அன்பின் சக பதிவர்களே,
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த விச்சு அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.
இவர் தனது சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஏழு இடுகைகள் வரை பதிவிட்டுள்ளார். சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து இவர் சுமார் 125 இடுகைகள் வரை அறிமுகம் செய்து சுமார் 190-க்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.
தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த திரு. விச்சு அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் திரு. சம்பத்குமார் அவர்கள். தமிழ் பேரன்ட்ஸ் என்ற வலைப்பூ எழுதி வரும் இவரது பூர்வீகம் தேனிப் பக்கம். இயந்திரவியலில் பட்டைய படிப்பை முடித்துள்ள இவர் தற்சமயம் கோவையில் ஒரு தனியார் ஆட்டோமொபைல்ஸ் டீலர்சிப்பில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இவர், தனது வலைப்பூவில், வாழும் பெற்றோர்களுக்காகவும், வருங்கால பெற்றோர்களுக்காகவும் உதவும் வகையில், அவர் கற்றதையும், பெற்றதையும் அருமையாக தொகுத்து இடுகைகளாக எழுதி வருகிறார். இவர் தனது கியூட் பேரன்ட்ஸ் (cuteparents) என்ற ஆங்கில தளத்திலும் குழந்தைகளுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் இடுகைகள் எழுதி வருகிறார்.
சம்பத்குமார் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துக்கள் விச்சு...
நல்வாழ்த்துக்கள் சம்பத்குமார்...
வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
சோதனை மறுமொழி...
ReplyDeleteபுதிய ஆசிரியரை வரவேற்பதில் மகிழ்ச்சி!
ReplyDeleteவருக சம்பத்குமார் வருக..நல்ல அறிமுகங்களைத் தருக சம்பத்குமார் தருக..
ReplyDeleteபுதிய ஆசிரியரை புதுமையுடன் எதிர்பார்க்கிறோம், வரவேற்பதில் மகிழ்ச்சி..
ReplyDeleteவருக வருக
ReplyDeleteநண்பர் சம்பத்
அழகுச் சரம் தொடுத்திடுங்கள்.
விச்சுவின் மனமார்ந்த நன்றி. இந்தவார ஆசிரியராகப் பொறுப்பேற்கும் சம்பத்குமாரை வரவேற்கிறேன்.
ReplyDelete