Wednesday, February 29, 2012

மனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி

சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.
ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக்  காப்பாற்றி 
உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர் 
யாரேனும் உண்டோ உலகத்தில்.

ராஜம்மாளைப்  பாருங்கள் இவரைப்போல எத்தனை மனிதர்கள் நகைக்காக அழைத்து வரப்பட்டு எங்கோ ஒரு மூலையில் அனாதையாக விடப்பட்டுள்ளார்களோ?   


                                    
   
உறவினரே மனம் மாறி அனாதையாக விடப்பட்ட அலமேலு அம்மாளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 

                                        
மகனாலேயே அனாதையாக விடப்பட்ட 80௦  வயது பாட்டி மரண நேரத்தில் மகனைச் சந்தித்திருக்கிறார் 


மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா குணமடைந்த அதிசயம். 
                                                 



போகும்போது வாழ்கையில் என்னதாங்க கொண்டு போகப் போகிறோம் 
இந்தப் பதிவரை அமெரிக்க பத்திரிக்கை ஒன்றும் பெருமைப்படுத்தி உள்ளது.

மகேந்த்ரனைப் போல பதிவர்களும் ஈரமுள்ளவர்களும் பதிவுலகத்தில் தோன்றிட 
வலைச்சரம்  போன்ற இணையங்கள் உறுதுணை புரியவேண்டும்.
                            

இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல் .


சிந்திக்க தூண்டும் சில பதிவுகள் 


மெத்தனமாக இருந்து விடாதீர்கள் என்று எத்தனம் பதிவு நம்மை சாதிக்க தூண்டுகிறது கே.ஆர் .ஸ்ரீதர் போல .



1800 க்கும் மேல் பதிவுகளை தேன் தமிழில் எழுதி அரசியல் வாதியாய் இருந்தால் என்ன? ஆளும் கட்சியாய் இருந்தால் என்ன 
அம்பானி கம்பெனியில் தயாநிதிக்கு பங்கு என்று படிக்கத் தூண்டுகிறார். 



நடந்த கதை குறும்படத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது திரை பறை பதிவுலகம். 


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா சாஜகானின் கவிதையை அடர் கருப்பில் சென்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். 


காவல் கோட்டம் ஒரு அனுபவம் சந்தேகமா தமிழ் வீதியில் நடந்து தெரிந்து கொள்ளுங்கள்.


புதிய பதிவர்களின் திறமைகளைக் காணலாம் இப்போது 



எண்ணங்களும் திரை வண்ணங்களும் வலைப்பதிவிற்குச் சென்றால்..

கேள்வியைத் தேடும் படம் பார்த்ததுண்டா நீங்கள் சினிமா சினிமாவிற்குச் சென்று வாருங்கள். 

அண்டை வீட்டாரிடம் அன்பு செலுத்த இறைவனிடம் கை ஏந்துங்கள்.

எல்லைகள் இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது 

நம்மைத் தொட்டுவிட்டுச் செல்கிறது தமிழ்க் காற்று .



நாளை எதைப் படிப்பது எதை விடுவது 
இவருக்கு எது தெரியாமலிருக்கும் என்று 
ஆராய்ச்சி செய்ய வைக்கும்  சகலகலா வல்ல வலைப்பதிவு ஒன்றுக்கு 
அழைத்து செல்லும் தமிழ்ப் பைங்கிளி.
                                     


27 comments:

  1. இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக் காப்பாற்றி
    உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர்
    யாரேனும் உண்டோ உலகத்தில்..

    ஈரமும் தீரமும் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மகேந்திரன் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகமானார்.ஈரத்தால் வாழ்வின் வாழ்வின் அர்த்தங்களை இவரது முயற்சிகள் உணரச்செய்யும்.இவரது அறிமுகத்தால் இன்றைய வலைச்சரமே பெருமடையும் என சொன்னால் மிகையல்ல.

    ReplyDelete
  3. மிக மிக அருமையான தேவையான பதிவு

    ReplyDelete
  4. இன்றைய ஈரப் பதிவு கண்டேன். அனைத்தையும் வாசிக்க முயற்சிப்பேன். தங்களிற்கும், அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி சகோ..ஏனைய பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மிக மிக அருமையான தேவையான பதிவு

    ReplyDelete
  7. இன்றைய அவசர உலகினில் மனிதநேயச்சிந்தனை என்கின்ற எல்லையோடு இருந்திடாது மகேந்திரன் அவர்களின் ஆக்கபூர்வமான பணிகளை கண்டு மனம் நெகிழ்கின்றது.

    ReplyDelete
  8. //இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல்.//

    பின்னூட்டம் இட்டு விட்டுத்தான் இங்கு வந்துள்ளேன். நல்லதொரு அறிமுகம்.
    நன்றி.

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள். நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகள். தொடருங்கள் அழகு நடையில் ... மகேந்திரன் பற்றிய அத்தியாவசியமான பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது. வாழ்த்துகள்

    ReplyDelete
  10. மனதில் பாரம் சுமந்த மனிதர்களை தேடி சேர்த்து , நெஞ்சில் ஈரம் சுமந்த அந்த மனிதருக்கு நான் தலை வணங்குகிறேன்..அருமையான பதிவுகள்.அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. மனித நேய உணர்வோடு , ஈரம் மிக்க மனதோடு செயல் பட்டு வரும் மகிக்கு எனது இதய பூர்வமான் வாழ்த்துக்கள் .... அவரது முயற்சிகள் வெற்றியடைய எனது பிரார்த்தனைகள்.... 'மனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி'........ உண்மையான வரிகள்

    ReplyDelete
  12. சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
    ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.
    ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக் காப்பாற்றி
    உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர்
    யாரேனும் உண்டோ உலகத்தில்.//




    இல்லை இவர் தான் உயர்ந்த மனிதர்.

    அருமையான பகிர்வுகள்.

    அனைத்தையும் வாசித்து விட்டு வருகிறேன்.

    படங்களும் செய்திகளும், மனதை உலுக்குகிறது.

    ReplyDelete
  13. ஆழமான தேடல் தோழி..
    மனிதத்தை நினைவுபடுத்தியது பதிவு நன்று.
    தொடர்க..

    ReplyDelete
  14. தமிழ்க்காற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  15. சிறந்த பதிவுத் தொகுப்புங்க...வாழ்ந்தால் இவர்களில் சிலரைப் போல் வாழணம் ன்னு தோணிச்சு.

    ReplyDelete
  16. மகி மகேந்திரன் எனது நெருங்கிய தோழர் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  17. தங்களின் இந்த தொகுப்பு வலை பதிவர்கள் மத்தியில் மிகவும் அறிவுபூர்வமாக திகழ்கிறது.. எனது பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  18. அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. நிறைய நல்ல பதிவுகளின் அறிமுகம் கிடைத்து. என்னையும் புதிவர்கள் லிஸ்ட்ல அறிமுகம் செய்தமைக்கி மிக்க நன்றி

    ReplyDelete
  20. மகேந்திரன் பற்றி இன்று தான் அறிகிறேன். மிக அற்புத மனிதர். அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  21. மகேந்திரனின் சேவை அளப்பரியது. இன்று தான் அவரைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. சிரத்தையுடன் சேகரித்த தொகுப்பு.


    அதிலும் ஒரு பதிவை பற்றி முழுமையாக குறிப்பிட்டு சொல்வது அருமை.

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்கள்..

    மகேந்திரன் ஒரு உன்னதமான மனிதர்.. இன்னும் பலர் அறிந்துகொள்ள வேண்டிய பண்பாளர். எத்தனைமுறை வலைச்சரம் அவரை அறிமுகப்படுத்தனாலும் தகும்.

    ஆசியருக்கும் வாழ்த்துகளும் வணக்கமும்.

    ReplyDelete
  24. மகேந்திரன் சேவை பாராட்டுக்குறியது! அவர் வலைப்பதிவர் என்பது மிக பெருமைக்குறியது....

    ReplyDelete
  25. வாழ்த்திய நெஞ்சங்களுக்குத் தமிழ்ப் பைங்கிளியின் நன்றிகள்

    ReplyDelete
  26. என் தோழர்களே, தோழிகளே... வணக்கம்
    நான் மகேந்திரன்
    மற்றவர்களை மகிழ்விப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்...

    தேடல் இனிமையானது நான் தேடும் தேடல் புதுமையானது, ஒரு உயிர் கொண்டது,
    தேடலில் நமக்கு எல்லாம் கிடைக்கும், இந்த தேடலில் மட்டும் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை கிடைக்கும்.
    இல்லை என்பதில் கூட எதோ ஒன்று இருக்கிறது அதை தான் நான் தேடினேன்...
    என்னை வாழ்த்திய அணைத்து நல இதயங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ....
    என்னையும் மகிழ்வித்த பைங்கிளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
    ~மகேந்திரன்

    ReplyDelete