எனக்குப் பிடித்த, நான் பயன்பெற்ற வலைப்பதிவுகளை இந்த இடுகையில் அறிமுகம் செய்கிறேன். அதற்கு முன்பு இரண்டு புதியவர்களையும் பார்த்துவிடுவோம்.
என்ற பதிவில் வலைதளங்களின் பின்புல நிறத்தை கண்டுபிடிப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இதில் பெரும்பாலான மென்பொருட்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். வலைப்பதிவை நிர்வகிக்கும் இவரது பெயரே வித்தியாசமாக இருக்கிறது. சுப்புடு வாம்.
இணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1 என்று மென்பொருளை அறிமுகப்படுத்துவதோடு
உங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி? என்று வார்ப்புரு மாற்றுவதையே ஒரு பதிவாக பதிவிட்டிருக்கிறார்.
இணையத்திற்கேற்ப தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99 என்ற இடுகை தமிழில் வலைதளத்தில் எழுத உதவும் மென்பொருளைப் பற்றியும், எழுதும் முறையைப் பற்றியும் அழகு தமிழில் விளக்கியுள்ளார்.
என்று எளிய பதிவுகளையும் பதிவிட்டு புதிய வலைப்பதிவர்களுக்கும் ஒரு சில வழிகாட்டுதல்களை தன் பதிவின் மூலம் கொடுக்கிறார்..
மேலும் பல சிறப்பு இடுகைகள் இங்கே காணப்படுகிறது.
இவரைப்பற்றி அறிமுகம் தேவையில்லை. இப்போது இந்த வலைப்பூ பெயர் மாற்றத்துடன் நால்வர் கூட்டணியில் புதிய பொலிவுடன் புத்துயிர் பெற்று வலம் வருகிறது.
நீங்கள் ஒரு தொழில்நுட்ப பதிவரென்றால் அல்லது தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்தவர் என்றால், உங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பை அளிக்கிறது இந்த கற்போம் வலைதளம்.
இவரது வலைப்பூவில் முதலில் எனக்குப் பிடித்தே இந்த தலைப்புதான்.. தமிழ்கிழம் அருமையான தமிழ்வார்த்தை அர்த்தம் பொதிந்தது.
குறிப்பிட்டு சொல்வதென்றால் இவரின் இந்த பதிவைச்சொல்ல்லாம்.. நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு மற்றும் துணுக்கு என்பதில் வார்ப்புருவில் இடம்பெற்ற விளம்பர நிரல்களை அழிப்பது எப்படி என்பதை சொல்லித்தருகிறார்.
மேலும் எனக்குப்பிடித்த தொழில்நுட்ப வலைப்பதிவர்களும், வலைப்பூக்களும்
இவர் தொடர்ந்து எழுதும் ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடர் பதிவு புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல தொழில்நுட்ப பதிவுகளை இவர் வலையில் காணலாம்.
நண்பர் சசியின் வந்தேமாதரம், அவ்வப்போது இணையத்திலுள்ள புதிய தொழில்நுட்ப செய்திகளை பகிர்வதில் வல்லவர். தொடந்து தனது பதிவுகளின் மூலம் முன்னேறிக்கொண்டிருப்பவர்.
அனுபவ பதிவர் ஜி.எஸ்.ஆர் ன் தமிழ்தொழில்நுட்பம்
இவர்களின் கட்டுரைகள் பத்திரிகைகளிலும் வந்து பாராட்டைப் பெற்றவை..
இவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே புதியதாக வலைப்பதிவு தொடங்கியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
அனுபவ வலைப்பதிவர்கள் கூட ஒரு சில தொழில்நுட்ப நுணுக்கங்களை இவர்களின் பதிவுகளை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
*****
உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்...
நாளொரு பதிவு, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளை பதிவேற்றலாம் என்பதே வலைச்சரத்தின் முதன்மையான கட்டுப்பாட்டு விதிகளுள் ஒன்று. அவற்றை சரியாக என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமே..
வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி..
வாசகர்களாகிய உங்களுக்கும், எம் சக பதிவர்களுக்கும், என்னுடன் என்றும் அன்பு செலுத்தும் பதிவர் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கடுத்து வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் நண்பரையும் வருக வருக என வரவேற்கிறேன்.அதிகமான வலைப்பதிவுகளை வலைச்சரத்தில் தொடுத்து-தொகுத்து, எங்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்வதோடு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பதிவோடு இனிதே விடைபெறுகிறேன். வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்,
உங்கள்
தங்கம்பழனி.
நன்றி நண்பர்களே..!!!
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா! மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவர் வைரை சதீஷ்... :-)
ReplyDeleteபணியை நிறைவேற்றியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ
நல்ல அறிமுகங்கள். கற்போம் அறிமுகத்துக்கும் நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துகள்.
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநண்பர் ஜி.எஸ்.ஆரின் தளம் gsr-gentle.blogspot.com இணைப்பை சரிசெய்யலாம்