வலைச்சர
ஆசிரியர் – பதிவுலகில் சில பதிவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அந்தஸ்து! நான் பதிவுலகில்
கால் பதித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள், இல்லை இல்லை, மாதங்கள்
கழித்து எனக்கு அந்த அந்தஸ்து இப்போது கிடைத்திருக்கிறது. ஆம். இன்று முதல் ஆரம்பிக்கும்
வாரத்தில் வலைச்சரத்தில் நான் தொடுக்கப் போகிறேன் சரம்சரமாய் வலைப்பூக்களை... வலைச்சரத்தில்
முதல் பூவாய் மகிழம்பூ! என் சுயச்சரமாக!
வலைச்சர
ஆசிரியர் பதவி இப்போது தான் வாய்த்தது என்றாலும் வலைச்சரம் எனக்கோ, நான் அதற்கோ புதியவன்
இல்லை. எனது வலைப்பூ இது வரை இருபது முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
எனது வலைப்பூவினை அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
செப்டம்பர்
30 2009 அன்று ஆரம்பித்தது என் வலைப்பயணம் – குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர்
நடராஜனும்
என்ற பதிவின் மூலம். அன்று தொடங்கிய பயணம் இதுவரை இருநூற்றி
முப்பத்தி ஏழு பதிவுகளுடன் சுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் எழுதிய
பதிவுகளுக்கும், இப்போது எழுதும் பதிவுகளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். எனக்கென்று
ஒரு நடை இருப்பதாக நண்பர்கள் சொல்லும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி.
சுரங்க
நகராம் நெய்வேலியிலிருந்து இந்தியத் தலைநகரை வந்தடைந்த எனது வாழ்க்கைப் பயணத்தில் நான்
”சந்தித்தவையும் சிந்தித்தவையும்” என்று எனது வலைப்பூவில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன்.
நெய்வேலி நகர நினைவுகளை “மனச் சுரங்கத்திலிருந்து” என்ற தலைப்பில் இது வரை பதினாறு பகுதிகளில் எழுதியிருக்கிறேன்.
”தலை நகரிலிருந்து…” என்ற தொடரில் இந்தியத் தலைநகராம் தில்லிக்கான
சில சிறப்பம்சங்கள், சில விஷயங்கள் என நான் கண்ட தில்லியைப் பற்றி இது வரை 17 பகுதிகள்
எழுதியிருக்கிறேன்.
பயணம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிறைய பயணங்கள் செய்திருந்தாலும், வலைப்பூ ஆரம்பிக்காத
காலத்தில் அவற்றைப் பதிவு செய்து வைக்க முயன்றதில்லை. வலைப்பூ ஆரம்பித்த பிறகு அவற்றை
பதிவு செய்து கொள்ளவும், நான் கண்டதை மற்றவர்களுக்கு சொல்லவும் எனது பயண அனுபவங்களை
தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறேன். நான்கு நாட்கள் மத்தியப் பிரதேசம் சென்று வந்ததை
27 பகுதிகளாக “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தொடரின் மூலம் பகிர்ந்திருக்கிறேன். விஜயவாடா சென்று வந்தது பற்றி ”பெஜவாடா – விஜயவாடா பயணம்”
என்று தொடங்கி, ”பவானிபுரம் தீவு” வரை ஏழு பதிவுகளாக எழுதியிருக்கிறேன். ”மீண்டும் அழைக்கிறது மத்தியப் பிரதேசம்”
என்ற தலைப்பில் அடுத்த பயணத் தொடரும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில்
அது தொடங்கும்.
கதைகள்
படிப்பதில் இருக்கும் ஆர்வம் ஏனோ கதைகள் புனைவதில் அவ்வளவாக வரவில்லை. கதை எழுத வேண்டும்
என நிறைய தடவைகள் எண்ணியிருந்தாலும் அதை செயல்படுத்தவில்லை. இது வரை “அந்த இரண்டு ரூபாய்”, ”டொக், டொக், டொக், டொக்”, ”இவரும் அவரும்”, ”ஒரு கையெழுத்தின் மதிப்பு”, என நான்கு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்.
ஹாஸ்யம்
எனக்குப் பிடித்த ஒன்று. என்னுடைய பதிவுகளில் நகைச்சுவையும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது
வழக்கம். எலி கடித்தது பற்றி ”அப்புறம் என்ன ஆச்சு?”, காக்கையிடமிருந்து பல்செட் பிடுங்கியது பற்றி
“அண்டங்காக்கையை வென்ற பல்லவன்”, வீட்டுக்குள் வந்த உடும்பினை இலவசமாய் கொடுத்ததற்கு சண்டை போட்ட ”இய்யாமுட்டி இன்பரசன்”, வழுக்கைத் தலையில் நாய் நக்கினால் “என்ன ஆகும்?”, ”பொம்மை”, ”இதுக்குப் போயி பயப்படலாமா?”, ”மும்தாஜ் வந்துவிட்டால்?” போன்ற பதிவுகளில் நகைச்சுவையையும் முயன்றிருக்கிறேன்.
”எங்கே
போனது நமது மானுடம்? பறவைகள் கூட மற்றொரு பறவைக்கு அடி பட்டுவிடும்போது பதறிப் போய்
குரல் கொடுத்துத் தவிக்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றதாக பெருமை கொள்ளும் மனிதன் மட்டும்
மானுடத்தை மறந்து விட்டது ஏனோ?” என என்னுடைய ”மறந்துபோன மானுடம்”
பதிவில் கேட்டிருக்கிறேன்.
யாராவது
உங்களை விருந்துண்ண அழைத்தால், அங்கு செல்வதற்கு முன் எதற்கும் ஒரு முறை என்னுடைய “விருந்து” பதிவினைப் படித்துவிடுங்கள். உபயோகமாய் இருக்கும்! இட்லியை இப்படியும் சாப்பிடலாம்
எனத் தெரிந்து கொள்ள என்னுடைய “ரசனை” பகிர்வினைப் படியுங்களேன்.
ஒரு
பெண்ணை சைக்கிளில் உட்காரவைத்து, யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்வது எவ்வளவு கடினம்
தெரியுமா? “நாடக நடிகை” படித்துப் பார்த்தால் அதை உணருவீர்கள்.
தண்ணீர்
நமக்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி ”தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்” மற்றும் ”தண்ணீர் பற்றாக்குறை”, கண்தானம்
பற்றிய பதிவுகளான, “சுடும் நிஜம்” மற்றும் ”கண்கள் இருண்டால்” ஆகிய பதிவுகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.
இன்றைய
சுயச்சரத்தில் நான் எழுதிய பல பதிவுகளில் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். நாளை முதல்
நான் படித்த, ரசித்த சில பதிவுகளைப் பற்றியும் பதிவர்களைப் பற்றியும் சரம் தொடுக்க
இருக்கின்றேன். வாரம் முழுவதும் எல்லா தினமும் வலைச்சரம் பக்கம் வந்து என் பதிவுகளைப்
படித்து, கருத்துரையிட்டு என்னை ஊக்குவிக்க பதிவுலகை வேண்டிக் கொள்கிறேன்.
எனக்கு
இந்த வாய்ப்பினை அளித்த சீனா ஐயாவுக்கும் எனது எழுத்தினைத் தொடர்ந்து படித்து ஆதரவு
தரும் வலையுலக நட்புகளுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து
சந்திப்போம்.
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@ பழனி. கந்தசாமி: வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி ஐயா......
ReplyDeleteஉங்கள் போன்றவர்களின் வாழ்த்துகள் தானே என்னை இன்னும் எழுதத்தூண்டுகிறது.
வருக, வருக வெங்கட்! எங்களுக்கு நல்லறிமுகங்களைத் தருக, தருக! என்று மனமகிழ்வோடு உங்களுக்கு நல்வரவு கூறி வரவேற்கிறேன். சுய அறிமுகம் நன்று. தொடரட்டும் அமர்க்களம்!
ReplyDelete@ கணேஷ்: நன்றி கணேஷ்.... தினம் தினம் இங்கே ஒரு பதிவு வெளி வரும். தினமும் ஒரு தடவை வந்து, படித்து விடுங்கள்.... ஓகே வா?
ReplyDeleteமீண்டும் நன்றி!
சுயச்சரப் பணி அருமை !
ReplyDeleteவலைச்ச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்..
வலைச்சரபணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி.
ReplyDelete@ ஸாதிகா: சுயச்சரத்தினைப் படித்து வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete@ வே. சுப்ரமணியன்: வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteமுதல் பூவாய் மகிழம்பூ தன் வாசத்துடன் நன்றாகக் கமழ்ந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்த பூக்களின் நறுமணத்திற்காகக் காத்திருக்கிறோம். :-))
@ ராஜி: தினம் தினம் ஒரு பூ.... மணம் கமழும்... வருகை தந்து கருத்திட்ட உங்களக்கு நன்றி ராஜி.
ReplyDeleteஅறிமுகப்படலம் தொடரட்டும்
ReplyDeleteதொடர்வேன்!
புலவர் சா இராமாநுசம்
வாங்க நண்பரே..
ReplyDeleteஅழகான சுய அறிமுகம்..
தொடர்ந்து வலைச்சரத்தை
மனமிக்க மலர்களால் தொடுத்திடுங்கள்...
வாழ்த்துக்கள்.
@ புலவர் சா. இராமாநுசம்: தொடர்ந்து வந்து கருத்திடும் உங்களுக்கு நன்றி ஐயா...
ReplyDelete@ மகேந்திரன்: தினம் தினம் ஒரு மலர் மணம் வீசும் வலைச்சரத்தில்.....
ReplyDeleteதங்களது இனிய கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே..
சுய அறிமுகம் அருமை
ReplyDeleteஇவ்ற்றில் நான படிக்காத சில பதிவுகளும் உள்ளன
இன்று படித்துவிடுகிறேன்
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 6
ReplyDeleteசுயச்சரம் மகிழம்பூவாய் மணத்தது !
ReplyDeleteவலைச்ச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்.
நல்ல அறிமுகம்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
மகிழம்பூ நன்கே மணக்கிறது. மகிழம்பூ நாங்கள் படித்து மகிழும்பூ. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் வெங்கட்.
ReplyDeleteசிறப்பான அறிமுகம்...
ReplyDeleteதொடருங்கள்....
வாழ்த்துக்கள் நண்பரே..
வாழ்த்துக்கள் சகோ.நல்ல மணம்.உங்கள் வாரத்தை மணமாய் தொடருங்கள்.
ReplyDeleteமனம் கமழும் மகிழம்பூ மணம்.
ReplyDeleteமற்ற மணங்களையும் (சு)வாசிக்கக் காத்திருக்கிறேன்.
வெங்க்ட் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சர அசிரியர் பதவியில் அமர்ந்ததற்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுயச்சரம் அருமையாகத் தொடங்கியிருக்கிறது.
ஒரு வாரம் முழுவதும் மகிழம்பூ வாசமாய் மணம் வீசும் என்று எதிர்பார்க்கிறேன்!!
வலைச்சர ஆசிரியர் – பதிவுலகில் சில பதிவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அந்தஸ்து!
ReplyDeleteவாழ்த்துகள் வெங்கட்.. உங்கள் அறிமுகங்களுக் காகக் காத்திருக்கிறேன்.கலக்குங்க!
ReplyDeleteதங்கள் சுய அறிமுகம் சுவையாக இருக்கும் வாசிச்கிறேன். வலைச்சரம் ஆரம்பமே நிறைய பயணமாக உள்ளது. ஏனெனில் எனக்கும் பயணிப்பது பிடிக்கும்(யாருக்கத் தான் பிடிக்காது)3 பயணக் கதைகள் நானும் எமுதியுள்ளேன் . ஓ.கே தங்கள் வலைச்சரப்பயணம் சிறக்கட்டும். வாழ்த்துகள். மீண்டும் சந்திப்போம்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
சிறப்பான பதிவுப் பூக்களால் தொகுக்கப்பட்ட அருமையான சரம்.
ReplyDeleteவலைச்சர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!
இப்படி ஒரு சரம் இருப்பது உங்கள் பூவை என் பூவில் இணைத்ததால் உடனே தெரிந்தது. வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் அறிமுகம் அனைத்து பதிவுகளையும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது . தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்ச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்ச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்தும் பாராட்டும்!
ReplyDelete@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. படிக்காத பதிவுகளைப் படிக்கிறேன் எனச் சொன்னது மகிழ்வினைத் தந்தது....
ReplyDeleteதமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கும் நன்றி. தொடர்ந்து வாரம் முழுவதும் ஆதரவு தர வேண்டுகிறேன்.....
வை. கோபாலகிருஷ்ணன்: வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ செய்தாலி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDelete@ ஈஸ்வரன்: வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணாச்சி!
ReplyDelete@ வேங்கட ஸ்ரீனிவாசன்: வாழ்த்திற்கு நன்றி சீனு......
ReplyDelete@ தமிழ்வாசி பிரகாஷ்: சுய அறிமுகப் பகிர்வினைப் படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete@ ஆசியா உமர்: வாழ்த்தியமைக்கு நன்றி சகோ... தினம் தினம் ஒவ்வொரு மலர் மணம் கமழும் இவ்வாரத்தில்..... தொடர்ந்து வந்து விடுங்கள்! :)
ReplyDelete@ நிசாமுதீன்: வருகைக்கும் பதிவினை [சு]வாசித்ததற்கும் நன்றி நண்பரே... தொடர்ந்து வாசியுங்கள்...
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா.....
ReplyDelete@ மனோ சாமிநாதன்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.... தொடர்ந்து வாருங்கள்....
ReplyDelete@ Best Business Brands: ????? நன்றி.....
ReplyDelete@ வேதா. இலங்காதிலகம்: உங்கள் பயணப் பதிவுகளையும் படிக்கிறேன்.....
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ ராமலக்ஷ்மி: வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ஷாஜஹான்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.... உங்களுக்கு வலைச்சரத்தினை தெரிந்து கொள்ள நான் காரணமாக இருந்தது பார்த்து மகிழ்ச்சி.....
ReplyDelete@ சசிகலா: வருகைக்கும் நல்ல கருத்திற்கும் மிக்க நன்றி சகோ... தொடர்ந்து படித்து கருத்தினைத் தெரிவியுங்கள்.....
ReplyDelete@ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி.
ReplyDelete@ ஹேமா: வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி....
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் திரு.வெங்கட்..
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் திரு.வெங்கட்..
ReplyDeletevaanga vaanga!
ReplyDeletevaazhthukkal!
@ நிகழ்காலத்தில் சிவா: தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்ரி சிவா.....
ReplyDelete@ சீனி: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனி....
ReplyDeleteகலக்குங்க ஆசிரியரே..
ReplyDeleteமகிழம்பூவோட மணத்துக்கு சொல்லவா வேணும் :-)
@ அமைதிச்சாரல்: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி......
ReplyDeleteமகிழம்பூ மணம் ... :))
வலைச்சர பணி மகிழம்பூவாய் மலர்ந்து இன்னும் பல மலர்களாய் மணக்க நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசார். காலையிலேயே வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இணையக் கோளாறினால் வரமுடியவில்லை. இப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்தேன்.
ReplyDeleteஅட்டகாசமாய் ஆரம்பித்திருக்கிறீர்கள். மகிழம்பூச்சரம் அழகு. அடுத்து என்ன பூவோ? இந்த வாரம் முழுவதும் அசத்துங்கள். தொடர்கிறேன்.
உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்..
மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
@ ரிஷபன்: தங்களது வருகைக்கும் இனியதோர் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.
ReplyDelete@ துரை டேனியல்: தங்களது வருகைக்கும் மகிழ்ச்சியளிக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து வந்து படியுங்கள்... தினம் தினம் ஒரு மலர் மலரும்!
ReplyDelete@ பாரத் பாரதி....: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete@ ரத்னவேல் நடராஜன்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஇந்த இடுகையைப் படித்து, தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமகிழப்பூச்சரம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் வெங்கட்.
@ கோமதி அரசு: வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா!
ReplyDeleteமகிழம்பூவின் நறுமணத்துடன் தொடங்கிய வாரம் சிறப்புற மணம் கமழ்கின்றது. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ மாதேவி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.
ReplyDelete