வலைச்சர
வாரத்தில் இன்று மூன்றாம் நாள் – எனக்கு மிக முக்கியமான நாள்!இன்று ஒரு பாடலுடன் பகிர்வை
ஆரம்பிக்கலாமே…
[அற்புதமாகப் படங்களைச் சேர்த்து யூட்யூபில் தரவேற்றம்
செய்திருக்கும் soulblis அவர்களுக்கு ஒரு பூங்கொத்து].
ஒரு
குழந்தை அழுவதைப் பார்த்து அம்மா சிரிப்பார்களா? எந்நாளிலும் நடக்காத ஒன்று – ஒரு நாளைத்
தவிர. அது அக்குழந்தை பிறந்த அன்று மட்டுமே என்று சொல்கிறார் ரேகா.
காதலி
தனது வயது எவ்வளவோ அத்தனை கவிதை எழுத வேண்டுமெனச் சொல்ல அதற்காக பிறந்த நாள் கவிதைகள்
எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ.
தனது இளைய மகன் அகிலன் பிறந்த நாளுக்காய் ஒரு வாழ்த்துப்பா எழுதி தனது
பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மோகனன்.
சக வலைப்பதிவர் செந்தில்வேலன் அவர்களின் மகன் கவின் அவர்களுக்குப்
பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லும் பழமைபேசி....
இசைப்புயல்
ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லும் யோகா… இவர் இசைப்புயலுக்கு
வாழ்த்துச் சொல்கிறார் என்றால் கோபிநாத் இசைஞானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துச்
சொல்லி அவரது சில அற்புதமான பாடல்களைப் பகிர்ந்திருக்கிறார்.
இன்னுமொரு
பதிவரான எறும்பு ராஜகோபாலன் அவர்களுக்கு பிறந்த நாள்
எனச் சந்தோஷப்பட்டு வாழ்த்துப்பா எழுதியிருக்கிறார் உணவு உலகம் சங்கரலிங்கம்.
சந்தோஷத்திலும் ஒரு சோகம் – பல மாதங்களாய் வலைப்பூ உலகை எட்டிப் பார்க்காது இருக்கிறது
எறும்பு – ஏனெனில் முழு உணவும் பஸ்/ப்ளஸ் பக்கம் கிடைக்கிறதாம்!
தனது
உயிரிலும் மேலான ராஜி எனும் தோழிக்கு ”சிறகே இல்லாமலும் வானத்தில் பறக்கக் கற்றுக்கொடுத்தது
நட்பு!” என்று வாழ்த்துக் கவிதை படைத்திருக்கிறார் ஆதிரா.
தனது
செல்ல மகளின் பிறந்த நாளுக்கு அம்மா-அப்பாவின் வாழ்த்தினை அழகாய்த் தெரிவித்திருக்கிறார்
சித்ராசுந்தர்.
”அதெப்படி குழந்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் படித்துக் கொள்ளும் விஷயங்களை
இயல்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்
சென்று பெரிய மனுஷியாக நான் வளர்கிறேனே மம்மீ!!! என நகர்ந்து விடுகிறார்களோ... தெரியவில்லை...அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த
முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...”என்று தனது மகளின் பிறந்த நாள் அன்று பகிர்ந்திருக்கிறார் அன்புடன் அருணா.
இது
எல்லாம் சரி, இன்று “எனக்கு மிக முக்கியமான நாள்” என்று சொல்லி இன்றைய பதிவினை ஆரம்பித்தது
எதற்காக என்று கேட்பவர்களுக்கு – காரணம் இருக்கிறது. இன்று என் செல்ல மகள் ரோஷ்ணி-யின் ஏழாம் பிறந்த நாள்.
இரவு
எட்டு மணியிலிருந்து திருவரங்கம் பங்கஜம் மருத்துவமனையின் வெளியே பதட்டத்தோடு நான்
நடை போட்டுக்கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது பசு மரத்தாணியாய். இரவு சரியாக
ஒன்பதரை மணிக்கு - இரவிலும் வெளிச்சம் எங்கெங்கும் – ஆமாம் பெயரிலேயே வெளிச்சம் இருக்கிறதே
- இந்தப் பூவுலகில் ஜனித்தாள் ரோஷ்ணி.
இன்று
பிறந்த நாள் காணும் என் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்….
மீண்டும்
சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இன்று பிறந்த நாள் காணும் பெயரிலேயே வெளிச்சம் கொண்ட தங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
ReplyDeleteஅம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...”
ReplyDeleteஆச்சரியமளிக்கும் உண்மை!
குட்டிமாவிற்கு என் வாழ்த்துகள்
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: வாழ்த்தியமைக்கு நன்றி.....
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ எல்.கே.: மிக்க நன்றி கார்த்திக்!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ...அரிய பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி
ReplyDelete@ கோவை நேரம்: தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteதங்களின் மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகொன்றை மலர் வாசத்துடன் பிரகாசிக்குமின்றைய
அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஅறிமுகப்பதிவர்களுக்குப் பாராட்டுகள்..
@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDelete@ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், மிக்க நன்றி.
ReplyDeleteரோஷ்ணி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-))
ReplyDeleteமேலும் மேலும் அவள் பிரகாசிக்க எனது பிரார்த்தனைகள்.
கொன்றைப் பூக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.பகிர்ந்த தங்களுக்கு எனது நன்றிகள்
@ ராஜி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் நன்றி......
ReplyDeleteபிறந்த நாள் காணும் எனது மகளை வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி ராஜி.
ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
ReplyDelete@ கே.பி. ஜனா: வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeletevaazhthukkal!
ReplyDelete@ சீனி: வாழ்த்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சீனி!
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDelete@ கவிதை வீதி... //சௌந்தர்//: வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே....
ReplyDeleteஉங்களை போலவே இருக்கும் ரோஷினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மாலை வீட்டுக்கு போனதும் கணினியில் அமராமல் அவளுடன் செலவிடுங்கள். நண்பரின் அன்பு கட்டளை
ReplyDeleteநிறைய பதிவர்கள் எனக்கு தெரியாதவர்கள் நன்றி. நேற்று சொன்ன பதிவர்கள் (பயணம்) அனைவரையும் follow செய்ய துவங்கி விட்டேன் நன்றி
ReplyDeleteஅழகான அருமையான அறிமுகங்கள். நன்று. அனைவருக்கும என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் செல்ல மகள் ரோஷ்ணிக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteகொன்றை பலர் வாசம் அருமை, அழகு. தங்கள் செல்விக்கும் இனிய பிறந்த சாள் வார்த்துகள்.இன்றைய அறிமுகங்கள், தங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அழகான தொகுப்பு:)! ரோஷ்ணிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteகொன்றை என்றாலே அது சிவனைக் குறிக்கும்; நம் நூல்களில் சிவனையும், அதன் தொடர்பாகப் பாண்டிய மன்னர்களையும், கொன்றை மலர் சூடியவர்களாகக் குறிப்பிடுவர். ஔவையும் தன் கொன்றைவேந்தன் தொகுப்பின் காப்புப் பாடலில்
ReplyDelete’கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.’
என்று முருகனை கொன்றை வேந்தனின் மகனாகக் குறிப்பிடுகிறாள்.
அந்தக் கொன்றை வேந்தனின் அருள் இன்று பிறந்த நாள் காணும் ரோஷ்ணிக்கும் கிட்டட்டும்.
வாழ்த்துகள்.
Thanks Venkat. Our wishes to roshini
ReplyDeleteகொன்றைப்பூச்சரம் அழகு. அத்தனையும் அட்டகாசமான அறிமுகங்கள்.
ReplyDeleteரோஷ்ணிக்கு என் இதயங் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளிடம் தெரிவித்து விடுங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு சகல சௌபாக்கியங்களுடன் வாழ இறைவனருள் உண்டாகட்டும்.
பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அருமை.
ReplyDeleteரோஷ்ணி எல்லா சௌபாக்கியங்களும் இன்பங்களும் பெற்று வாழ இந்த 7வது பிறந்தநாளில் ஆண்டவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஇன்று பிறந்த நாள் காணும் உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்….
ReplyDeleteஅப்பப்பா...... இவ்ளோ பதிவுகள அறிமுகப் படுத்தினா எப்படி.. எங்களுக்கு அல்லாத்தையும் படிக்க அவகாசம் வேணாமா....?
My Best Wishes to your child Sowbakyavathi: ROSHNI.
ReplyDeleteVERY HAPPY & SWEET BIRTH DAY !
to her.
Today's introductions are Good.
இனிய மகள் ரோஷ்ணிக்கு, எங்கள் அன்பான மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தல ;-)
ReplyDeleteரோஷினிக்கு வாழ்த்துக்கள். உங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteரோஷ்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteரோஷ்ணிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteமிக இனிமையான பாடல்.என் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் !
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ...அரிய பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி
ReplyDeleteரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteHappy Birthday Roshni...wishing you all happiness in the world...;) Lovely collection of b'day wishes
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் மகள் ரொம்ப கொடுத்துவைத்தவள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
@ மோகன்குமார்: //மாலை வீட்டுக்கு போனதும் கணினியில் அமராமல் அவளுடன் செலவிடுங்கள். நண்பரின் அன்பு கட்டளை// :))) தங்களது கட்டளைக்கு செவி சாய்த்தேன்!....
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்புக் கட்டளைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்.
@ மோகன்குமார்: ஓ உங்களுக்கும் புதியவர்களா? மகிழ்ச்சி....
ReplyDeleteதங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
@ கணேஷ்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete@ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ வேங்கட ஸ்ரீனிவாசன்: மிக்க நன்றி சீனு.
ReplyDelete@ ராஜகோபால். எஸ். எம்.: வருகை தந்து கருத்துரையிட்ட உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதுரை டேனியல்: வாழ்த்துகளை நிச்சயமாக என் மகளிடம் சொல்லி விடுகிறேன் நண்பரே...
ReplyDelete@ துரைடேனியல்: பிறந்த நாள் பாடலை ரசித்தமைக்கு நன்றி.
ReplyDelete@ சுந்தர்ஜி: வாழ்த்திய உங்களுக்கு எனது நன்றி ஜி!....
ReplyDelete@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அடடா... தினம் பத்து பதிவுகள் அறிமுகம் செய்ய நினைத்தேன். அதிகமோ.... பொறுமையா ஒவ்வொன்றாய் பாருங்களேன்.. :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் எனது மகளுக்கான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDelete@ துளசி கோபால்: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி டீச்சர்.
ReplyDelete@ கோபிநாத்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete@ நிசாமுதீன்: வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ரேகா ராகவன்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ சென்னை பித்தன்: வாழ்த்திய உங்கள் நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDelete@ ஃபுட்நெல்லை: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ஹேமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்..
ReplyDelete@ கலாநேசன்: வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சரவணன்.
ReplyDelete@ அப்பாவி தங்கமணி: வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி புவனா.
ReplyDelete@ ஜலீலா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ஜலீலா: தங்களது வருகைக்கும் மகளை பிறந்த நாள் அன்று வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ பாரத் பாரதி: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteபகிர்வு அருமை.ரோஷ்ணிக்கு இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் செல்லக் குழந்தை ரோஷிணிக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteரோஷிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரவிலும் வெளிச்சம் எங்கெங்கும் – ஆமாம் பெயரிலேயே வெளிச்சம் இருக்கிறதே - இந்தப் பூவுலகில் ஜனித்தாள் ரோஷ்ணி. //
ReplyDeleteஎன்ன அருமையான விளக்கம்.
ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
@ ஆசியா உமர்: வருகை புரிந்து, கருத்துரைத்து, வாழ்த்தும் தெரிவித்த உங்களுக்கு நன்றி.
ReplyDelete@ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி.
@ சித்ராசுந்தர்: வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்ததற்கும் மிக்க நன்றிம்மா...
ReplyDeleteஉங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா.
ஆஹா! நன்றி என் வலைப்பூ அறிமுகத்துக்கு!!!
ReplyDeleteரோஷணிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் பூங்கொத்தும்!!!
@ அன்புடன் அருணா: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி.
ReplyDelete//இரவு எட்டு மணியிலிருந்து திருவரங்கம் பங்கஜம் மருத்துவமனையின் வெளியே பதட்டத்தோடு நான் நடை போட்டுக்கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது பசு மரத்தாணியாய். இரவு சரியாக ஒன்பதரை மணிக்கு -//
ReplyDeleteதாமதமானாலும் வாழ்த்துவதில் தவறில்லையே தோழா. இரவு பகல் காணா வெளிச்சத்தில் என்றும் உம் தவப்புதல்வி இன்புற வாழ்வின் எல்லா நலங்களையும் அள்ளிக்கொள்ள இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
திருச்சி பங்கஜம் மருத்துவ மனை. பல முறை வந்த இடம் எனக்கு.
என்னுடைய வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்தியுள்ளமைக்கு என் அன்பும் நன்றியும்.
இன்றுதான் பார்த்தேன். உடனே ஓடோடி வந்தேன். மீண்டும் நன்றி நன்றி.
@ ஆதிரா: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. என் மகளினை வாழ்த்தியதற்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete@ மாதேவி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
ReplyDelete