Thursday, December 1, 2011

சினிமா...



வலையுலகில் அதிகம் படிக்கப்படும் தகவல்களில் ஒன்றாக சினிமா இருப்பதை மறுக்கவியலாது. ஓடாத உள்ளூர் படங்களில் தொடங்கி தவறவிடக்கூடாத உலக சினிமாக்கள் வரை அனைத்தையும் அலசும் விமர்சகர்கள் பலர் வலையுலகில் இருக்கின்றனர். அவற்றில் நான் ரசித்த பதிவர்களை இன்று அறிமுகப்படுத்துகிறேன்.


1. சுரேஷ்கண்ணன் - பிச்சைப்பாத்திரம் என்ற பெயரில் அட்சய பாத்திரமாய் பதிவுகளை வழங்கி வருகிறார்

உலக சினிமா ஒன்றைக் காண வேண்டுமா? எனும் பதிவே அதற்கு சாட்சி...


2. பட்டர்பிளை சூர்யா - வண்ணத்துப்பூச்சியார் என்ற வித்தியாசமான பெயரில் உலகசினிமாக்கள் பற்றி அட்டகாசமாக எழுதி வருகிறார்.

உதாரணமாக இவரின் "சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குனர் மஜித் மஜிதி" பதிவைச் சொல்லலாம்...


3. ஜெய் - பிற மொழிப்படங்கள் தமிழில் எழுதிவரும்(வந்த) ஜெய் அவர்களின் விமர்சனங்களுக்கு நான் என்றுமே ரசிகன்... மெமண்டோ படத்தினைப் பற்றிய இவரின் அற்புதமான விமர்சனம் memento

4. கீதப்ரியன் - ஆன்லைன் லைப்ரரி என்றுகூட இவரது வலைப்பூவைக் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு திரை விமர்சனங்களால் தனது வலைப்பூவை நிரப்பி வைத்திருக்கிறார்...

குறிப்பாகச் சொல்ல வேண்டிய விமர்சனங்கள்...

ஷஷாங் ரிடெம்ப்ஷன்..
களவானி

5. ஜெட்லி - பார்த்தும் படித்ததும்- எதிர்பார்ப்புக்குரிய படங்களின் விமர்சனங்களை வித்தியாசமாக தொகுத்துத் தருகிறார். முதல் நாளிலேயே படங்களைப் பார்த்து மொக்கை வாங்குவதில் வல்லவரான இவர் தி.பி. காலம் (அதாங்க.. திருமணமான பின்) வந்தவுடன் உஷாராகிவிட்டார் போல... :-)

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

வாடா - ஒலகபடம் விமர்சனம்

நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை

6. வர்மா - அன்புடன் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். தடம் மாறிய தமிழ்ப்படங்கள் என்ற பெயரில் இவர் பதியும் தொடர், சினிமாவின் வேறோரு முகத்தைக் காட்டி வருகிறது...

தடம்மாறிய தமிழ்ப்படங்கள் - 12

தடம்மாறிய தமிழ்ப்படங்கள்  முழுத்தொகுப்பு 

7. சி.பி.செந்தில்குமார்  - புதிய படங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறார், அட்ரா சக்க எனும் வலைப்பூவில் எழுதிவரும் சி.பி.செந்தில்குமார்...

உதாரணமாக போராளியின் விமர்சனத்தை முதல் ஆளாக பதிவிட்டிருக்கிறார்...

8. கருந்தேள் கண்ணாயிரம்... - மிகச்சிறந்த விமர்சகர். சினிமா மட்டுமின்றி அதன் தொழிற்நுட்பத்தை விமர்சிப்பதிலும் வல்லவர்...

நான் வியந்த அவரது பதிவுகள்...
LOTR - The Series 

9. ஜாக்கி சேகர் - பிறமொழிப்படங்களின் விமர்சனங்களை எழுதிவருகிறார் ஜாக்கிசேகர். அனேக திரைப்படங்களின் விமர்சனங்களை இணையத்தில் தேடினால் இவரது வலைப்பூவை கை காட்டும் அளவிற்கு நிறைய பதிவுகளை எழுதியுள்ளார்.

Ocean's Eleven
Travellers and Magicians 


10.கேபிள்சங்கர் - இவரைப் பற்றிச் சொல்லாம் இந்த பதிவை நிறையடையச் செய்ய முடியாது. அந்த அளவிற்கு ரசிக்கும்படியான விமர்சனங்கள் இவருடையது. தமிழ் படங்கள் மட்டும் என்று இல்லை இவரது பிறமொழிப்படங்களின் விமர்சனங்களுக்கு நான் ரசிகன்.

உதாரணமாக பீப்லி லைவ் படத்திற்கான இவரது விமர்சனத்தைப் பாருங்கள். -

*******************

வேறொரு தொகுப்புடன் நாளை சந்திப்போம்

-அகல்விளக்கு

8 comments:

  1. ஒவ்வொருத்தரும் சினிமா பற்றிய பகிர்வுகளில் திறமை வாய்ந்தவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  2. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. அகல்விளக்காய் ஒளிர்ந்த பகிர்வுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. ராஜா சார்,

    அருமையான தொகுப்பு பகிர்வு.

    ReplyDelete
  5. அனைவரும் நன்றாக எழுதுபவர்கள்தான். வர்மாவின் தடம் மாறிய தமிழ்ப்படங்கள் பதிவு வித்யாசமானது.

    ReplyDelete
  6. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லாருமே ஜாம்பவான்கள்தான், ஆனாலும் முடிந்தவரை புதிய பதிவர்களை அறிமுகம் செய்யுங்கள்

    ReplyDelete