரட்டும்....
ReplyDeleteவிடியலின் விந்தைகளை வித்தியாசமாய் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்..
ReplyDeleteவிடியல் வினோதங்களை வியக்கும் வேளையில் நடை பயில நானும் வந்திருக்கிறேனா?அதுவும் தாயின் கை பிடித்து நடந்தால் அதை விட வேறென்ன சுகம் இருக்க முடியும்?
ReplyDeleteமற்ற விடியல் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
அதிகாலை இறைவனின் வரம்.அதற்குள் கொண்டு சென்றதோடு மட்டுமன்றி தகுந்த படங்களுடன் மனோவியல் ரகசியங்களையும் தெளிவு படுத்தல் சிறப்பு.காலை வேளையில் உங்க கையால இன்னிக்கு சூடான பானம்.ஆஹா!
விடியலை பற்றிய உங்களது வர்ணனை அருமையா இருக்கு.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
என்னையும் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி சாகம்பரி.
ReplyDeleteவாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி.
மற்ற அறிமுகங்கள் அனைவர்களுக்கும் வாழ்த்தும், பாராட்டும். தொடருங்கள் ...
கவிதையாய் வர்ணனையோடு பதிவர் அறிமுகங்கள். சுவையாய் இருந்தது.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅசத்தல் அறிமுகம் ..
ReplyDeleteநேற்றை பொழுது தூங்கி விட்டு விடியலில் வந்து விட்டேன்!!
ReplyDeleteஅருமையான தொகுப்பும் தொகுப்புரையும்!! ஆசிரியருக்கும் அறிமுகமானோருக்கும் வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையான அழகான பதிவு.
ReplyDeleteவாழ்வில் விடியலில் நம்பிக்கையை ஏற்படுத்தும் மிகப்பயனுள்ள பதிவு.
//குமரிப்பெண்ணின் காதில் ஆடும் முத்து தொங்கல் போல பன்னீர் பூக்கள் மட்டும் ஏன் தரை நோக்கி ரம்மியமாக ஆடுகின்றன? //
ஆஹா! என்ன ஒரு ஒப்பீடு. அருமையோ அருமை. உங்களுக்குள் எவ்வளவு ஒரு இனிமையான, ரம்யமான கற்பனைகள்! கற்பனை உலகிலேயே எப்போதும் மிதந்து மகிழ்ந்து வரும் எனக்கு இதைப்படித்ததும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது, மேடம்.
அடுத்ததாக மனோவியல் ரகசியம் மிகவும் என்னை யோசிக்க வைத்தது.
Newly promoted executives க்கான ஒரு 15 நாள் பயிற்சிக்கு நான் ஹைதராபாத் அனுப்பப்பட்டபோது, இதையே வேறு மாதிரியாக, செய்யச் சொன்னார்கள். படித்ததும் மகிழ்ச்சியான மலரும் நினைவுகள் தோன்றின.
முதல் அறிமுகமே பிரமாதம். கற்றலும் கேட்டலும் திருமதி ராஜி அவர்கள் உங்களுக்கும் மகளா! மிகவும் சந்தோஷம்.)))))
அறிமுகங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். vgk
அறிமுகம் ஆன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்... தொடரட்டும்....
ReplyDelete@வை கோபாலகிருஷ்ணன் சார்
ReplyDeleteநம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் தாய் தந்தையர் உறவு பாராட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? நம்மைப் பேணும் உறவுகள் அமைவது நம் பாக்கியமே.அப்படி அமைந்த, தங்களைப் போன்ற என் நலனில் அக்கறை கொண்ட ஓர் பாச உறவுதான் மேடமுடையதும்.
ஆணில் தாயையும் பெண்ணில் தந்தையையும் கூட பார்க்க இயலும் சமயத்தில்.
எனது வலைப்பூவில் எப்போதாவது வரும் கவிதையையும் தேடிப்பிடித்து வலைச்சரத்தில் கோர்த்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாகம்பரி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிடியல் - அருமையானதொரு வார்த்தை. அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDelete@வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteமிக்க நன்றி திரு.வெங்கட்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆசியா மேடம்.
ReplyDeleteவிடியலில் என்னுடன் வந்தமைக்கு நன்றி ராஜி.
ReplyDeleteரொம்ப நன்றி ராம்வி
ReplyDeleteஆயிஷா, உங்கள் வலைப்பூவில் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவுங்கள். வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி திரு.நிஜாமுதீன்
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு.குமார்.
ReplyDeleteநன்றி திரு.ராஜா
ReplyDeleteவணக்கம் மாதவி, விடியலில் வந்ததற்கு நன்றி
ReplyDeleteஎவ்வளவு ஒரு இனிமையான, ரம்யமான கற்பனைகள்! // விடியலில் கவிதையும் கற்பனையும் அழகான பிறக்கின்றன சார்.
ReplyDeleteஅந்த மனோவியல் ரகசியம் //
மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சிமுகாமில் சொல்வதுதான் சார்.
ஊக்கமுட்டும் விரிவான கருத்துரைக்கு நன்றி VGK சார்.
பிரகாஷின் கவிதை எழுதும் திறன் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமே. கருத்துரைக்கு மிக்க நன்றி பிரகாஷ் .
ReplyDeleteமிக்க நன்றி விச்சு.
ReplyDeleteவிடியலின் விந்தையை மிக அழகாக ரசித்து
ReplyDeleteநாங்களும் ரசிக்கக் கொடுத்தமைக்கும்
மிக அருமையான பதிவுகளை
அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சாகம்பரி.., தங்களின் இனிய வருகைக்கும், எம்மை இந்த வலைச்சரத்தில் அறிமுகம் செய்து, எமது கவிதையை குறிப்பிட்டமைக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தில் தாங்கள் அறிமுகபடுத்திய அத்தனை எழுத்தாளர்களும் நல்ல திறமைசாலிகள். அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
தான் வாழும் காலத்தே சக தமிழனோடு தமிழ் பேசி, தமிழை வாழவைத்து.., தமிழனாய் வாழ்ந்து எல்லாவிடத்தும் தமிழ் சிறக்க, செழிக்க அனைவரும் தங்கள் எழுத்து பணியை தொடர வேண்டுகிறேன்.
திறமையானவர்களை இனம் கண்டு தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் “வலைச்சரம்” வலைப்பூவின் மகத்தான பணிக்கு எமது பணிவான நன்றியை தெரிவிக்கிறேன்.
தாமதத்தற்கு மன்னிக்கவும்.. எம்மையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது..!! மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறேன்..!!
ReplyDeleteவிடியலின் வசந்தத்தைத் அப்படியே கண்முன் நிறுத்திய ஒவ்வொரு வார்த்தையையும் மெய்சிலிர்க்க ரசித்துப் படித்தேன்.. பாராட்டுகள்.. பாராட்டுகள்..பாராட்டுகள்.. !!! எனது நன்றியையும் உரித்தாக்குகிறேன்.
வணக்கம் சகோதரி,
ReplyDeleteமிகவும் தாமதமாக வந்துவிட்டேன்.
விடியலின் அற்புதத்தை எவ்வளவு அழகாய்
சொல்லியிருக்கிறீர்கள். படிக்க படிக்க
இனிக்கிறது.
உவமைகளுடன் எளிமையாய் விளக்கங்கள்.
இன்றைய அறிமுகங்கள் அத்தனை பேரும்
நல்ல எழுத்தாளர்கள். என்னையும் இங்கே
அறிமுகம் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் வலைச்சரப்பணி விடியலுடன் அழகாய்
ஆரம்பித்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரி.
இதமான காலையில்
ReplyDeleteஅழகான சூழலில்
மெதுவாகக் கைபிடித்து
சுகமான சிறுநடை
அழைத்துச் சென்ற
பக்குவம் பிடித்திருக்கிறது.
சிறப்பான வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
எங்களை வலைசாரல் தோட்டதில் சிறு நடை பயில கூட்டிச் சென்று விடியலின் விந்தையை காண்பித்து சென்ற பேராசிரியருக்கு நன்றி. பேராசிரியர் கையால் குட்டுப்பட்ட & படப்போகும் அனைத்து பதிவாளர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிடியலின் இதமான பொழுதில் நட்புமொழி பேசியபடி உங்களுடன் நடந்துவந்து யாவற்றையும் அனுபவித்தேன். மிக அழகாய்த் தொகுத்து வழங்குவதற்குப் பாராட்டுகள் சாகம்பரி. அறிமுகப் பதிவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகா சொல்றீங்க சாகம்பரி.
ReplyDeleteஅன்பு சாகம்பரி இந்தக் காலை எனக்கு இனிய காலை. உங்கள் பதிவில் வந்த காலையை ஏட்டில் ரசிக்க மிகவும் மகிழ்ச்சி.
ReplyDeleteஅருமையான கவிதையை அனுபவிக்கக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
நேற்றைக்கு நம் பசியை தீர்த்த இறைவன் இன்றைக்கும் நம் வயிற்றுக்கு உணவு தருவான் என்பதுதான். நமக்கும் அப்படித்தான், விடியல் என்பது இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் இன்றைக்கும் நல்லதே நடக்கட்டும் என்றோ அல்லது இன்றைக்காவது நல்லது நடக்கட்டும் என்றோ நம்பிக்கை துளிர்க்கும் நேரம்.//
ReplyDeleteமிக அழகாக மனதிற்கு புத்துணர்வு தரும் நம்பிக்கையுடன் பதிவை எழுதி.. அருமையான பதிவர்களை அறிமுகபடுத்தி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
அன்பின் சகோதரி என்னை அறிமுகப் படுத்தியதற்கும் அனைத்து அறிமுகவாளர்களுக்கும் வாழ்த்துகளும், நன்றியும். சகோதரி. கணனி செத்து உயிர்த்துள்ளது. இதனால் இப்போது தான் பார்த்தேன். மாலை தொடருவேன். நிகழ்ச்சியைத் திறமையாக எடுத்துச் செல்வதற்கு வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeletehttp://www.kovaikkavi.wordpress.com
அத்தனையும் அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.
//விடியலின் விந்தையை மிக அழகாக ரசித்து
ReplyDeleteநாங்களும் ரசிக்கக் கொடுத்தமைக்கும்
மிக அருமையான பதிவுகளை
அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி
தொடர வாழ்த்துக்கள்//கருத்துரைக்கு மிக்க நன்றி ரமணி சார்.
பாராட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல்
ReplyDeleteவணக்கம் தமிழ்காதலன் உங்கள் கவிதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDelete//திறமையானவர்களை இனம் கண்டு தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் “வலைச்சரம்” வலைப்பூவின் மகத்தான பணிக்கு எமது பணிவான நன்றியை தெரிவிக்கிறேன்.// வலைச்சரத்திற்குரிய நன்றியினை மதிப்பிற்குரிய சீனா ஐயாவிடம் தெரிவித்துவிடுகிறேன் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க திரு.தங்கம்பழனி பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் நிறைய எழுதி சிறந்த பதிவராக வர வாழ்த்துக்கள்.
ReplyDelete@மகேந்திரன் said...//
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
வாங்க மதுரை தமிழன், நான் குட்டு வைக்கிற ஆசிரியர் அல்ல ஷொட்டு வைக்கிறவர். அப்பாவை பற்றிய பதிவை மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி கீதா, உங்களுடைய கருத்துரைகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன.
ReplyDeleteவாங்க ஷைலஜா பாராட்டிற்கு நன்றி. உங்களுடைய வலைப்பூவின் பதிவுகள் என் மனம் கவர்ந்தவையாக உள்ளன.
ReplyDelete@ வல்லிசிம்ஹன்
ReplyDeleteவணக்கம் மேடம். தங்களுடைய வருகை உற்சாகமூட்டுகிறது. பாராட்டிற்கும் மிக்க நன்றி.
மிக அழகாக மனதிற்கு புத்துணர்வு தரும் நம்பிக்கையுடன் பதிவை எழுதி.. அருமையான பதிவர்களை அறிமுகபடுத்தி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.//மிக்க நன்றி சகோ. ராஜேஷ்.
ReplyDelete@kavithai (kovaikkavi)
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் பற்றிய பதிவுகள் உங்களை பற்றி எழுதாமல் முற்றுபெற முடியுமா? உங்கள் வலைப்பூவில் நிறைய படிக்கவேண்டி உள்ளது. நானும் வருகிறேன். நன்றி சகோதரி.
@Rathnavel said...
ReplyDeleteதங்களின் வருகை என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா.
வருகைக்கு நன்றி திரு.போளூர் தயாநிதி
ReplyDelete@Muruganandan M.K.
ReplyDeleteஇதமான காலையில்
அழகான சூழலில்
மெதுவாகக் கைபிடித்து
சுகமான சிறுநடை
அழைத்துச் சென்ற
பக்குவம் பிடித்திருக்கிறது.
சிறப்பான வாரத்திற்கு வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.
விடியலை பற்றிய தங்களின் பல தகவல்கள் பயனுள்ளவை!
ReplyDelete