மற்ற பதிவுகளை விட நகைச்சுவைப் பதிவுகளுக்கு என்றுமே வரவேற்பு உண்டு. மற்றவர்களை சிர்க்கவைப்பது என்பது சாதரானமான விஷயம் அல்ல. அப்பணியைச் செய்யும் ஒரு சில நகைச்சுவை பதிவுகளை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நகைத்திறம் கொண்டால் நலக்குறைவு இல்லை
பகைத்திறம் என்றும் இவர்முன் பணிந்திடும்
ஈகையே கொண்டீர் குணமாக! தந்திடுவீர்!
வாகையே சூடிடவே வாழ்த்து,
என்ற வெண்பாவுடன் இன்றைய சரத்தை தொடங்குகிறேன்.
1. கிரிக்கெட் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கிரிக்கெட் வீரகளை கலாய்ப்பது தனி இன்பம் நம் பதிவர்களுக்கு. பி.எம்.சரணின் கோடை மழை இல் கேப்டன் தோணி படும் பாட்டை கேப்டன் தோனி :- போட்டோ டூன்ஸ்! பதிவில் படங்களாகப் பாருங்கள்.
2. டாக்டர் முருகானந்தம் கிளினிக் தன் பதிவில் தனது அனுபவங்களை சுவையாக-நகைச்சுவையாக விவரிக்கிறார். அதில் ஒன்று வழியெங்கும் கக்கூஸ் கட்டுவோம். . சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டும் பதிவு இது.
3. மென்பொருள் பொறியாளரான ராம்குமார் தனது நெல்லை நண்பன் வலைப்பதிவில் எழுதிய பதிவு நான் சொன்னது தப்பா சார்? படித்து ரசித்து சிரிக்கலாம்.
4. இடிமுழக்கம் வலைப்பதிவில் நான் படித்த நகைச்சுவைப் பதிவு அறியாமைக்குள் புதைக்கப்படும் தப்புகள்.. இளமையில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
5. தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழிக்கும் அப்பாவி இளைஞனைப் பற்றிய ,கோ.ராகவனின் செந்தில்நாதனும் செம்பருத்திப்பூ ஷாம்பும் என்ற கோ.ராகவன் பதிவு சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் பதிவு என்பதில் ஐயமில்லை.
6. நிலவன்பனின் வலைப்பதிவான நிலாப் பெண்ணுக்கு நகைச்சுவை நிரம்பிய வலைப்பூ. அவற்றில் நான் படித்து சிரித்த இரண்டு பதிவில் ஒன்று காதல் வசனம் காமெடி கலாய்த்தல் மற்றொன்று நேபாளம் அதள பாதாளம்!
7. நம்பள்கி நினைவுகள் வலைப்பூவில் பதிவிடப்பட்ட நகைச்சுவை பதிவு 1.கணவனை சந்தேகித்த மனைவி.
8. ஜெயலலிதா பிரதமரானால் என்ன நடக்கும் என்று ஜெ" பிரதமரானால்...!! பதிவில் நையாண்டியுடன் விளக்குகிறார் மதிபாலா
9. மணிமாறனின் மனதில் உறுதிவேண்டும் வலைப்பூவில் ஒரு பதிவு சிரிப்பா சிரிக்குது. படங்களும் அதற்குரிய கம்மென்ட் களும் சூப்பர்.இன்னொரு பதிவு ஆறு கோடியும் மூன்று உயிர்களும் மற்றும் நித்தியும் கடைசியில் நகைச்சுவை இணைக்கப்பட்டுள்ளது.
10. இனியவை கூறல் மூலம் சிரிக்கவைக்கும் கலாகுமாரனின் பதிவு சில ஜோக்ஸ் : படித்தவை
11.சிரிப்பு வருது வலைப்பூவில் குழந்தைக்ளுக்கேற்ற நகைச்சுவைக் கதைகள் உள்ளன. அதில் ஒன்று தொப்பை கரைச்சான் லேகியம் .
12. சிரிப்பு போலீஸ் வலைப்பூ நிச்சயமாக சிரிக்கவைக்கும்.அந்த சிரிப்பு போலீசின் தத்துவம் "உங்கள் மீது ஒருவன் செருப்பை எறிந்தால், பொறுமையாக இருங்கள், அவன் இன்னொரு செருப்பையும் வீசியதும் எடுத்துக் கொண்டு ஓடுங்கள், ங்கொய்யால வெறுங்கால்ல நடந்து போகட்டும்....!" குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நூத்துக்கு நூறு பதிவை படித்து மனம் விட்டு சந்தோஷமா சிர்க்கலாம்.
13.இன்னொரு சிரிப்பு போலீஸ் வலைப்பதிவும் இருக்கிறது.(இது வேறு) தொலைக்காட்சி விளம்பரங்கள் பற்றிய சத்தியமா திருடப்பட்ட பதிவுகொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது.
14.சிரிப்பு -பேரில் மட்டும் னு சொன்னாலும் நன்றாகவே சிரிக்க வைக்கிறது ரசிகர் மன்றம் என்ற பதிவு
***************************************************************************************
வலைச்சரம் வலம்வர வாருங்கள்.தாராளமாக உங்கள் கருத்துக்களை தாருங்கள்.
நாளை: வாசம் குறையாப் பூக்கள்- சரம் 6
nalla arimukam mikka nantri!
ReplyDeleteஇத்தனை நகைச்சுவைப் பதிவுகள் இருக்கின்றனவா!
ReplyDeleteசிரித்து வாழவேண்டும்! வாயவிட்டுச்
ReplyDeleteசிரத்தால் நோய்விட்டு்ப் போகும்!
நன்று!
புலவர் சா இராமாநுசம்
அருமையான தொகுப்பு.. இவர்கள் அனைவருமே நகைசுவை மன்னர்கள்
ReplyDeleteசிரிப்புச்சரத்திற்குச்
ReplyDeleteசிறப்பான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
அத்தனையும் அருமை. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது :D
ReplyDeleteஇன்றும் இதுவரை காணக்கிடைக்காத பல நல்ல நகைச்சுவை தாங்கிய பதிவுகளை பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி...........
ReplyDeleteஉங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் :)
எல்லா அறிமுகங்களுமே அமர்களம். என்னுடைய பதிவையும் குறிப்பிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி சகா... :))
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteஎல்லா பதிவுகளையும் சென்று பார்த்தேன் மிகவும் ரசித்து படித்தேன். மிக்க நன்றி சார். ஒரு ஸ்வாரசியமான நகைச்சுவை என்னவென்றால் எனது பாசப்பறவைகள் தளம் மற்றும் புன்னகை பூக்கட்டும் என்ற இரு தளங்களையும் விழிபிதுங்க தேடிபார்த்தேன் தென்படவேயில்லையே இதோ அந்த சுட்டிகள் முடிந்தால் இவைகளையும் இணைத்து விடுங்கள். புன்னகை பூக்கட்டும் வானொலியில் ஒலிபரப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளின் தொகுப்பு இனியபாடல்களுடன் கேட்டு மகிழலாம்.
ReplyDeleteபுன்னகை பூக்கட்டும் http://anjalipushpanjali.blogspot.in/
பாசப்பறவைகள் >> http://paasaparavaikal.blogspot.in/
ஐயா டி.என்.முரளிதரன்: இந்தியாவில், தமாஷை தமாஷாக எடுத்துக் கொள்ளும் மணப்பக்குவம் இல்லை; இப்பொழுது அது மாறிக் கொண்டிருக்கிறது; நல்ல விஷயம்.
ReplyDeleteநான் வசிக்கும் அமெரிக்கவில், நான் மிக மிக மிக விரும்பின எப்பொழுதும் என்றும் விரும்பும் ஜானதிபதி, Mr. Bill Clinton; இருந்தாலும் அவரைப் பற்றி நான் அடித்த ஜோக்குகளை இங்கு நான் எழுத முடியாது; உடனே நம் கலாசாரக் காவலர்கள் துடைப்பக் கட்டையை எடுத்து என்னை அடிக்க வந்து விடுவார்கள்.
தமிழ்நாடு என்றால், ஆட்டோ அனுப்புவார்கள்; அனால், இங்கு Mr. Bill Clinton படித்தால் ஆட்டோ அனுப்ப மாட்டார்; அவர் என்னை அவர் வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவார்; நம்ம புரட்சி மாதிரி சாப்பாடு இல்லை; அந்த மாதிரி சாப்பாடு! ஹி! ஹி!! புரட்சியின் சாப்பாடு பற்றி படிக்க:
http://www.nambalki.com/2012/06/blog-post.html
ஆனால், Mr. Bill Clinton அவைகளை என்னுடைய Freedom of Speech" என்று தான் எடுத்துக் கொள்வார்.
அதே மாதிரி, நான் என்றும் விரும்பும் நடிகர் நம்ம "புரட்சி" தான்; அவரைப் பற்றி எழுதியுள்ள ஒன்றிரண்டு இடுகைகள்...
http://www.nambalki.com/2012/03/blog-post_26.html
http://www.nambalki.com/2012/04/blog-post_13.html
----------
மேலும் சில இடுகைகள்...எனக்கு தெரிந்தது எல்லாம் கிண்டல்கள் தான்...
http://www.nambalki.com/2012/03/200-gram-4-5-2-4-2-20-6-7.html
http://www.nambalki.com/2012/04/blog-post_9027.html
http://www.nambalki.com/2012/04/blog-post_29.html
அவ்வளவு ஏன், ஏன் இடுகைகள் எல்லாம் தமாஷ் தான்....
please visit...
http://www.nambalki.com/
இத்துணை பேர் நகைச்சுவை பங்களிப்பு செய்கிறார்களா... வியக்கிறேன்..எனது பதிவையும் இந்த லிஸ்டில் இணைத்த திரு.முரளிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஉங்கள் கடின உழைப்பு தெரிகிறது . வாழ்த்துக்கள் .
ReplyDeletethanks for sharing
ReplyDeleteநல்ல சிரிப்பு மருத்துவங்கள் தொகுப்பு...
ReplyDeleteநன்றி!!!
பகைச்சுவை மறக்கும்
ReplyDeleteநகைச்சுவைக்கு சிரிக்க மறக்கும்
வகையான மனிதர் யாருளர்!!!
நகைச்சுவைத் தொகுப்புச் சரத்திற்கு வாழ்த்து.
அறிமுகங்களிற்கும் வாழ்த்து...sakothara..
வேதா. இலங்காதிலகம்.
armayana pathivargalai arimugapaduthiyatharku nandri
ReplyDeleteடெர்ரரா எழுதினா எழுதினா காமெடின்னு போடுறாங்க - என்ன உலகமாடா?
ReplyDeleteரசித்துச் சிரித்து மகிழ வைத்த அற்புதமான சரம்! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎப்போதோ எழுதி நானே மறந்துபோன பதிவை இப்போது அறிமுகப்படுத்திய முகந்தெரியா தோழர் முரளிதரன் அவர்களுக்கு நன்றி......
ReplyDeleteஅப்பதிவு சிரிப்புக்கு மட்டுமல்ல , கொஞ்சூட்டு சிந்தனைக்கும்!அனைத்து இணைப்புகளும் அருமை!
வலைச்சரத்தில் என் பதிவுகளையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரே....உங்கள் தொகுப்புகள் அருமையாக உள்ளது.உங்களின் இது போன்ற ஊக்கங்கள் நிறைய பேரை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.வலைச்சரத்திற்கும் உங்களுக்கும் மீண்டும் நன்றி.
ReplyDeleteமனம் விட்ட சிரிப்பு நோய்களை நெருங்கவிடாது.
ReplyDeleteஇவ்வளவு சிரிக்க வைக்கும் தளங்களா என ஆச்சரியப்பட்டேன்.
எனது பதிவையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
சமீபத்தில் சென்று வந்த தளங்களில் நான் மிகவும் ரசித்து படிக்கும் ப்ளாக் "சிரிப்பு போலிஸ்-ரமேஷ்".
ReplyDeleteஅருமையாக எழுதுகிறார் ..!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
என் வலைச்சரமான ' முத்துச்சிதறலை' அறிமுகம் செய்ததற்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்சமயம் நான் தமிழகத்தில் இருப்பதால் உடனடியாக என் மகிழ்வைத் தெரிவித்து எழுத இயலாமல் போய் விட்டது!
ReplyDeleteசிரிக்க மறந்தால் மனிதன் மிருகமாகிவிடுவான்........ எனது பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி..... இன்னும் பல நகைசுவை தளங்களை அறிமுகம் செய்து வைத்ததுக்கு நன்றி...
ReplyDelete