அம்மா...! அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவள்...! தனக்கென வாழாமல் எனக்கென வாழ்பவள்..! என் துக்கத்தை நீக்க தன் தூக்கத்தை துறந்தவள்...!
ஆமாம், நான் ஏன் இன்று இப்படி பேசுறேன்? ஓ! இன்று அன்னையர் தினமா? சரி, அன்னையர் தினமான இன்று நாம் அன்னைகளின் பெருமைகளைப் பார்க்க வேண்டாம். மாறாக அன்னைகளின் பதிவுகளை பார்க்க போகிறோம். அதாவது இன்று பெண்கள் ஸ்பெஷல்.....!!!
தான் சென்று வந்த ஆப்ரிக்கா பயணத்தைப் பற்றி பேச்சு நடையில் விவரிக்கும் லட்சுமி அம்மா அவர்கள் நம்மையும் பயணத்திற்கு அழைத்து செல்கிறார்.
அப்படி நான் என்ன சொல்லிட்டேன் என்று கேட்கும் சகோதரி ஹுஸைனம்மா அவர்கள் மின்வெட்டு பற்றிய தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.
சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!! என்று சீரியல்களின் தொல்லைகளை தனக்கே உரிய நக்கல் பாணியில் பதிவு செய்வது சகோதரி ஆமினா அவர்கள்.
புகைப்படத் துறையிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் சகோதரி ராமலக்ஷ்மி அவர்கள் மனிதனும், மிருகமும் என்ற தலைப்பில் எடுத்த படங்களை பார்த்து ரசியுங்கள்.
குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பது பற்றி பகிர்கிறார் சகோதரி இந்திரா அவர்கள்.
பாரதத்தின் முதல் பெண்கள் பற்றிய தகவல்களை தருகிறார் சகோதரி ஸாதிகா அவர்கள்.
அப்பாவைவிட ஒருபடி! என்னும் சகோதரி மலிக்கா அவர்களின் கவிதை ஒவ்வொரு பிள்ளைகளும் அவசியம் படிக்க வேண்டும்.
படிக்கும் போதே வாசம் வரும் அளவு காபி பற்றிய தகவல்களை அழகாக பதிவு செய்கிறார் சகோதரி ரமா அவர்கள்.
நிஜம் போல் காட்சியளிக்கும் தரையில் வரையப்படும் முப்பரிமாண படங்களை பகிர்கிறார் சகோதரி திருமதி B.S ஸ்ரீதர் அவர்கள்.
ரங்கமணிகள் பற்றிய ஆய்வை வெளியிடுகிறார் சகோதரி "அப்பாவி" தங்கமணி அவர்கள்.
அன்னை தெரசா அவர்களுக்காக அன்னையர் தினம் என்ற கவிதை எழுதியுள்ளார் சகோதரி ஆசியா உமர் அவர்கள். [மேலே உள்ள முதல் பத்தியை எழுதிய பின் தான் இக்கவிதையை நான் பார்த்தேன். நான் காப்பி அடிக்கலைங்கோ.. :) :) :) ]
குழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது பற்றி விளக்கம் தருகிறார் சகோதரி ஜலீலா கமால் அவர்கள்.
அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:
"தம்பி! படம் முடிஞ்சிடுச்சு, நீங்க கிளம்பலாம்!!!"
ஓ! ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா? சரி, இது விடைபெறும் நேரம்.
நேரமின்மை காரணமாக என்னால் அதிக பதிவுகளை பரிந்துரைக்க முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும். வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை எனக்கு தந்த வலைச்சரக் குழுவினருக்கு மீண்டும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் முழுவதும் கருத்துரைகள் இட்டு வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது நன்றி!!!
என்றும் நட்புடன்,
ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்
கலக்கலான நிறைவு நண்பா ..,
ReplyDeleteதங்கள் பணியை செவ்வனே செய்து.., இனிமையாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் ..!
நிறைவுநாளில் அன்னையர்தின பதிவும் முத்தாய்ப்பாய் அமைந்தது.வாழ்த்துகள் நண்பா...
ReplyDeleteசிறப்பான இடுகைகள் தந்து வாரத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்
ReplyDelete"அனைத்தும் நல்ல பதிவுகள் நண்பரே ! வாழ்த்துக்கள் !"
ReplyDeleteஅன்னையர் தினத்திற்கான சிறப்புப் பதிவாக அன்னையர்களின் தளங்களைக் குறி்ப்பிட்டு அசத்தி விட்டீர்கள். அருமை.
ReplyDeleteபிறக்கும் போதே
ReplyDeleteகவிஞன் ஆனேன்
அம்மா என்றதால்....!
-அப்துல் பாஸித்
ம்ம்ம்..... டச்சிங்
அன்னையர் தினத்தில்
நல் அறிமுகங்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்னையர் தினதன்று
ReplyDeleteஎன்னையும் அரிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்புற ஆற்றி முடித்த பிளாக்கர் நண்பருக்கு பாராட்டுக்கள்.
நிறைவுநாளில் அன்னையர்தின பதிவும் முத்தாய்ப்பாய் அமைந்தது.
ReplyDeletenantri!
ReplyDeletesakotharaa!
ungalathu panikkukum-
arimukangalukkum!
Good good :) waiting for you to hard rock tmrw! :)
ReplyDeleteஅன்னையர் தினதன்று
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்புற ஆற்றி முடித்த பிளாக்கர் நண்பருக்கு பாராட்டுக்கள்.
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !
ReplyDeleteநிறைவு நாளிலும் சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteஅன்னையர் தினத்தன்று பொருத்தமான அறிமுகங்கள். தங்கள் பணியினை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete"தம்பி! படம் முடிஞ்சிடுச்சு, நீங்க கிளம்பலாம்!!!"
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள்.
அன்னையர் தினத்தன்று அன்னையர் போட்ட பதிவுகள்...
ReplyDeleteஅருமை!!
"தம்பி! படம் முடிஞ்சிடுச்சு, நீங்க கிளம்பலாம்!!!"
இன்னும் கிளைமாக்ஸே வரல.. அதுக்குள்ளவா?
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
ReplyDelete