கவிதை பற்றி நம்மில் பலருக்கும் பல அபிப்ராயங்கள்
உள்ளன.சில கவிதைகள் சிலருக்குப் புரிகிறது, சிலருக்குப்
புரிவதில்லை.
கற்பனையாளனின் சிந்தனைத் திறனால் ஒரு வடிவம் கொடுத்து வரிகளை அழகாக்கி லயத்துடன் படைப்பதுதான் கவிதை என்று சொல்லுவேன்.
கவிதை மூலம் செய்திகள் அனுப்பியவர்களும் உண்டு.நட்பை பலப்படுதியவர்களும் உண்டு.உறவுகளை ஏற்படுத்திக்கொண்டவர்களும் உண்டு என்பது சரித்திரம் கூறும் உண்மை.
சில சினிமா பாடல்கள் பிறந்த கதையினை பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் விலகிய காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர் கண்ணதாசன் , காமராஜரை மனதில் வைத்து ,பெருந்தலைவர் காமராஜர் காதில் எத்தி வைப்பதற்காக எழுதிய பாடல் இது.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச்சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன்இல்லாமல் தோகை ஏதடி
கவிஞர் வைரமுத்து எழுதி புகழ் பெற்ற
அந்திமழை பொழிகிறது
ஒவ்வோரு துளியில் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
இந்த பாடலை கேட்கும் பொழுது இந்திரன் தோப்பில் முந்திரி காய்த்தால் என்ன மாங்காய் காய்த்தால் என்ன ஏதோ வார்த்தை ஜாலத்திற்காக எழுதி இருப்பார் கவிஞர் என்றுதான் நினைத்தேன்.
பிரிதொரு சமயம் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து ஒரு பேட்டியில் “முந்திரி ஆண்மையை வீரத்தை வீரியத்தை அதிகரிக்கக்கூடியது.இந்திரன் என்பவன் வீரம் மிக்கவன் வீரியம் மிக்கவன்.அந்த இந்திரனின் தோட்டத்து முந்திரி எத்தனை வீரியமிக்கதாக இருக்கும் என்ற பேட்டி வரிகளை பார்க்கும் பொழுது வியந்து போனேன்.
அதே போல் மறைந்த புரட்சித்தலைவர் எம் ஜி ஆரும் ,ஈ டி ஏ நிறுவனரும் பிரபல தொழில் அதிபரும், கல்வியாளருமான பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் உடன் உள்ள நட்பில் உண்டான நெருக்கத்தில் பிறந்ததே கீழ் கண்ட பாடல் என்பது செவி வழிச்செய்தி.
எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
இப்படியாக பல வித கவிதைகள் பற்பல பரிணாமத்தில் பிறந்துள்ளது என்பது வரலாறு கூறும் உண்மை.
நம் வலையுலக நட்புக்கள் தங்கள் கற்பனையில்,அனுபவத்தில்,கண்டவற்றில்,கேட்டவற்றில் உதித்தவற்றில் ஜனித்த அழகிய கவிதைகளை சரமாக்கி தொடுத்து அலங்கரித்த சில கவிதை மலர்களை இக்கவிச்சரத்தில் நுகர்வோமா?
1.தொலைக்காட்சி பிஞ்சுகளின் மனதில் எங்ங்கனம் விஷ வித்தை விதைக்கின்றது என்பதினை வழக்கம் போல் படு அசத்தலாக கவிதையில் பொழிந்திருப்பவர் ரமணி சார்.
2.பாவிகளே!இரக்கமில்லையா?உங்களுக்கு
இதயமென்பதே இல்லையா உங்கள் தேகத்துக்குள்!இப்படி உணர்வுப்பூர்வமாக கவிதையில் கொதிப்பவர் மலிக்கா.
3.கூகுளின் அதிரடி மாற்றம் தந்த குழப்பத்தை கவிதையில் வடித்து அசத்தி இருப்பவர் புலவர் சா இராமாநுசம்.
4.அன்பிற்கு வண்ணமுண்டோ?உண்டென்கின்றார் இந்த பெண் கவிஞர்.என்ன நிறமா? கவிதாயினி மதுமிதா பக்கம் வாருங்கள்.
5.சின்னஞ்சிறு வரிகளிலே பெரிய பெரிய விஷயங்களை கவிதையில் வடித்திருப்பவர் சீமான்கனி.
6.சில வரிகளிலேயே நச் என்று கவிதை பாடி வியக்க வைத்து விடுவார் நட்புடன் ஜமால்.
7.புதுமைகள் அறிந்து,பழமைகள் களைந்து புரட்சி செய்ய மங்கயருக்கு அழைப்பு விடும் நினைவுகளுடன் நிகே கருத்தை கவிதை வடிவில் பாருங்கள்.
8.கேள்விக்கணைகளை தன் கவிதை வரிகளில் தொடுத்து புருவம் ஏற வைப்பவர் ஹைதர் அலி.
9.கனவை கவிதையாக்கி ’உச்’ கொட்ட வைத்து விட்டார் விச்சு.
10.புத்துயிரை ஜனிக்கும் தாயின் மனஓட்டத்தை படம் பிடித்து காட்டும் வரிகளை இக்கவிதையில் வடித்திருப்பவர் சி.கருணாகரசு.
11.வானையே கடலாக்கி ரசனையுடன் கவிதை பாடி இருக்கின்றார் ஷைலஜா.
12.மேகம் காற்று மின்னல் இடி இவற்றை என்ன கற்பனை வளத்துடன் ஒப்பீடு செய்கின்றார் நம்பிக்கை பாண்டியன்.
13.வாழ்வின் யதார்தத்தை கவிதை வரிகளில் அடித்து சொல்லும் அம்பாளடியாள்
14.தோழன் மபாவின் அழகிய ஹைக்கூ
15.இணையைப்பற்றிய ஒரு இணக்கமான கவிதை பிறந்திருப்பது கலியுகம் தினேஷ்குமாரிடமிருந்து.
16.நான் உன்னை
பலமுறை சந்திக்க
ஆசைப்படுகிறேன்
எனது காதலோ
ஒரே ஒரு முறை
விவாகத்தை சந்திக்க
ஆசைப்படுகிறது வார்த்தைகளில் விளையாடி அசத்தி இருப்பவர் மதுமதி
17.இதுதான் வாழ்க்கை என்று அழகுற பனித்துளிசங்கர் கவிபாடி இருக்கும் கவிதையைக்கேளுங்கள்.
18.இளையதலை முறையினரின் முறையற்ற இதுதான் நவ நாகரீகம் என்ற மாயையில் மற்றவரை மதியாது வாழும் வாழ்க்கைக்கோட்பாடை சாடி இருப்பவர் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜாராகவன்
19.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது வேடந்தாங்கல் கருணின் இக்கவிதை வரிகளிலே.
20.ஜெரிஈசானந்தாவின் கனக்க வைத்த கவிதை வரிகள்.
21.சின்னஞ்சிறு மகளின் தவிப்பினை சிறு வரிகளில் படம் பிடித்து காட்டி இருப்பவர் மதுரை சரவணன்.
22.மனதை கலங்கடித்த வரிகளில் கவிதை பாடி நெஞ்சை கனக்க செய்துவிட்டார் தீபிகா.
23.தோள் கொடுப்பான் தோழன் என்பதினை வெகு அழகாக சொல்லி இருப்பவர் ராஜி.
24.பொருந்தாத நேரத்தில் நா தவறி செப்பும் சொல் விருந்து சாப்பாட்டில் சுவை கெடுக்கும் உப்புக்கல் என்ற தத்துவத்தை சத்ரியன் வெகு அழகாய் கவிதையில் வடித்திருக்கின்றார்.
25.புண்ணியம் சேர்க்காதவன் மட்டுமல்ல.இவன் மனதில் புண்ணும் நிறைந்தவன்.யாரவன்?கலையின் கைவண்ணதில் பாருங்கள்.
26.மின்வெட்டுக்கொடுமையை சிறிய வரிகளில் கவிதை வடித்திருப்பவர் ஆர்.வி சரவணன்.
27.”கடலை பூத்து காய்ப்புக்கும் தயாராச்சு..கன்று மரமாகி குலை குலையா தள்ளிருச்சி “ எதற்கு இந்த புலம்பல் என்று பார்க்கின்றீர்கள்.மண் வாசனை மணமணக்க கிராமிய நடையில் குடந்தை அன்புமணியின் கவிதை வரிகளை கேளுங்கள்.
28.நடைபாதை வாசியின் வாழ்கை முறையை நெகிழ வைக்கும் படத்துடன்,மனதை கனக்கச்செய்யும் வரிகளுடன் தென்காசித் தமிழ் பைங்கிளி எழுதிய கவிதை இது.
29.நம்பிக்கை பற்றி தோழி பிரஷா மென்மையாக கவிதை பாடி இருக்காங்க.
30.சிறப்பு என்றால் என்ன?இபுனு ஹம்தூன் தன் கவிதை வரிகளில் சொல்லி இருக்கின்றதை பாருங்கள்.
31.நசிந்து வரும் நெசவுத்தொழிலை பற்றி விசனப்படுகின்றார் சசிகலா .வளர்ந்து வரும் நாகரீகத்தில் காந்தியின் கனவு பொய்யாய் போன உண்மையை அழகாக கூறுகின்றது இக்கவிதை வரிகள்
32.சிறகு விரித்த அலுமினியப்பறவை வானில் சீறிப்பாய்ந்த பொழுது அதில் செய்த முதல் பயணத்தை தித்திப்பாய் கீழை இளையவன் கூறும் இக்கவிதை கேளுங்கள்.
33.குழந்தைகள் இல்லாதவீடு எப்படி இருக்கும்.கவிதைவீதி செளந்தரின் கவிதையை பாருங்கள்.
34.மழையில் கரையும் குடிசைவாசியின் வாழ்கையை உணர்வு ஒங்க கூறும் கவிதையை வடித்திருப்பவர் செய்தாலி.
35.புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர் பார்த்து கவிதை எழுதி இருக்கும் மஞ்சுபாஷினியின் நம்பிக்கை ஈடேறட்டுமாக.
36.சி.பிரேம்குமார் சில வரிகளிலேயே எழுதிய “நச்”கவிதையை பாருங்கள்.
மீண்டும் நாளைய சரத்தில் சந்திப்போம்!
நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)
ReplyDeleteஸாதிகா அக்கா நான் வலைச்சரத்திலும் முதலாவதாக வந்திட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..
ReplyDeleteகவிதைச்சரம் கலக்கல்.... கிட்டத்தட்டக் களைச்சுப் போயிருப்பீங்களே இப்போ.. நாளையோடு ஓய்வாக்கும்.. அதன் பின்பு நல்லா ரெஸ்ட் எடுங்கோ...
கவிதையில் கலக்கியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என்னையும் கவிதை ஜாம்பவான்களோடு இணைத்து
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
இவர்கள் அனைவருமே நான தொடர்கிற அருமையான கவிஞர்கள்
அவர்களை மிக மிக அழகாக அறிமுக்ம் செய்த தங்களுக்கு நன்றி
அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். இங்கு ரமணி அண்ணா தவிர வேறு யாரையும் பெரிதாக அறிமுகம் இல்லை. கவிதை படிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஎனது பதிவையும் தங்கள் சரத்தில் இணைத்தமைக்கு நன்றி
ReplyDeleteகவிச் சரம் வெகு அழகு. பல கவிஞர்கள் தெரிந்தவர்கள் எனக்கு. புது அறிமுகங்களும் நிறையக் கிடைத்தன. அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteசரம் சரமாய் கவிதைகள்.....
ReplyDeleteரசித்தேன்.....
இனிய கவிதைச்சரம் அருமை.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅறிமுகச் சரம் தொடுத்த விதம் அழகு வாழ்த்துக்கள் சகோ....
ReplyDelete"கவிச்சரம்" வழங்கிய உங்களுக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுகங்களைக்கொடுத்து அறிமுகம் செய்தவிதம் புதுமை... எனக்கு கிளிதான் கிடைத்ததா?:) (இடுகைல எங்காவது என்படம் இருக்குமே இல்லேன்னா இணையத்தில் எங்காவது இருந்துகொண்டிருப்பேனே?:))பரவாயில்லை பொண்ணு கிளிபோல இருக்கான்னு சொல்லி ஏமாத்திட்டாங்கன்னு என் கணவர் இன்னமும் சொல்லிட்டே இருக்கார்!!:)
ReplyDeleteநன்றி மிக...
தோழி, செய்திகளோடு அழகான கவி நடையில் கவிச்சரமும் அசத்தல்.வாசிக்கும் பொறுப்பை அதிகமாகத் தந்து விட்டீர்கள்.உங்கள் அறிமுகங்கள் மூலம் ஏகப்பட்ட பதிவர்களை இனம் கண்டு கொண்டேன்.மிக்க நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteகவிப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ..!! :-)
ReplyDeleteபெரிய எழுத்தாளர்கள் மத்தியில் சசிக்கும் ஒரு இடம் கொடுத்த தங்களுக்கு எனது நன்றி . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteஅனைவருமே கில்லாடிகள்தான்!
ReplyDeleteஇனிய கவிதைச்சரம் அருமை.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஆகா ...புகைப்படங்களுடன் அருமை சாதிகா அனைவரின் கவிதைகளும் ..என் கவிதையும் வெளிகொனர்ந்ததற்கு நன்றி சாதிகா..வாழ்த்துக்கள்
ReplyDeletethanks ..
ReplyDeleteஅழகில்
ReplyDeleteநிறத்தில்
குணத்தில்
நறுமணத்தில்
தனிச் செம்மையில்
கவிச்சரத்தில்
கவிதை பூக்கள்
வலைச்சர
கவிதை மலர்களில்
மணக்குது தமிழ் வாசம்
என்னையும் உங்களோடு சேர்த்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி !!1
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteகவிச்சரம் அருமையாகத் தொடுக்கப் பட்டுள்ளது. நான் அறியாத
பலரை அறிந்தேன்!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹ்ம் நன்று.தொடருங்கள்:)
ReplyDeleteavvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv எனக்கு என்ன சொல்லுவேதெண்டேத் தெரியலையே .... அக்கா மிக்க நன்றி ...
ReplyDeleteகவி மழை பொழியும் பதிவுகள்.வாழ்த்துகள்.
ReplyDeleteகவித்துவமான பதிவு...
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் என்னை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
நன்றி ஸாதிகா. உங்கள் உழைப்பு கடுமையாக உள்ளது. நிச்சயம் இரவு தூக்கமில்லாமல் இருந்திருப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ஸாதிகாக்கா. அனைத்து அறிமுகங்களும் அருமை. தொடருங்கள்.
ReplyDeleteஸாதிகா அவர்களுக்கு
ReplyDelete//ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்///
உண்மையில் இந்த வரிகளை இப்போது தான் கவனிக்கிறேன் படித்தவுடன் ஒரு வகையான சிலிர்ப்பு. பகிய்வுக்கு நன்றி
கவிதை மலர்களை இக்கவிச்சரத்தில் நுகர்ந்(தேன்)
இக்கவிச்சரத்தில் என் வலையுகம் எனும் வலைப்பூவையும் கோர்த்தமைக்கு நன்றி ரொம்ப மகிழ்ச்சி
வண்க்கம் சகோதரி..கவிச்சரம் சிறப்பு..இப்பதிவில் எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய சகோதரி கவிச்சரம் கண்டேன். பற்பல அறிமுகத்வில் தங்கள் பிரயத்தனம் தெளிவாகிறது. அறிமுகவர்களிற்கும், தங்கள் உழைப்பிற்கும் வாழ்த்துகள். (எனது முக்கிய பாதையும் கவிதை தான். ஊடே ஊடே மற்றவைகளும் தொடருகிறது.) பணி தொடரட்டும். நானும் தொடர்வேன். வாழ்த்துகள் மறுபடியும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஆளுயர மாலை போல் எத்தனையெத்தனைக் கவிஞர் பக்கங்களைச் சரம் தொடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteகவிச்சரத்தில் என்னையும் தொடுத்ததற்கு நன்றிங்க ஸாதிகா.
கவிதைச்சரத்தில் சரம் சரமாய் கவிதைகள் அருமை.
ReplyDeleteசலாம் சகோ ஸாதிகா,
ReplyDeleteசூப்பர்.. வலைச் சரம் ஆசிரியர் பொறுப்பை மிகச் செம்மையாகவே செய்கிறீர்கள். பதிவுகளை தொகுத்த விதம் ரொம்ப நல்லா இருக்கு. குட் வொர்க்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteஅனைத்து கவிதைகளும் அருமை....சூப்பர் சூப்பர் ...
ReplyDeleteமிக நேர்த்தியான தொகுப்பு. கொஞ்சம் கடுமையானதும் கூட...! தற்போதைய சூழ்நிலையில், இதற்கென நேரம் செலவழித்து தொகுத்த தங்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி...
ReplyDeleteஎன் கவிதைகளையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதங்களின் கடின உழைப்புக்கு என் வணக்கம்!
ReplyDeleteதெளிந்த ஓட்டத்தில் இருக்கிறது உங்க பார்வை.... உங்கள் நதியில் என் படகையும் பயணிக்கவிட்ட தங்களுக்கு என் நன்றி!நன்றி!!
எனது பதிவை தங்கள் சரத்தில் இணைத்தமைக்கு நன்றி ஸாதிகா
ReplyDeleteகவிச்சரத்தில் என்னையும் ஒரு மலராய்த் தொடுத்தமைக்கு நன்றி ஸாதிகா.
ReplyDeleteதாங்கள் தொடுத்து தொகுத்த விதம் அருமை.பிற மலர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
சிறந்த பல கவிதைகளையும், நல்ல கவிஞர்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை, குறிப்பாக அந்த புகைப்பட தொகுப்பு! அதில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு நன்றிகள்!
ReplyDeleteவித்தியாசமான முறையில் நேர்த்தியாக கவிச்சரம் பகுதி மூலம் பலரை அறிமுகப்படுத்தி வைத்ததிலும்...என்னையும் தேர்ந்தெடுத்து அறிமுகம் கொடுத்து பதிப்பிட்டமைக்கும் நன்றிகள் ஸாதிகா.
ReplyDeleteஎன் ப்லாக்கை நானே மறந்துட்டேன், எனக்கே ஞாபகப்படுத்தியது போல் உள்ளது, மிக்க நன்றிங்க ...
ReplyDeleteகருத்திட்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்:)
ReplyDeleteதம்பி ஜமாலை என் வலைச்சர அறிமுகம் மீண்டும் வலைப்பூ பக்கம் ஈர்த்து விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.அறிமுகம் பார்த்ததுமே என் வலைப்பூ பக்கமும் வந்து ஒன்றுக்கு இரணாடாக பின்னூட்டி விட்டீர்கள்.வழக்கம் போல் பதிவர்களுக்கு பின்னூட்டி ஊக்கம் கொடுத்து,உங்கள் வலைப்பூவிலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கருத்துக்களை இனி தொடர்ந்து பகிர்வீர்கள் என நம்புகிறேன்.
கருத்திட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteதம்பி ஜமால்,வலைச்சர அறிமுகம் தங்களை மீண்டும் வலைப்பூ பக்கம் ஈர்த்து விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.
என் வலைப்பூவுக்கும் வருகை தந்து ஒன்றுக்கு இரண்டாக பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.
இனி வழக்கம் பதிவுகளுக்கு பின்னூட்டி பதிவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழக்கம் போல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்கள் வலைப்பூவிலும் உங்கள் எண்ணங்களை தொடர்வீர்கள் என நம்புகிறேன்.
அன்பு அக்கா மன்னிக்கவும் என்னை. லேட்டாக வந்தமைக்கு..
ReplyDeleteபலகவிவித்வான்களோடு இந்த கத்துக்குட்டியையும் கூட்டு சேர்த்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
உங்களின் கவிச்சரம் என்றும் மணம்வீசும் மலர்ச்சரமாய் இருக்கிறது பாராட்டுகள்..
மற்ற கவி ஜாம்பவான்களுக்கும் வாழ்த்துகள்
நன்றி ஸாதிகா :)
ReplyDelete