Friday, January 6, 2012

நம்பிக்கை தான் வாழ்க்கை




உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இறை நம்பிக்கை மிகவும் அவசியம். வாழ்வில் பிடிப்பும் , அமைதியும் இன்பமும் கிடைக்கும். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது; அது நம்மை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பார்கள். சித்தர்கள்,’ இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய், ஞானதங்கமே!’ என்கிறார்கள். உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மை. உண்மைப் பொருள் அவன் தானே!

//பெம்மானே, என்னை உன்னோடு பிணைத்து வைப்பது பக்தி.பக்தியை பெறுவதும் உன்னைப் பெறுவதும் ஒன்றே. பக்தியை நீ எனக்கு உவந்தளிப்பாயாக!//என்கிறான் பக்தன்.
// பக்தி வலையில் படுவோன் காண்க- //என்றார் அப்பர்.

//நல்ல மனம் என்னும் வீட்டை நான் கட்டிவைத்திருக்கிறேன், நாதா,நீ நீங்காது அதனுள் குடியிருப்பாயாக.//என்கிறான் பக்தன்.

//நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்தறியேன்//
என்றார் அப்பர்.
***



**ஆட்டி வைத்தால் யார் ஒருவர் ஆடாதாரே!

"நாட்டியமாடுது மண்ணின் பாவை."என்ற தலைப்பில் கபீரன்பன் சில கூறுகிறார்.

சீக்கியரின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் ரவிதாஸின் நாற்பத்தியொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இத் தளத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் கபீரன்பன்.

//உலகில் நாம் காண்பதெல்லாம் வெறும் பொம்மலாட்டம் என்ற பொருளில் ரவிதாஸ்ர் சொல்லியிருக்கும் இந்தப் பாடலும் பிரபலமானது.

माटि के पुतरा कैसे नचतु है
देखे देखे सुनै बोलै दउरिओ फिरतु है
जब कुछु पावै तब गरबु करतु है
माइआ गई तब रोवनु लगतु है
कहि रविदास बाजी जगु भाई

நாட்டியம் ஆடுது மண்ணின் பாவை;
பார்க்குது கேட்குது பேசுது
இப்படி அப்படி ஓடவும் செய்யுது
நெனச்சது கெடச்சா உடனே துள்ளுது
கெடச்சது போனா அம்மா! அழுவுது
ஐயோ பாவம்;
சொல்லுறேன் கேளு
எல்லாமே வெறும் நாடக மாச்சு
ரவிதாசு எனக்கு புரிஞ்சு போச்சு

[இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பு அல்ல. ஆனால் முழுக்கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. சாமானியர்களோடு பழகி சாமானியராய் அவர் வாழ்ந்ததால் சாமானியன் மொழியில் மொழியாக்க முயற்சி.]//என்கிறார் கபீரன்பன்.

அவர் மேலும் கூறுகிறார்:

//இந்த காயம் மண்ணால் ஆனது தானே அதனால்தான் மண்ணில் முடிகிறது. நாமெல்லோரும் இறைவனின் கையில் பொம்மைகள். அவன் சூத்திரதாரி. அறியாமை நம்மில் இருக்கும்வரை நமக்கு ஆட்டம் ருசிக்கிறது. ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயித்து அறிவுரை கூறுகிறார்கள். உலகத்திலே மிக சிறந்த பொக்கிஷமாக காமதேனுவாக இராம நாமம் இருக்கையில் வேறென்ன வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது.

ரவிதாஸை, மாபெரும் கிருஷ்ண பக்தையான மீராவின் குரு என்றும் சொல்வர். ராஜா பீபா வும் இவரிடம் ஞானோபதேசம் வேண்டி நின்றார். பீபாவும் ஒரு தலைசிறந்த பக்தர்.
மகான்களின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாலே சத்சங்க பலன் உண்டு.//

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி!

****
**தீர்த்தயாத்திரை


திருமதி ஹுஸைனம்மா அவர்கள் முஸ்லிம்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரை பற்றி விரிவாக பக்தி மணம் கமழச் சொல்கிறார்.அவர் அந்த கடமையை இறையருளால் நல்லபடியாக முடித்து மாதாஜி ஆகிவிட்டார்.

நாடு, மொழி, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், இளையவர், முதியவர் என எந்தப் பேதமுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய முஸ்லிம்களின் ஐந்து கடமைகள்

1. இறை நம்பிக்கை 2. தொழுகை3. நோன்பு 4. ஸாகத் 5. ஹஜ்யாத்திரை என்பவையாம். இந்த ஹஜ் யாத்திரை பற்றி தனது தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறர்கள்.

//ஒருவர் செய்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது அதுவரையான பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப் பெறும். அதன் பின்னர் அந்நிலையைத் தன் நல்ல நடத்தைகளினால் தக்கவைத்துக் கொள்வது அவர் பொறுப்பு.அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.//



*********

***என்னில் நீ உன்னில் நான்!



’எங்கிருக்கிறான்?..’என்ற கவிதையில் திரு ஜீ,வி அவர்கள் சொல்வது :

//நீரே மேகம் எனில் நீள் விசும்பில்
நீந்திப் போவது எவ்வாறு என்கின்றார்

நீர்மோரே நெய் எனில் கலயத்திலது
நீர்த்து இருப்பது எப்படி என்கின்றார்

நிலவே இரவியின் தண்மை ஒளியெனில்
நீளிருட்டு இரவு எங்ஙனம் என்கின்றார்

யாழின் மீட்டல் நாத தாலாட்டில் மயங்கி
இத்தனை நேரமிது இருந்ததெங்கே என்கின்றார்

நீக்கமற நிறைந்தோனின் இருப்பு இதுவென்றால்
பார்க்கிறபடி தோற்றம் அவனுக்கில்லையா என்கின்றார்

உன்னின் ஜீவிதத் துடிப்பு அவனே என்றால்
என்னில் தெரியலையே எங்கிருக்கிறான் என்கின்றார்

நீயே அவன் தான் என்றால் நாணிச் சிரித்து
நானே அவனென்றால் நான் யார் என்கின்றான்//

சிந்திக்கத்தூண்டும் கவிதை இது.

****************

எல்லாம் வல்ல இறைவன்


திரு. சுப்பு ரத்தினம் அவர்கள் அன்னையின் பிராத்தனையைச் சொல்கிறார்,
ஒரு அன்னையின் பிரார்த்தனை’யில்:

//பரந்தாமனே ! பிரபுவே! நீ இருக்கின்றாய் அல்லவா?
சர்வவல்லமை பொருந்திய உனது பேரன்பு
நிச்சியம் இவ்வுலகைக் காக்கும்.
- ஸ்ரீ. அன்னை.//
இறைவனின் பேரன்பு நிச்சியம் நம்மை காக்கும்.
**********

திருமதி. புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் இறையருள் என்ற தலைப்பில் கோவில் வழிபாடு பற்றிச் சொல்கிறார்.

//நாம் இப்போது மேற்கொள்ளும் நடைப் பயிற்சியினால் கிடைக்கும் பயனை அப்போது கோயில் பிரகாரத்தை சுற்றியே பெற்றார்கள். எப்படியென்றால் கோயில் பிரகாரப் பாதையில் கருங்கல் தரையில் நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்புகள் மூலமாக நமக்கு உள்ள உடல் உபாதைகள் தீரும். கோயிலில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களின் அதிர்வலைகள் நமக்கு நன்மைகளை அளிக்கும். அங்கு நமக்கு தரப்படும் பிரசாதங்களை ஏழை பணக்காரன்
பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கடவுளின் முன் அனைவரும் சமம்.//

முன்னோர்களைப் பின்பற்றினால் துன்பமில்லை.

**************



அன்பென்ற மழையிலே என்ற தலைப்பில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
இயேசு பிறப்பு தினத்தை எந்த எந்த நாட்டில் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அருமையான பாடல்கள், அருமையான படங்களுடன். விளக்குகிறார்.

//மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் இயேசு என்னும் இறைவன்// என்று அழகாய் கூறுகிறார்.
இறை பாலகன் அன்பும், கருணையும் தருவார்.

*******
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.


நிறைய நம்பிக்கைகளை உள்ளடக்கிய கோவில்ஆகிய
பானக நரசிம்மர் கோயில் பற்றிச் சொல்கிறார், புதுகை தென்றல்.

//அத்தனை பானகம் உபயோகப்படுத்தினாலும் சந்நிதியிலோ ஒரு எறும்பு கூட இல்லை!!! இந்தியாவிலேயே வெல்லம் உபயோகித்தும் அங்கே ஒரு எறும்பு கூட இல்லை என்பது மங்களகிரியில் மட்டும்தான்!!!!! எப்பொழுது எறும்புக்களும், ஈக்களும் இந்த இடத்தில்
வருகிறதோ அப்பொழுது இந்த யுகம் முடிவுக்கு வரும் என அர்த்தமாம். //

//முன்பு இந்த மலை ஒரு எரிமலை என்றும் அது பொங்கி விடாமல்
இருக்க பானகத்தை ஊற்றி குளிர்விக்கிறார்கள் என்றும் தகவல்.//

//நாரதர் இன்றளவும்
அங்கே இந்த மர வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதுதான் அந்த மரம்.//

நம்பிக்கை தான் வாழ்க்கை!
வாழ்வோம் வளமுடன்!

28 comments:

  1. அனைத்துப் பதிவுகளும் அருமையான பகிர்வு கோமதிம்மா.

    ReplyDelete
  2. ஒவ்வொருவரின் நம்பிக்கை பற்றியும் நல்லா சொல்லி இருக்கீங்க. அறிமுகமானவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அழகான எளிய அறிமுகங்கள் :-)

    ReplyDelete
  4. அருமையான அறிமிகங்கள்

    ReplyDelete
  5. இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன.

    குறிப்பாக

    //’எங்கிருக்கிறான்?..’என்ற கவிதையில் திரு ஜீ,வி அவர்கள் சொல்வது ://

    //அன்பென்ற மழையிலே என்ற தலைப்பில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் //

    இவற்றைச் சுட்டிக்காட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்,
    பாராட்டுக்கள்.

    மற்றவற்றையும் போய் இனிமேல் தான் படிக்க வேண்டும்.

    அனவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    vgk

    ReplyDelete
  6. இன்றைய வலைச்சரத்தில் அடையாளம்
    காட்டியதற்கு அன்பென்ற மழையுடன் நன்றிகள்..

    ReplyDelete
  7. நல்ல பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. நம்பிக்கை தான் வாழ்க்கை

    மூன்று மதங்களையும் முத்தாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.. அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள்..
    இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. நம்பிக்கை தான் வாழ்க்கை
    அருமையான பகிர்வு

    ReplyDelete
  10. இத்தனை பதிவுகளையும் அக்கறையாகப் படித்து ,நம்பிக்கையை அருமையாகப் பகுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
    அறிமுகமான பதிவர்கள் தெரிந்தவர்களே என்றாலும் நீங்கள் சொல்லி இருக்கும் விதம் வெகு அழகு.

    ReplyDelete
  11. நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  12. என் ராஜபாட்டை ராஜா, நன்றி

    ReplyDelete
  13. வை. கோபாலகிருஷ்ணன் சார், நன்றி.

    ReplyDelete
  14. இராஜராஜேஸ்வரி, உங்கள் அன்பென்ற மழையில் நான் நனைந்து கொண்டு இருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  15. நன்றி கோவிந்தராஜ்.

    ReplyDelete
  16. அன்பு வல்லி அக்கா,
    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  17. 'நம்பிக்கைதான் வாழ்க்கை' நல்ல பகிர்வு. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நல்ல நல்ல பகிர்வுகள் கோமதியக்கா.

    ReplyDelete
  19. நம்பிக்கைதான் வாழ்க்கை பதிவில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கோமதியம்மா. அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. விடுமுறை காரணமாக இரு நாட்கள் இங்கு வரமுடியவில்லை.

    எல்லா மதங்களையும் குறித்து அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    //இறை நம்பிக்கை மிகவும் அவசியம். வாழ்வில் பிடிப்பும் , அமைதியும் இன்பமும் கிடைக்கும்//

    நிச்சயமாக!!

    என் பதிவினையும் அறிமுகப்படுத்தியதில் பெருமகிழ்ச்சி அக்கா. பெரியவர்களால் அரவணைக்கப்படுவது பெரும் பாக்கியம். பேறு பெற்றேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வீக் எண்ட் வேலைகளில் வலைப்பக்கம் வரவில்லை. இன்று எதேச்சையாக வந்தால் என்பதிவையும் அறிமுகப்படுத்தி இருப்பதி தெரிந்தது. மிக்க நன்றி

    ReplyDelete
  22. ஹூஸைனம்மா, நீங்களும் வணக்கத்துக்கு உரியவர்.
    சிறிய வயதில் ஹஜ் யாத்திரை கடவுளின் ஆசிர்வாதம் தான்.

    ReplyDelete
  23. புதுகை தென்றல், பானக நரசிம்மரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  24. தங்களது மடல் கண்டு மகிழ்ச்சி.
    உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் அவ்வப்பொழுது
    மட்டுமே வலைச்சரத்திற்கு வர இய்லுகிறது.
    எனது வலைப்பதிவுகளிலிருந்து ஒன்றினை எடுத்துக்காட்டியதற்கு நன்றி பல.

    சுப்பு ரத்தினம்.
    http://Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  25. என் கவிதை ஒன்றை இந்தத் தளத்தில் எடுத்தாண்டு மகிழ்ந்திருப்பது குறித்து
    மிக்க நன்றி, கோமதிம்மா. இப்பொழுது தான் இதைப் பார்த்தேன் என்பதால், நன்றி சொல்வதற்குக் கூடத் தாமதமாகி விட்டது.

    வெவ்வேறு தள நண்பர்களின் பதிவுச் சரங்களை எடுத்துக் காட்டி வலைச்சர நேர்த்திக்கு நேர்த்தி சேர்த்திருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள்.

    ReplyDelete