1. பதிவுலகம் பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது.ஏற்கனவே கவிஞர்களாகப் புகழ் பெற்றவர்களும் வலையில் கவி எழுதி வருகிறார்கள்.
ஈழக் கவிஞரான அஸ்மின் வலைப்பதிவில் எழுதிய மாட்டுக்கு மாலை போடு என்ற கவிதை வித்தியாசமாக இருந்தது. இவர் திரைப்படப் பாடல் ஆசிரியராக நான் என்ற படத்தில் அறிமுகம் ஆகிறார். இவரது வலைப்பூ கவிஞர் அஸ்மின் படைப்புக்களில் இன்னும் விவரங்கள் தெரிந்து கொள்ளள்ளலாம்
2. அம்மாவிற்கு என்ற பதிவில் படித்த கவிதை மிதிவண்டிப் பயணம். படித்ததும் மூலையில் கேட்பாரற்றுக் கிடந்த பழைய மிதிவண்டியை ஒரு முறை பார்த்துவிட்டு வந்தேன்.
3. என்பக்கம் வலைப்பூவில் குழந்தைகளை பொம்மைகளாக நினைத்து இழுத்துக் கொண்டிருப்பதைப் பற்றி நான் ரசித்த அற்புதமான கவிதை பொம்மலாட்டம் . இதனை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
4. கிஷோகார் தனது கிஷோகர் in வலைப்பக்கங்களில் நீயா நானா கோபியை நீங்கள் ஒரு அற்பப் புழு என்று பதிவெழுதி சாடுகிறார். படிக்காதவர்கள் முதல் முறையாக படிக்கலாம். ஏற்கனேவ படித்தவர்கள் இரண்டாம் முறை படிக்கலாம். இன்னொரு சுவாரசியமான பதிவு சியர் லீடர்ஸ் பெண்களுக்கு நிகழ்ந்த மற்றுமொரு துஷ்பிரயோகம்! ஐ.பி.எல் இல் தொடரும் அநியாயம்! -கழுகுக் கண்கள்!!!-
5. எண்ணங்களும் திரை வண்ணங்களும் என்ற வலைப்பதிவில் உலக சினிமா பற்றி அலசி வருகிறார்.Carnage (2011) : பொலான்ஸ்கி எடுத்த டிராமா என்ற திரை விமர்சனத்தை திரைப்படம் போலவே சுவை குன்றாமல் எழுதியுள்ளார். இவரது ஹிட்ச்காக் திரைப்படங்கள் பற்றிய அலசலும் அருமையாக உள்ளது.
6.பல்சுவையுடன் கூடிய பதிவுகளைச் செய்து வரும் அய்யானார் விஸ்வநாத் திரைப்பட விமர்சனமும் எழுதுகிறார். வழக்கு எண் 18/9 படத்திற்கான விமர்சனம் அசத்தல் நடையில் உள்ளது.
7. சுகவாசி என்று தன்னை குறிப்பிட்டுகொள்ளும் பார்த்திபன் தனது போதி வலைப்பதிவில் முழுவதும் சென்னைப் பற்றியதாகவே உள்ளது.. சென்னையில் இருந்தும் சென்னையைப் பற்றி தெரிந்து கொள்ளாத பல விஷயங்கள் உள்ளன என்பதை இங்கு நுழைந்தபோதுதான் அறிந்தேன். உதாரணத்திற்கு ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை பற்றி பல தகவல்கள் சொல்கிறார்.
8. இலங்கையின் சிட்டுக்குருவி தன்னைப் பற்றி செய்துள்ள அறிமுகமே அற்புதமாக இருக்கிறது. காக்கா......... பிடிக்க சில ஐடியாக்கள். என்ற பதிவு நடைமுறையை நகைச்சுவையோடு சொல்கிறது.
9..நீச்சல்காரன் எழுதிய பதிவான டைம் மெஷின் என்ற கதை நன்றாக உள்ளது. இன்னும் பல பதிவுகள் படிக்கத் தகுந்தவை.
10. கணினி தொழில் நுட்பம் குறித்த பதிவுகள் வெளியாகும் வலைப்பூ எதிர் நீச்சல் பயனுள்ள பதிவாக கருதுவது காசு கொடுத்து டொமைன் பெயர் வாங்க வேண்டுமா என்று ஆராயும் டொமைன் பெயர் வாங்குவதன் பின்விளைவுகள். . ஏராளமான கணினி சார்ந்த விஷயங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இதில் என்னை ஈர்த்த ஒரு பதிவு இணையத்தில் ஆடுபுலி ஆட்டம் ஆடுவது பற்றியது.
11.முன்பனிக்காலம் வலைப்பதிவில் கிரிக்கட் வீரர் ஜெயசூர்யா பற்றிய பரபரப்பான பதிவு மாதுரியைக் கலக்கப்போகும் சனத்ஜெயசூரிய!. ரசிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நாத்திகனாக இருப்பதில் உள்ள நன்மைகள் வித்தியாசமான. பதிவு
12. நிரஞ்சனாவின் என் ஜன்னலுக்கு வெளியே வலைப்பூவில் சிந்திக்க வைத்த இரண்டு பதிவுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒன்று: நவீன நரகாசுர ஊர்வலங்கள்!
*********************************
வழக்கம்போல் இந்த தொகுப்பு பற்றிய உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
நாளையும் சந்திப்போம்!
இன்று குறிப்பிடப்பட்ட பதிவர்களில் இருவர் மட்டுமே எனக்கு அறிமுகம். மற்றவரெல்லாம் புதுமுகம். விரைவில் அவர்களுடைய வலைகளுக்குச் சென்று ரசிப்பேன். அறிமுகப்படுத்தப்படும் பதிவர்களுக்கு வாழ்த்துக்களும் அழகாய்த் தொகுத்தளிக்கும் தங்களுக்கு பாராட்டுகளும்.
ReplyDeleteஅருமையான பணி பாஸ். பல நட்புக்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் நன்றிகள் பலகோடி.
ReplyDeleteஎதிர்பார்க்காத ஒரு சந்தோஷம்! அறிமுகப்படுத்தியமைக்கு அன்பான நன்றிகள்!
ReplyDeleteவலைச்சரத்தில் என் இரண்டு பதிவுகளை அறிமுகப்படுத்தியதைக் கண்டு மிகமிக மகிழ்கிறேன். நான் வெளியூர் பயணத்தில் இருப்பதால் என் தளத்துல பதிவிடவும் வலைச்சரத்தில் உங்களை வாழ்த்தவும் முன்பே வர இயலவில்லை. உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றியையும் சிறப்பான அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கறேன்.
ReplyDeleteஅருமையான பதிவுகள் அத்தனையும் புதுமை ரசிப்புக்குறியவை நன்றி ..........உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட நிறைய பதிவர்கள் இதுவரை எனக்கு அறிமுகமில்லாதவர்கள் ., வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களை அவர்களது தளத்தில் சென்று சந்திக்கிறேன்
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் ..!
தொடர்க ஆசிரியரின் மகத்தான பணி ..!
என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு வலைச்சரம் குழுவினருக்கு மிக்க நன்றிகள்...
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களின் இந்த ஊக்குவிப்புக்களினால் தான் என் போன்ற சிறியவர்கள் மேலும் பல ஆரோக்கியமான விடயங்களை இந்த வலையுலகிக்கு தயங்காமல் கொடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் மீண்டும் ஒரு முறை நன்றிகள் கோடி
ReplyDeleteநிறைய அறிமுகங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteகனக்க( யாழ் பேச்சுத் தமிழ்) அறிமுகங்கள். பதிவர்களிற்கும் தங்களிற்கும் நிறைந்த வாழ்த்துகள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சிறந்த பதிவர்களின் பட்டியலில் அடியேனையும் இணைத்து பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..நன்கு பயனுள்ள வலைப்பதிவுகளின் தொகுப்பு அருமை..தொடருங்கள்.
ReplyDeleteகதம்ப தொகுப்பு.
ReplyDeleteஎன் எழுத்துகளுக்கு நீங்கள் தரும் ஆதரவு என்னை மேலும் அடுத்த தளத்திற்கு அழைத்து செல்லும். நன்றிகள் என்றும் உங்கள் தொகுப்பில் இந்த சிறியவனையும் இணைத்தமைக்கு. தொடர்ந்து வாருங்கள் உங்கள் பணியை தொடருங்க. என்றும் அன்புடன் ராசை நேத்திரன் @ செந்தில் நன்றிகள் கோடி
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா! பதிவுலகை பொறுத்தவரை நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனாலும் என்னையும் ஒரு பதிவராக மதித்தமைக்கே முதல் ஒரு பெரிய நன்றி. உங்களால் முடிந்தால் எனது நண்பன் ஒருவனின் சுவாரசியமான இந்த பக்கத்துக்கும் போய் பாருங்களேன். அதையும் பகிர்ந்தால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மிகவும் பயனுள்ள பக்கம்.
ReplyDeletehttp://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_23.html
nalla arimukangal!
ReplyDeleteநிறைய புதுமுகங்கள்....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகங்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றியும் வாழ்த்துகளும்
ReplyDeletethank you very much for introducing my blog
ReplyDelete