வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைப் பார்க்கலாம்.
1. ஜ்யோவ்ராம் சுந்தர் தளமான மொழிவிளையாட்டு என்கிற வலைப்பூவில் அருமையான பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார். நவீனத்துவம் மற்றும் முற்போக்கான படைப்புகளை படைத்து வருகிறார். நன்றாக எழுதுகிறார். கதை, கட்டுரை, கேள்வி-பதில் என்று நிறைய எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
இவரது விமலாதித்த மாமல்லன் என்ற விமர்சனக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.
2. நீங்கள் மொழிப்பற்று மிக்கவரா? தமிழ் மொழி பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? மொழி, பண்பாடு பற்றிய நிறைய தகவல்கள், தமிழ் அகராதிகள், கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கியங்கள் என்று அனைத்தும் இத்தளத்தில் குவிந்து கிடக்கின்றன. பார்க்கத் தவறாதீர்கள். உதாரணத்துக்கு அனைத்துலக தாய்மொழி நாள் என்ற கட்டுரையை வாசியுங்கள். தமிழ் வளர என்ன செய்ய வேண்டும்? என அருமையாக கூறுகிறார் சுப.நற்குணன்.
3. மரு.ஜா.மரியானோ என்பவர் நடத்தும் பயணங்கள் என்ற தளத்தில் அருமையான அற்புதமான கட்டுரைகள் மற்றும் பல்சுவைப் பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. அருமையாக எழுதுகிறார். உதாரணத்திற்கு அவரது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வேண்டுமா வேண்டாமா என்ற கட்டுரையை வாசியுங்கள்.
4. பூங்குழல் நடத்தும் பூச்சரம் வலைப்பூவில் அருமையான கவிதைகள், கட்டுரைகள் என்று குவிந்திருக்கின்றன. நன்றாக எழுதுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அவரது வித்தியாசமான பார்வையை கூடங்குளம் என்ற அவரது கட்டுரையில் காணுங்கள்.
5. ஜீவா வெங்கட்ராமன் நடத்தும் என்வாசகம் வலைப்பூவை சுவாசித்துப் பாருங்கள். இளைப்பாறுதலாக உணர்வீர்கள். இசையும் தெய்வீகமும் விஞ்ஞானமும் கலந்து அருமையான படைப்புகளை படைத்துள்ளார். பாடல்களை கர்நாடிக் ராகம் மெட்டுப் போட்டு ராக தாள குறிப்புகளுடன் படைக்கிறார். மனம் ஏதய்யா என்ற தெய்வீகப் பாடலைப் படியுங்கள். பாடுங்கள்.
6. உழவன் என்பவர் நடத்தும் தமிழோடு என்ற வலைப்பூவில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் என்று அருமையான படைப்புகள் பல உள்ளன. உதாரணத்துக்கு வால்மீகி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? என்ற தகவல் கட்டுரையைப் படியுங்கள்.
7. தீஷு மதுரையில் வசிக்கிறார். இவர் நடத்தும் பூந்தளிர் வலைப்பூவில் குழந்தைகளுக்கான ஏராளமான விஷயங்கள் குவிந்திருக்கின்றன. பெரியவர்களும் படித்தால் குஷியாகிவிடுவீர்கள். திடீரென நாம் கார்ட்டூன் படம் பார்க்கிறோமே. அதுபோலத்தான். இவரது தளத்தில் பழைய அம்புலிமாமா புத்தகங்களைக் காணும் லிங்கை கொடுத்திருக்கிறார். இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. பேப்பரை வெட்டி அழகாக கலர்புல்லாக பேப்பர் வியூவிங் செய்வது எப்படி? என்ற பதிவை படித்துப் பாருங்கள்.
- அடுத்த அறிமுகங்களோடு நாளை வருகிறேன். நன்றி.
டிஸ்கி:
இந்த பதிவை எழுதுவதற்குள் இரண்டு முறை கரண்ட் கட் ஆகிவிட்டது. என்னுடையது ரொம்ப ஸ்லோ கனெக்ஷன். இல்லையென்றால் இன்னும் நிறைய நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தலாம். முடியவில்லை. காலத்தின் கோலம். வாய்பிருந்தால் பிற்காலத்தில் அவ்வாறு செய்கிறேன். இன்றைய பதிவு அறிமுகங்கள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. நாளை மற்றும் சில அற்புத பதிவர்களோடு உங்களைச் சந்திக்கிறேன். தொடர்ந்து எனக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பதிவுலக சொந்தங்களுக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொண்டு இன்றைய அறிமுகங்களை நிறைவு செய்கிறேன். நன்றி!
நன்றி
ReplyDeleteதொடர்ந்த அறிமுகங்களுக்கு நன்றியும் வாழ்த்தும் !
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநாளையும் தொடருங்கள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteநல்லறிமுகங்கள். தொடரட்டும், அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletenalla arimukangal!
ReplyDeletevaazhthukkal
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். தொடருங்கள்....
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteவலைச்சர அறிமுகங்களிற்கு நல் வாழ்த்துகள். சகோதரர் டானியலுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தொடர் மின்வெட்டுக்கு இடையே
ReplyDeleteசிறந்த பதிவர்களை கண்டறிந்து
அறிமுகப்படுத்தியமைக்கு
வாழ்த்துக்கள் நண்பரே...
@ சமுத்ரா
ReplyDelete- நன்றி.
@ ஹேமா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
@ Nizamudeen
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.
@ Lakshmi
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி மேடம்.
@ கணேஷ்
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
@ Seeni
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.
@ சசிகலா
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரம்.
@ கோவை 2 தில்லி
ReplyDelete- வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
@ வெங்கட் நாகராஜ்
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
@ Kovaikkavi
ReplyDelete- வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மேடம்.
@ மகேந்திரன்
ReplyDelete- ஆமாம் சார். கரண்ட் கட் பெரிய தொல்லைதான். ஆனாலும் பொறுப்பு பெரிதாயிற்றே. என்னுடைய பதிவென்றால் போட்டாலும் போடா விட்டாலும் பிரச்சினை இல்லை. ஆனால் வலைச்சரம் தொடுத்தாக வேண்டுமே. என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை தந்திருக்கிறார்களே. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.