Friday, November 25, 2011

ட்விட்டரில் இருந்து பிளாக்கர் - பறந்து வந்த பறவைகள்

கடந்த பதிவுகளில் எல்லாம் புதிய, பழைய பதிவர்களை பற்றி சொன்னேன். இந்த பதிவு முற்றிலும் புதியவர்கள் பற்றி. இவர்கள் எல்லோரும் எனக்கு ட்விட்டர் தளத்தில் அறிமுகம் ஆனவர்கள். வெறும் 140 வார்த்தைகளில் அணு உலை முதல் அண்ணா ஹாசரே வரை பேசுபவர்கள், இப்போ பதிவுலகம் பக்கம். 


முதலில் அட போட வைக்கும் இவன் பிகிலு யுகேந்தர் குமார். இவரது இறப்பிலும் வகுப்பு பாகுபாடா ? கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது, நானறிந்த காமராஜர் எல்லோரும் அறிய வேண்டியது. BCCI பண கஷ்டத்தில் இருக்கா ? என்பது அருமை. எல்லா பதிவுகளும் சூப்பர் தான்.நல்லது எது என்றாலும் பகிரிந்து விடுவார். ட்விட்டர் முகவரி: bigilu@twitter.com


வண்ணநிழல் என்று தலைப்பிலேயே அசர வைக்கும் வேதாளம் என்ற ஸ்ரீ அர்ஜுன். என் அநாதை அம்மா என்ற பதிவு அம்மாவை பிரிந்து இருக்கும் பிள்ளைகள் எல்லோரும் படிக்க வேண்டியது. இதற்கு ஒரு கிரேட் சல்யூட்.  நன்றாக சிறுகதை எழுதுகிறார். ...ஆப்பரேசன் கிரீன்... அருமை. கண்ணாமூச்சி ரே ரே..... சூப்பர். ட்விட்டர் முகவரி:  vedhaLam@twitter.com



அடுத்து @DKCBE இவர் ட்விட்டர் தளத்தில் இதே பெயரில் மிகப் பிரபலம். (இப்படி சொன்னா 50 ரூபாய்க்கு டாப்-அப் வாங்கித் தரேன்னு சொன்னார்) வந்தான் வெல்வான் என்று ஒரே ஒரு பதிவு எழுதி உள்ளார். வாங்க பாஸ் தொடர்ந்து எழுதுங்கள்.  ட்விட்டர் முகவரி: DKCBE@twitter.com


அடுத்து அதிரடி சகோ ஆணிவேர் சூர்யஜீவா. எந்த திரட்டியில் இணைக்காமல் மிக அதிக வாசகர்களை கொண்டவர். சுடாத சூரியன்டாஸ்மாக்கை ஒழித்து கட்டுவோம் போன்றவை அருமை. குட்டி குட்டியாய் நிறைய எழுதுகிறார். ட்விட்டர் முகவரி: suryajeevaa@twitter.com


அடுத்து "நான் போக்கிரி" என்பவர் எழுதிய  நினைத்தேன், எழுதினேன் இவரின் அசிடிட்டி என்ற நாய், என்பது எல்லோரும் ருசிக்க வேண்டியது. அத்தோடு இந்த பதிவு ரொம்ப காரம், மற்றும் உணர்வு மிக்கது  தமிழ் பூணூல்   சிந்திக்க வைக்கிறது. ட்விட்டர் முகவரி: ipokkiri@twitter.com

அடுத்து jompages  ஜூனியர் ஓல்ட் மாங்க். இவரது முதல் சிறுகதை, "முதல் சிறுகதை". நம்ம கோமாளி செல்வா அண்ணன் போல பட்டைய கிளப்புறார். சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது.  ட்விட்டர் முகவரி: jroldmonk@twitter.com


அடுத்து சகோ உடன்பிறப்பே. இவரின் அவள்  கவிதையில் வித்தியாசமாய் யோசித்து எழுதி இருக்கார். விஜயகாந்திற்கு ஒரு கடிதம் !! கூட எழுதி இருக்கார் இவர். ட்விட்டர் முகவரி: udanpirappe@twitter.com


ட்விட்டர் தளத்தில் எல்லோரும் கலாய்க்கும் ரேணு. இவர் எழுதிய அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!! இவரது சிறு வயது கிரிமினல் மூளையை சொல்லுகிறது. முத்தான மூன்றாவது படைப்பு கூட இவரின் தைரியத்தை சொல்லுகிறது. கொஞ்சம் செண்டிமெண்ட் பதிவு இது. ஆனால் கமெண்ட்ஸ் disable செய்து வைத்துள்ளார். பதிவுலகத்துக்கு அழகே கமெண்ட் போடுற மாதிரி வைப்பது தானே. ட்விட்டர் முகவரி: RealRenu@twitter.com


அடுத்து ஐய்யனார்ஸ்-`கலைடாஸ்கோப்`. ஏனோ முன்னூட்டத்துடன் நிற்கிறது. அட நிறைய எழுதுங்க தலைவா. ட்விட்டர் முகவரி: iyyanars@twitter.com


நம்ம கண்ணாடி ஜன்னல் ஷேக்பரீத் எழுதிய பேருந்துப் பயணம் நம்ம சிறு வயது ஹீரோக்களை கண் முன் நிறுத்துகிறது. ட்விட்டர் முகவரி: sheik007@twitter.com


அடுத்து கரு-நாக்கு  எழுதிய கீச்சுக்கள்! பதிவு அருமை. நன்றாக கவிதையும் எழுதுகிறார். எச்சில் மனிதன்!விவாக ரத்துக்கள்! போன்றவை ரசிக்கும் வகை 
ட்விட்டர் முகவரி: karu_naakku@twitter.com

இவர்களில் நிறைய நண்பர்கள் புதுமுகங்கள்.  எல்லோரையும் உங்கள் கண்ணில் காட்டிவிட்டேன். இனி அவர்களை பாராட்ட வேண்டியது உங்கள் கடமை.


தொகுத்தது 
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

29 comments:

  1. வித்தியாசமான பதிவு
    வணக்கத்துடன் :
    ராஜா

    விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா ..:-))

    ReplyDelete
  3. எங்கிருந்து வந்திருக்காங்க பார்யா..

    வித்தியாசமான முயற்சியிலு அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள்..
    அனைவருக்கும்

    ReplyDelete
  4. தோழர், அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.. மற்றவர்கள் கீச்சுவதில் வல்லவர்கள்... நான் அந்தளவு இல்லை... இது எனக்கு கிடைத்த உயரிய விருதே...

    ReplyDelete
  5. நல்ல முயற்சி... புதிய மனிதர்களை அறிமுகப்படுவது... தொடர்க.. நன்றி..

    ReplyDelete
  6. மிக்க நன்றி சகா என்னையும் அறிமுகபடுத்தி மற்றவர்களை எனக்கு அறிமுக படுத்தியதற்கு.சேர்ந்தே பயணிப்போம் நண்பர்களே...

    ReplyDelete
  7. புதிய சிறந்த முயற்சி!! வெரிகுட்!!
    அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பிரபு... ஒவ்வொரு நாளும் புதிய தலைப்பில் அசர அடிக்கும் அறிமுகங்களை தருகிறாய்... அருமை... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு... முடிந்தளவு கொடுத்தல் அறிமுகங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்....


    நம்ம தளத்தில்:
    சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை

    ReplyDelete
  9. அறிமுகத்துக்கு மிக்க நன்றி நண்பரே.! நான் தற்போது http://ipokkiri.blogspot.com/ என்ற தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  10. அனைவருமே எனக்குப் புதியவர்கள்...
    வாழ்த்துகள்....

    ReplyDelete
  11. அநாதை அம்மா படித்தேன். மனத்தைக் கவர்ந்தது. இந்த நல்ல வலைப்பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றி

    ReplyDelete
  12. பல புதிய அறிமுகங்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. பிரபு...இந்த டாபிக் ஏ புதுசு...வலைச்சர வரலாற்றிலேயே புது முயற்சியா???...சூப்பர்..:)

    ReplyDelete
  14. தங்களின் புதிய முயற்சி மகத்தானது.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அனைவருக்குமே, உங்களையும் சேர்த்து. அன்புடன் vgk

    ReplyDelete
  15. @ "என் ராஜபாட்டை"- ராஜா

    நன்றி சகோ

    ReplyDelete
  16. @ udanpirappe

    நன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  17. @ கவிதை வீதி... // சௌந்தர் //

    நன்றி சகோ

    ReplyDelete
  18. @ suryajeeva

    நன்றி சகோ

    ReplyDelete
  19. @ Vettipullai

    நன்றி சகோ

    ReplyDelete
  20. @ jroldmonk

    நன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  21. @ middleclassmadhavi

    நன்றி அக்கா

    ReplyDelete
  22. @ தமிழ்வாசி பிரகாஷ்

    நன்றி அண்ணா

    ReplyDelete
  23. @ Pokkiris

    என்ன சகோ புதிய, பழைய இரண்டு வலைப்பூவும் இப்போது இல்லையே?

    ReplyDelete
  24. @ வெங்கட் நாகராஜ்

    நன்றி சகோ

    ReplyDelete
  25. @ Meena

    நன்றி சகோ

    ReplyDelete
  26. @ NIZAMUDEEN

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  27. @ FOOD

    நன்றி அப்பா.

    ReplyDelete
  28. @ ஆனந்தி..

    உங்க தம்பி ஆச்சே.

    ReplyDelete
  29. @ வை.கோபாலகிருஷ்ணன்

    நன்றி ஐயா.

    ReplyDelete