Saturday, January 21, 2012

நாள் 6 : சென்னை புறநகர் மக்கள் மற்றும் பதிவர் அறிமுகம்.

நான் கிராமத்தான், வாழ்ந்தது படித்தது எல்லாம் கிராமத்தில் தான். வேலைக்கு வந்தது சென்னை, அதன் பின் நகர வாழ்க்கை தான். சிலர் இருக்கிறார்கள் பிறந்ததிலிருந்து சென்னை போன்ற நகரத்திலேயே இருந்து வெளிநாட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னும் சிலர் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வேலை பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பர். சென்னையைப் பொறுத்த வரையில் என்னைப் போன்றோர் தான் அதிகம் உள்ளனர். அதாவது வசிப்பது சென்னையின் புறநகரில் உள்ள கிராமத்தில், வேலை பார்ப்பதும், படிப்பதும் சென்னையில். இவர்கள் வித்தியாசமானவர்கள். சென்னையில் நீங்கள் பார்க்கும் கிராமத்தான்கள்.

நான் திருவாரூரில் பள்ளிப்படிப்பு முடித்த பின்பு பட்டயப் படிப்பு படிப்பதற்காக சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலைக்கு வந்து விட்டேன். எனது வகுப்பில் மொத்தம் 56 பேர் படித்தனர். என்னைத் தவிர என்னுடன் படித்தவர்கள் அனைவரும் ரயில்வே தொழிலாளர்களின் வாரிசுகளே. நான் மட்டுமே தவறிப் போய் முதல் தலைமுறையாக ரயில்வேயின் உள் வந்தவன். நான் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலானோர் வேப்பம்பட்டு மற்றும் அதற்கு பிறகு உள்ள ஊர்களான திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார் பேட்டையிலிருந்தெல்லாம் வருபவர்களே. நான் அனைவரின் வீட்டிற்கும் போயிருக்கிறேன். வீடு ஏதாவது கிராமத்தில் இருக்கும். வீட்டில் மாடு இருக்கும். விவசாயமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். விடியற்காலை இது போன்ற ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வேலைக்கு வந்து நள்ளிரவு வீட்டிற்கு திரும்புபவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களின் வாழ்வு முறையே வித்தியாசமாக இருக்கும். காலை மதியம் இரவு மூன்று வேளையும் சாப்பாடு வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்து வெளியிலேயே சாப்பிடுவர். ஞாயிறு மட்டும் தான் இவர்கள் வீட்டில் இருப்பார்கள். இவர்களின் சம்பளமும் மிகச்சில ஆயிரங்களில் தான் இருக்கும்.

என்னுடன் ஏழுமலை என்ற நண்பன் படித்தான். அவனது வீடு கடம்பத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் உள்ளே உள்ள தண்டலம் என்ற கிராமமாகும். அவனது அப்பா அரக்கோணத்தில் உள்ள ரயில்வே ஷெட்டில் வேலைப் பார்த்து வந்தார். அவர்களுக்கு நிலமும் இருந்தது. அவன் வீட்டிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு வில்லிவாக்கம் வந்து சேருவான். வேலைநேரம் 7 மணியிலிருந்து 04.30 வரையிருக்கும். அதன் பிறகு புறப்பட்டு வீட்டிற்கு செல்ல 8மணியாகி விடும். நான் சென்னையிலேயே தங்கியிருந்ததால் இது போன்ற அவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் எனக்கு வித்தியாசமாகவே இருக்கும். அவனது வீட்டில் அப்படியே கிராமத்தானாவே வாழ்வார்கள். மாடு, வயல், விவசாயம் எல்லாம் அவர்களது வழக்கமான வாழ்க்கையாக இருக்கும். ஆனால் அவர்கள் சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.

எனக்கு கிராமம் என்றால் சென்னையிலிருந்து புறப்பட்டு ஒரு இரவு பயணம் செய்து மறுநாள் காலை செல்லும் ஊர்களில் வருவது தான். கிராமத்தில் வசித்து சென்னையில் வேலை பார்க்கும் இவர்கள் உண்மையில் வித்தியாசமானவர்கள் தான்.

----------------------------------------------

இனி பதிவர் அறிமுகம். வெறும் பதிவர் மட்டுமல்ல என் நல்ல நண்பர்கள் கூட.

கண்டிப்பாக நான் இவரை அறிமுகப்படுத்த யோசித்தேன். ஏனென்றால் எனக்கு பதிவுலகில் சீனியர். இருந்தாலும் எனக்கு இனிய நண்பர். இவரைப்போல் பதிவர்களை கலாய்ப்பதில் மற்றவர்கள் பின்வரிசையில் தான் நிற்க வேண்டும். அவர் என் சிறந்த நண்பர் சிவக்குமார். அவரின் மெட்ராஸ்பவன் மற்றும் நண்பேன்டா. அது மட்டுமில்லாமல் கவுண்டமணிபேன்ஸ் என்ற வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். தனக்கு ஹிட்ஸ் தேவையில்லை என்று இன்று வரை தன்னுடைய பதிவுகளை திரட்டியில் இணைக்காத நேர்மையான பதிவர்.

அடுத்தது கலாய்ப்பாளர் நண்பர் நாய் நக்ஸ் நக்கீரன். இவர் பதிவு அதிகம் எழுத மாட்டார். ஆனால் நண்பர்கள் எந்தப் பதிவுபோட்டாலும் அவர்களை கலாயத்து பின்னூட்டமிடுவதில் மன்னர்.

அடுத்த நண்பர் ஆணிவேர் என்ற பதிவு எழுதி வரும் சூர்யஜீவா. இவர் கம்யூனிச கொள்கையை சார்ந்தவர். நானே, எனக்கு ஏன் பின்னூட்டமிடவில்லை என்று கேட்டால் எனக்கு சினிமா பதிவுகள் மற்றும் குடி பற்றிய பதிவுகள் பிடிக்காது எனவே நான் பின்னூட்டமிட மாட்டேன் என்று சொன்ன நேர்மையாளர்.

தஞ்சை சங்கர் என்ற பெயரில் எழுதி வரும் சங்கர நாராயணன் புதியவர், அவரிடமிருந்து நிறைய பதிவுகள் பண்பட்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

நான் எழுதிய நண்பன் படத்திற்கு எழுதிய விமர்சனத்தை அடுத்த அரைமணிநேரத்தில் அதனை காப்பி செய்து போட்டு அதன் மூலம் ஹிட்ஸ் பெற்று எனக்கே போன் செய்து உங்கள் பதிவால் தான் எனக்கு ஹிட்ஸ் கிடைத்தது என்று சொல்லிய தைரியசாலி தஞ்சை குமணன்.

ஆரூர் முனா செந்தில்

26 comments:

  1. நீங்கள் ரயில்வேயில் வேலை பார்க்கிறீர்களா? சென்னையில் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  2. இப் பதிவின் மூலம் ஓரளவு தங்களை
    அறிய வாய்ப்பு கிடைத்தது
    நானும் கிராமத்தான்தான்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. வலைசரத்தில் அறிமுக படுத்தும்
    அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை...

    பின்னுட்டம் சும்மா...ஜாலி-யா
    போடுவது...அதுவும் பதிவு,,பதிவரை பொறுத்து....

    நன்றி செந்தில்...
    மீண்டும் மீண்டும் நன்றி ...!!!

    ReplyDelete
  4. /// குடந்தை அன்புமணி said...

    நீங்கள் ரயில்வேயில் வேலை பார்க்கிறீர்களா? சென்னையில் எங்கு தங்கியிருக்கிறீர்கள்? ///

    சென்னை அம்பத்தூரில் இருக்கிறேன்.

    ReplyDelete
  5. /// புலவர் சா இராமாநுசம் said...

    இப் பதிவின் மூலம் ஓரளவு தங்களை
    அறிய வாய்ப்பு கிடைத்தது
    நானும் கிராமத்தான்தான்!

    புலவர் சா இராமாநுசம் ///

    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. /// NAAI-NAKKS said...

    வலைசரத்தில் அறிமுக படுத்தும்
    அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை...

    பின்னுட்டம் சும்மா...ஜாலி-யா
    போடுவது...அதுவும் பதிவு,,பதிவரை பொறுத்து....

    நன்றி செந்தில்...
    மீண்டும் மீண்டும் நன்றி ...!!! ///

    அப்படியெல்லாம் நீங்க சொல்லக்கூடாது. நீங்க எங்க செல்லம். உங்களை எப்படி வேணும்னாலும் நாங்க கொஞ்சுவோம். வம்பு பண்ணா கிள்ளுவோம். பொறுத்துக்குவோம்.

    ReplyDelete
  7. அறிமுகங்களுக்கு, வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. /// Lakshmi said...

    அறிமுகங்களுக்கு, வாழ்த்துகள். ///

    நன்றி லட்சுமி அம்மா.

    ReplyDelete
  9. நாய்நக்ஸ்க்கு அறிமுகமா..?அவர்தான் பிரபலம் ஆச்சே!...

    ReplyDelete
  10. veedu said...
    நாய்நக்ஸ்க்கு அறிமுகமா..?அவர்தான் பிரபலம் ஆச்சே!.../////

    யோவ் ...நான் இன்னும் அண்ணா நகர்-ல பிளாட் வாங்கலைப்பா ....

    அப்புறம் வீடு கட்டனும்...
    இன்னும் நிறைய இருக்கு...

    அதுல எல்லாம் மண்ணை போட்டுடுவீங்க
    போல இருக்கே ....

    ReplyDelete
  11. /// veedu said...

    நாய்நக்ஸ்க்கு அறிமுகமா..?அவர்தான் பிரபலம் ஆச்சே!... ///

    நக்கீரன் தான் சொன்னாரு, இந்த மாதிரி இந்த மாதிரி எந்த வலைப்பூவுல நீங்க எழுதுனாலும் தன்னுடைய பெயரைப் போட்டு பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அப்பத்தான் அவருக்கு மெரினா பீச்சுக்கு அந்தாண்ட ஒரு ஏக்கர் நிலம் கிடைக்கும் என்றும் சொன்னார். (ஏம்பா நக்கீரா நான் சரியாத்தான் சொல்றேனா)

    ReplyDelete
  12. NAAI-NAKKS said...

    veedu said...
    நாய்நக்ஸ்க்கு அறிமுகமா..?அவர்தான் பிரபலம் ஆச்சே!.../////

    யோவ் ...நான் இன்னும் அண்ணா நகர்-ல பிளாட் வாங்கலைப்பா ....

    அப்புறம் வீடு கட்டனும்...
    இன்னும் நிறைய இருக்கு...

    அதுல எல்லாம் மண்ணை போட்டுடுவீங்க
    போல இருக்கே .... ///

    அய்யா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.

    ReplyDelete
  13. நக்கீரன் தான் சொன்னாரு, இந்த மாதிரி இந்த மாதிரி எந்த வலைப்பூவுல நீங்க எழுதுனாலும் தன்னுடைய பெயரைப் போட்டு பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அப்பத்தான் அவருக்கு மெரினா பீச்சுக்கு அந்தாண்ட ஒரு ஏக்கர் நிலம் கிடைக்கும் என்றும் சொன்னார். ////

    அய்யா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா./////


    இன்னும் பத்திரம் வரலை...

    ReplyDelete
  14. /// NAAI-NAKKS said...

    இன்னும் பத்திரம் வரலை... ///

    அய்யா பெரியவரே, ஒரு மாசம் தான் ஆகியிருக்கு அதுக்குள்ள என்ன அவசரம், பொறுங்க.

    ReplyDelete
  15. //நக்கீரன் தான் சொன்னாரு, இந்த மாதிரி இந்த மாதிரி எந்த வலைப்பூவுல நீங்க எழுதுனாலும் தன்னுடைய பெயரைப் போட்டு பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அப்பத்தான் அவருக்கு மெரினா பீச்சுக்கு அந்தாண்ட ஒரு ஏக்கர் நிலம் கிடைக்கும் என்றும் சொன்னார். ////

    அய்யா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா./////


    இன்னும் பத்திரம் வரலை...//

    நீங்களே ஒரு பிரபல பதிவர் ஒரு பத்திரம் பதிஞ்சிக்குங்க இதெல்லாம் ஒரு பெரிய விசயமா....

    ReplyDelete
  16. பதிவர்கள் அறிமுகங்களை விட உங்களை பற்றிய பதிவின் நீளம் அதிகம்.....

    வலைச்சரத்தில் தங்களுடைய அனுபவ கதைகளை குறைத்து வலைச்சரத்தின் நோக்கமான வாசித்ததில் சிறந்த இடுகைகளையும், புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்தலாமே.....

    ReplyDelete
  17. வலைச்சரம்
    வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...///

    வலைச்சர முகப்பில் மேலே இதையும் பார்த்திங்களா????

    ReplyDelete
  18. நானும் கிராமத்தான் தாங்க.

    ReplyDelete
  19. //இவரைப்போல் பதிவர்களை கலாய்ப்பதில் மற்றவர்கள் பின்வரிசையில் தான் நிற்க வேண்டும்.//

    எனக்கு வச்ச அருமையான ஆப்பு :)

    ReplyDelete
  20. வலைச்சர பணிகளுக்கு வாழ்த்துகள் செந்தில்.

    ReplyDelete
  21. //தனக்கு ஹிட்ஸ் தேவையில்லை என்று இன்று வரை தன்னுடைய பதிவுகளை திரட்டியில் இணைக்காத நேர்மையான பதிவர்.//

    ஐயய்யோ..தவறு நண்பா. நான் யுடான்ஸ், இன்ட்லியில் உள்ளேன். தமிழ்மணத்தில் மட்டும் இணைக்கவில்லை.

    ReplyDelete
  22. /// Rathnavel said...

    நல்ல பதிவு.
    வாழ்த்துகள். ///

    நன்றி ரத்னவேல் அய்யா.

    ReplyDelete
  23. /// தமிழ்வாசி பிரகாஷ் said...
    வலைச்சரத்தில் தங்களுடைய அனுபவ கதைகளை குறைத்து வலைச்சரத்தின் நோக்கமான வாசித்ததில் சிறந்த இடுகைகளையும், புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்தலாமே..... ///

    கண்டிப்பா செய்கிறேன் பிரகாஷ்.

    ReplyDelete
  24. /// கோகுல் said...

    நானும் கிராமத்தான் தாங்க. ///

    வணக்கம் கிராமத்தானுங்க.

    ReplyDelete
  25. /// ! சிவகுமார் ! said...

    ஐயய்யோ..தவறு நண்பா. நான் யுடான்ஸ், இன்ட்லியில் உள்ளேன். தமிழ்மணத்தில் மட்டும் இணைக்கவில்லை.///

    தகவலுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  26. ஓரளவு தங்களை நான் மின்னிதழ்களின் மெகா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நன்றி செந்தில்...

    ReplyDelete