இப்போதும் நினைவிருக்கிறது. கருப்பு வெள்ளை, தமிழின் ஆரம்ப காலக் கலர்ப் படங்களை நான் அண்ணலக்ரஹாரம் பேலஸ் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். ஐம்பது பைசா டிக்கெட். தரையில் ஆற்றுமணலைக் கொட்டி வைத்திருப்பார்கள். அதில்தான் உட்கார்ந்து பார்க்கவேண்டும். பெஞ்சு நாற்காலிகளும் உண்டு. மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்துவிடும்!அரசலாற்றில் தண்ணீர் இல்லாதபோது ஆற்றில் நடந்தே சென்று தியேட்டரை அடைந்துவிடுவோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே குறுக்கே ஒரு மூங்கில் தட்டி.
டவுன் (down என்று படிக்கவும்!) தியேட்டர்களிலும் படம் பார்த்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் காலையிலேயே அம்மா சமைத்துவிடுவார். அவசர அவசரமாக இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்குவாளியில் ரசஞ்சாதம் எடுத்துக்கொண்டு காலைக் காட்சி சினிமா பார்க்கச் சென்றுவிடுவோம். படம் விட்டதும் உடனே அடுத்த தியேட்டர். டிக்கெட் கொடுக்கும் கவுண்டரில் உட்கார்ந்து சாப்பாட்டை முடித்துவிடுவோம்! We don't believe in wasting time! ஆச்சரியம்,ஊரில் மற்ற அம்மாக்கள் படம் பார்ப்பது தவறு என்று வளர்தபோது நான் மட்டும் ஏகப்பட்ட படங்கள் பார்த்து வளர்ந்தேன்.
வளர்ந்து பெரியவனானதும் வாரத்திற்கு நான்கு படங்கள் வரை பார்த்த நினைவு இருக்கிறது. எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஒரு படமாவது பார்க்காமல் திரும்ப வந்ததில்லை. படம் பார்க்கவென்றே ஊர் ஒராகச் சுற்றிய அனுபவமும் உண்டு (Combined study பண்ணப் போறோம்மா). இந்த சினிமா பார்க்கும் ஆர்வம் அம்மாவிடமிருந்து நான் பெற்றுக்கொண்டது.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் பிரசன்னாவும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் (கும்பகோணம்). பதினொன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலக்கட்டத்தில் (கிட்டத்தட்ட பத்து வருடங்கள்) வெளியான எல்லாப் படங்களையும் சேர்ந்தே பார்த்தோம். இதற்காகப் பெற்றோர்களிடம் நாங்கள் வாங்கிய புகழுரைகள் (?!) அநேகம். தீபாவளியன்று யார் எப்படிப் போனாலும் வெளியான அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பற்றியே யோசிப்போம்.
*
ஒரு விஷயத்தைக் காட்சியாகப் பார்க்கும்போது மனதில் நன்றாகப் பதிந்துவிடுகிறது. விமன் ஹார்லிக்ஸ் விளம்பரப் படத்தில் வரும் பெண் அந்த வங்கி அதிகாரியிடம் பேசுவதைக் கவனித்துப் பாருங்கள். அவர் பேசப் பேச, கணவர், வங்கி அதிகாரிகளின் முகங்கள் எப்படி மாறுகின்றன என்று பாருங்கள். எவ்வளவு பக்கங்கள் எழுதினாலும் அந்தக் காட்சிகளை எழுத்தில் கொண்டுவந்து விடமுடியாது.
நந்தனார் படத்தின் ஹைலைட் இந்தக் கட்டம்தான். நெல்லின் கனத்தால் தலைசாய்ந்து நிற்கும் கதிர்கள் நாற்பது வேலி நிலத்தையும் நிறைத்திருக்கும். வேதியருக்குத் தான் செய்தது தவறு என்ற உண்மை உரைக்கும். நந்தனாரைத் தேடி ஓடும் வேகத்தில் அவருடைய துண்டு கீழே வயலில் விழுந்துவிடும். நந்தனாரைப் பார்த்ததும் வேதியர் அவருடைய காலில் விழுவார் (தண்ட சேவை). நந்தனார் பதைபதைத்துப் போய் வேதியரின் காலில் விழுவார். பின்னணியில் (இறைவனின் அருளால் விளைந்த) தலைசாய்ந்து நிற்கும் கதிர்கள். ஓரிரு நிமிடங்கள் நீடிக்கும் இந்தக் காட்சிகள் ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லிவிடுகின்றன.
(வேதியரும் நந்தனும் காலில் விழும் காட்சி இந்தக் காணொளியில் இல்லை. பாடல் முடிந்தபிறகு அது வரும்)
*
திரைப்படங்கள் குறித்துப் பதிவர்கள் சுடச் சுட விமர்சனம் எழுதிவிடுகிறார்கள். நல்ல விஷயம். ஆனால் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள் குறித்த விமர்சனம் எழுதுபவர்கள் மிகக் குறைவே. அதற்காக அப்படியே விட்டுட முடியுமா? எப்படியும் தேடிக் கண்டுபிடித்து அவை பற்றிப் பகிர்ந்துகொண்டு விடமாட்டோமா என்ன!
தோபி காட் என்ற இந்திப் படத்தை அண்மையில் விமானத்தில் லண்டனில் இருந்து பெங்களூர் திரும்பும்போது பார்த்தேன். நல்ல அசதி. இருந்தாலும் இருமுறை பார்த்தேன். மேலும் ஓரிரு முறை பார்த்த நினைவு. பெங்களூர் வந்ததும் அதுகுறித்துப் பதிவுகள் இருக்கின்றனவா என்று தேடினேன். வெகு சில பதிவுகளே கிடைத்தன. அதில் மெத்தச் சிறந்தது விதூஷின் இந்தப் பதிவு. கவிதை, கதை, ஆன்மிகம் சம்பந்தமாக மட்டுமே எழுதுவார் என்றுதான் நான் இவரைப் பற்றி எண்ணியிருந்தேன். சமீபத்தில் நான் படித்ததில் மிகச் சிறந்த சினிமா பற்றிய பதிவு இது. இந்தப் படம் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். விதூஷின் சமீபத்திய பயணம் பற்றிய பதிவுகளையும் பார்த்துவிடுங்கள்.
செ. சரவணக்குமார் நிறைய வாசிப்பவர், தரமான படங்கள் நிறைய பார்ப்பவர். மேலே ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அங்காடித் தெரு படத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள்।
நிலாமுகிலன் உலக சினிமா என்ற லேபலில் மட்டும் இதுவரை 25 பதிவுகள் எழுதியுள்ளார். சமீபத்தில் எழுதிய King’s Speech படம் பற்றிய பதிவு இங்கே. அதிகம் கேள்விப்பட்டிருக்காத படங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
பிரபு தமிழ்ப் படங்கள் குறித்து நிறைய எழுதினாலும் சில ஆங்கிலப் படங்கள் குறித்தும் எழுதியுள்ளார். Shawshank Redemption படம் பற்றிய கட்டுரை சிறப்பு.
சென்ற வருடம் நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைத் தழுவி மகிழ்ச்சி என்று ஒரு படம் வந்தது। என்ன காரணமோ தெரியவில்லை, பதிவர்கள் மத்தியில் அது பலத்த வரவேற்பைப் பெறவில்லை। அந்தப் படம் குறித்த இந்த விரிவான பதிவைப் பார்த்துவிடுங்கள்.
சமீபத்தில் வெளியான ஆதமிண்டே மகன் அபு என்ற மலையாளப் படம் பல பேராலும் சிலாகித்துச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் பற்றிய பதிவொன்று.
*
உண்மைத்தமிழன், சுரேஷ் கண்ணன் முதலிய பதிவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர்கள் எழுதிய சில பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
உண்மைத்தமிழனின் அம்பேத்கர் படம் பற்றிய பதிவு
சுரேஷ் கண்ணின் நாயி நெரலு (நாயின் நிழல்) படம் பற்றிய பதிவு.
*
திரைப்படம் பற்றிய புத்தகங்களுக்கான தேசிய விருது ஓவியர் திரு. ஜீவா அவர்களின் திரைச்சீலை புத்தகத்திற்காகக் கிடைத்தது பற்றி நீங்கள் படித்திருக்கலாம். அந்தப் புத்தகம் பற்றிய பதிவொன்று. இந்தப் பதிவை எழுதிய செல்வாவிற்கு அறிமுகம் தேவையில்லை. வாசிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதைப் பற்றி எழுதுவது லட்டு சாப்பிடுவது மாதிரி!
திரைச்சீலை பற்றிய இன்னொரு பதிவு
ஓவியர் ஜீவா அவர்களின் கட்டுரை ஒன்று.
*
எங்கே கிளம்பிட்டீங்க? தியேட்டருக்கா? வெரி குட். படம் பாத்துட்டு வந்து ஒரு பதிவு போடுங்க !
அறிமுகங்களும் உங்கள் எழுத்தும் அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி கோபி, "ஆதமிண்டே மகன் அபு" திரைப்படம் பற்றிய என் பதிவை பகிர்ந்து கொண்டதற்கு.
ReplyDeletehttp://bhilalraja.blogspot.com/
விமர்சகர் விமர்சித்து பரிந்துரைத்த விமர்சனங்களுக்கு பாராட்டுக்கள்.எல்லாவற்றையும் வாசிக்கனும்,ஆனால் நேரம்?!
ReplyDeleteபிரசன்னாவின் கிளாஸ்மேட்டா?அப்ப கேட்க வேண்டாம்.நீங்களும் நல்லா பாடுவீங்களா?சகோ.
Thanks again for introducing lot of blogs and bloggers.
ReplyDeleteரொம்ப நன்றி கோபி...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவில் நீங்கள் லிங்க் கொடுத்திருந்த செல்வேந்திரன் அவர்களின் பதிவையும் படித்தேன்...
நான் ஷாஷாங்க் ரெடம்ஷன் பற்றி பத்திப் பத்தியாக சிலாகித்த விஷயங்களை அவர் ரொம்ப சிக்கனமான வார்த்தைகள் மூலம் நிறைவாகச் சொன்னது ரொம்பவே அழகு.....
மீண்டும் மீண்டும் நன்றிகள்....
தொடர்ந்து பயணிப்போம் நம் வலையுலகில்... :-)
மிக்க நன்றி தம்பி..!
ReplyDeleteஅந்த காணொளிகள் மிக அருமையாக இருக்கு கோபி.வார்த்தைகளில் கொண்டு வர முடியாத உணர்ச்சிகளை காட்சியில் கொண்டு வர முடிகிறது. அருமை.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
thanks for sharing my blog here gopi.
ReplyDeletegood videos, and nice blogs. :)
நல்ல தொகுப்பு
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.
இவ்ளோ பதிவு படிக்கறீங்களா?டைம் எப்பிடி சார் கிடைக்குது?
ReplyDeleteநானும் போய் பாக்கறேன்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :-))
தங்களின் அருமையான சினிமா பார்த்த அனுபவங்கள், என்னையும் என் இளம் வயதுக்கு அழைத்துச் சென்றது.
ReplyDeleteஇன்றைக்கும் நல்ல பல அறிமுகங்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். vgk
O கே!
ReplyDeleteரசனையின் மறுபெயர் கோபின்னு தெரியும்...வந்து லேசா எட்டி பார்த்தேன்..அந்த விளம்பரபடம் பத்தி நீங்க ரசனையா விளக்கியது அந்த விளம்பர படத்தை விட சூப்பர் ஆ இருந்தது:-)...கோபி...rockzzz..;-))
ReplyDeleteசில காட்சிகளை பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்தால் கவிதைதான். அருமையான பகிர்வு.
ReplyDeleteHorlicks விளம்பரம் மட்டும் பார்த்தேன் சூப்பர்:) மற்றவைகளையும் நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றிகள் பல:)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் பதிவும் அருமை. வீடியோ இணைப்பு பார்த்தேன், நன்றி,
ReplyDeleteநம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11
@சே. குமார், மிக்க நன்றி
ReplyDelete@பிலால்ராஜா, மிக்க நன்றி
@ஆசியா உமர், மிக்க நன்றி. பாட்டா? நானா? அதெல்லாம் வராது:-))
@மரா, மிக்க நன்றி
@பிரபு, மிக்க நன்றி
@உண்மைத் தமிழன், மிக்க நன்றி
@ராம்வி, மிக்க நன்றி
@விதூஷ், மிக்க நன்றி
@என் ராஜபாட்டை ராஜா, மிக்க நன்றி
@ராஜி, மிக்க நன்றி
@வை.கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி
@நிஜாமுதீன், மிக்க நன்றி
@ஆனந்தி, மிக்க நன்றி
@சாகம்பரி, மிக்க நன்றி
@மழை, மிக்க நன்றி
@தமிழ்வாசி, மிக்க நன்றி
நன்றி கோபி.
ReplyDelete@செ. சரவணக்குமார், மிக்க நன்றி
ReplyDeleteMany are our friends only !!
ReplyDeleteபிரசன்னா கும்பகோணம் அத்தோட உங்க நண்பர் வேறயா? சொல்லவே இல்ல? :))
ReplyDelete@மோகன்குமார், :-))பொருத்தமான நேரத்தில்தான் சொல்லமுடியும்:-))
ReplyDeleteஅறிமுகம் தந்ததுக்கு நன்றி நண்பரே. மேலும் சிறக்கட்டும் உமது பணி
ReplyDelete