Sunday, January 15, 2012

நாள்-7-பல்சுவை வேந்தர்கள்,வல்லவர்கள்!

இந்த வலைச்சரம் தொடுக்கும் முன்பே இருமுறை என் வலைப்பதிவில் வலைப்பூ மாலை  கட்டியிருக்கிறேன்.பதிவுகளின் தலைப்பை வைத்துக் கட்டப்பட்ட மாலைகள்  அவை. அம்மாலைகளில் ரோஜா,மல்லிகை,முல்லை,ஜாதி,சம்பங்கி எனப் பல மலர்களிருக்கின்றன.அனைத்தும் என்னைக் கவர்ந்த மலர்கள். எனக்குப் பிரியமானவை அந்த மலர்களில் சிலவற்றையும் வேறு சில மலர்களையும் எடுத்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். வெல்லப் பிள்ளையாரில் எந்தப்பக்கம் இனிப்பு என்று சொல்வது? எனவே  வலைப்பூக்களில் எந்தப்  பதிவையும் குறிப்பிட்டுச் சொல்லாது,  வலைப்பூக்களை மட்டும் பகிர்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
படித்த பின்னும்  நினைத்துப்  பார்க்கத்தூண்டும் பதிவு--நினைத்துப்பார்க்கிறேன்

நெஞ்சில் தங்கும் மனோகரப்  பதிவுகளுக்கு- நண்பர் நாஞ்சில் மனோ.

இது வெறும்  கவிதைவீதி மட்டும்  அல்ல, கலக்கல் வீதி!

நல்ல பதிவுகளின் சரணாலயம் இந்த  வேடந்தாங்கல்


இது நாமெல்லாம் உணர வேண்டிய உலகம் .நல்லதை உணர்த்தும் உலகம்-    உணவு உலகம்     

நம்மை    வலை வீசி இழுக்கிறார் இந்த    வலைஞன்.

நம் நினைவிலிருந்து   வெட்டி விட முடியாத  பேச்சு இந்த  கொஞ்சம் வெட்டிப்பேச்சு!

இவர் எழுதும் ஒவ்வொரு வரியும் பளீரென்று  ஒளிரும் மின்னல் வரிகள்


இந்த  மெட்ராஸ் பவன்ல  ஸ்பெசல் மீல்ஸ் சாப்பிட்டுப் பாருங்க! அறுசுவை.

ஃபிலாசஃபி என்றால் தத்துவம்.ஆனால் அது என்ன தத்துப் பித்துவம் ?தெரிஞ்சுக்கலாமா?

 இவர்,ஒரு ராஜபாட்டைக்கு என் ராஜபாட்டை என்று சொந்தம் கொண்டா டுகிறார்.  ராஜ நடைதான்!

நண்பர்கள் கூட்டம் என்றால் கொண்டாட்டம்தான்!எத்தனை சுவையான பேச்சுக்கள்!ரசிக்கலாம்!

உலகே மாயம் என்பர்..மாய உலகத்தில்  எத்தனை எத்தனை ரசிக்க வைக்கும் காட்சிகள்!

நாற்றில்லாமல் பயிருண்டோ!இந்த நாற்று  இல்லாமல் பதிவுல குண்டோ!

 நல்ல பயனுள்ள கருத்துக்களை   அனைவருக்கும்  ஆணித் தரமாகச்  சொல்பவர் இவர்.அவரே சொல்வது போல் counsel for any..

சிறகுகள் காற்றில் பறந்தால் வானம் தாண்டுமோ!மென்மையான பறக்கும் சிறகு போல் இந்த  வலைப்பூஜீ

வலைப்பூவின் தலைப்பே எவ்வளவு அழகு!நுனிபுல்லில் ஓர் பனித்துளி!அழகான பதிவுகளும்.

இவர்  எழுத்துகள்  ஆயுதம்தான்.நம இதயத்தில் நுழையும் ஆயுதம்

இந்த சிட்டுக்குருவியின் சமூகம் சார்ந்த  சொற்சித்திரங்கள் அருமை.

இவர் ஒரு nighthawk.சமூகப் பிரச்சினைகளை எழுதுபவர்.அதிகம் எழுத வேண்டும்

இவை சில பகிர்வுகள் மட்டுமே!

நன்றி! வணக்கம்!

 -------------------------------------------------------------------
 எந்நன்றி கொன்றார்க்கும்!
-----------------------------------------
இந்த ஒரு வாரம் வலைச்சரப் பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து  எனக்களித்த சீனா அவர்களுக்கும்,

நான் பகிர்ந்ததைப் படித்துப் பின்னூட்டமிட்டவர்க்கு,படித்து ஆனால் பின்னூட்டமிடாதவர்க்கும்,


தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்றைய பதிவு பற்றிக் கருத்துரைத்த அன்பு நண்பர்க்கும்,


ஏதோ ஒரு விதத்தில் ஆதரவு தந்த அனைத்து அன்பு நெஞ்சங் களுக்கும்,


நன்றி,நன்றி,நன்றி.




இன்று தமிழர் திருநாள்.


அனைவருக்கும் என் மனங் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!


பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!



20 comments:

  1. அனைவருக்கும் வாழ்ததுக்கள்

    ReplyDelete
  2. அனைவருமே சிறந்த பதிவர்கள்.
    பகிர்ந்த தங்களுக்கு பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வலைச்சர வாரத்தில் உங்களோடு பயணித்தது அற்புத அனுபவமாக இருந்தது. இன்று பல ஜாம்பவான்களோடு என்னையும் சேர்த்து பதிவிலும் (உங்கள் மனதிலும்) இடம் கொடுத்தது எனக்குக் கிடைத்த பொங்கல் பரிசு. நானும் பலரை அறிந்து கொண்டேன். உங்களுக்கு என் நன்றி + இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இன்றைய அறிமுகங்கள் அத்தனை பெரும் பொன்னெழுத்துக்களால்
    சித்திரம் வரைபவர்கள்...
    வாழ்த்துக்கள் ஐயா..

    தித்திக்கும் அச்சுவெல்லமாய்
    திகட்டாத செங்கரும்பாய்
    பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
    மனதிலும் வாழ்விலும்
    மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பல்சுவை வேந்தர்கள் எனத் தலைப்பிட்ட இந்த பதிவில்,
    ‘நினைத்துப்பார்க்கிறேன்’ என்ற எனது பதிவையும் இணைத்து என்னையும் மற்ற‘வல்லவர்களோடு’ சேர்த்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள் கோடி!

    நான் வல்லவனா எனத்தெரியாது. ஆனால் நீங்கள் கொடுத்த இந்த கௌவரவத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பேன் என்பது நிஜம்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனிய தமிழர் தின நல் வாழ்த்துக்கள் .http://en-iniyaillam.blogspot.com/

    ReplyDelete
  7. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நன்றி ஐயா என்னையும் அறிமுகப்படுத்தியதிட்க்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பொங்கல் வாழ்த்துகள்!அய்யா!அனைத்தும் சிறப்பான முத்துகள்!அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    பொங்கலுடன் பொங்கல் வாழ்த்து அருமை.

    பொங்கலின் இனிய சுவை போல்
    பகிர்ந்து கொண்ட பதிவுகள் எல்லாம்
    சுவை.

    எல்லோருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. முன்பே பின்னூட்டம் இட்டு இருந்தாலும், இப்போது திரும்பவும் பின்னூட்டம் இடுவது, தாங்கள் இந்த ஒருவார காலம் எங்களுக்கு பல்சுவை விருந்து வழங்கியதற்கு, நன்றி தெரிவிப்பதற்காக. ஒவ்வொரு நாளும், இன்று எந்த தலைப்பில், எவ்வாறு வலைச்சரத்தை தொடுக்கப் போகிறீர்கள் என எங்களை எதிர்பார்ப்பில் வைத்ததற்கு உங்களுக்கு ஒரு சிறப்புப் பாராட்டு!

    ReplyDelete
  12. அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,
    மற்றும் நண்பர்களுக்கு,
    பல பெரிய பதிவர்கள் முன்னிலையில் சிறியவனின் பதிவினையும் அறிமுகம் செஞ்சிருக்கிறீங்க.

    வாழ்த்தி, வணங்குகிறேன் ஐயா.

    ReplyDelete
  14. இன்று தமிழர் திருநாள்.


    அனைவருக்கும் என் மனங் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!


    பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

    ReplyDelete
  15. பல்சுவை வேந்தர்கள்,வல்லவர்கள்!"

    அருமையான பல்சுவை விருந்துக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. மனம் மகிழ்ந்த நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா, தங்களின் தங்க அறிமுகத்திற்கு நான் பாக்கியம் செய்தவன்.

    ReplyDelete
  18. விதம்விதமாய் அறிமுகங்கள்... ஒரு வாரத்தில் இத்தனை பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துகள். 4 நாட்கள் பதிவுகளை ஒன்றாய் படித்து விட்டேன் இன்று....

    ReplyDelete
  19. வணக்கம் ஜயா என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete