தட்டிக் கேட்க யாருமில்லாத நிலை கண்டு பேனா ஒன்று உண்மைகளை கண்ணீராய் வலைப் பதிவில் எழுதி நியாயத்திற்காகப் போராடுகிறது.ஈழத்தை மீட்போம் வாருங்கள் .
அப்பட்டமாய் கண்முன் தெரிகிறது.
சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுக் கோப்பையில் தசைப் பிண்டங்கள் விழுந்த அவலத்தை வட்டக்கச்சி வயல் வெளியில் புதைக்கப்பட்ட உறவுகளின் ரத்தம் இங்கே விவரித்திருக்கிறது.
இந்தியாவின் தெளிவற்ற ராஜ தந்திரம் ஆபத்தானது தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்களே.
வீடுகளிலும் வீதிகளிலும் பிணங்கள் ஒரு கிராமமே படுகொலை செய்யப்பட்ட பதிவு.
ரத்தத்தில் உறைந்த கிராமம் கற்பழிக்கப் பட்ட ஈழத்து தேவதைகள் படியுங்கள் உங்கள் ரத்தம் உறைந்து போகும்.
படு கொலைகளுடன் இவர்களது தீபாவளிப் பண்டிகையைப் பாருங்கள் .
இந்தக் குற்றங்களிலிருந்து இலங்கை எப்படி தப்பிக்கப் போகிறது தப்பிக்க விடலாமா தீர்வு சொல்லுங்கள்.
மனித உரிமை மீறல்களுக்குத் தகுந்த நீதி கிடைக்கட்டும்
இப்படிப்பட்ட வலைப் பூவினையும் படித்து பகிர்ந்து போராடி ஈழத்தின் கண்ணீரை துடைத்தெடுப்போம் தமிழர்களே.
மூத்த பதிவர்களைப் பெருமைப்படுத்தும் நேரமிது:
வானம் வெளுத்த வலைப்பூவில் இலங்கைத்தமிழில் சுனாமியும் ஒரு பெண்ணும் கவிதை கலங்கச் செய்கிறது படிப்பவர்களை .
அன்றும் இன்றும் நாடும் வீடும் எப்படி இருக்கிறதென்று படத்துடன் விளக்கத்தைக் கொடுத்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இவர்.
புதுப் பதிவர்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கலாம் வாருங்கள்
அகோரத்தின் அங்கீகாரத்தினைப் படம் பிடித்துக் காட்டுகிறது கீத மஞ்சரியின் கவிதை .
கடுகு அவர்களின் கமலாவும் கத்தரிகாய் கூட்டும் கதையினை மின்னல் வரிகளாய் நமக்குச் சொல்லிவிட்டுப் போகிறார் கணேஷ் அவர்கள்.
நம் காதல் ஆத்மக் காதல் என்று கிராமத்துக் கருவாச்சி அழகாகக் கூறுகிறார் படித்துப் பாருங்கள்.
நாமும் சென்று நனைந்து வருவோம் வாருங்கள் .
சங்கத் தமிழ் வளர்த்தப் புலவர்கள் இன்று இருந்திருந்தால் இவரைப் பார்த்துப் பெருமைப்பட்டிருப்பார்கள் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் வளர்க்கும் தமிழன் ஒருவனுடன் மூத்த பதிவர்கள் சிலரின் வலைதளங்களுக்கும் கூட்டிப்போவாள் பைங்கிளி .
தென்றலையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி . தங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteஷைலஜா, மதுமதி, கீதமஞ்சரி, தென்றல் சசிகலா, ஸாதிகா, ஹேமா, வை.கோ ஸார் போன்ற பல நல்ல எழுத்தாளர்களிடையில் எனக்கும் ஓர் இடம் என்பதில் மிக்க மகிழ்கிறேன். இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடரும் உங்களின் அறிமுகங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக உள்ளது, தொடர்கிறேன்.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு இதயங்கனிந்த நன்றிகள்.வலைச்சர ஆரியர் பணியினை செவ்வன நிறை வேற்றி வரும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDelete//அட இது நம்ம ஆளுங்க என்று
ReplyDeleteவை. கோபால கிருஷ்ணன் யாரைப் பெருமைப் படுத்துகிறார் பாருங்கள்.//
என் இந்தப்பதிவினை இன்று அறிமுகம் செய்துள்ள, பைங்கிளிக்கு என் அன்பான நன்றிகள்.
பைங்கிளியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
அன்புடன் vgk
முதலில் இறுதிப் படம் பைங்கிளி மிக அழகு. தாங்கள் அறிமுகவர்கள் பாதிப்பேரை எட்டிப் பார்த்திட்டேன். எல்லாம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள் - கிளி ஆசிரியர் உட்பட. மேலும் சிறக்கட்டும் பயணம். அன்புடன் (சிலர் இளவயது என்று நான் நினைத்தவர்கள் வயதானவர்கள் என்று அறிய வர ஆச்சரியம்.....)!!!!!!
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
கணேஷ் said...
ReplyDelete//ஷைலஜா, மதுமதி, கீதமஞ்சரி, தென்றல் சசிகலா, ஸாதிகா, ஹேமா, வை.கோ ஸார் போன்ற பல நல்ல எழுத்தாளர்களிடையில்//
தங்கள் நல்ல எண்ணங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், கணேஷ் Sir.
என்றும் அன்புடன் vgk
வாழ்த்துகள்.
ReplyDeleteஈழபக்கத்தில் இந்திய இராணுவம் நடத்திய இரத்த வெறியாட்டம் படித்தவர்கள் அழாமல் இருக்க முடியாது!மளையாளிகள் சீக்கியர்கள் என்று தேர்வு செய்து அனுப்பியதை யாரும் மறக்க முடியாது.....! இதைப்படித்த பிறகு தீபாவளி நீங்கள் கொண்டாட மாட்டீர்கள்! பகிர்ந்த பைங்கிளிக்கு நன்றிகள்....!
ReplyDelete///படு கொலைகளுடன் இவர்களது தீபாவளிப் பண்டிகையைப் பாருங்கள் .///
ReplyDeleteஅனைத்து இந்தியர்களும் படியுங்கள் டெம்ளெட் கமெண்ட் போடவேண்டாம் தயவுசெய்து.....
என்னையும் உங்களோடு சேர்த்து கொண்டதுக்கு வலைசரத்தில் அறிமுகம் செய்தத்ருக்கும் மிக்க நன்றிங்க பைங்கிளி அக்கா
ReplyDeleteஅனைத்துப் பதிவுகளும் அருமை..பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteமூத்த பதிவர்களைப் பெருமைப்படுத்தி நம்ம ஆளுங்க என்று அறிமுகப்படுத்திய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteஈழப்பக்கங்கள் அனைத்தும் கண்களை ஈரமாக்கின...
ReplyDeleteநன்றி நன்றி வலைச்சர ஆசிரியருக்கு.தேடல்கள் அருமை.என்னையும் அறிமுகப்படுத்தி அதை அறியத்தந்தமைக்கும் நன்றி பைங்கிளியாரே !
ReplyDeleteபட்டுக்கம்பள விரிப்பிட்டு என் வலைப்பூவையும் வரவேற்றதற்கு மிகவும் நன்றி பைங்கிளி. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்திய நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள்
ReplyDeleteசென்ற வாரம் வலையுலகம் வராததால் இன்றே கண்டேன்.எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ReplyDeletearumai...vaalththukkal
ReplyDeleteமிக்க நன்றி என் அறிமுகத்திற்கு... தாமத பதிலுக்கு மன்னிக்கவும்
ReplyDelete