Thursday, May 10, 2012

நான் வீழ்வேன் என நினைத்தாயோ?

தேடிச்சோறு நிதந்தின்று 
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி 
மனம் வாடித் துன்பமிக உழன்று 
பிறர் வாடப் பல செயல்கள் செய்து 
நரை கூடிக் கிழப்பருவமெய்திக் 
கொடுங்கூற்றுக் கிரைஎனப் பின்மாயும் 
பலவேடிக்கை மனிதரைப் போல் 
நான் வீழ்வேன் என நினைத்தாயோ?
-கவிஞர் சுப்பிரமணிய பாரதி

ஆயிரம் வரிகளில் சொல்ல முடியாத நம் உள்ளத்தணர்வுகளை சில வரிகளில் மனதில் பதியும்படி புரியவைப்பது கவிதைகள். அப்படி என் மனதை கவர்ந்த சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்காக...!

தோட்டித் தாயின் சோகத்தினை சற்று வீரியத்துடன் பேசுகிறது நண்பர் சதீஷ் பிரபு அவர்களின் பீச்சாங்கை கவிதை.

மனிதக் கழிவுகளை அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகளின் துயரங்களை சொல்கிறது நண்பர் சம்பத்குமார் அவர்களின் கவிதை.

கடந்த தலைமுறை பாசத்தை நினைவு கூறுகிறது சகோதரர் பிரபு கிருஷ்ணா அவர்களின் பழுது படாத பாசம் கவிதை.

எரித்துவிடலாம் என் கவிதை தாள்களை... என சொல்லும் நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்கள் யாருக்காக? என்பதனையும் கவிதையில் சொல்கிறார்.

முதுமையில் வறுமை காரணமாக வாழ்வியல் போராட்டம் நடத்தும் மனிதர்களின் மனங்களை பதிவு செய்கிறது நண்பர் யாசர் அரபாத் அவர்களின் விடைக்கொடுக்க முடியாமல்... என்ற  கவிதை.

மரங்களை வெட்டுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறது நண்பர் பனித்துளி சங்கர் அவர்களின் மரம் தின்ற மனிதர்கள் கவிதை.

என்றும் மாறாமல்… என்னும் நண்பர் ராச.மகேந்திரன் அவர்களின் கவிதை நியாயவிலைக் கடைகளில் கிடைக்காத நியாயம் பற்றி யதார்த்தமாக பதிவு செய்கிறது.

தீண்ட மறுக்கிறார் காந்தி.. என சொல்லும் நண்பர் மதுமதி அவர்கள் சின்ன சின்ன ஹைக்கூ கவிதைகளால் சிந்திக்க வைக்கிறார்.

ஏழையின் பசியினைப் பதிவு செய்கிறது நண்பர் தேவா அவர்களின் பசி கவிதை.

வரதட்சணை பற்றி இன்னொரு நிதர்சனத்தை பதிவு செய்கிறது நண்பர் ராஜா அவர்களின் நிறம் மாறா பச்சோந்திகள் என்னும் குட்டிக் கவிதை.

வருடம் முழுவதும் படித்த மாணவனுக்கு தேர்வறையில் அனைத்தும் மறந்துவிடுவது போல, ஏராளமான கவிதைகளை நான் ரசித்திருந்தும் அவைகள் தற்போது நினைவிற்கு வரவில்லை.

அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:

"ப்ளாக்கர் நண்பன்""

இறைவன்  நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்!

- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்

22 comments:

  1. பகிர்வு அருமை சகோ..பதிவர்களின் அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி.தொடருங்கள்.

    ReplyDelete
  2. எனக்குப் பிடித்த பாரதியின் வரிகள்,மிக அருமையான பகிர்வு.

    ReplyDelete
  3. மனமார்ந்த நன்றிகள் சகோ...

    எந்தன் கவிதையும் ஈடேறியிருப்பதில்...

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பாரதியின் அருமையான வரிகளோடு ஆரம்பித்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு மனம் நிறைகிறது ...........நன்றி

    ReplyDelete
  8. தொடர்ந்து கலக்குங்க நண்பரே ..!

    ReplyDelete
  9. பாராட்டும்படியான அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துகக்ள்

    ReplyDelete
  11. அருமை அய்யா

    ReplyDelete
  12. அழகான கவிதைகள் நண்பா பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள். என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  14. ஆசிரியர் குழுவுக்கு என் மனமர்ந்ந்த நன்றிகள்

    ReplyDelete
  15. ஆசிரியர் குழுவுக்கு என் மனமர்ந்ந்த நன்றிகள்

    ReplyDelete
  16. அனைத்துமே சமூக சிந்தனையைத் தூண்டும் கவிதைகள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ. பாசித்!

    ReplyDelete
  17. வருடம் முழுவதும் படித்த மாணவனுக்கு தேர்வறையில் அனைத்தும் மறந்துவிடுவது போல, ஏராளமான கவிதைகளை நான் ரசித்திருந்தும் அவைகள் தற்போது நினைவிற்கு வரவில்லை.

    அறிமுகங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  18. அனைத்து கவிதைகளும் அருமையான அறிமுகங்கள்..

    சில காலமாக கவிதைகள் என்றாலே பிறகு படிக்கலாம் என்று தள்ளிப் போட்ட எனக்கு இன்று கிடைத்த அனைத்தும் முத்து..

    அறிமுகங்களுக்கு நன்றி நண்பரே!

    //வருடம் முழுவதும் படித்த மாணவனுக்கு தேர்வறையில் அனைத்தும் மறந்துவிடுவது போல, ஏராளமான கவிதைகளை நான் ரசித்திருந்தும் அவைகள் தற்போது நினைவிற்கு வரவில்லை.//

    மாணவன் படித்த அனைத்தையும் நினைவு கூர்ந்தால், ஆசிரியர் பாடு திண்டாட்டம் தான்!!
    எல்லாவற்றையும் நீங்க சொல்லி இருந்தால் படித்து படித்து திகட்டியிருக்கும்!

    ReplyDelete
  19. வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றி! நேரமின்மை காரணமாக தனித் தனியாக பதில் அளிக்க முடியவில்லை.

    ReplyDelete