கொஞ்சம் சினிமாத்தனமான டயலாக்கா தெரியும்.எனக்கு வேற மாதிரி சொல்லத்தெரியல.ஓகே.விசயத்துக்கு வரேன்.இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு தீப்பெட்டிக்குள் தூங்கிக்கிட்டு இருக்குற தீக்குச்சி மாதிரி இதனால் நல்ல விசயங்களை ஆக்கவும் முடியும் நல்ல விசயங்களையே அழிக்கவும் முடியும்.இதை கையிலெடுத்துக்கொண்டு சமூகத்தின் ஆக்கப்பாதைக்கு வெளிச்சம் தரும் சில பதிவுகளின் அறிமுகத்தை இன்று பார்க்கலாம்.
கிராமத்து காக்கை இந்தகாக்கை நகரத்திற்கு உணவு தேடி வந்திருக்கிறதாம்.சுற்றுச்சூழலை காக்க மரம நடுவோம் என சொல்லி கேட்டிருப்போம்.ஆனால் இந்த காக்கை மரம் வெட்டுங்கள் நாடு வளம் பெறும் என்கிறது.நான் கூட நாம தான் தப்பா படிக்குறமோன்னு நினைச்சு திருப்பியும் பாத்தேன்.மரம் வெட்டுங்கள் அப்படிதான் இருக்கு ஏன் அப்படி இருக்கு?
உண்மையா பொய்யா? நாம் கேள்விப்படும்,படிக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது நமது மனசில எழும் கேள்வி இது.இவரும் இப்படித்தான் கேட்கிறார்.எப்போதாவது நடந்தால் விபத்து எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன என கேட்கிறார்.
நவீனத்துவம்,நாகரிகம்(!)கன்னாபின்னாவென்று வளர்ந்து வந்தாலும் பெண் குழந்தைகளைளிடம் நமது கருத்துகள் சிலவற்றை திணிக்கத்தான் செய்கிறோம்.இந்த stereotype விளைவுகளை உலகம் எனது பார்வையில் தளத்தில் பார்க்கலாம்.
சில பேர் தங்கள் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளை எத்தனை நாள் கழித்து கேட்டாலும் அப்படியே சொல்லுவார்கள்,அவங்களையெல்லாம் கேமிரா கண்ணுங்க உங்களுக்கு ன்னு சொல்லுவோம்.இன்னைக்கு எல்லோருடைய கையிலும் கேமிரா இருக்கிறது.எல்லா இடத்திலும் கேமிரா இருக்குது.எந்நேரமும் கேமிராக்கண் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த கேமிராக்களால் வரு விபரீதங்களையும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வழிமுறைகள் இங்கே நமது நண்பர் பகிர்ந்திருக்கிறார்.
தினம் தினம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களது எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.அதேநேரத்தில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் வருவது போன்ற பணம் கட்டி ஏமாந்து போகும் சம்பவங்களும் கணிசமான அளவில் நடக்கிறது.சரி எப்படித்தான் ஏமாறாமல் இருப்பது?அது குறித்து இங்கே சொல்லப்பட்டிருக்கிறது வாருங்கள்.
ஏன் இந்த கொலை வெறி? இது அந்த பாட்டைப்பத்திய விசயமில்லைங்க.மருத்துவர்களுக்கும் ,மக்களுக்கும் இடையயுள்ள உறவு சார்ந்த விசயங்களை இந்த வேண்டுகோளுடன் சொல்கிறது இந்த பதிவு.அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும்.
எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு புலம்பல் இருக்கு.அறிவியல் ரீதியாக பார்த்தால் சிந்திக்கும் திறன் மூளைக்கு தான் இருக்கிறது.ஆனா நாம மனசார சொல்றேன்,உன் நெஞ்சைத்தொட்டு சொல்லு அப்படின்னு எல்லாம் சொல்லுறோம்.உண்மையில் மனசுன்னு நாம குறிப்பிடுறது இதயத்தை.சரி,நாம மனசு சொல் படி நடக்கனுமா?இல்ல மூளை சொல்லுறத கேக்கணுமா?
மனிதா!நீயும் கடவுளாகலாம்,உன்கண்களுக்கு சாகாவரம் அளிப்பதன் மூலம்.இது கண்தானம் குறித்து நான் எழுதியது.உத்தரவின்றி இங்கே நான் நுழைந்த போது கண்தானம் ஏன்?எப்படி? ஏன் கண்ணில் பட்டது.உங்கள் பார்வைக்காக.....
ஒரு இடத்தில் விவாதம் நிகழ்ந்தால் அமைதி ஏற்படுமா?மணம் திறந்த விவாததால் ஏற்படட்டும் உலக அமைதி என்கிறார் இவர்.பசித்தால் என்ன செய்வோம்.இது என்ன கேள்வி ,சாப்பிடுவோம் என்கிறீர்களா?எதை சாப்பிடுவோம்?சிலர் சைவம்,சிலர் அசைவம் இதுதான் பதிலாக இருக்கும்.ஆனால் நாம் சாப்பிடுவது விசத்தை என்கிறார் இவர்.
எகத்தாளம்.பேர்தாங்க இப்படி,பதிவுகளில் பொறுப்புணர்வு மிஞ்சி நிற்கிறது.இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே.ஆமாங்க,வாயில் இருக்கும் வரை உமிழ்நீர் அப்படின்னு சொல்றோம்.துப்பிட்டா அதை எச்ச(ல்)என்கிறோம்.துப்பு கெட்ட பொழப்பு என கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இல்லையா?அப்ப வாங்க.
நண்பர்களே,ஆக்கப்பதையில் நாமும் பயணிக்கலாமா?
உண்மையில் நல்லதொரு சிந்தனை...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தொகுத்தளிக்கும் கோகுலுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவுகள் அறிமுகம் மிக்க நன்று.
ReplyDeleteநன்றி தோழா !
ReplyDeleteஇத்தனை சிறந்த பதிவர்களுடன் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி கோகுல். அறிமுகப்படுத்தப்பட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா! மற்ற அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete' எகத்தாளம்' தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
ReplyDeleteவாழ்த்துகள், தொடரட்டும் பதிவுகள்
- சென்னைத்தமிழன்
www.egathalam.blogspot.com