Friday, March 23, 2012

மறுக்கபடும் குடிமக்கள் உரிமைக் குரல்கள்!


எப்படியோஅதிகாரம், காங்கிரஸ், பிஜேபி, கம்னிஸ்டு பணக்கார அரசியல் ஜெயித்து விட்டது எப்போதும் போல் சாதாரணமக்கள் குரல் நசுக்கப்பட்டு தோற்கடிப்பட்டுள்ளனர்.

மக்கள்கோரிக்கைக்கு இணங்க எந்த விஞ்ஞானக் குழுவும் மக்களோடு பேசியதாக தெரியவில்லை அதே போன்றுமக்கள் பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கவும் இல்லை. எல்லோரும் ஊடகத்துடன் பேசினர் தங்கள்கருத்துக்களை சொல்லி விட்டு சென்றனர். ஊடகங்களும் தெளிவான கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்த்தாக இல்லை. சில பத்திரிக்கைகள் மேலும் பயம்காட்டி செய்தி வெளியிட்டனர். சிலர் மக்கள் கருத்தாக்கதைகுழப்பத்திற்க்குள் இட்டு சென்றனர். தினமணி போன்றபத்திரிக்கை வேறு வழியில்லை சிலுவையை ஏற்று கொள்ளுங்கள் என உபதேசித்தது. அரசுவும் மக்கள்பக்கம் நிற்பது போல் நின்று திடீர் என தங்கள் 144 என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தங்கள்அதிகாரத்தை தக்க வைத்து தன் விருப்பதை நிறைவேற்றி கொண்டது.

சமூகத்தில்வருங்கால தூண்களான மாணவர்கள் வாழ்க்கையை எண்ணி பார்த்திருந்தால் +2 தேற்வு நிம்மதியாக எழுதவாவது ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஏற்கனவே 8 மணிநேர மின் தட்டுப்பாடால் பெரிதும்துன்பப்பட்டுள்ள நிலையில் இடிந்தகரை குழந்தைகள் மற்றும் மக்களுக்கு இன்னும் ஆழமான காயங்களை ஏற்படுத்தி விட்டது நமதுஅரசு.


மக்கள்வசிக்கும் பகுதியில் அணு உலை நிறுவியது வழியாக சர்வதேச கட்டுபாட்டை தாண்டிய இந்தியஅரசு கூறும் வாக்குறுதிகளை நம்பும் படியாக இன்று மக்கள் இல்லை. மேலும் அணு உலையால் ஆபத்துஏற்றப்பட்டால் மக்களுக்கு தரும் இழப்பீட்டை பற்றியும் இன்னும் ஒன்றும் சொல்லாத நிலையில்கலாம் அவர்களால் 10 மக்கள் நலன் பரிந்துரைகளை பெற்றுள்ள அரசு என்ன செய்ய போகின்றது எனபார்க்க வேண்டியிருக்கின்றது. 24 வருடம் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்வி போராட்ட குழுவினருக்கு வைப்பது போலவே அரசு நிறுவனங்களுக்கு இதே கேள்வையை கேட்க தோன்றுகின்றது.

இந்தபிரச்சனையால் இதில் துளி ஏதும் சம்பந்தமில்லாத பல சமூக நல சங்கம் கணக்குகளை முடக்கியதால்அவர்களை சார்ந்த பல மக்கள் துன்பத்திற்கேஉள்ளாகியுள்ளனர். மேலும் திட்டமிட்ட மின்சார தட்டுப்பட்டால் அணு உலையால் பாதிப்பு இருந்தாலும் பரவாயில்லை உள்ளளவு காலம் மின்சார வசதியுடன்நிம்மதியாக வாழ்ந்து போய் சேர வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் பல மக்கள்! அதிகாலை5 முதல் 6 வரை, காலை 9 முதல் 12 வரை அதே போன்று மாலை 3 முதல் 6 இரவு 7.30 முதல் 8.30 மறுபடியும் இரவு 9.30 முதல்10.30மின் தட்டுபாடு நடு இரவு 12யில் இருந்து 1 மணி வரை என மக்களை வாட்டி வதக்கி, அணு உலை இருந்துவிட்டு போகட்டும் என்ற மனநிலைக்கு தள்ளி விட்டது இந்த அரசு நிறுவனங்கள்.

முல்லைப்பெரியார்என்றதும் உருவாகிய தமிழ் உணர்வலைகள் கூடங்குளம் விடயத்தில் உணவர்வற்று போனதும் நகைப்புகுரியதே.

மக்களைநியாயமாக புரியவைக்காது சட்டத்தால் ராணுவ- போலிஸ் அச்சுறுத்தல் கொடுத்து முடக்கி விட்டனர்.உதயகுமாரிடம் குற்றம் என்றால் அவரை தண்டிக்காது விடுத்து அவர் மனைவி நடத்தும் பள்ளியைகூட நொறுக்கியுள்ளர் .

வெள்ளைக்காரன்ஆட்சிகளில் கூட மக்கள் இந்தளவு அடக்குமுறைக்கு உள்ளாகியிருபார்களா என்பது சந்தேகமே.இதில் ஆச்சரியமான சூழல் என்னவென்றால் இளம் சமூகத்தினர் தங்கள் நாட்டு மக்கள் கருத்துசுதந்திரம் பறிமுதல் ஆகுவதிலோ அடக்கப்படுவதிலோ துளியும் வருத்தம் கொள்ளவில்லை. மேலும் இயற்கை சீரழிவு, வரும் காலம் என்பதே பற்றி கவலையற்றுஎப்படியும் மின்சாரம் கிடக்க வேண்டும், இன்றைய தினம் தங்கள் தேவை பூரித்தி ஆகுகின்றதா என்பதில் தான் மும்முரமாக உள்ளனர்.
கூடங்குளம்பிரச்சனையில் கத்தோலிக்க சபையினருக்கு இருக்கும் கருத்து மற்று கிரிஸ்தவ பிரிவுகளுக்குஇல்லை என்பதும் ஆச்சரியமே. ஈழத்தில் மக்கள் குரல் எவ்வாறு ஒரு சிங்கள அரசால் நசுக்கப்படதோஅதே போன்றே ஒரு தமிழ் அரசால் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டது என்பதும் வருந்ததக்கதே. அடிதட்டு மக்களில் குரலை உணர்வுகளைபுரக்கணிப்பது அவர்கள் குரல்கள் நசுக்கப்படுவது குடியரசு நாட்டில் செயல்பாட்டுக்குநல்லதல்ல இதன் பின் விளைவுகள் பயங்ககரமாக தான் இருக்கும்..

1 comment: