Wednesday, February 15, 2012

சுவையும் நகைச்சுவையும்

"கத்தரிப் பொரியலும்
கரும்பாகக் குழம்பும்
புத்துருக்கு நெய்யும்
பொன்நிறப் பருப்பும்
மிளகின் சாறும்
புளியாத் தயிரும்
                         அனைவருக்கும் நிகரே!" - பாவேந்தர் பாரதிதாசன்


         நேற்றைய வலைச்சரத்தில் ஆதலினால் காதல் செய்வீர் பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

          நாம் சம்பாதிப்பதெல்லாமே உணவுக்காகத்தான். மற்றதெல்லாம் அப்புறம்தான். பசியில் இருக்கும் ஒருவனிடம் கவிதை பேசினால் கவிதையாவது கழுதையாவது... என்ற பதில்தான் வரும். அதனால்தான் பள்ளியில்கூட சத்துணவுத்திட்டத்தினை கொண்டு வந்தனர். பசியிருந்தால்  மாணவர்களின் சிந்தனை மாறிவிடும். வாருங்கள்!!! நாமும் கொஞ்சம் உணவினை ருசித்துப் பசியாறுவோம்.

       முதலில் காய்கறி வாங்குவது பற்றி அனைவருக்கும் சொன்ன துரை டேனியலுக்கு நன்றிகள். அப்புறம் ராஜி மாதிரி சமையலறையை சமர்த்தா வச்சுக்கணும். அது உடம்புக்கும் மனசுக்கும் ஆரோக்கியத்தினைத் தரும். காய்கறிகளில் பல வண்ணங்கள் உள்ளன.வண்ணச்சுவை  மூலம் அதன் நலன்களை அறிந்து கொள்ளலாம்.


       எனக்குப் பிடித்த சமையல் டொமெட்டோ நூடுல்ஸ் செய்வது பற்றி சமையலில் பின்னி பெடெலெடுக்கும் ஆமினாவினை கேளுங்கள்.

       ஆரோக்கியமான உடம்புக்கு நல்லது . ராகி சேமியா முளை கட்டிய பயறு சமைத்து சாப்பிடுவது பற்றி அழகாகப் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்கிறார் ஆசியா ஓமர்.

       ஜலீலா கமலின் பாலக்கீரை போண்டா சாப்பிட்டுப் பாருங்கள். செம டேஸ்ட். கோவை 2 தில்லியின் வாழைப்பூ பருப்புசிலி செய்து பாருங்கள். உடம்புக்கு நல்லது அதனையே பீன்ஸ் , குடைமிளகாய், கொத்தவரங்காய் வைத்தும் செய்யலாம்.

     சரி வாழைப்பூவினை எப்படி உரிப்பது? அழகாகப் படங்களுடன் சொல்லித்தருகிறார் துளசி கோபால்.

   இப்போதெல்லாம் மக்கள் மூலிகையைத் தேடித் தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர்.ஒரு சிறந்த மூலைகையான தூதுவளைக் குழம்பு  செய்து சாதம், பிட்டு, இடியாப்பத்துடன் சாப்பிட்டுப் பாருங்கள் என்கிறார் மாதேவி.


        சமையலைப் பத்தி சொல்லும்போது மேனகாவை சொல்லாமல் விடமுடியுமா? காலிபிளவர் பட்டாணி மசால் தோசை செய்து பார்க்கலாம் என்கிறார் மேனகா.இவருடைய பதிவில் சமையல் கொட்டி கிடக்கின்றன.

      பாம்பு மாதிரி இருக்கும் புடலங்காயைச் சில குழந்தைகள் உண்ணாது. அவர்களுக்காக அடுப்பங்கரையில் வித்தியாசமாக புடலங்காய் மசாலா அடைத்த கறி செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

      அசைவ சமையல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காவிட்டாலும் சில குறிப்பாவது சொல்லிவிடுவோம் எனும் எண்ணத்தில் S.மேனகாவின் முட்டை கட்லெட் மற்றும் சிநேகிதியின் சிக்கன் டிக்கா செய்து சாப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.


       சுவை போதும். இனி கொஞ்சம் நகைச்சுவை. நகைச்சுவையில்லா மனிதன் மனிதனே இல்லை. மூஞ்சிக்கும் முகத்திற்கும் வித்தியாசம் உண்டு.  மூஞ்சி என்பது சிரிக்காத மனிதனிடம், முகம் என்பது சிரிக்கும் மனிதனிடம். .சிரித்தாலே பாதி கவலை ஓடிவிடும். பிரச்சனைகளைத் தள்ளிப் போடுங்கள். பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடியவேண்டும்...இரவு மனச்சிக்கல் இல்லாமல் முடியவேண்டும் என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கேற்ப மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

     கணவன் மனைவினாலே காமெடிக்குப் பஞ்சமிருக்காது. எதனையும் காமெடியாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும். ரியாஸ்சாதாரணமானவன்சகாபுதீன்கருடன் சுரேஷ் போன்றோரின் கணவன் மனைவி ஜோக்ஸ் படித்துப்பாருங்கள்.


      கார்ட்டூனை ரசிக்க நீச்சல்காரனைப் பாருங்கள்.அதுவும் அந்த திருமண அழைப்பிதழ் சூப்பர்.  கடி என்று வந்தபின் டாக்டரை எப்படி விட்டு வைப்பது. ரியாஸி்ன் ஜோக்ஸ் டாக்டரைப் பாருங்கள். உங்களின் நோய் அனைத்தும் போயே போச்...

      காக்கை தெரியும், சக்கை தெரியும், தக்கை தெரியும், யாக்கை தெரியும் (உடம்பு) அட புக்கை கூட தெரியும் ( ஒருவகை கூழ்) அதென்ன மொக்கை?

       அப்புகுட்டியின் மொக்கை ஜோக்ஸ் படியுங்கள். வெட்டிபய புள்ள சங்கத்தில் மொக்கைகள் குவிந்து உள்ளன. கொஞ்சம் கடி கொஞ்சம் சர்தார்ஜியைப் படித்துப்பார்த்து மொக்கையென்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

   பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் எப்படி இருக்கும்.என் ராஜபாட்டை ராஜாவிடம் கேளுங்கள்.செம மொக்கை போடுவார்.

அறிமுகம் :

1.மயிலனின் மயிலிறகு. முத்ததின் மிச்சம், இரவானவள், ஒரு காதலின் டைரி என கலக்குகிறார்.சென்று பாருங்கள்.

2.நண்பர் கணேஷின் மின்னல் வரிகள். பசிப்பிணி என்னும் பாவி, கொஞ்சம் ஹீ.ஹி,ஒரு காதல் கதை என அருமையாக படைத்து வருகிறார்.

    அப்படியே சிரிச்சுக்கிட்டே போனா எப்படி? இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம பின்னூட்டம் இடுங்கள். தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள்.
      

   

40 comments:

  1. அடடா...... அழகு கொடுத்து வச்சுருக்குபோல!!!!!

    நன்றி நவில, தமிழ்மணத்தில் 'சேர்த்து விட்டு' ஓட்டும் போட்டாச்சு:-)

    ReplyDelete
  2. நாவின் சுவையோடு நகைச்சுவையையும் தந்து இப்பதிவினை மிகவும் அழகாகவும் பயனுள்ளதாகவும் தொகுத்திருக்கிறீர்கள். இதுவரை பார்க்காதப் பக்கங்களையும் எட்டிப் பார்க்கவைக்கும் வகையில் நல்ல ரசனையான பதிவு. பாராட்டுகள் விச்சு.

    ReplyDelete
  3. நல்லதொரு அறிமுகங்கள் நண்பா..

    ReplyDelete
  4. வணக்கம் நண்பா,
    அருமையானதோர் தொகுப்பு!

    அறிமுகங்களை தொகுத்திருக்கும் விதமும் அழகு!
    அறிமுகமாகியிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    இவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. நீங்கள் என்னைக் கவனித்திருக்கிறீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி. உங்கள் தொகுப்பில் அறிமுகம் செய்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி! மிக்க நன்றி. சமையல் சுவையென்கிற களத்தில் அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். இரண்டு பதிவுகளைத்த தவிர மற்றவை எனக்குப் புதியவையே. படிக்கிறேன். மீண்டும் என் இதய நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள் சுவையோடு....

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  10. சமையல் விருந்து படைப்பவர்களையும்
    அருமையான மொக்கைப் பதிவர்களையும்
    மிக அழகாக அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்
    அறிமுகப் பட்டோர் அனைவருக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. விச்சு மிக்க நன்றி.என்னையும் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.அருமையான பகிர்வு.

    ReplyDelete
  13. விச்சு மிக்க நன்றி.என்னையும் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.அருமையான பகிர்வு.

    ReplyDelete
  14. அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  15. ஆரம்ப கவிதையே வாசனை தூக்குதே! சாப்பிட்ட திருப்தி. நன்றிகள்.

    ReplyDelete
  16. சமையல் அறிமுகமும் , ஆரோக்கியத்திற்கு சிரிப்பும் சிந்தனையும் அறிமுகம் செய்த பதிவு அருமை .

    ReplyDelete
  17. இங்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்...!

    ReplyDelete
  18. இன்றைய அறிமுகங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் தோழர்.

    ReplyDelete
  19. எனது பதிவை அறிமுக படுத்தியமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  20. அருமையான தொகுப்பு .. தொடருங்கள்

    ReplyDelete
  21. வித்தியாசமான அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. யாரையும் விடல போல - நன்றி

    ReplyDelete
  23. மறக்காமல் தேடி பிடிச்சி வந்து என்னையும் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி விச்சு.. மறற அறிமுகங்களும் அருமை

    ReplyDelete
  24. அருமை அருமை நல்லா பதிவு பன்னுறீங்க வாழ்த்துகள்

    ReplyDelete
  25. நல்லதொரு தொகுப்புக்கள் சார் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  26. அருமையான தொகுப்பு .
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  27. என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.

    அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  28. சுவைக்கச் சுவைக்கத் தொகுத்த அறிமுகங்கள் விச்சு !

    ReplyDelete
  29. ஆரம்ப கவிதை அசத்தலா இருக்கு...அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.என்னையும் அறிமுகபடுத்தியதில் மிக்க சந்தோஷமும்,நன்றியும் சகோ...தமிழ்மணம் ஓட்டும் போட்டாச்சு!!

    ReplyDelete
  30. அருமையான பகிர்வு நன்றி

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. எல்லாம அருமையான தெரிவுகள்.. சுவையும் நகைச்சுவையும் எப்போதும் வேண்டும்..

    என்னுடைய பதிவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி நண்பரே..

    ReplyDelete
  33. சார்! நான்கு நாட்களாய் உங்களைள மிஸ் பண்ணிட்டேனே. சாரி சார். நீங்கதான் இந்த வார ஆசிரியருன்னு தெரியாம போச்சே?!!!....

    ஓ.கே. அனைத்தையும் பார்த்துவிடுகீறேன். இன்றைய பதிவில் என்னையும் அறீமுகப்படுத்தியதற்காக மிக்க நன்றி சார்! அதுபோக அனைத்து அறிமுகங்களுமே அசத்தல். சிலபேர் எனக்கு தெரிந்த முகங்கள். நன்றி! தொடர்ந்து வருகீறேன்.

    ReplyDelete
  34. சுவையை வாசிக்க நாவூறியது. இதில் மயங்காதார் யாருளர். நகைச்சுவையைப் பார்த்துச் சிரிப்போம். அறிமுக அன்புறவுகளிற்கு வாழ்த்துகள் தங்களிற்கும் பணி சிறக்க மேலும் வாழ்த்துகள்..தொடருங்கள், தொடருவோம்.
    வேதா இலங்காதிலகம்

    ReplyDelete
  35. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே... ஒரே ஒரு சின்ன திருத்தம். என்னை ஆண்பாலில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  36. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  38. மிகவும் அழகாகவும் பயனுள்ளதாகவும் தொகுத்திருக்கிறீர்கள். மற்ற பல புதிய
    பக்கங்களையும் பார்க்கவைக்கும் வகையில் பதிவு செய்திருப்பது மிக மிக நன்றாக உள்ளது

    ReplyDelete