அன்பு நண்பர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பிரபு கிருஷ்ணா , தான் ஏற்ற பொறுப்பினை அழகாக, மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ முன்னூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.
இவர் கவிதை, ஆல்ரவுண்டர்ஸ், காணாமல் போனவர்கள், ட்விட்டர்-பிளாகர், புதுமுகங்கள், சமுதாய சிற்பிகள் என பல்வேறு தலைப்புகளில், பல பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்திருக்கிறார். ஏறத்தாழ அறுபதுக்கும் மேலாக பதிவர்களையும் அவர்களது 160 இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். இவரது அயராத உழைப்பு பாராட்டுக்குரியது.
அருமை நண்பர் பிரபுவினை நன்றி கலந்த நல்வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நாளை 28.11.2011 துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க இசைந்துள்ள, ஈரோட்டினைச் சார்ந்த, 22 வயது இளைஞர் ராஜா ஜெய்சிங்கினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தரவியல் ஆய்வாளராக பணி புரிகிறார். பெரும்பாலும் சிறுகதைகளூம் கவிதைகளும் 2009 ஆகஸ்டு முதல் அகல்விளக்கு என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.
நல்வாழ்த்துகள் பிரபு கிருஷ்ணா
நல்வாழ்த்துகள் ராஜா ஜெய்சிங்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteகாற்றை நேசிப்பவரை வரவேற்கிறேன்...
ReplyDeleteஒரு வாரம் போனதே தெரியல ...
ReplyDeleteஎல்லாத்திலும் உழைப்பு தெரிந்தது
வாழ்த்துக்கள் பிரபு
வாழ்த்துக்கள் ராஜா ஜெய்சிங்
ReplyDeleteஇந்த வார ஆசிரியருக்கும், வரும் வார ஆசிரியருக்கும் வாழ்த்துகள்....
ReplyDelete@ cheena (சீனா)
ReplyDeleteநன்றி ஐயா
@ ஆமினா
நன்றி அக்கா.
@ வெங்கட் நாகராஜ்
நன்றி சகோ
வாழ்த்துகள் ராஜா ஜெய்சிங். சிறப்பாக செய்யுங்கள்.
ReplyDelete