Friday, June 15, 2012

சாம்பாரும்,மட்டன் சுக்காவும்...அப்புடியே கொஞ்சம் ஊறுகா...


அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே,

"என்னப்பா நீ...? சுஜாதான்னு ஆரம்பிச்சே...நேத்து பாரதிக்கு போயிட்டே?இன்னிக்கு யாரு வள்ளுவரா?" என்ற உங்கள் குரல் கேட்கிறது.. அப்படியெல்லாம் இல்லை.. நான் ஏதோ பெரிய இலக்கிய அப்பாட்டக்கரும் இல்லை...இவர்களை முன் நிறுத்துவதின் நோக்கம் ப்ளாகிங் உலகத்தில் இவையும் நிறைய நண்பர்களால் வாசிக்கப்படவேண்டும் என்ற ஆசை..அவ்வளவே...

கமர்ஷியல் எழுத்தாளர்கள்..இந்த வார்த்தை பிரயோகம் சரியா? தெரியவில்லை.. பேரரசு போன்றோர் புண்ணியத்தில் அந்த வார்த்தையே கெட்டவார்தையாகி போய்விட்டது...எல்லாமே கிடைக்கும் பதிவுத்தளம் அல்லது 'பல்சுவை' என்றும் மாமூலாய் சொல்லலாம்...இவ்வாறான முயற்சி நிறைய பேர் செய்தாலும் மனதில் நிற்பவர்கள் வெகு சிலரே... என்னுடைய favourites பிலாசபி பிரபாகரன், வீடு சுரேஸ்குமார், ராஜன் லீக்ஸ், வீடு திரும்பல் மோகன்குமார்... என்றான லிஸ்ட் இங்கு அநேகமாக எல்லோரும் அறிந்த பிரபலங்கள்...



இதைத் தவிர நான் இரசிக்கும் இரு "பல்சுவை" (வேற வார்த்தையே கிடைக்கல..) பதிவர்களை இன்று அவர்களை அறியாத உங்களில் சிலருக்கு அறிமுகம் செய்கிறேன்..

அறிமுகம் # 8

பதிவர்: ரெவெரி (மெல்ல தமிழ் இனி வாழும்..)
இணைப்பு :http://reverienreality.blogspot.in/

மீசைக்காரனின் கூற்றை மாற்றிய தலைப்பே கவன ஈர்ப்பு.. அதுதான் அவரது வலைக்கு என்னை அழைத்து சென்றது.. என்னுடைய தளத்தை ஆரம்ப காலங்களில் இருந்து தொடரும் நண்பர்...என் அத்தனை மொக்கை கவிதைகளுக்குமான வாழ்நாள் சந்தாதாரர்.. சார் கல்யாணத்திற்கு பிறகு காதல் கவிதையெல்லாம் எழுதும் பலே கவிஞர், ஆங்கில பட விமர்சகர், கொஞ்சம் காரசாரமான பதிவுலக போராளி (கூடங்குளத்திற்கு சென்று அம்மக்களை சந்தித்து நேரடி ரிபோர்ட் எழுதினார்..) ...அப்புறம்,அரசியலும் பேசுவார்..(நடுவுல கொஞ்சம் ஓவரா பேசி,அதாவது உண்மைய பேசி,கபில் சிபல் புண்ணியத்தில் இவரது வலைத்தளம் முடக்கப்பட்டது தனிக்கதை...) விளையாட்டு பற்றியும் எழுதுவார்..இவர் நடால் இரசிகர் என்பது என் கடுப்பு.. சமீபத்தில் ஸ்பானிஷ் கிளாஸ்..வேறு எடுக்க ஆரம்பித்துள்ளார்.. நான் அங்கு வரும் டீச்சர்களை சைட் அடிப்பதோடு சரி..கிளாஸ் கவனிக்கவில்லை இதுவரை.. வழக்கம் போல பரீட்சைக்கு மொத்தமா படிச்சுக்கலாம்...

கதை அவ்வளவாக எழுதுவது இல்லை..ஆனால் ஒன்னே ஒன்னு 'நச்'சுன்னு எழுதினர் மூன்று நான்கு பத்திகளில்.. தலைப்பு என்ன தெரியுமா? பதிவுலகம்..வாசிச்சு பாருங்க..ரொம்ப சாதரணமா ஒரு உண்மைய சொல்லும்..

சாருவின் எக்சைல்-விமர்சனம்...இவர் இந்த பதிவு எழுதிய தினம் நான் அந்த நாவலை பாதிகூட வாசித்திருக்கவில்லை.. வாசித்து முடித்த பின்னாளில் தேடி சென்று இந்த பதிவினை படித்தேன்..மைனஸ்கள் அனைத்துடனும் ஒத்துபோனேன்.. பிளஸ் என்று அவர் சொல்லியிருக்கும் சிலவும் மைனஸ்களே..நல்ல விமர்சனம்.. வாசித்து பாருங்கள்..

கில்மா எதிர்பார்த்துவந்த பலருக்கு ஒரு ஷாக் விழிப்புணர்வு கொடுத்த பதிவு எனது மார்பகம்.. இந்த sequence எப்படி அவருக்குள் கருவுற்றது என்று சற்றுநேரம் வியந்துகொண்டிருந்தேன் வாசித்த நாளில்...

ஸ்பெக்ட்ரம்...பற்றி பதிவுலகமே குட்டிகரணம் அடித்த நாளில்..ஒரு ஏழெட்டு படங்கள் போட்டு கலாய்கதை சொன்ன பதிவு இவரது ஸ்டைல்..இதே போல "படம் பார்த்து கதை சொல்" என்ற தொகுப்பு கட்டுரையும் அவ்வபோது வெளிவரும் சுவாரஸ்யம்

இதுவரை அறியாதவர்கள் இனியும் தவறவிடாதீர்கள்..

அறிமுகம் # 9

பதிவர்: அனந்து (வாங்க பிளாக்கலாம்)
இணைப்பு http://pesalamblogalam.blogspot.in/

சாருக்கு comfort zone சினிமாதான்... விமர்சனம் நிறைய எழுதுவார்...நகையுணர்வுடன் எழுதி கலாய்க்காவிடினும் இரசிக்கும்படியான நேர்த்தியான விமர்சனம் எழுதுவார்..சுஜாதா,இளையராஜா,கமல் என்று கிளாசிக்ஸ் விரும்பும் இரசிகர்.. குறிஞ்சி மலர் போல எப்போதாவது இவர் எழுதும் கவிதைகள்,கதைகள் எல்லாமே ஆழமான வரிகளையும்,கருக்களையும் உள்ளடிக்கியவை..அரசியல்,விளையாட்டு, அவ்வபோது இலக்கியம் என சார் ஒரு ரவுண்டு வருவார்..

இவரும் எனக்கு இன்ட்லியில் அறிமுகமானவர்தான்...அன்று அங்கு கண்ட இணைப்பு வெறிநாய்-சிறுகதைக்கானது... படித்து முடித்ததும் follower ஆயிட்டேன்..அதனை தொடர்ந்து வந்த "மூட்டைப்பூச்சி" எனும் சிறுகதையும் நல்ல திருப்பத்துடன் எழுதப்பட்ட ஒன்று..

ரொம்ப சாதாரண வரிகளில்தான் கவிதை எழுதுவார்..ஆனா மனசுல நின்னுடும்..அதுதான் ரம்மியம்..உதாரணத்துக்கு நட்பிர்க்கினியவளே..ஆண் பெண் நட்பை நம்பாதவர்களுக்கு பிடிக்காது..தவிர்த்துவிடுங்கள்..

இசைஞானி வெறியர்.. சூன் 12 இசை பிறந்தநாள்..பதிவில் இளையராஜாவின் வாழ்க்கையையே படம்பிடித்துவிடுவார்..எனக்கு தெரிந்து இவரது நீளமான பதிவு இதுதான்..படிக்கும் போதே அதனை நான் உணர்ந்த வேளை,கடைசி வரியில் அதற்கு வைத்த விளக்கம் என்னை புன்னைகக்கவைத்தது...

அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதினாலும், கலைஞர், ஜெ, விஜயகாந்த், மன்மோகன் என்று யாரையும் கேலி செய்யாமல்,உள்ளதை உள்ளபடி எழுதுவது இவரது ஸ்டைல்.. compilation of facts போல இருப்பதால் அரசியல் செய்திகளில் சுவாரஸ்யம் மட்டும் தேடுபவர்களுக்கு இவரது கட்டுரைகள் ஒத்து வராது..

இணைப்புகளை சொடுக்கி வாசிச்சு பாருங்க.. நிச்சயம் புடிக்கும்..

இன்னும் நாலுபேர் தானா? ஹ்ம்ம்...யார் யார்ன்னு பாப்போம்...

நாளை வருகிறேன்..

என்றும் நன்றியுடன்..சி.மயிலன்

21 comments:

  1. IRUVARUM PUTHITHU!
    enakku!
    NANTRI!

    ReplyDelete
  2. புதிய அறிமுகம் உங்கள் நோக்கம் நோக்குதல் குரியது ........ஆக்கம் சிறப்புக்குரியது .........தொடருங்கள் நல் அறிமுகங்களோடு

    ReplyDelete
  3. ஓ!...ரெவெரி தெரியுமே! ..நம்ம சிநேகிதச் சகோதரரே. அனந்து சகோதரர் எனக்கு கருத்திட்டார் நிறைய சினிமா சம்பந்தம் தானே!...மிக்க நன்றி இவர்களிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. சகோ ரெவரி தெரியும் மற்றொருவரை பார்க்கணும் .

    ReplyDelete
  5. இருவருமே அறிந்த முகங்கள்..அனந்து பழகுவதற்கும் இனிமையானவர்.

    ReplyDelete
  6. இருவரும் நான் தொடர்பவர்கள் தான். இருவரிடம் நான் அதிகம் வாசிப்பது அவர்களின் சினிமா விமர்சனங்களைத் தான். மற்றவற்றை இனித் தான் நேரம் ஒதுக்கி வாசிக்கவேண்டும்.

    ஆனால் நீங்கள் கொடுத்த ரெவெரியின் “பதிவுலகம்” பதிவு வாசிக்காமல் கமெண்ட் போடுபவர்களுக்கு சாட்டையடி. அருமையான பதிவு.

    ReplyDelete
  7. காதல் வைத்தியரே நலமா?

    வாழ்த்துக்கள் வைத்தியர் வாத்தியார் ஆனதற்கு...

    எத்தனை பரிமாணங்கள் தான் எடுப்பீர்...

    வழமை போல உங்களுக்கே உரித்தான touches...

    ReplyDelete
  8. சக அறிமுகம்..எனக்கு மிகவும் பரிச்சயமானவர்...அலட்டல் இல்லாமல் அவர் எழுதும் விமர்சனம் எனக்கு பிடிக்கும்...

    யோவ் எனக்கு FEDEX தான் பிடிக்கும்...வீட்டுக்காரம்மாவுக்கு தான் நாடல்...சும்மா நாடல் ஜெயிப்பார்னு ஆரூடம் சொன்னேன்...இல்லாட்டி சாப்பாடு கிடைக்காதில்லையா...-:)

    ReplyDelete
  9. சீக்கிரம் அறிமுகங்கள் முடித்து ஏழெட்டு வயசு குறைக்கும் ஒரு கவிதையை தட்டி விடுங்கள்...

    காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  10. ரெவெரி சாரின் "எனது மார்பகம்" செமத்தனமான கவிதை. அருமையாக ஆரம்பித்து நச்சென்று முடித்திருப்பார்.

    ReplyDelete
  11. Seeni said...
    //IRUVARUM PUTHITHU!
    enakku!
    NANTRI!//

    தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said...
    //முதலாமானவர் இப்போது தான் அறிந்து கொண்டேன். இரண்டாமானவர் நன்றாக தெரியும். இருவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி !//

    மிக்க நன்றி நண்பரே..மகிழ்ச்சி...

    ReplyDelete
  13. கோவை மு.சரளா
    kovaikkavi
    sasikala

    மிக்க நன்றி...

    ReplyDelete
  14. விச்சு said...
    //இருவருமே அறிந்த முகங்கள்..அனந்து பழகுவதற்கும் இனிமையானவர்.//

    ஹோ..தனிப்பட்ட முறையில் அவர்களை நான் அறிந்திருக்கவில்லை...

    ReplyDelete
  15. ஹாலிவுட்ரசிகன் said...
    //ஆனால் நீங்கள் கொடுத்த ரெவெரியின் “பதிவுலகம்” பதிவு வாசிக்காமல் கமெண்ட் போடுபவர்களுக்கு சாட்டையடி. அருமையான பதிவு.//

    :) சிலரை என்ன செய்தாலும் மாற்ற முடியாது...

    ReplyDelete
  16. ரெவெரி said...
    //சக அறிமுகம்..எனக்கு மிகவும் பரிச்சயமானவர்...அலட்டல் இல்லாமல் அவர் எழுதும் விமர்சனம் எனக்கு பிடிக்கும்...//

    பெரும்பாலும் நடுவு நிலை தவறாது சரியாக இருக்கும்...



    //யோவ் எனக்கு FEDEX தான் பிடிக்கும்...வீட்டுக்காரம்மாவுக்கு தான் நாடல்...சும்மா நாடல் ஜெயிப்பார்னு ஆரூடம் சொன்னேன்...இல்லாட்டி சாப்பாடு கிடைக்காதில்லையா...-:)//

    வாஸ்தவம்தான்.. அந்த கட்டுரையின் கடைசி வரியிலும் அதனை குறிப்பிட்டு இருப்பீர்கள்..கவனித்துள்ளேன்..:)


    //சீக்கிரம் அறிமுகங்கள் முடித்து ஏழெட்டு வயசு குறைக்கும் ஒரு கவிதையை தட்டி விடுங்கள்...

    காத்திருக்கிறேன்...//

    யாருக்காக இல்லேனாலும் உங்களுக்காக நிச்சயம் உண்டு... :)

    ReplyDelete
  17. வரலாற்று சுவடுகள் said...
    //ரெவெரி சாரின் "எனது மார்பகம்" செமத்தனமான கவிதை. அருமையாக ஆரம்பித்து நச்சென்று முடித்திருப்பார்.//

    நிறைய முறை நானும் வாசித்திருக்கிறேன்..ஒவ்வொரு பரிணாமமாய் அவர் எடுத்து செல்லும் விதம் அட்டகாசம்..

    ReplyDelete
  18. தாமதத்திற்கு மன்னிக்கவும் ... எனக்கு பரிச்சியமான சக பதிவர் ரெவெரியுடன் இணைத்து என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி மயிலன் ... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  19. மிக்க நன்றி அனந்து.. மற்ற அறிமுகங்களை பார்த்தீர்களா?

    ReplyDelete
  20. கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete