Wednesday, March 7, 2012

அனுபவச்சரம்




மனித வாழ்க்கையை பூரணமாக்குவது அவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள்தான்.வாழ்க்கை என்ற இலக்கை தொட வேண்டுமானால் அனுபவம் என்ற நெளிவு சுளிவுகளை கடந்துதான் ஆகவேண்டும்.

ஆராய்சிகள், மனித செயற்பாடுகள்,பரிணாமம் ,கண்டுபிடிப்புகள்,விஞ்ஞான வளர்ச்சி அனைத்துக்கும்,காரணகர்தாவாக இருப்பது மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்களைக்கொண்டுதான்.

பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் மற்றவரது அனுபவம் இருக்க வேண்டுமே தவிர தனது அனுபவத்தை மற்றவர்களுக்கு திணிப்பது என்பது ஒரு வித சலிப்பத்தரும்.

பிறரின்அனுபவத்தை மட்டிலும் பார்த்து அதனையே குறிகோளாக்கிக்கொள்ளாமல்,பிறர் அனுபவத்தை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக,ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்வதே சாலச்சிறந்தது.

நம் வலை உலக நட்புக்கள் தங்கள் சுவாரஸ்யமான அனுபவங்களை தங்களது எழுத்துத்திறமையால் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி சுவைபட தங்கள் பகிர்வுகளில் பதிந்துள்ளார்கள்.அவற்றில் சிலவற்றினை இன்றைய அனுபவச்சரத்தில் காண்போம்.


1.சிலரின் எழுத்துக்களில் நகைச்சுவை இருக்கும். கணேஷின் எழுத்துக்களோ நகைச்சுவையே எழுத்தாகா இருக்கும்.இவரின் இந்த அனுபவத்தை படித்துப்பார்த்து வாய் விட்டு சிரித்து மனதினை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.


2.மும்பை வாசியான இவர் பதிவுகளில் மும்பையைபற்றி அதிகம் அறிந்து கொள்ளலாம்.மும்பையின் ரத்த நாளங்கள் என்று இவர் குறிப்பிடுவது எதனைத்தெரியுமா? அமைதிச்சாரலின் இந்த இடுகையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


3.சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை போதை மருந்துகள்,மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு என்ற உண்மையை பதிவர் சுல்தான் வாசித்து பகிர்ந்த இந்த அனுபவம் மனதினை நெகிழ்த்தியது.


4.நியுஸிலாந்தில் கொண்டாடிய தீபாவளியை சுவாரஸ்யமாக படங்களுடன் பகிர்ந்திருக்கின்றார் இமா.


5.”வாழ்க்கையே வேடிக்கையானதுதான். அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை”இப்படி சொல்வது யார் தெரியுமா?வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டு வலைப்பூ எழுதினாலும் அர்த்தமுள்ள பேச்சுகளாக பகிரும் சித்ராதான்.


6.”விஷேஷங்களுக்கு ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை” என்று தன் ஊரைப்பற்றி வெகு சுவாரஸ்யமாக அக்பர் சொல்வதைப்பார்ப்போமா?

7.நகரத்தார் இல்லத்திருமணத்தை சுவாரஸ்யம் பட விளக்கத்துடன் கூடிய தேனம்மையின் இந்த பகிர்வை பாருங்கள்.

8.தென் மாவட்டத்தினர் மெதுவாக ஊர்ந்து செல்லும் லோக்கல் புகை வண்டியில் சோம்பேறித்தனமாக பயணம் செய்தது போக எக்ஸ்பிரஸ் ரயில் போட்டதும் பயணம் படு சுறுசுறுப்பாக தென்மாவட்டத்தினருக்கு அமைந்து விட்டதை சுவாரஸ்யம் பட சொல்லும் சோனகனின் அனுபவத்தினை பார்ப்போமா.


9.சுற்றுலா பிரியரான இவர் தான் சுற்றிவந்த ஊர்களை சுவைபட படங்களுடன் இடுகையில் பதிவிட்டு நம்மை அந்த தளங்களுக்கே அழைத்து சென்று விடுவார் கிளியனூர் இஸ்மத்


10.சேலையில் இவர் போட்டது வண்ண அலங்காரங்களும் டிசைன்களும் மட்டுமல்ல.அன்பும்,பாசமும் சேர்ந்தே.அழகாக சேலையை வடிவமைத்த செந்தமிழ்செல்வியின் கைவண்ணத்தை பார்ப்போமா.


11.வாழ்வதோ தூரதேசத்தில்.இருப்பினும் தீபாவளி முதல் சிறிய பண்டிகைகள் வரை அனைத்தையும் பழமை மாறாமல்,கொண்டாடி,அனுஷ்டித்து,அதனை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார் விஜி.



12.புகைப்படங்கள் எடுப்பதில் வித்தகி.இவர் கண்களை கவரும் விதமாக எடுத்த புகைபடங்களை வலையில் பறிமாறி பரவசப்படுத்துகின்றார் ராமலக்‌ஷ்மி.பெங்களூரில் நடந்த குடியரசுதின கண்காட்சியை தன் புகைபடகருவியினுள் சிறை பிடித்து நமக்கு விருந்தளிப்பதை ரசிப்போமா.


13.”முதுமைக்கான சேமிப்பை இதுவரை ஆரம்பித்திருக்காவிட்டாலும் இனியாவது அந்த சேமிப்பைத் தொடங்க ஆரம்பிப்போம்” என்ற விழிப்புணர்வை இக்கட்டுரை மூலம் ஆழ்ந்த அர்த்ததுடன் அடித்து சொல்லுகின்றார் மனோ சுவாமிநாதன்.


14.சுற்றுலா செல்வதற்கான பல நல்ல அவசியமான தகவல்களை விலாவாரியாக சொல்கின்றார் என்றும் இனியவன்.


15.மின்சாரம் எங்களைத் தாக்காவிட்டாலும்
மின் வெட்டு எங்களை நன்றாகவே தாக்குகிறது!என்று இன்றைய தமிழ்நாட்டின் இருட்டு நிலவரத்தை முனைவர்.இரா.குணசீலன் கூறி இருப்பது நியாயம்தானே.


16.தான் கொண்டாடிய பழமை மாறாத பொங்கல் பண்டிகையை பொங்கும் மகிழ்ச்சியுடன்,அருமையான புகைபடங்களுடன் ராஜி பகிர்ந்திருப்பதை பாருங்களேன்.


17.சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா?தொலைக்காட்சித்தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!இன்றைய தொலை காட்சித்தொடர்கள் சமூகக்கேடுகளுக்கு காரணியாக அமைந்து விட்டது என்ற உண்மையை காரத்துடன் சாடுகின்றார் வியபதி

18.வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றது கறுவல் சொல்லும் கருத்தினை படித்துப்பாருங்கள்.


19.பயணிகளின் கவனதிற்கு பாங்கான தகவல்களை அள்ளித்தெளித்திருக்கின்றார் அரபுத்தமிழன்.


20.தமிழ்நாட்டில் மட்டிலுமா உழவர் சந்தை?யு எஸ்சிலும் உழவர் சந்தை உண்டு.விசா இல்லாமல்,டிக்கெட் செலவிலாமல் யு எஸ் உழவர் சந்தைக்கு போகலாமா? இதயம் பேசுகிறது இலாவுடன் உழவர் சந்தை செல்வோமா?


21.அப்பா அத்தான் ஆன கதையை ஒரு ஆசிரியையான செபா தன் அனுபவத்தில் இருந்து சுவைபட கூறுகின்றார்.


22ஒரு பெரிய பாடகரை பிரமாதமாக அறிமுகப்படுத்தும் தளிகாவின் நகைச்சுவையைப்பாருங்கள்.



23.நாமும் கிராமத்தினுள்ளேயே போய் வந்த அனுபவம் கிடைக்கின்றது.ஒரு பொன்னான மாலைப்பொழுதினை சுவைபட பகிர்ந்துள்ள ஈரோடு கதிரின் பகிர்வை படித்துவிட்டு.


24.தாவரத்துக்கும் தனிமை பிடிப்பதில்லை,கூட்டம் தேவைப்படுகிறது என்று தன் தோட்ட அனுபவத்தினை சொல்கின்றார் கோமா.


25.நாளை பள்ளிப்பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன.பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பயன் படும் வகையில் அருமையான டிப்ஸ்களை வழங்குகின்றார் மிடில்கிளாஸ் மாதவி.


26.உஷா ஸ்ரீகுமார் பதிவுலகிற்குத்தான் புதிது என்றாலும் பத்திரிகை உலகிற்கு மிகவும் பழையவர்.கதை ,கட்டுரை,கைவினைப்பொருட்கள் என்று அனைத்தையும் எழுதக்கூடியவர்.வரும் நாட்களில் இவரது படைப்பாற்றலை வலைப்பூவில் நிறைய காணலாம்.


27.வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள்,நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் அதன் இனிமையையும்,கூட்டுக்குடும்பம் தரும் உபகாரத்தினையும் கெளசல்யா பகிர்துள்ளார்.


28.விமானப்பயணம் சிலருக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.சிலருக்கு போர் அடிக்கும்.சிலருக்கு தூக்கத்திலே கழியும்.சிலர் பக்கதில் இருப்பவருடன் பேசியே கழியும்.பதிவர் கிரிக்கோ டரியல் பயணமாக அமைந்து விட்டது.


29.எங்க போயிட்டிருக்கோம் நாம? இப்படி நியாயமாக கோபப்பட்டு இருப்பவர் வலை உலகின் புதுவரவு நிரஞ்சனா.


30.ஹைதையை அருமையாக படங்களுடன் சுற்றி காட்டி இருப்பவர் மோகன்குமார்.



31.வாழ்வில் மனிதர் தேகப்பயிற்சி செய்வதால் மனதில் உற்சாகத்தையும், அதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள். என்பதினை வேதா இலங்காதிலகம் இக்கட்டுரையில் விவரித்து இருக்கின்றார்.

மீண்டும் மற்றுமொரு சரத்தில் நாளை சந்திப்போம்.

...தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக இறைவன் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை - 4:36 அல்குர்ஆன்




89 comments:

  1. சில புதிய தளங்களை அறிந்து கொண்டேன் தொடருங்கள்

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்.. என்னையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றி :-)

    ReplyDelete
  3. அறிமுகப்படுத்தியுள்ள பதிவுகளில் சிலவற்றைத்தான் படித்திருக்கிறேன். மற்றவற்றையும் படிக்கவேண்டும். அசாத்திய சிரத்தை எடுத்து பல பதிவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ள விதத்தில் தெரிகிறது உங்கள் உழைப்பு. பாராட்டுகள் ஸாதிகா.

    ReplyDelete
  4. அதிக நபர்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். வியக்க வைக்கிறது உங்கள் முயற்சி

    ReplyDelete
  5. நிறைய பேரை வாசிப்பதால், நிறையப்பேரின் சிறப்பான எழுத்துகளை அறிந்திருக்கிறிர்கள். நிறைவான அறிமுகங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சிறப்பான பல அறிமுகங்கள். இதில் என்னையும் பார்த்ததில் மிகமிக மகிழ்வு ஸாதிகா. அறிமுகங்களுக்கு புகைப்படங்கள் கொண்டு நீங்கள் தரும் கொலாஜ் போட்டோக்களும் வெகு பிரமாதம். (நேற்றே சொல்ல நினைத்தது) அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஸாதிகா மேடம்... வலையுலகில் சீனியரான நீங்க இரண்டே பதிவுகள்தான் எழுதியிருக்கற என்னை கவனிச்சு இப்படி ஒரு Energy Tonic குடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. உங்களுக்கு என் Heartful Thanks. மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அவசியம் படிச்சுப் பார்த்து கருத்துச் சொல்வேன். OK.

    ReplyDelete
  8. படங்களை கொலேஜ் செய்து போடுவதில் உங்கள் உழைப்பு தெரிகிறது.

    Why there are 2 posts? One with photoes only & the other with details?

    ReplyDelete
  9. நிறைய பேரை வாசிப்பதால், நிறையப்பேரின் சிறப்பான எழுத்துகளை அறிந்திருக்கிறிர்கள். நிறைவான அறிமுகங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அருமையான வரிகள் ஸாதிகா!

    அனுபவங்கள் பற்றிய விவரித்தல் அழகு!!

    கொலாஜ் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடுவது ஒவ்வொரு தினத்தையும் அழகு படுத்துகிறது!

    என்னை அன்புடன் அறிமுகப்படுத்தியதற்கு மனங்கனிந்த நன்றி!! அறிமுகமான அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. நேற்றே சொல்லணும்னு நினைச்சேன். பதிவின் ஆரம்பத்தில் வரும் அந்த அறிமுகப் பத்தி அபாரம்!! உங்களின் ஆழ்ந்த எழுத்து வன்மை புலப்படுகிறது.

    ReplyDelete
  12. அறிமுகம் இவ்ளோபேரா(?) இதுல என்னையும் அறிமுகம்படுத்தி பெரிய "ஹோம் ஒர்க்" பண்ணிருக்கீங்க வாழ்த்துக்கள் நன்றி!

    ReplyDelete
  13. Thanks for writing about me too. I wrote about Hyderabad long back. Special Thanks for remembering it still !

    ReplyDelete
  14. மிக்க நன்றி!

    ReplyDelete
  15. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. போட்டோ டிசைன் மிக அருமை.

    அருமையான அறிமுகங்கள்.

    என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அக்கா.

    வலைச்சர ஆசிரியராக சிறப்பாக பணியாற்றுவதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. இனிய ஆச்சரியம். அழகான முறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  18. நல்ல அனுபவமுள்ளவர்களால் தான் இப்படியொரு அனுபவச் சரத்தை தொடுக்க முடியும்.பரந்த உங்கள் மனதிற்கு பாராட்டுக்கள் தோழி.

    ReplyDelete
  19. ஸாதிகா ,
    என் தமிழ் ப்ளாகை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
    இன்னும் தமிழ் வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை தந்துள்ளீர்கள் ....நன்றி.

    ReplyDelete
  20. இன்றைய அறிமுகங்கள் யாவும் அருமையோ அருமை.

    கொம்புத்தேனில் ஆரம்பித்து பன்முகத்திறமையாளர் வரை அத்தனை பேரையும் அழகாகவே அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

    அநேகமாக இதில் 80% நான் அடிக்கடி சென்று படித்து மகிழும் நல்ல பரிச்சயம் ஆன எழுத்தாளர்களே!

    அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  21. கட்டடத்தின் அஸ்திவாரம் போல கீழே ஒருபுறம் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களையும், மறுபுறம் திருமதி கெளசல்யா அவர்களையும் மிடிலில் மிடில் க்ளாஸ் மாதவி அவர்களையும் கொண்டு வந்து படத்தில் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமே. ;)))))

    ReplyDelete
  22. நீங்கள் தொகுத்த அனுபவ சரம் மிக அருமை, எல்லோரும் அறிந்தவர்கள் நேரமினமையால் பதிவுகளை பார்க்க முடியல

    ReplyDelete
  23. அனுபவம் குறித்த தங்கள் பார்வையும், தொகுத்திருக்கும் சரமும் மிக அருமை ஸாதிகா. பெங்களூர் கண்காட்சி அனுபவமும் அதில் இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி:)! நன்றி.

    ReplyDelete
  24. //4.நியுஸிலாந்தில் கொண்டாடிய தீபாவளியை சுவாரஸ்யமாக படங்களுடன் பகிர்ந்திருக்கின்றார் இமா.


    5.”வாழ்க்கையே வேடிக்கையானதுதான். அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை”இப்படி சொல்வது யார் தெரியுமா?வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டு வலைப்பூ எழுதினாலும் அர்த்தமுள்ள பேச்சுகளாக பகிரும் சித்ராதான்.//

    வலைவீசித் தேடினாலும் இப்போதெல்லாம் வலையில் மாட்டாமல் நழுவி ஒளிந்து வரும், என் பேரன்புக்குப் பாத்திரமான இமாவை சித்ராவையும் இன்று வலைச்சரத்தில் சிக்க வைத்து சிறப்பாகக் காட்டியுள்ளது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.

    அதற்கு என் மனமார்ந்த சிறப்பு நன்றிகள், உங்களுக்கு.

    ReplyDelete
  25. காலை 8.30 - 25வது கருத்தாளராக வருகிறேன். இது நேரவித்தியாசம். அங்கு 11- 12 மணியிருக்கும். ஓ!..அனுபவத்தில் பல அறிமுகங்கள் படத் தொகுப்புடன். அதில் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். மிகவும் நன்றி. எவ்வளவு சிரமமான வேலை இவ்வளவு பேரையும் உமது சிறந்த இடுகை, உம்மைப் பற்றி அறிமுகம் சொல்லவும் என்று கேட்டு பதில் எடுத்து அறிமுகப் படுத்துவதானால் விடிந்து விடும் அல்லாவா? தங்கள் முயற்சிக்கும் வாழ்த்தும் நன்றியும்.தொடரட்டும் பணி.நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  26. "பிறர் அனுபவத்தை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக,ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்வதே சாலச்சிறந்தது". அழகான அனுபவப்பூர்வமான வரிகள்.

    இவ்வளவு பகிர்வுகளையும் தேடித்தேடி படிக்கவேண்டிய சிரமம் எங்களுக்கு இல்லாமல் ஒரே இடத்தில் கொண்டுவந்து இணைப்பையும் தந்திருக்கிறீர்களே பாராட்டும் நன்றியும்.
    என்னை அறிமுகப் படுத்தியதுக்கும் நன்றி

    ReplyDelete
  27. இன்றைக்கு அனுபவம் பேசுதா... ஹைய்யா அக்பரோட அனுபவமும் பேசுதே..மிக அருமையான அறிமுக‌ங்கள். அதிலும் குறிப்பாக போட்டோவுடன் எல்லோரையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி. ஆசிரியரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. அடடா...அடடா.. என்னா ஒரு தொகுப்பு... காணாமல் போனோரை எல்லாம் தேடித் தேடி போட்டிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  29. மனித வாழ்க்கையை பூரணமாக்குவது அவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள்தான்.வாழ்க்கை என்ற இலக்கை தொட வேண்டுமானால் அனுபவம் என்ற நெளிவு சுளிவுகளை கடந்துதான் ஆகவேண்டும்.//

    ஆம், அனுபவம் என்ற நெளிவு சுளிவுகளை கடந்து தான் ஆக வேண்டும். நல்ல அனுபவ உரை.

    அனுபவசரங்கள் எல்லாம் அருமை.
    சில் அனுபங்கள் படித்து இருக்கிறேன் ஸாதிகா , மற்றவற்றையும் படித்து விடுகிறேன்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    தொகுத்தளித்த உங்களும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. மிக மிக அழகான அருமையான அறிமுக பகிர்வு.

    ஒவ்வொருவரின் அடையாளம் அவர்களின் ப்ரோபைல் படம் தான் அதை வரிசையாக நளினமாக அடுக்கிய விதம் கண்டு மகிழ்கிறேன்.

    அதிக அறிமுகங்களை தொகுத்து வழங்கிய உங்களின் உழைப்பை எப்படி பாராட்டினாலும் போதாது.

    என்னையும் இதில் இணைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பிற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. @ வை.கோபாலகிருஷ்ணன்

    :))

    ReplyDelete
  32. போட்டோக்களை கொலாஜ் செய்திருப்பது அழகு.

    அனுபவச்சரம் தொகுத்துள்ள விதம் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. வித்தியாசமாக வெளியிட்டு(போட்டோ கொலேஜ்) அருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  34. படத்தொடு அறிமுகப் பதிவு மிகவும்
    அருமை!
    இதில் பலரை நான் அறிவேன்
    சுவையொடு தொடரும் அறிமுக உரை
    யும் சிறப்பே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. ஸாதிகா மேடம்,

    அருமையான அறிமுகங்கள். நன்றி தங்களுக்கும், வலைச்சர நிர்வாகத்துக்கும்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  36. நீர் இன்றி வாடி சோர்ந்து கிடந்த வலைப்பூவுக்கு நீர் ஊற்றி நிமிர வைத்திருக்கிறீர்கள் ஸாதிகா...இன் செழித்து வளரும்
    நன்றி

    ReplyDelete
  37. அருமையான அறிமுகங்கள்.. வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  38. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் தோழி..

    அறிமுகங்கள் அருமை..

    என் வலையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  39. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி பிரேம்.

    ReplyDelete
  40. மிக்க நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  41. . அசாத்திய சிரத்தை எடுத்து பல பதிவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ள விதத்தில் தெரிகிறது உங்கள் உழைப்பு. பாராட்டுகள் ஸாதிகா.//வரிகள் என்னைனுற்சாகம் கொள்ள வைக்கின்றன கீதமஞ்சரி மிக்க நன்றி.

    ReplyDelete
  42. கருத்துக்கு மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்,

    ReplyDelete
  43. நிறைவான அறிமுகங்கள். வாழ்த்துகள்.//மிக்க மகிழ்ச்சி தமிழ் உதயம்.நன்றி.

    ReplyDelete
  44. கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.

    ReplyDelete
  45. என்னை கவனிச்சு இப்படி ஒரு Energy Tonic குடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. //இந்த வரிகளைப்பார்க்கும் பொழுது புதிய பதிவர்களை இன்னும் தேட் தேடி அறிமௌகப்படுத்தவேண்டும் போல் உள்ளது நிரஞ்சனா.கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  46. மிக்க நன்றி மோகன் குமார்.படங்களுடன் அன்றைய வலைச்சரத்தின் லின்கை படத்துடன் என் வலைப்பூவான எல்லாப்புகழும் இறைவனுகேவில் தினமும் பதிவிடுகின்றேன்.என் வலைப்பூவை ஃபாலோ பண்ணுபவர்களின் டாஷ் போர்டில் தெரிய வேண்டும் என்பதற்காக.நன்றி மோகன குமார்

    ReplyDelete
  47. மிக்க நன்றி லக்‌ஷ்மியம்மா.

    ReplyDelete
  48. கொலாஜ் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடுவது ஒவ்வொரு தினத்தையும் அழகு படுத்துகிறது!
    //வரிகளில் மிக்க மகிழ்ச்சி மனோ அக்கா.

    ReplyDelete
  49. மிக்க நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  50. மிக்க நன்றி கருத்திட்டமைக்கு சகோ இஸ்மத்

    ReplyDelete
  51. நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  52. மிக்க நன்றி கறுவல்

    ReplyDelete
  53. மிக்க நன்றி ஈரோடு கதிர்

    ReplyDelete
  54. கருத்துக்கு மிக்க நன்றி அக்பர்

    ReplyDelete
  55. கருத்துக்கு மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி

    ReplyDelete
  56. கருத்துக்கு மிக்க நன்றி தோழி ஆசியா.

    ReplyDelete
  57. இன்னும் தமிழ் வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை தந்துள்ளீர்கள்//ரொம்ப சந்தோஷமாக இருக்கு உஷாஸ்ரீகுமார் மேம்.அந்நாளில் இருந்து உங்கள் எழுத்துக்களையும் கைவண்ணத்தினயும் ஆழ்ந்து ரசித்து இருக்கின்றேன்.வலையுலகிலும் நிறைய பதிவிட வேண்டும் என்பது என் அவா,மிக்க நன்றி.

    ReplyDelete
  58. கட்டடத்தின் அஸ்திவாரம் போல கீழே ஒருபுறம் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களையும், மறுபுறம் திருமதி கெளசல்யா அவர்களையும் மிடிலில் மிடில் க்ளாஸ் மாதவி அவர்களையும் கொண்டு வந்து படத்தில் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமே. ;)))))அடேங்கப்பா..என்ன நுண்ணியமான கவனிப்பு.கிரேட் வை கோபாலகிருஷ்ணன் சார்.தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  59. கருத்துக்கு மிக்க நன்றி ஜலி.பொறுமையாக பாருங்கள்.

    ReplyDelete
  60. வலைவீசித் தேடினாலும் இப்போதெல்லாம் வலையில் மாட்டாமல் நழுவி ஒளிந்து வரும், என் பேரன்புக்குப் பாத்திரமான இமாவை சித்ராவையும் இன்று வலைச்சரத்தில் சிக்க வைத்து சிறப்பாகக் காட்டியுள்ளது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.//உண்மைதான் வி ஜி கே சார்.திறமையாக எழுதுபவர்கள்.எதற்கு அடிக்கடி பதிவிட மறந்து போகின்றனரோ?

    ReplyDelete
  61. கருத்துக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  62. மிக்க நன்றி வியபதி கருத்திட்டமைக்கு.

    ReplyDelete
  63. மிக்க நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  64. கருத்துக்கு மிக்க நன்றி அதிரா.

    ReplyDelete
  65. பொன்னான சிறு உரையுடன் கருத்திட்ட்மைக்கௌ மிக்க நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  66. ஒவ்வொருவரின் அடையாளம் அவர்களின் ப்ரோபைல் படம் தான் அதை வரிசையாக நளினமாக அடுக்கிய விதம் கண்டு மகிழ்கிறேன்.//நானும் இவ்வரிகளில் மகிழ்கின்றேன் கெளசல்யா.மிக்க நன்றி.

    ReplyDelete
  67. மிக்க நன்றி சகோ ஆதிவெங்கட்

    ReplyDelete
  68. மிக்க நன்றி விச்சு.

    ReplyDelete
  69. வருகைக்கு மிக்க நன்றி புலவரய்யா,

    ReplyDelete
  70. கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  71. நீர் இன்றி வாடி சோர்ந்து கிடந்த வலைப்பூவுக்கு நீர் ஊற்றி நிமிர வைத்திருக்கிறீர்கள் ஸாதிகா...இன் செழித்து வளரும்
    நன்றி//ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கோமா.மிக்க நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  72. நீர் இன்றி வாடி சோர்ந்து கிடந்த வலைப்பூவுக்கு நீர் ஊற்றி நிமிர வைத்திருக்கிறீர்கள் ஸாதிகா...இன் செழித்து வளரும்
    நன்றி//ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கோமா.மிக்க நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  73. மிக்க நன்றி பாயிஜா.

    ReplyDelete
  74. மிக்க நன்றி முனைவர் குணா.

    ReplyDelete
  75. நல்ல அறிமுகங்கள்.... சிலர் புதியவர்கள்....

    பார்க்கிறேன்...

    தொடர்ந்து நல்ல அறிமுகங்கள் செய்ய வாழ்த்துகள்..

    ReplyDelete
  76. சிற, சிற, சிறப்பான , அழகிய அறிமுகங்கள்.

    ReplyDelete
  77. கருத்துக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  78. கருத்துக்கு மிக்க நன்றி சகோ நிஜாம்.

    ReplyDelete
  79. பதிவர்களை அறிமுகப்படுத்தும் தங்களின் பாணி கலக்கல்,புகைப்படங்களை ஒருங்கினைத்ததும், அனுபவச்சாரல் பற்றிய முன்குறிப்பு, உங்களால் ஆழ்ந்து கவனிக்கப்பட்ட அனைத்து பதிவுகள், அதனை குறித்த தங்களின் பார்வை அதனை வெளிப்படுத்திய மொழிகள் , இறுதியில் வரும் இறைவசன தமிழாக்கம், அனைத்தும் அற்புதம், அருமை,தமிழ் பதிவர் உலகில் தங்களின் சீரிய பணியில் இந்த தருனமும் ஒரு மைல் கல்,ஊர் குட்டையை மட்டுமே சுற்றி் வரும் என் போன்றவர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் தொடர இதயம் கணிந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  80. அட! நியூஸியில் இன்னொரு பதிவர் இருப்பதை இன்று உங்கள் இந்த இடுகையின் மூலம்தான் அறிந்தேன்!!!!!

    நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  81. ”வாழ்க்கையே வேடிக்கையானதுதான். அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை”இப்படி சொல்வது யார் தெரியுமா?வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டு வலைப்பூ எழுதினாலும் அர்த்தமுள்ள பேச்சுகளாக பகிரும் சித்ராதான்.


    ...... என்னையும் மறக்காமல், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளமைக்கு மனமார்ந்த நன்றிகள். உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  82. ஸாதிகாவின் அனுபவச்சரத்தின் மூலம் இங்கு அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    இன்றைய இந்த இடுகையைப் பற்றி என் கவனத்திற்குக் கொண்டுவந்த VGK அண்ணாவுக்கு நன்றி. ;)

    அறிமுகம் செய்துவைத்தமைக்கு அன்பு நன்றிகள் ஸாதிகா.

    Kia ora துளசி அக்கா. ;) //நியூஸியில் இன்னொரு பதிவர்// நான் உங்கள் பதிவுகள் பல படித்திருக்கிறேன். நீங்கள் எழுதிய 'நியூசிலாந்து' புத்தகம் கூட வைத்திருக்கிறேன். உங்களைப் போல எழுத வராது எனக்கு. சுவாரசியமான எழுத்துநடை உங்களது.

    நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இமாவின் உலகில் இடுகைகள் தொடரும் ஸாதிகா. விடாமல் இழுத்துப் பிடித்து வந்ததற்கு... நன்றி. ;)

    ReplyDelete
  83. மிக்க நன்றி ஸாதிகா..

    சிறப்பான பகிர்வுகள். என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.:)

    ReplyDelete
  84. நல்ல அருமயான எழுத்துகள் அதன் வழி நல்ல புதிய வலைபூக்களின் அறிமுகங்கள். உங்க எழுத்தின அழகே தனி இந்த வலைசரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி. வலைசரத்திற்க்கும் என் நன்றி.மேலும் தொடருங்கள் உங்கள் பனி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  85. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  86. அனுபவப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..!! :-)

    ReplyDelete
  87. கருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  88. ஸாதிகா என்னுடைய தளத்தையும் குறிப்பிட்டதிற்கு நன்றி :-)

    ReplyDelete
  89. பஸ் பிறகு +ல் ஏறியதிலிருந்தே வலைப்பூ பக்கம் வருவது குறைந்து விட்டது. தங்களின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி. மிகத்தாமதமான கருத்துரைக்கு வருந்துகிறேன். தங்களின் கடுமையான உழைப்பு பக்கங்களில் பளிச்சிடுகிறது.

    ReplyDelete