Tuesday, January 24, 2012

நெகிழ்வுகளில் இனிக்கும் வாழ்க்கை .......

வாழ்க்கை இனிப்பது சில நெகிழ்வான தருணங்களில் புரியும் ,அப்படிப்பட்ட சில தருணங்களின் அறிமுகம் இன்று.....

வாழ்க்கை வாழ்வதற்கே இரண்டு வார்த்தைகளில் இருந்தாலும் இது மாபெரும் தத்துவமாக எனக்கு தோன்றுகிறது.என்னடா இது வாழ்க்கை என சலித்துக்கொள்ளும் சில வேளைகளில் இந்த வார்த்தை புது தெம்பூட்டும்.இதையே தனது வலையின் தலைப்பாக வைத்து எழுதி வருகிறார் திரு பிரபாகர் இவர் தாத்தாவுக்கு எழுதிய கடிதத்தை  நாமும் பார்க்கலாமா?


வாழ்வே பேரானந்தம் ,வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்பவர்களால் மட்டுமே இப்படிக்கூற முடியும் .இந்த பெயரை தனது வலைக்கு வைத்து எழுதிவருகிறார்.எத்தனை  கோடி இன்பம் வைத்தாய்  என இவர் சொல்லும் தருணம் நெகிழ்வானது.


அன்பை விட ஆயுதம் எதுவுமில்லை,எத்தனை சத்தியமான வார்த்தை இது அன்பே கடவுள் என சும்மாவா சொன்னார்கள்?இந்த பெயரில் எழுதி வருகிறார் திரு சிவசங்கர் .இவருக்குப்பிடித்த நாட்களும் நிமிடங்களையும் பார்த்து வரலாமா?


நாம் வாழும்காலத்துக்குப்பிறகு அல்லது நமது முன்னோர்கள் தமது வாழ்வின் அடையாளமாக விட்டுச்செல்வதை சுவடுகள் என்போம்.தனது அடையாளமாக 
எஸ்.பி.ஜெ.கேதரன் அவர்கள் சுவடு பதித்து வருகிறார் இந்த தளத்தில், நமது மனதின் பூட்டப்பட்ட பகுதிகளை திறக்க மனிதனாய் சில நிமிடங்கள் வாழச்
சொல்லும் நிமிடங்கள் இவை .


கற்றலும் கேட்டலும் அள்ள அள்ள குறையாத செல்வங்கள்,இந்த பெயரில் குறையாத செல்வங்களை நமக்கு தந்து வருகிறார்,சகோ.ராஜி.மருந்து,சிகிச்சைகளுடன்மரணத்தை வெல்ல முக்கியமான விஷயம் பற்றி  நல்லதோர் வீணை செய்தே   இங்கே சொல்லியிருக்கிறார்.



ஒரு கடிதம் எழுதி முடித்தவுடன் கீழே உண்மையுள்ள என எழுதுவது வழக்கம் ,அது போல என்றென்றும் உண்மையுடன் என தானறிந்த உண்மைகளை எழுதிவருகிறார் திரு.இளையதாசன் இவருடன் சேர்ந்து பள்ளிக்கு போகலாம் வாருங்கள்.


சுனாமி இந்த வார்தைக்கேட்டால் பதறத்தான் தோன்றும்.ஆனால் தனது எண்ணங்கள் அலையல்ல சுனாமி எனச்சொல்லி எழுதி வருகிறார் விச்சு அவர்கள்  இவர் தனது எழுத்தால் மொக்கராசுவின் கட்டிலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பாருங்கள். 

ஊர் விட்டு ஊர் போனா சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது,காரணம் கேட்டா அந்த ஊர்க்காத்து எனக்கு ஒத்துக்கல அப்படிம்பாங்க ஆனா இந்த கோவைக்காற்று எல்லோருக்கும் ஒத்துக்கும்.ரமேஷ் வேங்கடபதி அப்படி என்னதான் சொல்றார் இந்த பேரின்ப விலாசம் பற்றி.






22 comments:

  1. ஓ... இந்த வாரம் வலைச்சரம் கோகுலா..?

    வாழ்த்துக்கள்.. கோகுல்..

    வலைச்சரத்தில் சிறப்பாக செயல்பட நான் என் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன்...

    ReplyDelete
  2. இன்றை அறிமுக பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அறிமுக படுத்திய விதம் நல்லா இருக்கு கோகுல் தொடருங்க....

    ReplyDelete
  4. அசத்தலான அறிமுகங்கள். அறிமுக நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள் கோகுல்...

    அறிமுகப்படுத்தும் நடை புதுமையா இருக்கு..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அறிமுகப்படுத்தியவர்களுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் பாஸ்
    சில பதிவர்களை தெரிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
  7. அனைத்து பதிவுகளும் நான் தொடரும்
    அருமையான பதிவுகள்
    அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  8. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நெகிழ்வான தருனத்தில்...நெகிழ்வான சம்பவங்களை தொகுத்த பதிவுகள்!தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  10. அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள் கோகுல். என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சில புதியவர்களையும் தெரிந்துகொள்ள முடிகின்ற அறிமுகத்தை சிறப்பாக்கச் செய்கின்றீர்கள் கோகுல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நான் சிறந்ததாய் கருதும் மொக்கராசுவின் கட்டில் கதையை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கதையைக் கிளிக்கினால் ஓபன் ஆகவில்லை. மொக்கராசுவின் கட்டில் இணைப்பு இதோ http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_27.html

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள் கோகுல்....!

    ReplyDelete
  17. நன்றி கோகுல்... மற்றவர்களையும் படிக்கிறேன்,

    பிரபாகர்...

    ReplyDelete
  18. வலைச்சரத்தில் என் வலைப்பக்கம் அறிமுகத்திற்கு மிக்க நன்றி,கோகுல்!

    ReplyDelete
  19. என்னது இது! வலைச்சரம் னு ஒரு விஷயம் இருக்கறதே எனக்கு இப்போ தான் தெரியும்.

    வலைசரத்தை எனக்கும், வலைசரத்திற்கு என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி கோகுல்.

    ReplyDelete
  20. என்னது இது! வலைச்சரம் னு ஒரு விஷயம் இருக்கறதே எனக்கு இப்போ தான் தெரியும்.

    வலைசரத்தை எனக்கும், வலைசரத்திற்கு என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி கோகுல்.

    ReplyDelete
  21. வலைச்சரத்தில் எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete