பதிவுலகில் என் வாசிப்பு அனுபவம் குறைவே.இருப்பினும் ,சீனா அவர்கள் கேட்டவுடன் ஒப்புக்கொண்டேன்!காரணம்,நான் படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அவா!உங்களுக்குத் தெரியாத புதிய பதிவர்கள் என்று அநேகமாக யாரும் என் சரத்தில் இருக்கமாட்டார்கள். இவர்கள் யாருக்குமே அறிமுகம் தேவையில்லை. எனவே இதை அறிமுகம் எனக்கூறாது ,பகிர்வு என்று கூறுவதே முறை. எனது வாசிப்பு அனுபவத்தைப் பகிரும் இம் முயற்சியை, கம்பன் சொல்வது போல்”மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன்” என்றுதான் கூற வேண்டும்.
இந்த வாரம் முழுவதும் விருந்தா அல்லது மருந்தா என்பது கடைசி யில்தானே தெரியும்!
இந்த வாரம் முழுவதும் விருந்தா அல்லது மருந்தா என்பது கடைசி யில்தானே தெரியும்!
முதல் நாள் சுய அறிமுகம்.நானும் என் பதிவும் என்று நான் சொல்லும் போதே “நீயும் உன் மூஞ்சியும்” என்று யாரோ சொல்வது போல் உள்ளது!
விருப்ப ஓய்வுக்குப் பின் சமஸ்கிருதம்,ஜோதிடம் ,வேதம் என்று என்ன எல்லாமோ கற்றுப் பின் ஒரு நாள் தற்செயலாகத் தமிழ் வலைப்பதிவு அறிமுகமாகப், பின் பிறந்ததே “நான் பேச நினைப்பதெல்லாம்”. தொடக்கம் முதலே நிகழ்வுகள்,அனுபவம்,கதை என்று எல்லா வகையானவையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்;ஆனால் கவிதையில் கால் பதிக்கக்(கை பதிக்க?) கொஞ்ச நாள் ஆயிற்று.பள்ளி நாட்களில் பாரதியும்,கல்லூரி நாட்களில் கம்பனும்,கணையாழி,கசடதபற நாட்களில் புதுக்கவிதையும் அறிமுகமாகி எல்லா விதமான கவிதைகள் மீதும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.நான் எழுதுவது கவிதையா என எனக்குத் தெரியாது.இருப்பினும் என் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு.
என்னுள் பிரவாகமாய்ப் பொங்கி வந்த ஒன்று-
ஊழிக்கூத்து-கவிதை முயற்சி.
எனது காதல்(காதலி) பற்றிய புலம்பல்கள்-
இன்னும் மறக்கவில்லை
சாந்தோம் சந்திப்புகள்
சாந்தோம் சந்திப்புகளின் முடிவு
சிறுகதையையும் விட்டு வைக்கவில்லை.எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது-
துணை
விதி
நாகரத்தினம்
இன்னும் மறக்கவில்லை
சாந்தோம் சந்திப்புகள்
சாந்தோம் சந்திப்புகளின் முடிவு
சிறுகதையையும் விட்டு வைக்கவில்லை.எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது-
துணை
விதி
நாகரத்தினம்
கொஞ்சம் நகைச்சுவையும் முயன்றதுண்டு. நான் ஜோக்குகள் எழுதுவதைச் சொல்லவில்லை.வேறு பதிவுகள்.இதோ, மாதிரி
கண்ணும் கதையும்
பயண அனுபவம் எழுதியதில் ஒரு அனுபவம்!
பயணமும் எண்ணங்களும்
சென்னை பித்தன் ஆகிய என்னை சென்னைக் காதலன் என அழைத்து என் சென்னைக் காதல் பற்றி எழுதத்தூண்டி விட்டார் நண்பர் கக்கு மாணிக்கம் .
சென்னைக் காதல்
சென்னைக் காதல்-2
சென்னைக்காதல்-3
ஆனால் மிகுந்த வேகத்துடன் எழுத ஆரம்பித்து,நடுவில் பலமுறை தேங்கி, மீண்டும் வளர்ந்து,மீண்டும் தேங்கிப்போன ஒரு பதிவு, கட்டாயமாக நான் எழுதியே தீர வேண்டிய ஒரு பதிவு,”ஒரு வரலாறு" என்ற தலைப்பில் நான் எழுதி வந்த பதிவு.
ஏதோ சில காரணங்களால் நின்றுபோன இப்பதிவைத்தொடர எல்லாம் வல்ல இறைவன் அருளும் நீங்கள் தரும் ஆதரவும் துணை நிற்கட்டும்.
போதுமா சுய அறிமுகம்?!
வலைச்சரத்தில்,வலைப்பூக்களைக் கொண்டு தாங்கள் தொடுக்க இருக்கின்ற வலைச்சரம் வண்ணச்சரமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ‘ஒரு வரலாறு-ஒரு அத்தியாயம் தொடரை ஆவலுடன் படித்தவன் என்பதால் உரிமையுடன் கேட்கிறேன். அதைத் தொடருங்கள் என்று. வாழ்த்துக்களுடன்!
ReplyDeleteவாழ்த்துகள் அய்யா
ReplyDeleteவாழ்த்துகள் சென்னை பித்தன்.,
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பொறுப்பில் தங்களின் பங்களிப்பை ஆர்வத்துடன் தொடர்கிறேன் .
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா
ReplyDeleteதங்களின் எழுத்து வளத்தை நான் பேச நினைப்பதெல்லாம்
என்று நீங்கள் பதிவிட்ட ஒவ்வொன்றிலும் கண்டதால்...
வலைச்சரம் இன்னும் அதைவிட வளமாக இருக்கும்,,
இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.
வாழத்துகளும்...வணக்கங்களும்...அய்யா?
ReplyDeleteவாழ்த்துக்கள் புதிய ஆசிரியர் பொறுப்புக்கு.
ReplyDelete@வே.நடனசபாபதி
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
@நிகழ்காலத்தில் சிவா
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
@மகேந்திரன்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
@veedu
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
@Lakshmi
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
இனிய காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteவலைச் சரத்தில் பதிவு மாலைகளைத் தொடுக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் அய்யா .. கலக்குங்கள்
ReplyDeleteநண்பர்களே உங்களுக்காக ..
ReplyDeleteஉங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)
வலைசர வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteவாழ்த்துகள் சார்.
ReplyDeleteவலைசர வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் அறிமுகங்களை அறிய ஆவலுடன் உள்ளேன்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகமே அசத்தல்... தொடருங்கள்
வாங்க சார். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க... வாங்க நண்பரே... நீங்கள் நல்ல ரசிகர் என்பதை அறிவேன். இந்த வலைச்சர வாரம் வண்ணமயமாக எங்களுக்கு அமையும் என்பதில் மிக மகிழ்கிறேன். தொடர்கிறேன்...
ReplyDeleteஆரம்பமே பின்னி ( சிலேடை தற்செயலே )விட்டீர்களே ! நிச்சயம் கதம்பமாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை .மணக்க மணக்க பின்னுங்கள் .
ReplyDeleteவாசு
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு வாரம் வலைச்சரம் திருவிழா கோலம்தான்
ReplyDeleteஜமாயுங்க்கள்
வாழ்த்துக்கு நன்றி நிரூ.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ராஜா.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஜெய்லானி.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சிவகுமார்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சமுத்ரா.
ReplyDeleteநன்றி நிஜாமுதீன்
ReplyDeleteநன்றி பிரகாஷ்.
ReplyDeleteநன்றி ஷக்திப்பிரபா.
ReplyDeleteநன்றி கணேஷ்.
ReplyDeleteநன்றி வாசு
ReplyDeleteநன்றி மாதேவி
ReplyDeleteநன்றி ரமணி.
ReplyDeleteவளமாக வளரும் வண்ணச்சரம்...
ReplyDeleteவனப்பான பகிர்வுகளுக்குப்
பாராட்டுக்கள் ஐயா..
//விருப்ப ஓய்வுக்குப் பின் சமஸ்கிருதம்,ஜோதிடம் ,வேதம் என்று என்ன எல்லாமோ கற்றுப் பின் ஒரு நாள் தற்செயலாகத் தமிழ் வலைப்பதிவு அறிமுகமாகப், பின் பிறந்ததே “நான் பேச நினைப்பதெல்லாம்”. தொடக்கம் முதலே நிகழ்வுகள்,அனுபவம்,கதை என்று எல்லா வகையானவையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்;//
ReplyDeleteஆஹா, நல்லதொரு அனுபவ முதிர்ச்சியுடன் கூடிய வரிகளாக எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு என் நமஸ்காரங்கள், ஐயா. vgk
அறிமுகமே நன்று... தொடர்ந்து அசத்துங்கள்....
ReplyDeleteஅன்பின் பித்தன் - அருமையான சுய அறிமுகம் - அத்தனையும் படிக்க வேண்டும் - நேரம் ஒதுக்குகிறேன். பதிவு - தொடக்கமே நன்றாய் வந்திருக்கிறாது. தொடர்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteமுதல்முறையாக தங்கள் தளம் சென்றுவந்தேன். படிக்க நிறைய உள்ளது. ஒவ்வொன்றாகப் படிப்பேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
அன்பின் பித்தன் - சில சுய அறிமுகப் பதிவுகள் படித்து இரசித்து மறு மொழி இட்டேன் - மற்றவற்றையும் படிக்கிறேன். வரலாறினைத் தொடர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றி வைகோ சார்.
ReplyDeleteநன்றி வெங்கட்
ReplyDeleteநன்றி சீனா
ReplyDeleteநன்றி கீதா.
ReplyDeleteநன்றி கோமதி அரசு
ReplyDeleteநன்றி asiya omar
ReplyDelete