ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. மறு வாரத்தின் ஆரம்பத்திற்கு வந்துவிட்டோம்!
இணையச் சூறாவளி என்று அறியப்படுபவர் நம் ராம்ஜி. இவரிடம் கமென்ட் வாங்காத பதிவர்களே இல்லை எனலாம். தற்சமயம் கூகிள் பஸ்ஸில் பிசியாக இருப்பதால் பதிவுகளில் அடிக்கடி இவர் கமென்ட் போடுவதில்லை (என்று நினைக்கிறேன்). ஒருசில பதிவுகள் போட்டிருக்கிறார். எழுத்தாளர்களைச் சந்திப்பதில் அளவு கடந்த ஆர்வமுண்டு. நகுலன் வீட்டிற்கு அவர் சென்றிருந்தபோது எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம்.
எங்க ஊருக்குப் பக்கத்து ஊரான நீடாமங்கலத்துக் காரர். பதிவர்களிடம் கருத்துக் கணிப்பு, எழுத்தாளர்களுடன் சந்திப்பு, பயணம், சட்டம், சுய முன்னேற்றம் என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் பதிவுகள் எழுதும் ஆல் ரவுண்ட் அய்யாசாமி இவர்.
கெக்கே பிக்கேவென்று பேசுவேன் என்று சொல்கிறாரேயொழிய இவர் சொல்லும் விஷயங்களின் கனம் அதிகம். என்னதான் சொல்றார்னு பாருங்களேன்.
பாஸ்கர் சக்தியின் சிறுகதைத் தொகுப்பிற்கான இந்தப் பதிவைப் பாருங்கள். புத்தக விமர்சனம் செய்வது எப்படி என்கிற இந்தப் பதிவும் மிக முக்கியமான ஒன்று:-)
இணையத்தில் எதையோ தேடியபோது இவருடைய வலைப்பூ கண்ணில் பட்டது. சினிமா சார்ந்த பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன. எங்கேயும் எப்போதும் படம் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார். பாப்கார்ன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகளும் சிறப்பாக இருக்கின்றன.
இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலக்கியம் பற்றியது। வோட்டுப் பட்டைகள் கிடையாது. பின்னூட்டம் போடும் வசதி கிடையாது. இது ஒருவிதத்தில் நமக்கு நல்லதே!
உச்சநீதி மன்றத்தின் 141 பக்கத் தீர்ப்பை ஒரே மூச்சில் படித்து, முடிந்தவரை உள்வாங்கிக் கொண்டு நான் எழுதிய ஒரு பதிவு இதோ. மனதிற்கு நெருக்கமான பதிவுகளுள் இதுவுமொன்று. முன்பே பகிர விட்டுப்போய் விட்டது.
*
இந்த வாரம் முழுதும் நான் குறிப்பிட்டிருக்கும் பதிவுகள் என் ரசனை, வாசிப்பெல்லைக்கு உட்பட்டவை. இவற்றைத் தாண்டி இன்னும் நிறைய பதிவுகள இருக்கமுடியும். அடுத்தடுத்த வாரங்களில் வலைச்சரம் வாயிலாக அவை பற்றித் தெரிய வரும்போது அவற்றைப் படிக்கும் முதல் ஆள் நானாக இருக்கவேண்டும்! #பேராசைக்காரன்.
விறுவிறுப்பாக அறிமுகப்படுத்திய விதம் அருமை. நன்றி கோபி.
ReplyDeleteபதினொன்றாம் பரிமாணம் ஓப்பன் ஆகலை கோபி.பலவிதத்தில் இதுவும் ஒருவிதமா?நன்று..
ReplyDeleteநன்றிங்கண்ணா. ரொம்ப கூச்சமா இருக்கு
ReplyDelete@நிஜாமுதீன், மிக்க நன்றி
ReplyDelete@ஆசியா உமர், சரி செய்துவிட்டேன். இப்போது பாருங்கள்.
@மோகன்குமார், :-)
அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteநன்றிகள் பல கோபி
ReplyDeleteவாழ்த்துக்கள்
நல்ல அறிமுகங்கள். நன்றி
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். நன்றி
ReplyDeleteVetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல அறிமுகங்கள். நன்றி
ReplyDeletevgk
//இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலக்கியம் பற்றியது। வோட்டுப் பட்டைகள் கிடையாது. பின்னூட்டம் போடும் வசதி கிடையாது. இது ஒருவிதத்தில் நமக்கு நல்லதே!//
ReplyDeleteநூற்றில் ஒரு வார்த்தை!
அறிமுகத்துக்கு மிக்க நன்றிங்க. :)
நல்ல அறிமுகங்கள் கோபி. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியாய் நிறைவாய் செய்த உங்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநானெல்லாம் வலைச்சரத்துல வந்து கொள்ள நாளாகிப் போச்சு!!
ReplyDeleteநன்றி தலைவா..
:-)
என்னை வலைச்சரத்தில் புதிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இந்த அறிமுகங்களில் ஓரிருவர் எனக்கும் புதுமுகம். அதற்கும் நன்றி!
ReplyDelete@சூர்யஜீவா, மிக்க நன்றி
ReplyDelete@ராம்ஜி, மிக்க நன்றி
@சாகம்பரி, மிக்க நன்றி
@கவிதை, மிக்க நன்றி
@வை.கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி
@நட்பாஸ், மிக்க நன்றி
@ராம்வி, மிக்க நன்றி
@வெங்கட் நாகராஜ், மிக்க நன்றி
@ராஜு, மிக்க நன்றி
@கெக்கே பிக்குணி, மிக்க நன்றி
நல்ல அறிமுகங்கள்.நன்றி.
ReplyDelete@விச்சு, மிக்க நன்றி
ReplyDelete