Monday, May 28, 2012

முதல் கோணல்


    முதல் கோணம் என்று சொல்ல வந்தேன். bleepin subconscious alert.

மூன்றாம் சுழியின் பெரும்பான்மையான படைப்புகள் சற்றே முதிர்ந்த வாசகருக்கானவை - கெட்ட வார்த்தைகள், நடத்தைகள்(?), செக்ஸ், தகாத உறவு, நாத்திகம், வன்முறை.. இவை அடிக்கடி வருவதனால்.

இனி நிறைய பேர் மூன்றாம் சுழி படிப்பார்கள் என்று தோன்றுகிறது.

மற்றபடி முதிர்ந்த அறிவுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை, அதான் பெயரிலே மூன்று சுழி:
    - பேய்க்கதைகள் விரும்பினால் இவற்றைப் படியுங்கள்: நாகூர் 2012, புகை, கோமதீ, பாலுவின் கோடை
    - விளிம்புக் கதைகளுக்கு: வருகை, பெரியவர் ஆசி, சுசுமோ, சாதல் மீறும், லிக
    - பலானக் கட்டுரைகளுக்கு: அதர்மு மாமா கதை, தமிழ்வேட்டி, முதலில் பெண் அடுத்தது காமம், இறையும் குறையும்
    - சுமாரானக் கவிதைகளுக்கு: புதுமைப்பெண், ட்டிக் ட்டிக் விதை, ஆறுதல், தடங்களுக்கு வருந்தவில்லை
நெஞ்சைத் தொடும் அருமையான இலக்கியம் பிடிக்குமென்றால், அடுத்த பிலாகில் தேடுங்கள்.

நகைச்சுவையாக எழுத வரவில்லை, படிக்கவாவது செய்வோம் என்று பெரும்பாலும் அடங்கிவிடுவேன். இருப்பினும், என்னுடைய நகைச்சுவை உணர்வின் முத்தாய்ப்பான அன்புமல்லி கேரக்டரை வைத்து நிறைய கதைகள் - அஞ்சற்க - என்றைக்காவது எழுத எண்ணியிருக்கிறேன். இதுவரை எழுதிய அன்புமல்லி கதைகள் சிலவற்றை மூன்றாம் சுழியில் படிக்கலாம். கதைகளைப் படித்துவிட்டு, பெரியசிவம் என்பவர் என்னை 'ஆகா ஓகோ' என்று புகழ்ந்துத் தள்ளியிருந்தார். கடைசி வரியில், 'இப்படிக்கு, உன்னுடைய மாமா' என்று எழுதாமல் விட்டிருக்கலாம். பெயரை மாற்றிக் கொண்டுப் பின்னூட்டமிட்டு என்ன பலன்?

நசிகேதன் கதையை வெண்பா வடிவில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. நசிகேத வெண்பாவை வெண்பாவுக்காகப் படிக்காவிட்டாலும், பின்னூட்டங்களுக்காக நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

பட்டருக்கு மனமிரங்கி அபிராமி நிலவைக் காட்டியதாகக் கட்டியக் கதை பட்டரின் புகழ் பெருக உதவியது என்றாலும், தமிழ்ப்பாடல் என்ற முறையில் மிகவும் ரசிக்க வேண்டிய இறையிலக்கிய நூல் அபிராமி அந்தாதி. எத்தனையோ உச்ச விளக்கங்களுக்கு இடையில் என்னுடைய துச்ச விளக்கமும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றுத் தமிழ்ப்பார்வையுடன், கிளைக்கதைகள் சேர்த்து எழுதினேன். என்னுடைய விளக்கம் முக்கியமில்லை. அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடிய என் அம்மாவின் இனிமையான, கம்பீரமானக் குரலைப் பலரும் கேட்க ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்று ஒலிப்பதிவு செய்து சேர்த்ததே, பதிவுக்குக் கிட்டியப் பரவலான வரவேற்புக்குக் காரணம். நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் கேளுங்கள், படியுங்கள்.

சூடாமுடி என்று ஒரு சரித்திரத் தொடர் எழுதத் தொடங்கினேன். தமிழக வரலாற்றில் மறந்து போன, அல்லது அதிகம் எழுதப்படாத, காலக்கட்டம் மற்றும் நிகழ்வுகளை ஒட்டியக் கற்பனைக் கதை. இப்போதைக்கு இனர்ஷ்யா.

இதற்குமேல் என்னைப் பற்றி எழுதினால் நானே என்னை அடிக்க வரலாம்.

    திவெழுதுவது சிரமம். தொடர்ந்து எழுதுவது இன்னும் சிரமம். தொடர்ந்து சுவையாக எழுதுவது மிகச் சிரமம். தொடர்ந்து சுவையாகப் பல வருடங்கள் எழுதுவது, சிரமத்தின் உச்சம். வலைச்சரத்தில் நான் கொஞ்ச நினைக்கும் பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை. சிரமத்தின் உச்சத்திலிருந்து வருடக்கணக்காக எழுதப்படுபவை. நான் (அவ்வப்போது) படித்து ரசித்துப் பொறாமைப்படுபவை. full disclosure.. இப்பதிவுகளைப் பற்றி எழுதும் சாக்கில் என் எழுத்தை இங்கே அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறேன். இப்பதிவுகளில் ஒன்றிரண்டை யாராவது இதுவரை அறியாதிருந்து, அறிமுகமாக அமைந்துவிட்டால் அது பெரிய நிறைவாகும் (நப்பாசை எனக்கு வைடமின் போல).

பதிவுகளை இப்பொழுதே குறிப்பிட்டு விடுகிறேன்.

hold on. அதற்கு முன் இவர்களுக்கு ஒரு shout out: சளைக்காமல் எழுதிவரும் வல்லிசிம்ஹன், துளசி கோபால், இராஜராஜேஸ்வரி, கீதா சாம்பசிவம். ஜே! ஜே! ஜே! இவர்களில் ஒருவர் 2004லிருந்து எழுதி வருகிறார் (2004! அப்பல்லாம் பிலாகர் இருந்துச்சா என்ன?). ஒருவர் தினமொரு பதிவு எழுதுகிறார் - seldom fails (எங்கிருந்து தான் விஷயம் கிடைக்குதோ!). ஒருவர் நாலைந்து பதிவுகள் போதாதென்று சமூகத் தளங்களிலும் எழுதுகிறார் (நடுவே ஊரை விட்டு ஓடினாலும்). ஒருவர் புகைப்படங்கள் நினைவுகள் என்று கலந்து எழுதுகிறார் (நெகிழ்ச்சி மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கிறது இவர் பதிவுகளில்). மறுபடி ஜே!

back to blogroll. கீழ்க்கண்டப் பதிவுகளை, புதிதாக ஏதும் தென்படாவிடினும், நேரம் கிடைக்கும் பொழுது ஒரு விசிட் அடித்து விடுங்கள். என்னைக் கவர்ந்தக் காரணங்களை வரும் நாட்களில் விவரிக்கிறேன். ஒத்துப் போகிறதா பாருங்கள், போகவில்லையா, பெயரை மாற்றிக்கொண்டு உங்கள் கன்னாபின்னா, அதாவது, கருத்தை எழுதி அவர்கள் பதிவில் பின்னூட்டமிடுங்கள். கடைசி வரியில் கவனமாக இருங்கள்.

மெட்ராஸ் தமிழன்
எழுத்துப் பிழை
கண்ணன் பாட்டு
DISPASSIONATED DJ
கைகள் அள்ளிய நீர்
            அதீத கனவுகள்
            மரகதம்
            நித்திலம்
            கண்ணனுக்காக
            அன்பே சிவம்
            hemikrish
            உயிரோடை
                    எங்கள் Blog
                    எம்.ஏ.சுசீலா
                    மனவிழி
                    உப்புமடச் சந்தி
                    ஈழத்து முற்றம்
                    மனதோடு மட்டும்
                    கனவுகளின் காதலன்
            kashyapan
            வேல் கண்ணன்
            யவ்வனம்
            ராகவன்
            சிவகுமாரன் கவிதைகள்
            கே.பி.ஜனா...
            அகரம் அமுதா
Consent to be......nothing!
தமிழ் உதயம்
சித்தர்கள் இராச்சியம்
தேவியர் இல்லம்
உள்ளக் கமலம்
டங்கு டிங்கு டு


➤➤2. சம்பல் வம்பு




34 comments:

  1. உங்கள் அறிமுகம் ரசிக்க வைத்தது.நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளையும் பதிவர்களையும் பார்க்கவேண்டும். எனக்கும் பிடித்த நிறைய வலைப்பூக்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. அறிமுகத்திலேயே அப்பாதுரை டச் தெரிகிறது என்று சொன்னால் அடிக்க வர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்... (சும்மா 'அ'க்கு 'அ'...!!இதுக்குப் போய் அடிப்பாங்களா என்ன?") முதல் வாக்கிட்டு இரண்டாம் பின்னூட்டமிட்டு விட்டேன்! தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. அன்புமல்லி கதைகளை ரசித்து எழுதிய அவர் ‘இப்படிக்கு உன் மாமா’ன்னு கடைசில எழுதினாரா? ஹா.. ஹா... டிபிகல் அப்பாதுரை ஸ்டைல் ரைட்டிங்கில் அறிமுகங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு. எனக்குத் தெரியாத சிலரையும் நீங்க இங்க சொல்லியிருக்கீங்க. அதனால உங்க நப்பாசை நிறைவேறிடுச்சு அப்பா ஸார்! தொடர்கிறேன் உங்களை இந்த வாரம் முழுவதும். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அன்பின் அப்பாதுரை சார்,

    இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் தங்கள் பதிவுகளைக்காண ஆவல். சுவையான அறிமுகம். அவரவர் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் மிக அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.. என் வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றிகள் பல.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  5. அபிராமி அந்தாதி அருமையான மனம் கவர்ந்த .பாடலகள்.

    பகிர்வுகளின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. கு ஒரு shout out: சளைக்காமல் எழுதிவரும் வல்லிசிம்ஹன், துளசி கோபால், இராஜராஜேஸ்வரி, கீதா சாம்பசிவம். ஜே! ஜே! ஜே!

    ஜாம்பவான்களுக்கு மத்தியில் என் பெய்ரையும் அறியத்தந்தது மகிழ்ச்சியளித்தது..

    நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  7. தங்கள் நப்பாசை நிறைவேறியதாக
    நிச்சயம் நம்பலாம்
    பல பதிவர்கள் எனக்கு புதிய அறிமுகம்
    அருமையாக வித்தியாசமாக அறிமுகம்
    செய்ய இருக்கிற தங்களுக்கு
    வாழ்த்துக்கள்.பதிவினைப் போலவே தங்கள்
    வலைச்ச்சர ஆசிரியர் பணியும் சிறப்பாகவும்
    சிறந்ததாகவும் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அப்பாதுரையோரியல் டச்சோட ஆரம்பிச்சிருக்கீங்க. நீங்க குறிப்பிட்டிருப்பவற்றில் நாலைந்து பதிவுகள் தவிர மற்றவை படிக்கிறேன். அதிகம் பின்னூட்டமிட நேரம் இருப்பதில்லை.

    சித்தர்கள் ராஜ்ஜியத்துக்கும், எங்கள் ப்ளாகுக்கும் அறிமுகமே தேவையில்லை.

    கண்ணனையும் இதில் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. என்றாலும் நான் எந்தத் திரட்டியிலும் சேர்க்காமல் இருப்பதற்காகவே தனியா வைச்சிருக்கேன். :))))))))

    ReplyDelete
  9. ஒருவர் நாலைந்து பதிவுகள் போதாதென்று சமூகத் தளங்களிலும் எழுதுகிறார் (நடுவே ஊரை விட்டு ஓடினாலும்)//

    இது யாருங்க??? புதுசா இருக்காங்களே? :)))))))

    ReplyDelete
  10. வல்லி சிம்ஹன், துளசி கோபால் எல்லாம் பதிவுலகப் பிதாமஹிகள். அம்பலத்தில் ஏறித் திண்ணையில் அமர்ந்து மரத்தடியில் அமர்ந்துனு பல்வேறு தளங்கள் கண்டவர்கள். அவங்களோடு என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  11. அருமையான துவக்கம் .. தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete
  12. ஆஹா............ நீங்களா???????/


    நல்வரவு!

    ReplyDelete
  13. அறிமுகங்களை ரசனையுடன் தொகுத்து வழங்கியவிதம் நல்லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. கலகல(ப்பூட்டும்) வர்ணனைகளோடு சுவையான அறிமுகங்கள். தொட(ருங்கள்)ர்கிறோம்.

    ReplyDelete
  15. நல்ல அறிமுகப்பதிவு!
    முன்னுரைப் பொன்னுரை!

    தொடரத் தொடர்வேன்!
    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. நல்ல துவக்கம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இந்த வார புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    சுய அறிமுகப் பகுதியிலேயே மேலும் பல நல்ல அட்வான்ஸ் அறிமுகங்கள் .. விதயாசமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. ;)

    ReplyDelete
  18. நன்றாக எழுத நன்றாக படிக்க வேண்டும் எனபது மீண்டும் நீருபணம் செய்திருக்கிறீர்கள்... இவ்வளவு நிறைவான வலைப்பதிவுகள் தமிழில் இருக்கின்றனவா... என ஆச்சர்ய படுத்தும் அறிமுகங்களுக்கு நன்றி ... தொடர்கிறேன்

    ReplyDelete
  19. அறிமுகமும் அதன் வழியே பதிவர் அறிமுகமும் தந்து அசத்தி விட்டீர்கள் .

    ReplyDelete
  20. வித்தியாசமாக பல அறிமுக பதிவர்களை செய்து இருக்கிற தங்களுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  21. அன்பின் அப்பாதுரை - துவக்கம் நன்று. தளங்களையே அறிமுகப் ப்டுத்தி விட்டீர்கள், வாசகர்கள் தளம் முழுவதும், பல்வேறு காரணங்களினால், படிக்க மாட்டார்கள். ஒவ்வொரு தளத்திலும் உங்களூக்குப் பிடித்த, மற்றவர் தவற விடக் கூடாத, முக்கியமான பதிவுகளை அறிமுகப் படுத்தினால் நலமென நினைக்கிறேன்.

    பிறகு லேபிள் ”அப்பாதுரை“ என இட்டால் நாளை தேடும் பொழுது தங்களின் பதிவுகள் அத்தனையும் கிடைக்கும். அதற்காகத்தான் கூறுகிறேன். ஆவனப்படுத்துதல் முக்கியமல்லவா ?

    அறிமுகப் பதிவு நன்று - அறிமுகப் படுத்தப் பட்ட தளங்கள் அத்தனையும் படிக்க வேண்டிய தளங்களே !

    நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. முதல் பந்தில் எல்லோரும் சிக்ஸர் அடித்தால் தாங்கள் டபுள் சிக்ஸர் அடிக்கிறீர்களே ..!

    ReplyDelete
  23. வித்தியாச எழுத்து நடை, அறிமுகங்கள். அறிமுகவாளர்களிற்கு நல்வாழ்த்து. ஆசிரியத்துவத்திற்கு இறையருள் கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  24. ஆரம்பமே அருமை...
    தொடருங்கள்.... தொடர்கிரோம்.

    ReplyDelete
  25. அப்பாஜி....நீங்களா....கலக்குங்கோ !

    ReplyDelete
  26. ஆடிக்கொரு முறை அமாவசைக்கொரு முறை வலைப்பக்கம் வருபவன் நான் . என்னையும் அறிமுகப்படுத்தியது தங்களது பெருந்தன்மை. மிக்க நன்றி அப்பாஜி.
    தாங்கள் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான வலைகளும், தங்களது பதிவுகளும் கூட நான் படித்திராதவை. சொல்வதற்கு கூச்சமாய் தான் இருக்கிறது. ஆனாலும் உண்மை.
    தகுதியுடையவனாய் ஆக முயன்று தோற்றுக் கொண்டேயிருக்கிறேன்

    ReplyDelete
  27. அட அப்பாஜி! மனத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன். தினக் கச்சேரிக்கு தவறாமல் வந்து ஆஜராகி விடுவேன்!

    ReplyDelete
  28. அட!!!நம துரைஜி.
    சொல்லவே இல்லையே.
    எத்தனையோ நல்ல தளங்களும் விஸ்தாரமாக எழுதுபவர்களும் இருக்கிற இணையத்தில் என் பதிவையும் அறிமுகம் செய்ததுக்கு மிகவும் நன்றி.எழுதுவது ஒரு அடிக்ஷன்.

    சிலசமயம் (குழந்தைகள் நம் ஊருக்கு வரும்போது கவனம் சிதறி எழுத முடியாமல் போகிறது.
    அப்போது ஒரு வெறுமை சூழும். இது தப்புதானே:)
    மிகவும் நன்றி துரை.

    ReplyDelete
  29. வலைச்சரத்தில் தங்கள் பதிவு தொடக்கமே அருமை. பல நல்ல தளங்களை குறிப்பிட்டு உள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  30. எனது பதிவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
    அப்பாதுரை சார். மேலும் தாங்கள் அறிமுகம் செய்த அத்தனை
    பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தங்களது வலைச்சர ஆசிரியர் பணி
    சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. வலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!

    சிறப்பான ஆரம்பம்.

    ReplyDelete
  32. எனது பிதற்றல்களையும் பொறுத்துக்கொண்டு எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, அப்பதுரை.

    ReplyDelete
  33. தேங்க்யூ சார்... :-)

    ReplyDelete