அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களுக்கு,
இங்கே வலைச்சரத்தில் அவர்களை அறிமுகம் செய்வதில் பேருவகை...
நேற்று இரண்டு heavy weight பதிவர்களை அறிமுக படுத்தியதிற்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை துளிரிளிருந்து இன்றைய அறிமுகங்களை நோக்கி நடக்கலாகிறேன்...
கவிதைகள் பிடிக்காதவர்கள் இங்கேயே கழன்றுகொள்ளுங்கள்... ஆம்.. இன்று அறிமுகமாகும் இருவரும் "எழுதுவதெல்லாம் கவிதை, கவிதையைத் தவிர வேறொன்றும் இல்லை".. இவர்களுக்குள் ஒற்றுமை என்று ஒன்றுமே இல்லை.. பாலினம் முதற்கொண்டு... ஒருவர் கொஞ்சம் தொன்மையான மொழியை கையாளுபவர்.. மற்றொருவர் புது கவிதை மட்டுமே.. எப்போதாவது காதல் / காதல் மட்டும், சமயங்களில் ஐந்தாறு பத்திகளைத் தாண்டும் / அதிக பட்சம் நாலு வரியைத் தாண்டாது...என்று இவர்களுக்குள் முரண்பாடுகள் ஏராளம்.. இரண்டிற்கும் கவிதை இரசிகர்கள் சொக்கிபோவார்கள் என்ற ஒரே புள்ளிமட்டும்தான் இவர்களுக்கான பொதுநிலை...
மழைச்சாரல், மொட்டைமாடி, மாலைநேர தேநீர்.... இந்த மாதிரியாக பிதற்றும் என்னை மாதிரி நண்பர்களுக்கு இதோ இந்த இரு அறிமுகங்கள்...
அறிமுகம் #4
பதிவர்: கௌரிப்பிரியா (தூரல்வெளி)
இணைப்பு: http://thooralveli.blogspot.in/
நான் வலைத்தளத்தில் சந்தித்தவரை பெண் பதிவர்கள் நிறையப்பேர் கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்..அவர்களும் சமுதாயம் சார்ந்த கோபம் கொப்பளிக்கும் புரட்சி கவிதைகள் நிறைய எழுதுகிறார்கள்.. நிறைய வாசித்திருக்கிறேன்.. இரசிக்கும்படி சிலர் காதல் கவிதை எழுதியிருக்கிறார்கள்.. ஹேமா அவர்களை நிறைய பேர் வாசித்து இருப்பீர்கள்..கவிதை பதிவுகளில் எனக்கு மிக விருப்பமான பதிவர் அவர்.. அதே அலையை,அதே ஆளுமையை,அதே மொழி வீரியத்தை நான் பார்த்தது இவருடைய கவிதைகளில்தான்..
மருத்துவர், என்னுடன் கல்லூரியில் ஒரு வருடம் சீனியர்... என்ற போதெல்லாம் இவர் கவிதை எழுதுவார் என்பதே எனக்கு தெரியாமல் போனது, வருத்தம் கலந்த ஆச்சர்யம்... இளநிலை கல்லூரி முடித்து, முகநூல் வாயிலாகத்தான் இவரது வலைத்தளம் பார்த்தேன்.. கவிதைகள் எல்லாமே "சுரீர்" இரகம்...விகடன், உயிர்மை, அகநாழிகை என்று பல அங்கீகாரங்கள்... பேசிக்கிட்டே இருக்கேனா? சரி அவங்க கவிதைகள பாப்போம்...
மழையைப் பார்த்தாலே...அவள்,நான்,மண்வாசனை என்று காதல் கவிதைகள் மட்டுமே தோன்றுமிடத்தில், இயற்கை அன்னை மழை, வளம், வயல், பாசனம் என்று பசுமை விகடனுக்கு கவிதை எழுதுமிடத்தில், "மழையினில் இப்படி ஒரு கவிதையா? ச்சே... " என்று தோன்றவைத்த இவரது பொதுமைய வட்டங்கள்.. இந்த ஒரு சோறு பதம் போதும் என்றாலும் இன்னும் இருக்கிறது...
இறுதிச் சொல்..."நீ எழுதுறதுக்கு பேரெல்லாம் கவிதைன்னு இனிமே சொல்லிக்கிட்டு திரியாத..."ன்னு எனக்கு நானே சொல்லி கொண்ட கவிதை இதுதான்..நிச்சயம் முதன்முறை வாசிக்கும்போது புரிய தாமதமானது..புரிஞ்சதும் அந்த கவிதையை விட்டு வெளியே வர மனம் தாமதித்தது..
அதே போலதான் காணாமல் போனவை..இதில் புரிந்துகொள்ள பெரிதாய் ஒன்றுமில்லை...ஆனால் வரிகளாய் வெளிகொணர்ந்த சரமான வார்த்தைகள் அவ்வளவு அழகு...
மற்றொரு பதிவான ஒரு ஓவியம் ஒரு கவிதை..ஒரு முறை வாசிப்போடு உங்களை விட்டுவிடாது..எப்படி இந்த வரிகள்? எங்கே அதற்கான கரு...? வியப்புதான்..
சதிகாரி, இராட்சசி, மது, மரணம் என்று விரியும் காதல் பிரிவு கவிதைகள் வாசித்தே வெறுத்துபோனவரா நீங்கள்..? மாறுதல் வேண்டின் வெற்றிட நிரப்பிகள்.. கணினி திரை முன் சிலர் கைதட்டிவிடுவீர்கள்...:)
அறிமுகம் # 5
பதிவர்: கோவி (govi poems- காதல்)
இணைப்பு: http://govipoems.blogspot.com/
எப்படி ஓவியம் பழக நினைப்பவனுக்கு சூரியனும், தென்னை மரமுமோ அதேபோல்தான் கவிதை கிறுக்க நினைப்பவனுக்கு "காதல்".. அன்பே, அட்டு பீசே, கொலுசே, நீ, நான், மேகம், வானம்... என்று மடக்கி மடக்கி எழுதி ஒரு ஆச்சர்யகுறியைப் போட்டுவிட்டால் கவிதை ரெடி.. இப்படிதான் பள்ளி நாட்களில் நானும் கிறுக்க பழகினேன்.. பாரதிதாசன் கவிதைகள் புத்தகம் வாசித்ததும், மிக மரியாதையுடன் காதல் கவிதை எழுத நிறுத்திகொண்ட என்னை மீண்டும் எழுத உசுப்பிவிட்டவர் தபூ சங்கர்... காதலை காதலிக்க வைத்தவர்.. அவர் பாணியில் எழுதுவதற்கு பெரிய இலக்கணம், சொல்லாடல், எதுவும் தேவையில்லை.. இரசனை..இரசனை இருந்தால் போதும்...பேச்சு வழக்கில்தான் இருக்கும்... ஆனால் அது நிச்சயம் கடினம்...லிட்டர் கணக்கான காதல் கவிதைகளைவிட இந்த சாஷே வடிவங்கள் அட்டகாசம்...
நிறைய பேர் இந்த பாணியில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.. நண்பர் பிரேம் நிறைய எழுதி இருக்கார்.. சமீபத்தில் என் பங்குக்கு நான் எழுதுனது இது...
நண்பர் கோவி அவர்கள்,ஒரு வலைத்தளம் முழுதும் அதே வகையறா காதல் கவிதைகள் மட்டுமே தீட்டிக் கொண்டிருக்கிறார்... ஆரம்பிப்பதற்குள் முடிந்துவிடும் வகைதான் எல்லாமே..சிலவை ஒரு வரி மட்டும்தான்.. ஆஹா ஓஹோ என்றெல்லாம் பொதுவாக இவ்வகை கவிதைகள் இருக்காது.. படிக்கும்போது உதட்டோரம் ஒரு சிரிப்பு வரும்.. நல்லாயிருக்கு என்பதற்கு அதுதான் அடையாளம்..
குட்டி குட்டி கவிதைகள் எல்லாமே, என்பதால் link எல்லாம் கொடுக்காமல் sampleகளை நேரடியாக இங்கேயே வழங்குகிறேன்...
நான் என்ன எழுதினாலும்
நீயும் காதலும்
அதில் எங்கேனும்
வந்துவிடுகிறீர்கள்..
அழகாய் இருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல
அழகாகவும் இருக்கிறாய் என்பதற்காக உன்னை காதலிக்கிறேன்..
சத்தம் வராமல்
முத்தம் தர சொல்கிறாய்..
உனக்கு தந்துவிட்ட
சந்தோஷத்தில் முத்தம்தான்
சத்தமிடுகிறது..
அநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..
இன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்?
நீ குளித்தபின் காற்றிடம்
கெஞ்சிகொண்டிருக்கிறது கூந்தலின் ஈரம்
உலர்த்தி விடாதே என்று..
எப்டி..? புடிச்சவங்க சீக்கிரம் கோவியின் வலையை நோக்கி படையெடுங்க...
எஞ்சிய எட்டு பேர் யார் யார்? தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே.. நாளை சந்திப்போம்..
என்றும் நன்றியுடன்.. சி.மயிலன்
தூரல்வெளியும், கோவியின் காதல் கவிதைகளும்
ReplyDeleteஎனக்கு புதிய அறிமுகமே. இருவரின் கவிதைகளும் அருமை.
ஆனால், கோவியின் பக்கம் திறந்தாலே படிக்கவிடாமல் துள்ளித்துள்ளி குதிக்கிறது திரை.என்ன காரணம் எனத் தெரியவில்லை. அவருக்கு தெரியப்படுத்துங்களேன்.
நான் வலைபதிவு எழுதலாம் என்று பார்த்த போது நிறைய பதிவர்கள் பத்திபத்தியா எழுதினார்கள் நிறைய நண்பர்கள் மேலே உள்ள நான்கு வரிய காப்பி பண்ணிப்போட்டு பின்னூட்டம் போட்டுட்டு அடுத்த பதிவ படிக்க போயிடறாங்க...அப்படின்னு புரிஞ்சுகிட்டேன் அதனால இரண்டு வரி கவிதை மட்டும் போடலாம் என்று முடிவு செய்து பதிவு போட்டிட்டு வருகிறேன் என் பதிவை சுலபமா படிக்கட்டும் என்று............
ReplyDeleteஎன்ன புரியலையா..........?
இரண்டாவதா அறிமுகப்படுத்தியுள்ள நண்பர் கோவிந்தராஜ் கோவை பதிவர் சந்திப்பில் கூறியது!
முதல் வலைதளம் இப்பொழுதுதான் பார்க்கிறேன்......பிரமிப்பாய் இருக்கின்றது...
கோவி!
ReplyDeleteகவிதைகளை ரசித்து இருக்கிறேன்!
மேலும் ஒரு பதிவாளர் எனக்கு புதிய அறிமுகம்!
உங்களுக்கு மிக்க நன்றி!
காலை வணக்கம் மயிலன்... உங்களின் வலைச்சரப்பின்னல் மிக நேர்த்தியாய் இருக்கிறது, இன்று தான் உங்களின் சுய அறிமுகம் உட்பட ஏனைய இரண்டு பதிவுகளையும், பதிவிற்கு இரண்டாய் அறிமுகப்படுத்தும் நம் பதிவர்களின் அறிமுகத்தையும் பார்த்தேன்....
ReplyDeleteஅத்தனையும் தேர்ந்த அறிமுக விளக்கம்... குறைவான பதிவர்களை அறிமுகம் செய்தாலும் அவர்களிடம் நீங்கள் ரசித்த, வியந்த பதிவுகளை அடையாளம் காட்டியவிதம் எங்களுக்கு ஒரே பதிவரின் ஏனைய முகங்களை(பதிவுகளை) காண வாய்ப்பாய் இருந்தது..இதை விட ஒரு சகபதிவருக்கு என்ன பாராட்டு கிடைத்துவிடும்... பதிவுகள் அனைத்தும் மற்ற பதிவர்களின் அல்லது வாசகனின் வாசிப்பின் மூலமே நம்ம அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும், அப்படியான உங்களின் வாசிப்பில் பிரம்மித்த விஷயங்களை பதிவிலேற்றியது அருமை...அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் உங்களுக்கு...
ஒவ்வொரு வலைச்சர ஆசிரியரின் பதிவர் அறிமுகத்திலும் அறிமுகப்பதிவரை பின் தொடர்தல் மட்டும் இல்லாது அவர்களின் எழுத்துகளை தொகுத்து அளிக்கின்ற விதம் மிகவும் பாராட்டத்தக்கது மயிலன்..
தொடருங்கள் தோழமையாய் பின்தொடர்கின்றோம்....
கோவியின் கவிதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்...
ReplyDeleteஒரு சில வார்த்தகைளைக் கொண்டே காதலை ரசிக்க வைப்பவர்....
அதைப்போல் ஹேமாவும் கவிதை வானில் தனிப்பறவைதான்...
நல்லதொரு அறிமுகங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
அருமையான தளங்களை அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான தொகுப்பு. இரண்டு பதிவர்களது வரிகளும் நெஞ்சை தொடும் வரிகள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteகோவியின் கவிதைகளுக்கு ஏற்கனவே நான் அடிமை. தூறல் வெளி புதுசு..! இன்று தான் சென்று பார்த்தேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் மயிலவன் உங்களின் தொகுப்புகளையே ஒரு தொகுப்பாக போடலாம் அதனை சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள் எங்களை அறிமுகபடுதுவதில் ஒரு ஆச்சர்யம் உங்கள் எழுத்தில் தலை தூக்கி நிற்கிறது ...........வாழ்த்துக்கள் தொடருங்கள்
ReplyDeleteஎன்னை அடையாளபடுத்தியிருக்கும் திரு சி.மயிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஏற்கனவே இருமுறை இந்த தளத்தில் என்னை பற்றி எழுதபட்டிருந்தாலும் இதுமாதிரியான அறிமுகம் இதுவே முதல் முறை..
ReplyDeleteஇனிமையான அறிமுகங்கள் தந்தீர்கள்.
ReplyDeleteசகோதரர் சத்திரியனுக்கு மட்டுமல்ல நானும் நேற்று கோபியின் வலைக்குக் கருத்திட விரும்பினேன். என்னால் கருத்திட முடியவில்லை. துள்ளித் துள்ளி ஓடுது. கமென்ட் திறக்குதே இல்லை. தயவு செய்து சகோதரர் கோபி இதைக் கவனித்துத் திருத்தவும். இரு அறிமுகங்களிற்கும் சகோதரர் மயிலனுக்கும் மிக நன்றியும் வாழ்த்தும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
கோவி கவிதைகளை படித்திருக்கிறேன் . உங்கள் வரிகளும் அருமை தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeletenice list
ReplyDeleteஇரண்டு பதிவர்களது வரிகளும் நெஞ்சை தொடும் வரிகள். நண்பர் கோவியின் வரிகள் இரண்டு / மூன்று என்றாலும், வித்தியாசமான சிந்தனை இருக்கும் ! நன்றி !
ReplyDeleteசத்ரியன் said...
ReplyDelete//தூரல்வெளியும், கோவியின் காதல் கவிதைகளும்
எனக்கு புதிய அறிமுகமே. இருவரின் கவிதைகளும் அருமை. //
உங்களுக்கு தெரியாத இருவரை அறிமுக படுத்தியதில் மகிழ்ச்சி...
//ஆனால், கோவியின் பக்கம் திறந்தாலே படிக்கவிடாமல் துள்ளித்துள்ளி குதிக்கிறது திரை.என்ன காரணம் எனத் தெரியவில்லை. அவருக்கு தெரியப்படுத்துங்களேன்.//
நிச்சயம் சொல்கிறேன்...
வீடு சுரேஸ்குமார் said...
ReplyDelete//என்ன புரியலையா..........?
இரண்டாவதா அறிமுகப்படுத்தியுள்ள நண்பர் கோவிந்தராஜ் கோவை பதிவர் சந்திப்பில் கூறியது!//
அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு.. கட்டுரை வாசிப்பவர்கள் கூட நீளமான கவிதைகள் வாசிப்பதில்லை...
//முதல் வலைதளம் இப்பொழுதுதான் பார்க்கிறேன்......பிரமிப்பாய் இருக்கின்றது..//
எப்பூடி...? நம்ம அறிமுகம்...
Seeni said..
ReplyDelete//மேலும் ஒரு பதிவாளர் எனக்கு புதிய அறிமுகம்!//
நிச்சயம் அருமையான தளம்.. கண்டுகொள்ளுங்கள்...
ரேவா said...
ReplyDelete//இதை விட ஒரு சகபதிவருக்கு என்ன பாராட்டு கிடைத்துவிடும்... பதிவுகள் அனைத்தும் மற்ற பதிவர்களின் அல்லது வாசகனின் வாசிப்பின் மூலமே நம்ம அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும், அப்படியான உங்களின் வாசிப்பில் பிரம்மித்த விஷயங்களை பதிவிலேற்றியது அருமை...அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் உங்களுக்கு...//
நன்றி சகோதரி.. இப்போதுதான் வருகிறீர்களா? என்ன செய்யலாம் உங்களை?
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete//கோவியின் கவிதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்...
அதைப்போல் ஹேமாவும் கவிதை வானில் தனிப்பறவைதான்...//
கௌரி அக்காவையும் கவனிங்க தலைவரே...
தீபிகா(Theepika)
ReplyDeleteGobinath
நன்றி நண்பர்களே..
கோவை மு.சரளா said...
ReplyDelete//வணக்கம் மயிலவன் உங்களின் தொகுப்புகளையே ஒரு தொகுப்பாக போடலாம்//
அடடா...இந்த வாரம் முடியட்டும்.. எனது தளத்தில்..நானே தொகுத்து விடுகிறேன்..:)
//அதனை சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள் எங்களை அறிமுகபடுதுவதில் ஒரு ஆச்சர்யம் உங்கள் எழுத்தில் தலை தூக்கி நிற்கிறது ...........வாழ்த்துக்கள் தொடருங்கள்//
நன்றி சகோதரி.. நீங்களும் பின்தொடருங்கள்...
கோவி said...
ReplyDelete//என்னை அடையாளபடுத்தியிருக்கும் திரு சி.மயிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஏற்கனவே இருமுறை இந்த தளத்தில் என்னை பற்றி எழுதபட்டிருந்தாலும் இதுமாதிரியான அறிமுகம் இதுவே முதல் முறை..//
எனக்கு இதற்காக ஒரு மேடை அமைந்தமைக்கு நான் மகிழ்கிறேன்... தொடர்ந்து உருக்கி ஊத்துங்க பாஸ்...
@ kovaikkavi
ReplyDeleteநிச்சயம் சொல்கிறேன்..
நன்றி கருத்துரைக்கு...
NIZAMUDEEN
ReplyDeleteSASIKALA
arul
திண்டுக்கல் தனபாலன்
நன்றி நண்பர்களே...
நிறைய நன்றிகள் மயிலன் :)
ReplyDeleteமயிலன் .. வெறுமனே அறிமுகம் என்றில்லாமல் .. ஒவ்வொரு பதிவரையும் ரசித்து உணர்ந்து கொண்டாடுகிறீர்கள் ...
ReplyDelete"படர்ந்து நீங்கும்
பகல்களுக்கிடையில்
எப்போதும் எங்கேனும்
இருக்கிறது இரவு
இருண்டு விரியும்
அண்டத்தின் துண்டமென.."
இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் .. புத்திசாலியை அறிமுகப்படுத்தியமைக்கு .. மிக மிக மிக நன்றி.
ஜேகே said...
ReplyDelete//மயிலன் .. வெறுமனே அறிமுகம் என்றில்லாமல் .. ஒவ்வொரு பதிவரையும் ரசித்து உணர்ந்து கொண்டாடுகிறீர்கள் ...//
நன்றி ஜேகே..
//மிக மிக மிக நன்றி.//
ஒவ்வொரு 'மிக'வும் அந்த கவிதைகளை நீங்கள் எவ்வளவு ஆழமாய் ரசித்திருக்கிறீர் என உணர்த்துகிறது... நன்றி..
//Gowripriya said...
ReplyDeleteநிறைய நன்றிகள் மயிலன் :)//
உங்களுக்கு நன்றி பாராட்டத்தான் அக்கா இந்த பதிவே...
கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
ReplyDelete